Saturday, March 5, 2016

அம்மா துணை !!

பேரன்புடையீர் நல்வணக்கங்கள் !!

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்                 - திருக்குறள்

இத்துனை காலமாய் எங்கள் தாயார் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்களின் வளைப்பதிவிற்கு துனைநின்ற நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியுங்கள்!!

ஒவ்வொரு பதிவிலும் உன்னதமான செய்திகளை தன் வளைப்பதிவு நள்ளுநர்களுடன் பகிர்ந்துகொண்ட எங்கள் தாயார், மிகவும் மகிமை பொருந்திய இறைவன் திருவடிதன்னில் கலந்திட 9-2-2016 அன்று வைகுண்ட பிராப்தி அடைந்தார்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது                             - திருக்குறள்

தன் பதிவுகளின் மூலம் அனைவரின் நினைவுகளில் நிறைந்திருந்த எங்கள் தாயார், இந்த இறுதி பதிவின் மூலம், உணர்வுகளில் கலந்து அனைவருக்கும் நல்லாசிகள் வழங்கிடுவார். 

எல்லாம்வல்ல இறைவன் துணையுடன்
நன்றி கலந்த வணக்கங்கள்.

மகள் மற்றும் மகன்கள்

Thursday, January 28, 2016

இனிய திருமண நிகழ்ச்சிகள்..

     


மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

எங்கள் மகன் திருநிறைச்செல்வன் அரவிந்த்குமாருக்கும் - 
டெல்லி நாகராஜன் அவர்களது மகள் திருநிறைச்செல்வி சிந்துவிற்கும்
ஜனவரி 20 -ஆம் தேதி கோவை சாரதாம்பாள் ஆலயத்தில் விமரிசையாகத் திருமணம் நிகழ்ந்தது...













ஜனவரி 19 ஆம் தேதி கோவை விக்னேஷ் மஹாலில் திருமண வரவேற்பு நடைபெற்றது..



 கோவையில் உள்ள மிகப் பழமையானபக்ஷிராஜா ஸ்டுடியோ.
 எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், ஜெமினிகணேசன் உள்ளிட்ட பழைய கதாநாயகர்களின் படப்பிடிப்புகளும், பத்மினி சரோஜா தேவி, வைஜெயந்தி மாலா, உள்ளிட்ட பழைய நடிகைகளும்  பக்ஷிராஜா ஸ்டூடியோவில் தங்கி நடித்துள்ளனர்
.எம்.ஜி.ஆரின் மலைக் கள்ளன் படத்தின் பெரும் பகுதி காட்சிகள் 
பக்ஷிராஜாவில் எடுக்கப்பட்டன.

பக்ஷிராஜா ஸ்டுடியோ இப்போது விக்னேஷ் மஹால் என்னும் 
திருமண மண்டபமாகவும் ,, மற்றும் ஒரு நிறுவனம் இயங்குமிடமாகவும் மாறி இருப்பது வியப்பளித்தது..

 Image result for pakshiraja studioSriramulu Naidu (third from left) with the cast of Azad