Wednesday, May 4, 2011

திரு ஆனைக்கா அண்ணல்




1.jpg (1498×1076)

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர் இன்பம் வேண்டிலஇராப்பகல் ஏத்துமின் எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும்  அண்ணல் 
அருள் பாலிக்கும் திரு ஆனைக்காவல் திருத்தலம் 60 ஆம் தலம். 

அப்பர்,திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர்,ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். 
[DSC00649.JPG]

இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் 
பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய தலம்.
 
சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி, 
நின்ற நிலையில் வீணையில்லாமல் காட்சி தருகிறாள்.
அருகில் கார்த்திகை, ரோகிணியுடன் சந்திரன் இருக்கிறார்.

ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர், 
ஜேஷ்டாதேவியுடன் கூடிய சனீஸ்வரர்  அருள்பாலிக்கிறார்கள்...

 ஜம்பு தீர்த்தக்கரையில்  உள்ள  குபேரன் பூஜித்த பலமுக ருத்திராச்சம் தாங்கிய குபேர லிங்கத்திற்கு ஆனி பவுர்ணமியில்  முக்கனி அபிஷேகம் நடக்கிறது.  குபேர லிங்கத்தை குபேரன் வழிபட்டததால் தான் சிவன் அருள் பெற்று செல்வேந்தன் ஆனதாக வரலாறு ~ .

 "ஸ்திரீ தோஷம்' உண்டான பிரம்மா தோஷ நிவர்த்தி பெற 
சிவனை வேண்ட  - சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார்.  

அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன்  உடன் அழைத்துச் செல்ல மறுத்தார்.  .

சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையி\ல் இருவரும் மாறுவேடத்தில் சென்ற திருவிளையாடல் நிகழ்ந்தது.  பிரம்மாவுக்கு  பாவமன்னிப்பு வழங்கினர்.

 பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள்  மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

உஷத் காலத்தில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. 
சக்தி பீடங்களில் ஒன்றான  அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால், "அகிலாண்டேஸ்வரி" என்றழைக்கப்படுகிறாள்.
1.jpg (1498×1076)
அகிலாண்டேஸ்வரி,  ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம்.  மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார்.

சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.
ஆடி மாதத்தில் அம்பாள்  சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம்.   ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள்.

சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள்.  மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
நவ துளை ஜன்னல்: ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.  

ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.

சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது.

முற்றிய கோடையில், காவேரிவறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை...

ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது.  பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாற வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார்.
நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.
ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்யவது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருக்கும். நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். 

ஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக்காப்பிடப்படுகிறது.

 மதுரையைப் போல,  சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார்.

இப்பகுதியை ஆண்ட மன்னன், கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது, போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. அவன் சிவனை வேண்டினான்.
சிவன் விபூதிச்சித்தராக வந்து, பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார்.
மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக
 பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. 

 . சிவன் கட்டிய மதில் "திருநீற்றான் திருமதில்' என்றும், பிரகாரம் "விபூதி பிரகாரம்' என்றும் அழைக்கப்படுகிறது. 

விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.

திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம். 

மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைபட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். 

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர்  நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. 

 தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி காட்சி தருகிறாள்.
ண்பது மிகச்சிறப்பு... அது போலவே... அகிலாண்ட 
மூலவர் ஜம்புகேஸ்வரர்  அப்புலிங்கமாக காட்சி தருகிறார்.

திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக  மிக நன்றாக பளிச்சென்று தெரியும்.காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். 

 அம்பாள்  மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்பது வரலாறு . 

அர்ச்சனை ஆரதனை எல்லாம் ஸ்ரீ சக்கர தடங்கத்துக்குத்தான்.
இரண்டு தாடகங்கள் இரணடு காதுகளிலும். 


விழிக்கே அருளுண்டு என்று அபிராமி பட்டர் பாடியவுடன் தன்னுடை சந்திர தாடங்கத்தை கழட்டி வானில் வீசியதும் பௌர்ண்மி நிலவுபோல் காட்சி அளித்தது.அழகான காதுகள் அதில் தாடங்களாக நக்ஷ்த்திர மண்டலதிற்கு அதிபதியாய் விளங்கும்சந்திர சூரியர்கள்

கதம்ப மஞ்சரி கிலுப்த கர்ணபூர மனோஹரா!
தாடங்க யுகளி பூத தபனோடுப மண்டலா!!
 அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

ஆதிசங்கரர் இயற்றிய சவுந்தர்யலகரி பாடல்கள் கல்வெட்டுக்களாக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
 கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் போட்டி பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர்.  

மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்.து சிவனை வழிபட்டனர். .

சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது. 
 சிவன், யானைக்கு மட்டும் முக்தி கொடுத்தார். சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும்படி செய்தார்.

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காட்டில் வெண் நாவல் மரத்தடியில்  சிவலிங்கம் இருந்தது. 

சிவகணங்களில்    சாபம் காரணமாக  யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. 

யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும்,மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். 

சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும்.  

யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.  

சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. 

பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70   மாடக்கோவில்களில் . கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

திருவானைக்காவிலுள்ள பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரை உடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டில்  மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான் என்ற பெயருடைய அரசனாகியது...
சிலந்தி, சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்த , கோச்செங்கட்சோழ மன்னர் . தனது முற்பிறவிப் பயனால், யானைகள் புக முடியாதபடி சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டி யானை புகாதபடி திருப்பணி செய்த மன்னனுக்கு  சன்னதி இருக்கிறது.
கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது, அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.  இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால், பள்ளியறை இருக்கிறது.

இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். 

சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை

கல்வி தரும் அம்பிகை: வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற, அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள அம்பாள், வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். 

படிமம்:Thiruvanaikaval Kopuram.jpg
கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார்.அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர்  அம்பாளின் தாம்பூலத்தினை ஏற்றுக்கொண்டு தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கி. காளமேகம் என    பிரபலமான கவியானார். 
ஆசு கவியால் அகில உலகெங்கும் வீசு புகழ் காளமேகம்' என்றும், ‘வசைபாடக் காளமேகம்’ என்றும் வரும்  தொடர்கள்  புலமைக்குச் சான்றாக அமைகின்றன. 

 சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.

முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார்.

முருகனும், காமத்தை  அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய அபூர்வ நிலையில் காட்சி தருகிறார்.

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி 
யடைதலந வாயு வோடாத ...... வகைசாதித் 


தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச 
அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை 


செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார 
சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு .......
மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி 
மகப்ர வாக பானீய ...... மலைமோதும் 


மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு 
மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே. 


என்ற திருப்புகழ் பாடல் பூபாள ராகத்தில் நினைவில் பாடியது.

17.jpg (966×681)

சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்துகாவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபடசிவன்  லிங்கத்தில் எழுந்தருளி  காட்சி தந்தார்.

அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் "நீர்' தலமானது.  

சிவனை வேண்டி இங்கு தவமிருந்த ஜம்பு  முனிவர் சிவன் அளித்த நாவல்  பழத்தை புனிதம் கருதி விதையையும்  விழுங்க வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது.

அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் ஜம்பு மரத்தின் கீழ் அமைந்தது.சுவாமி "ஜம்புகேஸ்வரர்' என பெயர் பெற்றார்.
படிமம்:Thiruvanaikaval Koyil mandabam.jpg

 ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்ல அரிய சிற்பம் ,
நான்கு கால் தூணில் உள்ள மங்கைகளின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க வைப்பதாக  மிக தத்திரூபமாக செதுக்கப்பட்டுள்ளது..
காவேரி நதியோடு சென்று விட்ட சோழனின் மணியாரம், திருமஞ்சனக் குடத்தில் சிக்கிக் கொண்டு எம்பிரானுக்கு ஆபரணமாக விளைந்த அற்புதத்தை சுந்தரமூர்த்தி நாயனார் பாடலாக அற்புதமாக வடிக்கிறார்:
பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து, தினமும் அருள்மிகு ஜம்புகேசுவரர், அகிலாண்டேசுவரி அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.  திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.
காவிரி நீரே  சிவலிங்கத்துக்குப் பாதபூசை செய்வதே போல  கட்டடக் கலைப் பொறியியல் நுட்பத்துடன் மிக நேர்த்தியாகக் கருவறையும் அமைத்திருப்பது வியக்கவைக்கிறது .
படிமம்:Thiruvanaikaval Koyil outer compound.jpg
படிமம்:Thiruvanaikaval temple inner outer wall gap .jpg  

