Sunday, September 2, 2012

கல்வித் தெய்வத்திற்கு ..கம .. கம... மாலை ..





ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்ப்படிகாக்ருதிம்!
ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!

ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்துவதன் தத்துவம்.

A RITUAL IS AN ACTION WHICH DONE WITH INTENTION AND ATTENTION. 
சடங்கு என்பது குறிகோளுடனும் கவனத்துடனும் செய்யப்படும் ஒரு கிரியை ஆக விளங்குகிறது...
ஒருமைக்கண் தான் கற்றகல்வி எழுமைக்கும் ஏமாப்புடைத்து என்று பூர்வஜன்ம வாசனையாய் கருவிலே திருவாய் மணக்கும் கல்வி !

கல்வித்தெய்வமாய் கலைமகளின் குருவாய் திகழும் குதிரை முக கடவுளாம் ஹயவதனப் பெருமாளை துதிப்பவர்களுக்கு, "குதிரை வேகம்' என்று சொல்லப்படும் சக்தி ஞான விஷயத்தில் ஏற்படும் ..

திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும்.  
வாசனை மிகுந்த ஏலக்காய் ஹயம் என்னும் அசுவத்திற்கு உணவு இல்லையே. இதில் உள்ளர்த்தம் ஒன்று உள்ளது என்பதை உணர்கிறோம்.., 
அசுவம் என்பதற்கு வாஜி என்ற ஒரு பெயரும் உண்டு, 
அசுவம் என்பதற்கு ஒளிக் கதிர் என்ற ஒரு பொருளும் உண்டு


சூரியனைப் பற்றிச் சொல்லும்போது 
“ சப்த யுஞ்ஜந்தி ரதம் ஏக சக்ரம், ஏகோ அஸ்வோ வஹதி, சப்த நாமா என்கிறது நூல். 
 சூரியனை ஏழு குதிரைகள் இழுத்து வருகின்றன அவனுடைய ஒற்றைச் சக்கரத்தேரை ஒரு குதிரை தான் இழுத்து வருகிறது அதற்குத் தான் ஏழு பெயர் என்பது இதன் பொருள். 
 சூரியனுடைய ஒளிக் கற்றையைப் பிரித்தால் ஏழு வர்ணங்களைக் கொடுக்கும் ஒன்று சேர்த்தால் வெள்ளை நிறக் கீற்றாக மாறும் ...
 வாஜி என்பதை பிரதி பிம்ப முறையில் பார்த்தால் ஜீவா என்றாகும். 
மூச்சுக் காற்றுக்கும் அசுவம் என்று பெயர், 

  சரியான முறையில் பூரக கும்பக ரேசகங்களைச் செய்தால் அறிவு தெளிவுறும் என்கிறது யோக நூல்..

ஏலக்காய்க்குள் இருக்கும் வித்து மூன்று பிளவாக இருக்கும் எனவே .திராவிடி என்ற ஒரு பெயரும் உண்டு,  
அந்த மூன்று பிளவுகள் எதனைக் குறிக்கின்றன என்று பார்த்தால் . தொல்காப்பியம் கல்வி பற்றிக் கூறும்போது வேண்டிய கல்வி ஆண்டு மூன்றிறவாது என்கிறது,, 

 அந்த மூன்று ஆவது அது என்றும் நீ என்றும் ஆனாய் என்றும் என்று உபநிஷத் கூறும் தத்வமஸி என்ற பொருளைச் சுட்டி நிற்கிறது..

எந்த இலட்சியம் கரடானதும் செங்குத்தானதுமான பாதையினைக் கொண்டதோ, 
எந்த இலட்சியம் வேதங்களில் “அஹம் பிரம்மாஸ்மி” ” நான் பிரம்மமாகிறேன்” என்றும் “தத்வமஸி! தத்வமஸி!” “நீயே அது! நீயே அது!” என்றும் அழைக்கப்படுகிறதோ, அந்த இலட்சியம் தான் “தனக்குள் இருக்கும் பிரம்மத்தை மலரச் செய்தல்”. 

