Saturday, May 7, 2011

மீன்குளத்தி பகவதி அம்மன்

மீன்குளத்தி பகவதி அம்மன்


கேரளாவில் பல்லசேனா என்ற சிறிய கிராமத்தில் உள்ளதே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டுள்ள மீன்குளத்தி பகவதி ஆலயம். பாலக்காட்டில் இருந்து எவரும் ஊருக்குச் செல்லும் வழியைக் கூறுவார்கள்.


இங்கு தமிழக மக்களே அதிகம் வருகை தருகின்றனர். காந்திபுரத்திலிருந்து காலை கோவில் வரையும், மாலை கோவிலில் இருந்து காந்திபுரத்திற்கும் பஸ்வசதி இருக்கிறது.


செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகம் இருக்கும்.குறைகளை முறையிட வேண்டுதல்கள் பலித்திட ஞாயிறு அன்று வழிபட நல்ல பலன் கிடைக்கும். பில்லி சூன்யம் பாதிப்பு அகல் செவ்வாய் அன்று வழிபட பலன் உணரலாம்.திருவருள் பெற்று மனம் அமைதி அடைவதை வெள்ளிக்கிழமை வழிபாடு பரிபூரணமாக உதவும்..


"இந்த வீட்டின் ஐஸ்வர்யம் மீன்குளத்து பகவதி அம்மா" போன்றவாசகங்களும், ஒட்டும் படங்களும் ஆலயத்தின் உள்ளே அர்ச்சனை சீட்டு வழங்கும் இடத்திற்கு அருகிலேயே கிடைக்கிறது. 


















களபம் என்னும் சந்தனக் கல்லில் அரைத்த சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

குங்குமமும், அர்ச்சித்த மலரும் சந்தனத்தோடு வழங்குகின்றனர்.

கல்யாண அர்ச்சனை, பாக்ய சூக்த அர்ச்சனை, கல்விக்கு என்று தனித்தனி அர்ச்சனைகள் அனுமதி சீட்டுடன் வாழைப்பழமும், வெற்றிலை பாக்கும் வைத்து வாழை இலையில் வைத்துக் கொடுப்பதை அர்ச்சித்து வாங்கி வரலாம்.

நிறப்பறபணம் பூஜை என்பது விளைச்சல் அமேகமாக் வேண்டி அறுவடைக்குப் பிறகு ஒருபடி விளை பொருளை அம்மனுக்குக் காணிக்கையாகத்தரும் பூஜையாகும்.

சத்ரு தோஷ பூஜை, புத்ர சந்தான பூஜை வியாபார விருத்தி பூஜை, மஹா கணபதி ஹோமம் சிற்ப்பாகச் செய்யப்படுபவை.

கடுமதுரம் என்னும் அதி இனிப்புப் பாயசம் வீட்டில் இருந்து சிறு பாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும். 
அல்லது அங்கிருக்கும் கடைகளில் பிளாஸ்டிக் டப்பா வாங்கி கொடுத்துப் பெறலாம்.. 

பல நூற்றாண்டுகள் முன்னர் வீர சைவ வெள்ளாளர்கள் என்ற சமூகத்தினர் கும்பகோணம், மதுரை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து கேரளாவுக்குச் சென்று வைர வியாபாரம் செய்து வந்தனர். 

நாளடைவில் அங்கு சென்று வருவது கடினமாக இருந்ததினால் பல குடும்பங்கள் பாலக்காட்டை உள்ளடக்கி இருந்த அன்றைய மலபாரில் சென்று தங்கினார்கள். 

அவர்கள் மதுரை மீனாட்சி அம்மனை தமது குல தெய்வமாக கருதி வணங்கி வந்ததினால் போகும்போது தம்முடன் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து ஒரு கல்லையும் எடுத்துச் சென்று இருந்தனர். 

அதை ஒரு இடத்தில் வைத்து மீனாஷி அம்மனாக வழிபட்டனர். 

அதன் பின் சிலர் வருடாவருடம் மதுரைக்குச் சென்று குல தெய்வ தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். 

அவர்களில் ஒரு குடும்பத்தில் வயதானவருக்கு அதிக வயதாகிவிட்டதினால் வருடாவருடம் மதுரைக்குச் சென்று அம்மனை வழி பட முடியவில்லை. 

ஒரு நாள் அவர் ஒரு குளத்தருகில் தம்முடைய ஓலைக் குடையை என்றும் போல வைத்து விட்டு குளித்து விட்டு வந்தார். 

