Thursday, May 30, 2013

ஜகத்குரு குருவருள் ..






மகாபாரத யுத்தகளத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாகிய
பார்த்த சாரதி பகவத் கீதையை உபதேசித்தார். அதன் சாராம்சம்

"ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுக'

"யாவற்றையும் துறந்து என்னையே சரணம் அடை. நான் உனது எல்லா பாபதாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்' என்கிறான் கண்ணன்.

பாரத யுத்தத்துக்கு கண்ணனின் உதவியைக் கேட்க  அர்ஜுனனும் துரியோதனனும் துவாரகைக்கு சென்றனர்.

அப்போது கண்ணன், ""ஒரு ஆயுதமும் எடுக்காத நான் தேவையா அல்லது எனது சேனைகள் தேவையா?'' என்று கேட்டான். துரியோதனன் சேனைகளைக் கேட்டான்.

அர்ஜுனனோ, ""நிராயுத பாணியான கண்ணன் போதும்'' என்றான்.

கடைசியில் வென்றது பஞ்ச பாண்டவர்கள் தானே.

ஆகவேதான் ஆதிசங்கரர் கிருஷ்ணாஷ்டகத்தில் "க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்' என்று ஜகத் குருவாகப் போற்றினார்.

குரு என்ற சொல் மந்திரங்களில் உன்னதமானது.

வேதாந்த வாக்கியங்கள் குருவை பரப்பிரம்மம் என்கின்றன.

பரமபதத்தை அளிக்கவல்லது.

காமதேனு, கல்பதரு, சிந்தாமணி போன்று வேண்டும் 
யாவற்றையும்தந்தருளி மங்களம் செய்பவர் குரு.

அருணகிரியாரின் குருகுஹ அனுபூதி

"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குஹனே!'

திருமூலரின் ஒரு குரு மந்திம்.

"தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவுரை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!'

அருணகிரியார் தமது கந்தரனுபூதியில் "பேசா அனுபூதி' என்பார்.

அந்த அனுபவம், ஆனந்தம் விவரிக்க இயலாதது.
அதனை உணரத்தான் முடியும். சர்க்கரையின் இனிப்பை விவரிக்க முடியுமா?

குரு என்ற சொல் மந்திரங்களில் உன்னதமானது. வேதாந்த வாக்கியங்கள் குருவை பரப்பிரம்மம் என்கின்றன.  பரமபதத்தை அளிக்கவல்லது.

ஆதிகுருவான தட்சிணாமூர்த்தி மௌன குருவாகத்திகழ்கிறார்...
அவர் வாய் திறந்து உபதேசம் செய்யார்.

சின் முத்திரை தாங்கி மௌனத்திலேயே உபதேசம் செய்வார்.
அவரைவிட வயதான சனகாதி முனிவர்கள் ஞானம் பெற்றனர். சின்முத்திரையின் தத்துவம் ஆள்காட்டி விரல் கட்டை விரலைத் தொடும். மற்ற மூன்று விரல்களும் தூக்கி நிற்கும். முக்குணங்கள், மும்மலங்கள் நீங்கி ஜீவன் (ஆள்காட்டி விரல்) பரமனை (கட்டை விரல்) நாட முக்தி சித்திக்கும். திருச்சி மகாராஜாவின் மந்திரியான தாயுமானவருக்கும்
மதுரை மந்திரியான திருவாதவூர் மாணிக்கவாசகருக்கும் நமசிவாய என்னும் பஞ்சாட்சர உபதேசம் மௌனத்திலேயே  கிடைத்தது!


ஸ்ரீ தட்சிணாமூர்த்தி   துதி
குருவே ஸர்வ  லோகானாம் பிஷஜே பவ ரோகி ணாம்
நிதயே சர்வ வித்யானாம் ஸ்ரீ தஷிணா மூர்த்தயே நம!

மீன் முட்டையிடும். பின் அதனை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டே இருக்கும். இந்தப் பார்வை காரணமாக முட்டை பொரிந்து மீன் குஞ்சு
வெளி வருவது நயன தீட்சை ,,




ஆமை கரையைத் தேடிவந்து முட்டை இட்டுச் செல்லும்.
பின் அது அந்த முட்டையைப் பற்றிய நினைவிலேயே இருக்குமாம்.
இதன் காரணமாக முட்டை பொரிந்து குஞ்சாகுமாம்.

குருவுக்கும் சீடனுக்கும் ஆழ்ந்த அன்பு- நம்பிக்கை இருந்தால் சீடனின் நினைப்பிலேயே, குருவின் நினைப்பிலேயே (Telepathy)

கோழி முட்டையிட்டு முட்டை மீதமர்ந்து அடைகாத்திட
முட்டைபொரித்து குஞ்சாகும்.