காத்திரு 
காற்றை 
கவனித்துப் 
பார்த்திரு 
எதுவாக வேண்டுமோ 
அதுவாவாய்
அதுவே தத்வமஸி..

ஐயப்பன் சன்னிதானத்தின் முன்னால் "தத்வமஸி' என்று எழுதப்பட்டிருக்கும். "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறார்' என்பது இதன் பொருள்.

தத்வமஸி கொள்கையை அத்வைதமாக உலகிற்கு வழங்கியவர் ஆதிசங்கரர். 
.

கல்வி கரையில கற்பவர் நாள் சில .
கற்றீண்டு மெய்ஞ்ஞானம் காண்பார் தலைப் படுவார்

மற்றீண்டு வாரா நெறி -  திருக்குறள்..
கற்றலாவது 
 1.கேள்வி, 
2.விமர்சம். 
3 பாவனை. 
அதாவது கேட்ட கல்வியை

விமர்சித்து (ஆய்ந்து) அதன் பொருளை உள் மனத்தில் 
உருவகப் படுத்தலே பாவனை ஆகும்.

இதனைத்தான் ஏலக்காய் உணர்த்துகிறது, 

பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும்
பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ என்கிறார் கமபர்...

Cardamom oilgreen cardamom

25 comments:

  1. கல்வி தெய்வத்திற்கு ...
    கம ... கம ... மாலை... யா!

    சபாஷ் !

    மிகவும் வாசனையான பகிர்வாய் இருக்கும் போலிருக்கே!!

    ReplyDelete
  2. அடடா

    ஏலக்காயைப் ப்ற்றி

    ஏராள்மான தகவல்கள்

    மணம் வீசுதே இந்தப்பகிர்வு ;)))))

    ReplyDelete
  3. நறுமணம் கமழும்

    அழகான மல்லிகை +

    கம கம வாசனையுடன் ஏலக்காய்

    மாலைகளுடன் ஹயக்கிரீவர் படங்கள்

    அற்புதமாகத் தந்துள்ளீர்கள்.

    இரண்டாவது படம் வெகு ஜோர்

    முன்பு எப்போதோ பார்த்தது தான்

    என்றாலும் திகட்டாத முந்திரி +

    ஏலக்காய் தூவிய பாயஸமாக

    இனிக்கின்றதே இந்தத் தங்களின்

    பதிவு ! ;)))))

    ReplyDelete
  4. //கல்வித்தெய்வமாய் கலைமகளின் குருவாய் திகழும் குதிரை முக கடவுளாம் ஹயவதனப் பெருமாளை துதிப்பவர்களுக்கு, "குதிரை வேகம்' என்று சொல்லப்படும் சக்தி ஞான விஷயத்தில் ஏற்படும் ..//

    இந்தப்பதிவினை படிக்கும் போதே அதே குதிரை வேக சக்தியும் ஞானமும் ஏற்பட்டது போன்றதோர் பிரமை தோன்றியது.

    ReplyDelete
  5. //அசுவம் என்பதற்கு வாஜி என்ற ஒரு பெயரும் உண்டு,

    அசுவம் என்பதற்கு ஒளிக் கதிர் என்ற ஒரு பொருளும் உண்டு//

    அடடா! என்னெல்லாம் அறிந்து சொல்லுகிறீர்கள் !

    //சூரியனை ஏழு குதிரைகள் இழுத்து வருகின்றன அவனுடைய ஒற்றைச் சக்கரத்தேரை ஒரு குதிரை தான் இழுத்து வருகிறது அதற்குத் தான் ஏழு பெயர் என்பது இதன் பொருள்//

    அடேங்கப்பா! ;)))))

    // சூரியனுடைய ஒளிக் கற்றையைப் பிரித்தால் ஏழு வர்ணங்களைக் கொடுக்கும் ஒன்று சேர்த்தால் வெள்ளை நிறக் கீற்றாக மாறும் //

    சூப்பராக விக்ஞானத்தில் கொண்டுவந்து இணைத்து விட்ட தங்கள் ஞானம் மிகவும் வியப்பளிக்கிறது.

