Thursday, August 18, 2011

நானிருக்க பயமேன் - ஸ்ரீநாகசாயி





"வருவானே நாகசாயி வள்ளலாகி நாளும்

திருவோங்கத் திகழ்வானே- மருளிலா

நிலையுளாரும் மாதவச் சீலனே மலர்காட்டி

கருமாயங் கவ்வாது கனிந்து மூலமுறைப்பானே'

என்று பக்தர்கள் நாக சாயிபாபாவின் புகழைப் பாடுகிறார்கள்.-கோவையில்- மேட்டுப்பாளையம் சாலையில் புகழுடன் திகழும். ஸ்ரீநாக சாய் மந்திர் என்னும்   சாயிபாபா கோவிலில் .....
 ஷீரடி சாயிபாபாவின் புகழைப் பரப்ப 1939-ஆம் வருடம் மேட்டுப்பாளையம் சாலையில் சாயிபாபா மிஷன் மற்றும் ஸ்ரீசாயிபாபா மடம் என்னும் பெயர்களில் ஓலை வேய்ந்த கூரைக் கட்டிடத்தில் (இன்றைய நாகசாய் மந்திர்) இயங்கி  சாயிபாபாவின் படம் ஒன்றை வைத்து, பஜனைப் பாடல் களைப் பாடி பக்தர்கள் பாபாவை வழிபட்டு வந்தனர்.

ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் சாயிபாபா பஜனை தவறாமல் நடந்தது.
 7-1-1943, வியாழக் கிழமை, மாலை நேரம்... சாயிபாபா பஜனை நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் பரவசத்துடன் இசைக்கருவிகளின் உதவியுடன் பரவசம் பொங்க சாயி பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந் தபோது

பளபளவென்ற தோற்றத்துடன் ஒரு சிறிய நாகப்பாம்பு எங்கிருந்தோ வந்து சாயிபாபாவின் படத்தின் முன்பு குடை விரித்தபடி- படம் எடுத்தபடி தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது. அதன் இயல்பான அளவைவிட பெரி தாக இருந்தது குடை. அந்த நாகக்குடையில் சங்கு, சக்கரம், சூலம் போன்ற சின்னங்கள் காணப்பட்டன.

பக்தர்கள் பலரும் அந்த நாகத்தை அதிசயத் துடன் பார்த்தார்கள்; வணங்கினார்கள்.

அந்த நாகப்பாம்பு சாயிபாபாவின் படத்தை வலம் வந்து நின்ற கோலத்திலேயே இரண்டு நாட்கள் அதே இடத்தில் நின்றது.. ஆயிரக் கணக்கான மக்கள் அந்த அதிசயக் காட்சியைக் காண வந்தார்கள்.

பலரும் பக்திப் பரவசத்துடன் அந்த நாகத்தை வணங்கி, இதுவும் சாயிபாபாவின் லீலையே என்று மெய்சிலிர்த்தனர்.
பலர் கூடைகூடையாக உதிரிப்பூக்களைக் கொண்டு வந்து நாகத்திற்கு அர்ப்பணித்தனர். நாகம் பூக்குவியலின் நடுவில் படம் எடுத்தபடி நின்று கொண்டிருந்தது. அங்கு வரும் ஆட்களைக் கண்டோ சத்தங்களைக் கேட்டோ அது எவ்வித மிரட்சியும் கொள்ளவில்லை. பக்தர்களும் பயம் கொள்ளவில்லை.

"பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்' என்னும் பழமொழி அந்த நேரத்தில்- அந்த இடத்தில் பொய்யானது.

கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

பின்னர் பக்தர்கள், தங்கள் வழக்கப்படி மடத்தில் சாயிபாபாவைப் பிரார்த்தனை செய்ய வழிவிட வேண்டும் என்று மனமுருகப் பிரார்த் திக்க, அந்த நாகம் சாயிபாபாவின் படத்தை மீண்டும் ஒருமுறை வலம் வந்துவிட்டு, பிறகு மெல்ல ஊர்ந்து அருகிலுள்ள ஒரு இடத்தில் மறைந்து விட்டது. சில நாட்களில் அங்கே ஒரு எறும்புப் புற்று வளர்ந்து வந்தது.

நாகம் மறைந்த இடம் மிகவும் புனிதமான இடமாகக் கருதப்பட்டு, அந்த இடத்தில் பிற்காலத்தில் நாக மண்டபம் கட்டப்பட்டது.