16 comments:

  1. குரு பார்க்க கோடிபுண்ணியம் என்று சொல்வார்கள் அதுபோல உங்கப் பதிவைப் பார்த்தாலே எனக்கும் புண்ணியம் கிடைக்கபோறதா என்னிக்குவேன்

    ReplyDelete
  2. உணர வேண்டிய வரிகள்... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. குரு மகிமையை உணர வைத்திட்ட அற்புதமான எழுத்து. அருமைங்க! மிக்க நன்றி!.

    ReplyDelete
  4. ஜகத்குரு - குருவருளால் .... தங்களின் inRaiya வெற்றிகரமான 925வது பதிவுக்கு, என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    வழக்கம் போல மிகச்சிறப்பான விளக்கங்களுடன் கூடிய அழகான பதிவாக அமைந்துள்ளது.

    மாலையிட்ட காமதேனு சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யும் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அது அழகோ அழகு. எப்போதோ தங்கள் பதிவினில் காட்டி நான் பார்த்து மகிழ்ந்தது.. மீண்டும் காட்டியுள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    பாராட்டுக்கள், நல்வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ;))))) ooooo 925 ooooo ;)))))

    ReplyDelete
  5. REVISED
    =======
    ஜகத்குரு - குருவருளால் .... தங்களின் இன்றைய வெற்றிகரமான 925வது பதிவுக்கு, என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    வழக்கம் போல மிகச்சிறப்பான விளக்கங்களுடன் கூடிய அழகான பதிவாக அமைந்துள்ளது.

    மாலையிட்ட காமதேனு சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யும் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அது அழகோ அழகு.

    எப்போதோ தங்கள் பதிவினில் காட்டி நான் பார்த்து மகிழ்ந்தது.. மீண்டும் காட்டியுள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    பாராட்டுக்கள், நல்வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ;))))) ooooo 925 ooooo ;)))))

    ReplyDelete


  6. குரவே சர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகினாம்

    என்ற வாக்கியம் காலம் காலமாக சொல்லப்படும் ஒன்றாம்.

    கு என்றால் இருட்டும், ரு என்றால் அந்த இருளில் இருந்து வெளியே வருதல்.

    இருளில் இருந்து நமை வெளியே வரச்செய்பவர் குருவே.

    குரு மார்கள் உலகம் முழுவதும் நிறைந்து காணப்படுவதாகத் தோன்றினாலும்,
    அவர்கள் பிறவி வினைகளைத் தீர்க்கவல்ல மருந்துகளை உபாயங்களைத்
    தருபவராக, சொல்லித் தருபவராகத் தோன்றினாலும்,

    மனமுவந்து யாருக்குக் கொடுப்பார் என்றால்,

    ஜிஞ்ஞாசா

    அந்தக் கரணத்தில் ஒரு ஆவல் கற்கவேண்டும் என்ற ஆவல் இருப்பவரை இனம் கண்டுகொண்டு
    அவர்களுக்குத்தான் தன் வித்தையைக் கற்பிக்கிறார்.

    எல்லோருக்கும் இந்த ஜிஞ்ஞாசா இருப்பது கடினம்.

    குரு சொல்வதை அப்படியே தத்க்ஷணம் உட்கிரகித்துக்கொள்பவன் சீடன்.

    அதை விமர்சிப்பவன், சரியா இருக்குமா இல்லயா என்று பரீட்சை செய்பவன்
    கற்கவேண்டும் என்ற நிலையிலே தொடர்ந்து இருக்கிறான்.

    தென்புலம் நோக்கி கல்லாய் அமர்ந்திருக்கும் குரு அவர்களுக்கு ஒரு கல்.

    கல் என்று அவர் கண்களால் மௌனத்தால் சொல்கிறார்.

    ஏன் எனின் இவனும் இன்னும் கல்லாய் இருக்கிறான்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete

  7. As usual a very interesting post with good pictures. Subbu thatha's commennts made me think of Ramakrishna Paramahamsa and Narendra.

    ReplyDelete
  8. மிகமிக அருமை சகோதரி. குருவைப்பற்றி அற்புதமான பதிவு.
    பகிர்விற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  9. உருவாய் அருவாய் ... அற்புதமான பாடல் வரிகள். சிறப்பான பகிர்வுங்க.

    ReplyDelete
  10. குரு பகவான் பற்றிய சிறப்பான செய்திகள் மற்றும் படங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. பல விடயங்கள் (நயன தீட்சை, சின் முத்திரை) அறியக் கூடியதாக இருந்தது.
    மிக நன்றி. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. நர நாராயணராய் அவதாரம் செய்து நரனுக்கு அஷ்டாக்ஷர மந்திரம் உபதேசம் செய்த யோக பத்ரிநாதர் படமும், தங்க காமதேனுவும் அருமை.
    இரண்டு படங்களையும் முடியுமென்றாஅல் மின்னஞ்சலில் அடியேனுக்கு அனுப்பி வைக்கவும்.

    ReplyDelete
  13. குருவின் பெருமை கூறும் பதிவு அருமை.
    குருவருள் இருந்தால் திருவருள் தானாக வந்து சேரும்.
    படங்கள் எல்லாம் அழகு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete