Monday, March 21, 2011

மிடுக்காய் கடுக்காய்



கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்
கடுக்காயின் கடினமான மேல் பகுதியே மருத்துவ குணமுடையது.

அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில் மேல் தோலும்
கடுக்காயின் உள் கொட்டையும் எப்போதும் பயன் படுத்தக்கூடாதவை.

கடுக்காய் என்ற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளிலும், காதி கிராப்ட்
கடைகளிலும் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கிறது.

கடுக்காயின் சதைப்பற்றான மேல் தோலை இடித்துத் தூள்செய்து
வைத்துக் கொண்டு, மாலை அல்லது இரவு வேளைகளில் அரை
ஸ்பூன் எடுத்து குளிர்ந்த நீரிலோ, வெந்நீரிலோ, பாலிலோ கலந்து
அருந்தலாம்.


வாயிலும் ,தொண்டையிலும், இரைப்பையிலும் ,குடலிலும் உள்ள
ரணங்களை ஆற்றிவிடும் வல்லமை பெற்றது.அது மட்டுமின்றி
 பலசிக்கல்களை ஏற்படுத்தும் மலச்சிக்கலைப் போக்கி குடல்
சக்தியை ஊக்கப்படுத்தும்.பசியைத்தூண்டி,ரத்தத்தை சுத்தப்படுத்தி,
வாதம் பித்தம்,கபம் ஆகிவற்றால் வரும் ஏராளமான நோய்களைப்
போக்கும்.ஊட்டத்தை ஊட்டி இளமையை நீடிக்க வைத்து மிடுக்கோடு
வாழவழி செய்யும்.
  கடுக்காயும் தாயும் கருத்தில் ஒன்று என்றாலும்
  கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ-கடுக்காய் நோய்
  ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்
  ஊட்டி உடல் தேற்றும் உவந்து.
என்ற மருத்துவப்பாடல் கடுக்காய் பெற்ற தாயைவிடப் பெரியது எனப்
புகழ்கிறது. ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப்பயனை நீட்டித்து வருகிறது.



கடுக்காயை லேகியம் செய்து உண்ண, நரை, திரை மாறி காய சித்தியாகும்.
இதற்கு ‘அகஸ்த்தியர் ரசாயனம்” என்று பெயர்.
முற்காலத்தில் கட்டடம், கோவில் கட்ட கடுக்காய்ச்சாறு சேர்க்கப்பட்டது.
உபயோகிக்கும் போது நிபுணரை ,மருத்துவரை கலந்து உபயோகிக்கவும் .
மூலிகைகள் தீங்கிலாதவை என நினைக்கவேண்டாம் .அதிலும் மூலிகை பறிப்பது சுத்தி செய்வது ,பத்தியம் ,அதை தரம் பிரிப்பது ,நேரம் போன்ற பல காரணிகள் உண்டு .
 சிறு குழந்தைகளுக்கு சந்தனக்கல்லில் சிறிது உரசி இழைத்து
பாலில் கலந்து புகட்டலாம்.
காது நோய்களுக்கும் கண்கண்ட மருந்தாகத் திகழ்கிறது
கடுக்காய் கொடுத்து விட்டான் என்று ஏமாற்றி மோசம் செய்பவர்களைக்
குறிப்பிடுவார்கள்....
புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
 தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம்.
 அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது.
 சுமார் 4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.கடுக்காயைஉபயோகிக்கும் போது அதை உடைத்து அதில்   உள்ளே உட்கொட்டையில் இருக்கும் ஒரு நரம்பை நீக்கவேண்டும் .அது விஷத்தன்மை உடையது .இதுவே சுத்தி செய்தல் .இது தெரியாமல் கடையில் விற்கும் கடுக்காய் பொடியை வாங்கி உபயோகித்து பின் வருந்துவதில் பலனில்லை .


திருவாரூர் வட்டம் திருகாரயில் கோவிலுள் உள்ள விநாயகர் கடுக்காய்
விநாயகர் எனப்படுவார். வணிகர் ஒருவர் சாதிக்காய் மூட்டைகளை ஏற்றி வரும் போது விநாயகர் சிறுவன் போல் வந்து என்ன மூட்டை எனக் கேட்க

சிறுவனை ஏமாற்ற நினைத்த வணிகன் கடுக்காய் என்று கூறினான்.

மூட்டைகள் அனைத்தும் கடுக்காய்களாயினவாம்.வணிகன் மனம்
திருந்தி வேண்டிய போது விநாயகர் முன்போல் சாதிக்காய்களாக மாற்றினார்.