நாக வடிவில் வந்த சாயிபாபாவின் லீலா விநோதத்திற்குப் பிறகு, அங்குள்ள சாயிபாபா, நாகசாயி என்று பக்தர்களால் அழைக்கப் படுகிறார்.

ஸ்ரீநாகசாயி கோவிலுக்குச் செல்லும்போது, நாம் முதலில் "துனி' என்னுமிடத்திற்குத் தான் செல்கிறோம்.

நுழைவாயிலின் மேலே உள்ள சிறிய மண்டபத்தில் ஸ்ரீசாயி பாபாவின் சுதைச் சிற்பம் ,கீழே, ஸ்ரீசாயிபாபாவின் மிகப் பிரபலமான வாசகமான
"நானிருக்க பயமேன்' என்னும் வாசகம் ..

உள்ளே "துனி' என்கிற ஹோம குண்டம் எரிந்து கொண்டிருக்கிறது. இது அணையாமல் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும்.

(சீரடியில் உள்ள துனி பாபாவின் திருக்கைகளால் ஏற்றப்பட்டதாம். இது அன்று முதல் இன்று வரை எரிந்துகொண்டிருக்கிறது.

இங்குள்ள துனிக்கு, "தீபஜோதி' பெங்களூர் சாயிபாபா கோவிலிலிருந்து கொண்டு வரப் பட்டதாகவும்; பெங்களூர் துனிக்கு சீரடியிலிருந்து "தீபஜோதி' கொண்டு வரப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.)
கோவில் நுழைவாயிலின் மேலே உள்ள மாடத்தில் நாகக் குடையின் கீழ் ஸ்ரீசாயிபாபா அமர்ந்திருக்கும் சுதை விக்ரகம். மண்டபத்தின் மேலே உள்ள மாடத்தில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் பாபாவையும் இன்னொரு பக்கத்தில் உள்ள மாடத்தில் நின்ற திருக்கோலத்தில் உள்ள பாபாவையும் தரிசிக்கலாம்.
உள்ளே நுழைந்து சென்றதும் பெரிய கூடம். கூடத்தின் ஒரு கோடியில் மேடை. மேல் வெள்ளியிலான பீடத்தின்மேல் பளிங்கு விக்ரகமாக ஸ்ரீசாயிபாபா அருள்பொழிகிறார்.

திருமுடியில் கிரீடம் . வெள்ளியிலான குடை பிடிக்கும் நாகம். அதன் பின்னால் சாயிபாபாவின் பெரிய படம்.

பளிங்கு விக்ரகத்தின் முன்னால் பாபாவின் பஞ்சலோக விக்ரகம்..

ஒரு பக்கத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் ஒரு விளக்கும் இன்னொரு பக்கத்தில் வெள்ளிக் குத்து விளக்கு ஒன்றும் எரிந்து கொண்டிருக்கின்றன.

மேடையில் ஸ்ரீசத்யநாராயணனின் படம் . சற்று தள்ளி பளிங்குக் கற்களி னால் செய்யப்பட்ட பாபாவின் திருப்பாதங்கள் காணப்படுகின்றன.

பக்தர்கள் பாபாவின் திருப் பாதங்களைத் தொட்டு வணங்குகின்றனர்.
பாபாவுக்கு அடிக்கடி மயில் பீலி விசிறியால் விசிறி விடுகிறார்கள்.

கழி ஒன்றினால் பக்தர் களின் தலையில் தட்டி ஆசீர்வதிக்கிறார்கள்.

மலர்க் குவியலின் நடுவே படம் எடுத்து நிற்கும் நாகத்தின் படமும், அருகில் சாயிபாபாவின் படமும் சேர்ந்த புகைப்படம் பெரிய அளவில் கோவிலில்  அருட்காட்சியளிக்கிறது.
பாபாவுக்கு தினசரி காலை 5.00 மணி முதல் நான்கு முறை ஆரத்தி காண்பிக்கப்படுகிறது.

அபிஷேகம் தினசரி காலை 11.00 மணிக்கும்; வியாழக்கிழமைகளில் இரண்டாவது முறையாக மாலை 7.00 மணிக்கும் நடைபெறுகிறது.
கோவிலில் தினசரி பகல் 12.45-க்கும், மாலை 6.45-க்கும் அன்னதானம் உண்டு.  பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மதியம் அன்னதானம்
செய்கி றார்கள்.
வியாழக்கிழமைகளில் பொன்னால் செய்யப்பட்ட பாபாவின் திருவுருவத்தைத் தங்கத் தேரில் வைத்து, மாலை ஏழுமணி அளவில் கோவிலுக்குள் வலம் வருகிறார்கள். இது கண்கொள்ளா காட்சி.
மண்டபத்தின் பின்னால் பிரசன்ன ஆஞ்சனேயர் தனிச்சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

இங்கு சனிக்கிழமைகளிலும் மூல நட்சத்திரத்தன்றும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

பெரிய புற்று ஒன்றையும் ஆலய வளாகத்தில் காணலாம்.