    ReplyDelete
  6. //ஏலக்காய்க்குள் இருக்கும் வித்து மூன்று பிளவாக இருக்கும் எனவே திராவிடி என்ற ஒரு பெயரும் உண்டு//

    ஓஹோ!

    அந்த மூன்று ஆவது
    “அது” என்றும்
    “நீ” என்றும்
    “ஆனாய்” என்றும்

    என்று உபநிஷத் கூறும் தத்வமஸி என்ற பொருளைச் சுட்டி நிற்கிறது.

    எந்த இலட்சியம் வேதங்களில்

    “அஹம் பிரம்மாஸ்மி”

    ” நான் பிரம்மமாகிறேன்” என்றும்

    “தத்வமஸி! தத்வமஸி!”

    “நீயே அது! நீயே அது!”

    என்றும் அழைக்கப்படுகிறதோ,

    அந்த இலட்சியம் தான்

    “தனக்குள் இருக்கும் பிரம்மத்தை

    மலரச் செய்தல்”//

    எங்கிருந்தோ புறப்பட்டு,
    எங்கெங்கோ சென்று
    வேதத்திலும் புகுந்து
    பிரும்மத்தையும் உணர்த்தி கடைசியில் அனைவரையும்
    அத்வைதத்தில் கொண்டு வந்து நிறுத்தி,

    அட்டகாசம் செய்து விட்டீர்கள்! ;)

    அம்பாள் ஞான சரஸ்வதியும்

    அள்ளித்தரும் ஸ்ரீ லக்ஷ்மியும்

    அலங்காரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியும்

    எல்லாமே நீங்கள் தானோ?

    சபாஷ்!

    மின்னிடும் வரமாய் ஜொலிக்கும் எவ்வளவு ஞானம் தங்களுக்கு?

    எவ்வளவு தகவல்களைத் தி ர ட் டி த் தருகிறீர்கள்!

    திரட்டுப்பாலை இனிக்கின்றனவே !!


    ReplyDelete
  7. திருவள்ளுவரையும் கம்பரையும் விட்டு விடாமல் தொட்டுக்கொண்டு

    கற்றலாவது
    1.கேள்வி,
    2.விமர்சம்.
    3 பாவனை.

    அதாவது கேட்ட கல்வியை
    விமர்சித்து (ஆய்ந்து) அதன் பொருளை உள் மனத்தில்
    உருவகப் படுத்தலே
    பாவனை ஆகும்.

    இதனைத்தான் ஏலக்காய் உணர்த்துகிறது//

    தங்களின் இந்த பாவனை விளக்கம் ஏலக்காயின் ருசியைவிட ருசியானதாகவல்லவோ உள்ளது;)

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete
  8. "மேதாயை"
    பேரறிவு சொரூபமயிருப்பவள்.

    வாக் தேவியைப்பற்றிய பதிவு, அருமை.

    ReplyDelete
  9. மின்னிடும் *வைரமாய்* ஜொலிக்கும் எவ்வளவு ஞானம் தங்களுக்கு?

    எவ்வளவு தகவல்களைத் தி ர ட் டி த் தருகிறீர்கள்!

    *தி ர ட் டு ப் பா லா ய்*

    இனிக்கின்றனவே !!

    எனத்திருத்தி வாசிக்கவும்.

    [ஓரிரு எழுத்துப்பிழைகள் ஆகிவிட்டன.]

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் said...

    விமரிசையாக
    விமர்சனக்கருத்துரைகள் தந்து பதிவினைப் பெருமைப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  11. திண்டுக்கல் தனபாலன் has left a new comment on your post "கல்வித் தெய்வத்திற்கு ..கம .. கம... மாலை ..":

    அருமையான படம் அம்மா... நன்றி...

    அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  12. சந்திர வம்சம் said...

    "மேதாயை"
    பேரறிவு சொரூபமயிருப்பவள்.

    வாக் தேவியைப்பற்றிய பதிவு, அருமை.

    அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் தோழி !!

    ReplyDelete
  13. ரொம்ப நாள் கழிச்சு வரேன் பதிவும் படங்களும் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்

    ReplyDelete
  14. பதிவில் தங்களின் ஞானம் கம கமக்கிறது மேடம் பகிர்விற்கு நன்றி. :-)

    ReplyDelete
  15. அழகழகான படங்களை தேர்ந்தெடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  16. மலர் மாலையில் ஜொலிக்கிறார் அன்னை!

    ReplyDelete
  17. காத்திரு
    காற்றை
    கவனித்துப்
    பார்த்திரு
    எதுவாக வேண்டுமோ
    அதுவாவாய்
    அதுவே தத்வமஸி..


    அற்புத‌மான‌ விள‌க்க‌ம்! ஏல‌க்காய் ப‌ற்றிய‌ பூர‌ண‌மான‌ த‌க‌வ‌ல்க‌ள் ம‌கிழ‌ச்செய்த‌ன‌. ந‌ன்றி தோழி!

    ReplyDelete
  18. ஏலக்காய் மாலை போடுவது பற்றித் தெரியும். ஆனால் அதற்கான அர்த்தம் உங்கள் பதிவில்தான் புரிந்து கொண்டேன்.

    (மாலையாக சாற்றிய ஏலக்காயை வேறு எதிலும் (பிரசாதம்) சேர்க்க முடியாது. டீ மசாலாவில் சேர்த்துவிடலாம் என்றால் “அந்த 3 நாளில்”??!!!. அதனால என்ன செய்வது என்று புரியவில்லை. அதற்கும் ஒரு வழி கிடைக்குமா)

    ஒரு முறை மாலையில் எத்தனை எண்ணிக்கையில் ஏலக்காய் இருக்க வேண்டும்?

    அன்புடன்
    புதுகைத் தென்றல்

    ReplyDelete
  19. @புதுகைத் தென்றல்

    மாலையில் உள்ள ஏலக்காயை தினமும் ஒன்றிரண்டாக தண்ணீரில் போட்டு வைத்து படிக்கும் குழந்தைகளுக்கு அருந்த தரலாம் தோழி! தெளிந்த ஞானம் பெற பெரியவர்களும் அருந்தலாம்.

    இருப்பினும் தகுந்த விளக்கத்தை, தங்களைப் போலவே நானும் ஞானப் பதிவரிடமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete

  20. @புதுகைத் தென்றல்

    @ raji said...//

    அர்ச்சகர் சுவாமியிடம் விசாரித்தேன்...

    சுவாமிக்குச் சாற்றி பிரசாதமாக தந்த பின் அது விசர்ஜனம் என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டுமாம்..

    ஆக அதனை மனதுக்கு உறுத்தல் இல்லாதபடி பயன்படுத்திக் கொள்ளலாமாம்..

    ReplyDelete

  21. @புதுகைத் தென்றல்
    ஒரு முறை மாலையில் எத்தனை எண்ணிக்கையில் ஏலக்காய் இருக்க வேண்டும்?

    ஒற்றைப்படையில்
    இருக்கவேண்டுமாம் !!

    ReplyDelete
  22. ஒற்றைப்படை என்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா மேடம்?

    ReplyDelete
  23. @ raji said...//


    ஒற்றைப்படை என்றால் வளர்ச்சியாம்

    உதாரணமாக 10 , 100 என்றால் ஒருமுடிவு மாதிரி..

    11 , 101 என்றால் இன்னும் வளர்கிறது என்று பொருளாம்..

    ReplyDelete