சாதிக்காய்களை விட விலை மலிவாய் இருந்தாலும் குணத்தில்
மிகவும் ஏற்றமுடையது கடுக்காய்.
காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுகாய்
ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் உண்டுவர
நரை திரை மூப்பு இன்றி இள்மையோடு வாழலாம் என்கிறது
சித்த மருத்துப் பாடல் ஒன்று.  

32 comments:

  1. சும்மா
    கடுக்காய் கொடுக்காமல்
    மிடுக்காய்
    கடுக்காய் பற்றிய நல்ல பல தகவல்களைச்
    சொல்லியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. @ வை.கோபாலகிருஷ்ணன் //
    பாராட்டுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  3. கடுக்காய் குறித்த முழுத்தகவல்களையும்
    சுவையாக தொகுத்துத் தந்தமைக்கு நன்றி
    படங்களுடன் பதிவும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @ Ramani said...//
    வாழ்த்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. @Pranavam Ravikumar a.k.a. Kochuravi said//
    @ முனைவர்.இரா.குணசீலன் said//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  6. ”..நரை திரை மூப்பு இன்றி இள்மையோடு வாழ..” வகுக்கும் கடுக்காய் பற்றி சுவார்சமான தகவல்களைப் பகுந்ததற்கு நன்றி

    ReplyDelete
  7. ரொம்ப சரி ராஜேஸ்வரி. எனக்கு ஒருமுறை கடுமையான அல்சர் வந்த போது, கடுக்காய் பொடியை தேனில் கலந்து காலையில் வெறும் வயிற்றி சாப்பிட , சரியாகி விட்டது. கொஞ்சம் கசக்கும்.

    ReplyDelete
  8. நல்லதொரு வாழ்வியல் பதிவு.இன்றுதான் உங்கள் பக்கம் வருகிறேன்.உண்மையில் கடுக்காய் என்ன்வென்றே தெரியவில்லை தோழி !

    ReplyDelete
  9. தேவையான தகவல்கள் மேடம் நன்றி

    ReplyDelete
  10. Dr.எம்.கே.முருகானந்தன் said...
    ”..நரை திரை மூப்பு இன்றி இள்மையோடு வாழ..” வகுக்கும் கடுக்காய் பற்றி சுவார்சமான தகவல்களைப் பகுந்ததற்கு நன்றி//
    THANK YOU DOCTOR .

    ReplyDelete
  11. @ சாகம்பரி said...//
    WELCOME FOR YOUR VALUABLE COMMANDS.

    ReplyDelete
  12. @ஹேமா said...//
    WELCOME. Seethe picture Please.

    ReplyDelete
  13. @ எல் கே said...
    தேவையான தகவல்கள் மேடம் நன்றி//
    Thank you Sir.

    ReplyDelete
  14. ஜாதிகளை விரட்டும் ஏதேனும் ஜாதிக்காய் உண்டோ!

    ReplyDelete
  15. படங்களுடன் பதிவும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. மன ஆரோக்கியம் குறைவால்,
    வெடுக்காய் பேசுபவர்களையும் கொடுக்காய் கொட்டுபவர்களையும்
    கடுக்காய் கொடுத்து சரி பண்ணலாம்

    ReplyDelete
  17. உடல் நலம் காக்க ,நல்ல பதிவுகளை அள்ளி அள்ளித் தருகிறீர்கள்.நன்றி

    ReplyDelete
  18. எனக்கும் உங்களைப் போல் நம் இந்திய
    மூலிகைகளில் மிகுந்த நம்பிக்கைப் பற்று உண்டு.
    உபயோகித்துப் பலனும் அடைந்துள்ளேன்.
    அருமையான பதிவு தோழி !

    ReplyDelete
  19. ;)
    ஓம் ஹரி
    ஓம் ஹரி
    ஓம் ஹரி

    ReplyDelete
  20. கடுக்காயை எவ்வாறு சுத்தி செய்வது ?

    Yakub

    ReplyDelete
  21. கடுக்காயை எவ்வாறு சுத்தி செய்வது ?

    ReplyDelete
  22. nalla kadukkai eppadi kandu pedippathu

    ReplyDelete
  23. nalla kadukkai eppadi kandu pedippathu

    ReplyDelete
  24. "KADUKKAI" = 19 ம் எண்ணில் numerology ன் படி வருவதால் பலன்கள் நிச்சியம் உறுதி DR JNS. CHELVAN DINAMALAR NUMEROLOGIST 98424 90001

    ReplyDelete