 வல்லப கணபதி, முருகன், நவகிரகங்கள், நாகர் சந்நிதிகளும் சிறப்பாக அமைந் துள்ளன. நாகர் சந்நிதி அருகே அரச மரம் உள்ளது. பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீசத்யநாராயண பூஜை விசேஷமாகச் செய்யப் படுகிறது.
வருடத்திற்கு நான்கு முறை உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன.

குரு பௌர்ணமி, ஸ்ரீராம நவமி, தர்ஷன் தினம் மற்றும் மகாசமாதி தினம் ஆகிய விழாக்களும் கொண்டாடப் படுகின்றன.

மகாசமாதி தின உற்சவம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

கோவில் தினசரி காலை 4.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும்; மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

42 comments:

  1. சாயி இருக்க நிச்சயம் பயமில்லை.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நாகாசாயி நம் நலம் காப்பார்.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வுக்கு நன்றி. புகைப்படங்கள் அருமை... தொடரட்டும் அதிகாலையில் எங்களுக்குக் கிடைக்கும் தரிசனம்...

    ReplyDelete
  4. "நானிருக்க பயமேன்"

    நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள்
    மிகவும் சந்தோஷமளிக்கின்றன.

    நன்றி. vgk

    [கோவை சாய்பாபா காலணியில் உள்ள என் உறவினர்கள் வீடுகளுக்கு ஓரிரு முறை flying visit அடித்துள்ளேன். இந்தக்கோயில் அங்கு தான் உள்ளதோ! எனக்கு சரியாகத் தெரியவில்லை.]

    ReplyDelete
  5. ஷீரடி பாபாவை போய் அடிக்கடி தரிசித்திருக்கேன். இந்த நாக சாயி
    புதிய விஷயம்.

    ReplyDelete
  6. @ கோகுல் said...
    சாயி இருக்க நிச்சயம் பயமில்லை.
    பகிர்வுக்கு நன்றி.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  7. @ goma said...
    நாகாசாயி நம் நலம் காப்பார்.//

    நிச்சயம் நம் நலம் காப்பார். நன்றி.

    ReplyDelete
  8. @ வெங்கட் நாகராஜ் said...
    நல்ல பகிர்வுக்கு நன்றி. புகைப்படங்கள் அருமை... தொடரட்டும் அதிகாலையில் எங்களுக்குக் கிடைக்கும் தரிசனம்...//

    அருமையான தங்கள் கருத்துரைகளும் தொடர... நன்றி.

    ReplyDelete
  9. @ வை.கோபாலகிருஷ்ணன் said...
    "நானிருக்க பயமேன்"

    நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள்
    மிகவும் சந்தோஷமளிக்கின்றன.

    நன்றி. vgk

    [கோவை சாய்பாபா காலணியில் உள்ள என் உறவினர்கள் வீடுகளுக்கு ஓரிரு முறை flying visit அடித்துள்ளேன். இந்தக்கோயில் அங்கு தான் உள்ளதோ! எனக்கு சரியாகத் தெரியவில்லை.]//

    மேட்டுப்பாளையம் சாலையில் ஆர்ச் அடையாளம் உண்டு.

    சந்தோஷமளிக்கும் கருத்துரைகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  10. @ Lakshmi said...
    ஷீரடி பாபாவை போய் அடிக்கடி தரிசித்திருக்கேன். இந்த நாக சாயி
    புதிய விஷயம்.//

    கருத்துரைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  11. நாகாசாயி அருள்பெற்றோம் சகோதரி.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. வியாழனன்று சாயிபாபா பற்றிய பதிவு!நன்றி!

    ReplyDelete
  13. அழகான படங்களுடன் பதிவு அருமை.நாகம் பற்றிய தகவல் சிலிர்க்க வைத்தது.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. baabaa இருக்க பயமேன்..
    நன்றி..

    ReplyDelete
  15. நல்ல தகவல்கள். படங்களும் அருமை.

    ReplyDelete
  16. நாகமாக வலம் வந்ததால், நாக சாயி.

