இந்த படங்கள் தைப் பூசத்திருநாளன்று (என் இளய மகனின் பிறந்த நாள் ) ஆஸ்திரேலிய செல்வ விநாயகர் கோவிலில் எடுக்கப்பட்டவை. அதே நாளில் என் மூத்த மகன் கோவை நேரு மகாவித்யாலயா ஜெய் அனுமன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கு பெற்றார். தைப்பூச நாளில் காலை ஆறு மணி அளவில் கிழக்கு வானில் தன் பொற்கிரணங்களப் பரப்பி தத்தகாயமாய் உதிகவும், அதே நேரம்... மேற்கு வானில் கதிரவனுக்கு நேர்க்கோட்டில் தண் கிரணங்களைப் அளித்தபடி சந்திரனும் காட்சிப்படும் வானியல் அற்புதம் நிகழும் பொன்னாள். கும்பாபிஷேக நேரத்தில் கருடன் வட்டமிட்டது. வேணுகோபாலசுவாமி கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் கும்பாபிஷேகம் சில ஆண்டுகளுக்கு முன் ந்டைபெற்றது அப்போது ஏராள்மான கருடப் பறவைகள் வட்டமிட்ட காட்சி எப்போதும் மறக்கமுடியாது. கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் யாகசாலையில் ""ரைட் ..லெப்ட்... " என்று குரல் கேட்க அருகில் சென்று பார்த்தேன். சங்கு,சக்கர முத்திரைகளை நெருப்பில் காட்டி கை நீட்டியவர்களுக்கு எல்லாம் முத்திரை வைத்துக் கொண்டிருந்தார் ம்ந்திராலயத்தில் இருந்து வ்ந்திருந்த தலைமை சுவாமிகள். வேணுகோபால சுவாமி கோவிலின் தெப்பக்குளம் அற்புதமாக இருக்கும். கோவிலைச் சுற்றி சோலையும், பிரகாரத்தில் தனி சன்னதியில் சக்கரத்தாழ்வாருமாக நாமிருப்பது கோவையிலா அல்லது திருவரங்க சுற்று பிரகாரமா என்று கேட்கத்தோன்றும். முன்புறத்தூண்களில் கிருஷ்ணலீலைக் காட்சிகள் எழிலுற அமைக்கப்பட்டு கருத்தைக் கவரும். தைப்பூச வானியல் அற்புதத்தில் திளைத்திருந்த என்னை கருடப் பட்சிகள் கண்ணன் ச்ன்னதியில் கொண்டு சேர்த்துவிட்டன. மீண்டும் தைப்பூசத்திற்கே வருவோம்! வள்ளலார் ஜோதித்ரிசனம் பெற்ற நாள். தைப்பூசத்திருநாள் காணாமல் போவாயோ பூம்பாவாய் என்று பதிகம் பாடிய நாள். |
ஆஸ்திரேலிய விநாயகரை தரிசனம் செய்ய வைத்ததற்கு நன்றி..
ReplyDeleteபுகைப்படங்கள் ஓப்பன் ஆகவில்லை நண்பரே...
ReplyDeleteகண்டிப்பாக அப்புறம் பார்க்கிறேன்..
எனக்கும் படங்கள் காண இயலவில்லை ...
ReplyDeleteகொஞ்சம் அதை சரி செய்யுங்கள்
என்னாலயும் பாக்க முடியலைங்க...
ReplyDelete:)
ReplyDeleteஎனக்கும்படங்கள் பார்க்கமுடியலை. பதிவு நல்லா இருக்கு.
ReplyDeleteபடம் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!
ReplyDeleteHello People...
ReplyDeleteThe post is great. Photos are very nice!!!
படங்களுடன் நல்ல செய்தி!
ReplyDeleteநல்ல பகிர்வு.....இந்த மாதரி விழாகளில் எங்க இருந்து தான் இந்த கருடன் வருகிறதோ......
ReplyDeleteதைப்பூசம் சிறப்பு வாய்ந்தது...உங்கள் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநாங்கள் வசித்து வரும் திருச்சி மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள 4 வீதிகளிலும் தைப்பூசத்தன்று விடியவிடிய, திருச்சியிலுள்ள அனைத்து கோயில்களிலிலிருந்தும் ஸ்வாமி புறப்பாடு அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, இசைக்கச்சேரிகளுடன் வந்து கொண்டே இருக்கும். காணக் கண்கோடி வேண்டும். அதே உணர்வு ஏற்பட்டது தங்கள் பதிவினிலும். பாராட்டுகள்.
ReplyDeleteபெரும்பாலான முருகன் தலங்களில் தேரோட்டமும் ,வாணவேடிக்கைகளும் சிறப்பாக நடைபெறும். திருவண்ணாமலை கிரிவலம்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாமே!
ReplyDeleteஉங்க இளைய மகனுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
தோழி,
ReplyDeleteதைபூசம் குறித்து தாங்கள் இட்ட பதிவு மிகவும் அருமை.தாங்கள் வள்ளலார் வழியா?
அருள்பெருஞ்சோதி தனிபெருங்கருணை
தனிபெருங்கருணை அருள்பெருஞ்சோதி
மிக்க நன்றி.
தைப்பூசம் சிறப்பு வாய்ந்தது...உங்கள் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருள்பெருஞ்சோதி தனிபெருங்கருணை
ReplyDeleteதனிபெருங்கருணை அருள்பெருஞ்சோதி
மிக்க நன்றி.
படங்களுடன் நல்ல செய்தி!
ReplyDeleteI remember Venugopalaswamy koil.
ReplyDeleteWhen i was alittle girl used to go hear pravasanam there.
thanks bringing my olden days.
viji
@ viji said...//
ReplyDeletesed to go hear pravasanam there.//
I also hear many pravasanam there.
;)
ReplyDeleteசிவாய நம ஓம்!
ஓம் நமச்சிவாயா !!
162+2+1=165
ReplyDelete