ஆனால் அவரால் குடையை அந்த இடத்தில் இருந்து தூக்க முடியவில்லை. பயந்து போனவர் உள்ளூரில் இருந்தவர்களை அழைத்து வந்து அந்த அதிசயத்தைக் காட்ட வந்த எவராலும் அந்தக் குடையை தூக்க முடியவில்லை. 

அங்கு ஜோதிடர் (பிரசன்னம் கூறுபவர்) அழைத்து வரப்பட்டார். 

அவர் அந்த இடத்தில் மதுரை மீனாட்சி குடிகொண்டு உள்ளாள் எனவும் ஆகவே அவர்கள் அந்த இடத்திலேயே அவளுக்கு ஆலயம் எழுப்பி வழிபடுமாறு கூறினார். 

அதன்படி அனைவரும் நிதி திரட்டி அங்கு ஆலயம் அமைத்தனர்.

 நானூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அம்மன் மீண்டும் இன்னொருவர் கனவில் தோன்றி தனக்கு பெரிய ஆலயம் எழுப்புமாறுக் கூற அவள் கூறியபடி அந்த பழைய ஆலயத்தைத் தள்ளி இன்னொரு பெரிய ஆலயம் அமைத்தனர். அதுவே மீன்குளத்தி மீனாட்சி ஆலயமாயிற்று!!

அம்மன் மீன்கள் நிறைய இருந்த குளத்தின் அருகில் கிடைத்ததினால் அவள் பெயர் மீன் குளத்தி என ஆயிற்று. 

அவளை அனைவரும் மதுரை மீனாட்சியாகவே கருதி அங்கு வழி படுகின்றனர். 

கருணை பொங்கும் தாய்மைப்ப்பெருக்கு நிறைந்த கண்களைத் தரிசித்த உடனே நம் பாரம் எல்லாம் நீங்கிய புத்துணர்ச்சியை உணரமுடியும்.

அம்மனுக்கு அருகில் இருக்கும் சிவ லிங்கத்தை உன்னிப்பாக விழிப்புடன் தேடிப்பார்த்தே தரிசிக்க முடியும். 

தரிசித்து வந்தவர்களை முக்கியமாக நான் கேட்கும் கேள்வியே அருகில் இருக்கும்சிவ லிங்கத்தைத் தரிசித்தீர்களா? என்பது தான். 

அம்மனையே மெய் மறந்து தரிசித்ததால் கண்களில் படவில்லையோ என்னவோ என்று மறுபடியும் வரிசையில் நின்று தரிசித்து வருவார்கள்.

மீன் தன் கண்களின் பார்வையாலேயே தன் குஞ்சுகளைக் காப்பதுபோல் தன் கருணை நிறைந்த கடாட்சத்தாலேயே பக்தர்களைக் காப்பதாலும், மீன்போன்ற கண்ணழகு கொண்டதாலும், அவள் மீனாட்சி. 
கண்ணுக்கு அழகு கண்ணோட்டம் அல்லவா?  

வீடுகட்டும் பிரர்த்தனை நிறைவேறியவர்கள் வீடு மாதிரியும், குழந்தைவரம் பெற்றவர்கள் தொட்டிலும் காணிக்கை அளித்து அங்கே காட்சிப்படுகிறது.

கட்டிய பூக்களை ஏற்பதில்லை. 

உதிரிப்பூக்களே ஏறகப்படுகிறது. 

தர்ப்பையால் தான் பூத்தொடுக்கிறார்கள்.

சிவப்பு நிறமுள்ள மலர்களும், தாமரையும் அம்மனுக்கு விஷேசம். 

கோவிலுக்கு அருகில் மந்திரித்த கயிறும், திருநீறும் கட்டணத்துடன் அளிக்கிறார்கள். 

கோவில் வாசலில் இருக்கும் காவல் தெய்வம் மிக்ப்பெரிய பழமைவாய்ந்த பஞ்சவிருட்சத்தின் கீழ் அருள்கிறார். தரிச்னம் முடித்து தேங்காயை நம் பெயர் நட்சத்திரம் கூறி தலையைச் சுற்றி ஈடு தேங்காயாக உடைத்து திருஷ்டி கழிக்கிறார்கள்.