    ReplyDelete
  17. வழமையான ஆன்மிகம் கமழும் பதிவு. படங்களும் அருமை.. பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  18. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  19. அருமை...படங்களும் அருமை...

    ReplyDelete
  20. நாகசாயி நம் நலம் காப்பார்...நன்றி

    ReplyDelete
  21. வழக்கம்போல படங்களும் தகவல்களும் நன்று.

    ReplyDelete
  22. @ மகேந்திரன் said...
    நாகாசாயி அருள்பெற்றோம் சகோதரி.
    பகிர்வுக்கு நன்றி//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  23. @சென்னை பித்தன் said...
    வியாழனன்று சாயிபாபா பற்றிய பதிவு!நன்றி!//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  24. @ RAMVI said...
    அழகான படங்களுடன் பதிவு அருமை.நாகம் பற்றிய தகவல் சிலிர்க்க வைத்தது.பகிர்வுக்கு நன்றி./

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  25. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    baabaa இருக்க பயமேன்..
    நன்றி..//


    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  26. @கோவை2தில்லி said...
    நல்ல தகவல்கள். படங்களும் அருமை./


    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  27. @ FOOD said...
    நாகமாக வலம் வந்ததால், நாக சாயி./

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  28. @ பாரத்... பாரதி... said...
    வழமையான ஆன்மிகம் கமழும் பதிவு. படங்களும் அருமை.. பகிர்வுக்கு நன்றிகள்../
    கருத்துரைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  29. @ Kanchana Radhakrishnan said...
    பகிர்வுக்கு நன்றி./

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  30. @ மாய உலகம் said...
    நாகசாயி நம் நலம் காப்பார்...நன்றி/
    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  31. நாகசாயி கோவிலுக்கு போய் திவ்யமா தரிசனம் செய்து அங்கே சில நிமிடங்கள் உட்கார்ந்து தியானம் செய்து பிரசாதம் உண்டு மகிழ்ந்த மனநிறைவு.

    ஊருக்கு போனால் நாகசாயி மந்திர் பார்க்க பாபா கருணை புரிவாரா?

    எப்ப ஊருக்கு போனாலும் ஷீர்டி தவறாமல் போவோம்...

    வியாழன் தவறாமல் பாபாவுக்கு விரதமும் இருப்பதுண்டு....

    மனம் நிறைந்த பகிர்வும் படங்களும்பா...

    என் அன்பு நன்றிகள்....

    ReplyDelete
  32. @Reverie said...
    அருமை...படங்களும் அருமை.../

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  33. @ மஞ்சுபாஷிணி said...//

    மனம் நிறைந்த கருத்துரைகளுக்கு நன்றி.

    //
    ஊருக்கு போனால் நாகசாயி மந்திர் பார்க்க பாபா கருணை புரிவாரா?//

    பாபா தரிசனம் பெற பிரர்த்திக்கிறேன்.

    ReplyDelete
  34. தரிசணம் பெற வைத்த தங்களுக்கு பாக்கியங்கள் பல கிட்டட்டும்.

    ReplyDelete
  35. தகவல்களும் அருமை, படங்கள் மிக அற்புதம்,
    சாயிபாபாவின் தரிசனம் கிடைத்த உணர்வு..,
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
  36. @ thirumathi bs sridhar said...
    தரிசணம் பெற வைத்த தங்களுக்கு பாக்கியங்கள் பல கிட்டட்டும்.//

    பாக்கியங்கள் பெற வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  37. @ ராஜா MVS said...
    தகவல்களும் அருமை, படங்கள் மிக அற்புதம்,
    சாயிபாபாவின் தரிசனம் கிடைத்த உணர்வு..,
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  38. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. பாபா சாமி
    இந்த ப்ளாக் எழுதறவங்க எப்பொதும் நலமுடன் இருக்கணும்னு வேண்டிகிறேன்
    படங்கள் எல்லாம் பார்த்து கோவில் போய்வந்த நிம்மதி
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  40. சிறிய வயதில் அடிக்கடி (வியாழக் கிழமை) போய் வருவேன்.(காந்திபுரத்தில் இருந்தோம்)

    இப்போது மாமியார் வீட்டுக்கு பக்கம் தான். ஊருக்கு போகும் போதெல்லாம் போய் வருவோம்.

    தங்க தேர் விடப்படுவதை பார்த்தோம்.

    70லில் இருந்த சாயி கோவில் இப்போது நிறைய மாற்றங்களுடன் காண்ப்படுகிறது.

    படங்கள் அருமை.

    ReplyDelete