Sunday, April 21, 2013

ராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்




கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்

காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்


அரசாள வந்த மன்னன் ராஜாராமன்

அலங்கார ரூபன் அந்த சுந்தராமன்

தாயே என்தெய்வம் என்ற கோசலராமன்

தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்

வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெயராமன்

வம்சத்திற் கொருவன் ரகுராமன்

மதங்களை இணைப்பவன் சிவராமன்

மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்
ராமஜயம் ஸ்ரீராமஜயம் நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜயம் ஸ்ரீராமஜயம்

ராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ராம ஜெயம் நம் தேகபலம்
ராம ஜெயம் நம் ஜீவரசம்-ஸ்ரீ ராம ஜெயம் நம் ஜீவ ரசம்

ஓதிய நாவில் உணர்ந்தவர் நெஞ்சில்  உலாவிடும் ராமஜெயம்
உள்ளம் நினைத்ததை அள்ளி வழங்கி உயர்த்திடும் ராம ஜெயம்
சீத இலக்குவன் மாருதி வீடணன் சீர் பெற்ற ராம ஜெயம்
சித்தி தரும் பதம் சக்தி மயம் சிவம் சீதா ராம ஜெயம்-ஜெய சீதா ராம ஜெயம்

ஆழ நெடுங்கடல் சேதுவிலே அணை ஆக்கிய ராம ஜெயம்
ஆங்கொரு கல்லிடைப்பூங்கொடி தோன்ற அருள் தரும் ராம ஜெயம்
தேடி அடைந்தவன் வாலி நெருப்பும்  சிலீரென்ற ராம ஜெயம்
சித்தி தரும் பதம் சக்தி மயம் சிவம் சீதா ராம ஜெயம்-ஜெய சீதா ராம ஜெயம்

‘சாதுஜன ப்ரியா ஸ்ரீராமா – ராமராஜ்ய விட்டலா ஜெயராமா. 
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் – ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்…’


24 comments:

  1. ராமன் எத்தனை ராமனடி........

    ReplyDelete
  2. நம்பியவர்கேல்லேல்லாம் ஏது பயம்.ஸ்ரீராமஜெயம்

    ReplyDelete
  3. your description and pictures about sri rama are great

    ReplyDelete
  4. ராமநாமம் என்ன ருசி என்ன ருசி !
    ராமநாமம் சொல்ல சொல்ல வாய் மணக்கும், மனம் இனிக்கும்.
    படங்கள் எல்லாம் அழகு.
    பாடல்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  5. கோசலராமன் படம் வெகுவாக கவர்ந்தது. வழக்கம் போல பகிர்வு அருமைங்க.

    ReplyDelete

  6. ”ராமஜயம் ஸ்ரீராமஜயம்” என்ற தலைப்பில் கொடுத்துள்ள தங்களின் இன்றைய பதிவு மிகவும் அருமையாகவும், மனதுக்கு ஸாந்தியளிப்பதாகவும் உள்ளது.

    [ஸ்ரீராமஜயம் என்று எழுதுவதே நல்லது, ’ஜெயம்’ என்று எங்கும் கொம்பு போட வேண்டாம். ]

    ”லக்ஷ்மி கல்யாணம்” என்ற சிவாஜி படத்தில் வரும் மிக அழகான பாடலை ஆங்காங்கே தொகுத்து உபயோகித்துள்ளது, பதிவுக்கு மேலும் சிறப்பளிப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete

  7. இன்று 26 படங்களுமே மிக அழகாக் காட்சியளிக்கின்றன. பூக்கோலம் போன்ற கடைசிபடம் மிகவும் கவர்ச்சியாக உள்ளது.

    அதுபோல மேலிருந்து கீழாக இரண்டாவது படம் தஞ்சாவூர் பெயிண்டிங்கில் வரைந்தது மிகவும் டாப் க்ளாஸ் படம். அருமையான படத் தேர்வுகள். ;)

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத எத்தனை எத்தனை ராமன்கள்!!!! அத்தனையும் அழகோ அழகாகக் காட்டி அசத்தி விட்டீர்கள்.

    >>>>>>

    ReplyDelete

  8. கல்யாண ராமன்
    சீதாராமன்
    ராஜாராமன்
    சுந்தரராமன்**
    கோசலராமன்
    தசரதராமன்
    கோதண்டராமன்
    ஸ்ரீஜயராமன்
    ரகுராமன்
    சிவராமன்
    ஸ்ரீராமன்
    அனந்த ராமன்

    ராமன் ...... எத்தனை ராமனடி ...... !

    ராமஜயம் ஸ்ரீராமஜயம் நம்பிய பேருக்கு ஏது பயம்?


    [**தங்கள் பதிவினில் 4வது எழுத்து ’ர’ விட்டுப்போய் உள்ளது]

    >>>>>

    ReplyDelete

  9. ராமஜயம் ஸ்ரீ ராமஜயம் >>>>> அதுவே நமக்கு தேக பலம் >>>> ஜீவ ரஸம்

    அருமையான அசத்தலான சுலபமான சுகமான விளக்கம் ;)

    >>>>>>.

    ReplyDelete

  10. 2
    ஸ்ரீராமஜயம்
    ============

    இன்றைய பதிவு மிக அருமையாக அழகாக அற்புதமாகக் கொடுத்துள்ளீர்கள்.

    அத்தனைப்படங்களும் அழகோ அழகு

    எல்லா விளக்கங்களும் வ்ழக்கம் போல் ஜோர்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 886 ooooo


    ReplyDelete
  11. Raam Naam Satya hai.

    https://www.youtube.com/watch?v=CKXo7WWQdKg

    subbu thatha
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  12. ராமன்... மனதைக் கவர்ந்த ராமன்.

    ReplyDelete
  13. ராமனின் கைவண்ணம், கால்வண்ணம், மெய்வண்ணம் அனைத்தும் ஓரிடத்தில் கண்டேன்.

    ReplyDelete
  14. ஸ்ரீ ராம ஜெயம்.

    அற்புதமான அழகிய படங்கள். பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. சிறப்பான படங்கள் அம்மா...

    ReplyDelete
  16. பள்ளி நாட்களில் வந்த பாடல் இது. ரொம்பவும் மெய் மறந்து பாடிய பாடல். பாடல்வரிகளும், அதற்கேற்றார் போல படங்களும் அருமை!

    ReplyDelete

  17. மேலிருந்து கீழ் 11 ஆவது வரிசையில் [எண்ணிக்கையில் 12 ஆவது படம்] தசரத மஹாராஜாவின் மடியில் மணிமணியாக நான்கு குழந்தைகள்.

    ஜகத்தினை ஆண்ட தஸரதச் சக்ரவர்த்திக்கு ’ஜ க ம ணி’ போல் நான்கு புத்திரர்கள்.

    பார்க்கப்பார்க்கப் பரவஸம் ஏற்படுத்துகிறது.

    ஏதேதோ எனக்கும் சொல்லத்தோன்றுகிறது. ;)))))

    இதுபோன்ற மிக அற்புதமான படங்களை எங்கிருந்து தான் இறக்குமதி செய்கிறீர்களோ!

    வியப்போ வியப்பாக உள்ளது.

    ஸ்பெஷல் பாராட்டுக்கள் + வாழ்த்துகள். ;)))))

    ReplyDelete
  18. ராமன் எத்தனை ராமன்.....
    சொல்லில் அடங்காது அவன் பெருமை.
    அவனருள் வேண்டி நிற்போம்.

    ReplyDelete
  19. நல்ல பகிர்வு.அத்தனை படங்களும் அருமை.

    ReplyDelete
  20. அருமை.
    படங்கள் வெகு சிறப்பு

    ReplyDelete
  21. சகோதரி தினமும் இல்லாவிட்டாலும் உங்கள் பதிவின் வழியாய் கடவுள் பெயரை உச்ச ரிக்க வைக் கரீர்கள் அதுமட்டுமா சில சுலோகங்களையும் தெரிந்து கொள்வாவது படிக்க வைக்கரீர்கள் உங்களுடன் கடவுள் அருள் உங்கள் அன்பின் தன்மை உங்களை வந்து பார்க்க சொல்கிறது
    ராமஜெயம் ராமஜெயம் .....

    ReplyDelete