படிமம்:Thiruvanaikaval temple wall.jpg25_thiruvanaikkaval_temple.jpg (321×484)
 




12 comments:

  1. மிக மிக விரிவான தகவல்கள்,

    தங்கள் கட்டுரையை படித்தபோது,
    திருஞானசம்பந்தரின் பின்வரும் பதிகம் நினைவுக்கு வந்தது,

    ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
    ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதும் ஏதம் இல்லையே.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. பஞ்சபூதஸ்தலத்தில் ஒன்றானதும் எங்கள் ஊரில் உள்ளதுமான திரு ஆனைக்கா பற்றிய செய்திகளில் எனக்குத்தெரிந்தவற்றில் எதையாவது எழுத மறந்திருப்பீர்களோ, நினைவூட்டலாம் என்று அமைதியாக ஆழ்ந்து படித்ததும், வியந்து போனேன். எனக்கு 90% தெரியும் என்றால் உங்களுக்கு 200% தெரிந்துள்ளது.

    அருமை அருமை அருமை!!!

    எங்குதான் இப்படி அனைத்துத் தகவல்களும் திரட்டி எடுக்கிறீர்களோ!

    படங்களும் விளக்கங்களும் முழுத்திருப்தியாக உள்ளன.

    இன்றும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் உள்ள தாடங்கம் மாற்றும் உரிமை, ஆதிசங்கர பகவத்பாதர் வழித்தோன்றலாக விளங்கும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளுக்கு மட்டுமே உள்ளது.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  3. ஸ்ரி.அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம் ஆகம சம்பிரதாய நிபுனே என்ற தீக்ஷதர் பாடல் நினைவுக்கு வருகிறது தங்களுடைய பதிவை படிக்கும் போது.தவ தாடங்க மஹிமா என்று சங்கரர் அதிசயிக்கும் அற்புத சக்தி படைத்தவள். பரமாச்சாரியாள் கூறுகிறார்" நமக்கெல்லாம் உடம்பு சரியில்லாமல் ஜீரண சக்தி குறையும் போது˜ புஷ்டியாண ஆகாரங்களை ஓதுக்கிவிட்டு கஞ்சி போன்ற எளிதில் ஜிரணமாகும் சாப்பாட்டை சாப்பிடுவது போல. ங்கரரும் அம்பாளின் அதீத சக்தியை குறைக்கும் வகையில் "டைல்யுட்" செய்து அதை தாடங்கமாக பிரதிஷ்டை செய்தார் என்று கூறுகிறார். மிகவும்பயனுள்ள பதிவு.திருஆனைக்கா கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு நல்ல கைடு

    ReplyDelete
  4. Very Good writing.
    The thallattu.....
    It is very nice.
    This Morning I had darshan of Ambal Akilanswari and the day fully lalitha sashranamam will run in mind.
    Thanks Rajeswari.
    viji

    ReplyDelete
  5. விரிவான தகவல்கள் THANKS

    ReplyDelete
  6. தெரிந்த கொஞ்சம் தகவல்களுடன் ஏகப்பட்ட தெரியாத தகவல்கள். கோவிலின் விஸ்தீரணம் பிரமிப்பை ஏற்படுத்தியது. அழகிய பிரகாரங்கள் மனத்தைக் கவர்ந்தன. கோவிலின் பழமை மனதிலேயே நிற்கிறது. நாங்கள் சென்ற போது சுவாமியை துளை வழியே பார்க்காமல் உள்ளே சென்று பார்க்க அனுமதித்தனர்.

    ReplyDelete
  7. ”நின்ற நிலையில் சரஸ்வதி’’இப்போதுதான் கேளிவிப்படுகிறேன்.
    எவ்வளவு தகவல்கள்!!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. அருமையான தொகுப்பு! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  9. அருமையான தொகுப்பு ! கட்டுரை கோயிலின் விஸ்தீரணத்தைப் போலவே பிரமிக்க வைக்கிறது!

    ReplyDelete
  10. அறியாத தகவல்கள் பல அறியத்தருகிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  11. ;)

    கேஸவா
    நாராயணா
    மாதவா
    கோவிந்தா
    விஷ்ணு
    மதுசூதனா
    திருவிக்ரமா
    வாமனா
    ஸ்ரீதரா
    ஹ்ருஷீகேஷா
    பத்மநாபா
    தாமோதரா
    -oOo-

    ReplyDelete