குளத்தில் மிதக்கும் வாத்துக்களும், நீந்தும்மீன்களும் சுற்றி இருக்கும் தென்னை மரங்களும், வழியெங்கும் பச்சைப்பட்டாடை உடுத்த வயல் வெளி, குளங்கள் குளிர்சியான காற்றும் இது கடவுளின் பூமிதான் என்று கட்டியம் கூறும். 


அழகே வடிவமான மீன்குளத்தி பகவதி அஞ்சுகம் ஏந்திய 
அருட்சுடர் மீனாட்சி அன்பின் நிலையாகி அஞ்ஞானம் தீர்ப்பவள் 
அனுதினம் தொழுபவர்க்கருளி அகிலம் காப்பவள்
அருளைப் பொழிந்து அமுதவாரிதியாய் விளங்குபவள்

ஆட்கொண்டு ஆக்கிக்காக்கும் தெய்வம்
ஆனந்தம் அளித்து ஆகமவேதம் காப்பவள்
ஆராதிக்ககத்தக்க ஆதிசக்தித் தெய்வம்
ஆற்றல் மிக்க ஆத்ம ஞானம் அளிப்பவள் 


இச்சை வைத்த என்னின் இஷ்ட தெய்வம் 
இராஜராஜேஸ்வரி நீயே மீன்குளத்தி பகவதி தாயே 
இன்பமான ஜோதியாய் இன்னருள் புரிபவள்
இகபர சுகம் தந்து இசைபட வாழ அருள்பவள்



ஈடில்லா தெய்மவள் ஈர்க்கும் சக்தி மிக்கவள்
ஈஸ்வரியாய் காத்து ஈசனின் இடப்பாகம் அமர்ந்தவள்
ஈகையில் சிறந்தவள் ஈவிரக்கம் கொண்டவள
ஈடற்ற தெய்மவள் ஈடேற்றும் அன்னை

உள்ளத்தில் அமர்ந்து உவப்பளிக்கும் தேவி
உமையின் அவதாரமாய் உள்ளம் கொள்ளை கொள்பவள்
உபாசிப்போர்க்கருளி உயர்நிலை தருபவள் 
உலகு போற்றும் நாயகி உதயன் போல் பிரகாசிப்பவள்

ஊழ்வினை உறுத்தாது ஊதியம் உகப்பவ்ள் 
ஊணையும் உருகச்செய்து ஊர்ஜிதமாய் அருள்பவள்
ஊழிக்காலத்தில் காத்து ஊக்கம் அளிப்பவள் 
ஊறுகளைக் களைந்து ஊன்று கோலாய்த் திகழ்பவள்

என்றும் மங்களமாகி எஞ்ஞான்றும் காப்பவள் 
என்னை ஆட்கொண்ட தெய்வமாய் எங்கும் நிறைபவள்
எதிரியின் பயம் தவிர்க்கும் எழிலான அம்பிகை 
எல்லோரும் போற்ற எல்லையில்லா அருள் தருபவள்
எண்திசை போற்றிப் புகழும் ஏகதந்தனின் அன்னையவள் 

ஏராளமாய் வரம் தரவே ஏற்றிவந்த கல்லில் உறைந்தவள் 
ஏறெடுத்து எனைப்பார்த்து ஏக்கங்கள் தீர்த்திடுவாள்
ஏங்கி ஏத்துமன்பர்களுக்கும் அருளக் காத்திருப்பவள்
ஏற்றமிகு வாழ்வுதரும் ஏகாட்சரி புவனேஸ்வரி 

ஐஸ்வர்யம் தந்து ஐக்கியமாய் வாழவைப்பாள்
ஐந்தெழுத்தரசன் துணைவி ஐயை என்னும் தேவி
ஐங்கரனைத் தந்தவள் ஐயங்களைத் தீர்ப்பவள் 
ஐதிகப்படி மீனாட்சியானாய் மீன்குளத்துப் பகவதி

ஒளிர்கின்ற திருமுகமுடைய ஒயிலான் அம்பிகை 
ஒளிநிறை கிரீடமணிந்த ஒப்பில்லா தெய்வமவள்
ஒட்டியாண்ம் அணிந்தவளே ஒருக்காலும் மறவேன் 
ஒழுக்கத்தின் உறைவிடமே ஒன்று கூடிப் போற்றிடுவோம்

ஓம்காரத்ததுவமாய் ஓம்புகிறவர்க்கருள்பவள் 
ஓங்கி அளந்தானின் சோதரி ஓதி உணரத் தக்கவள்
ஓதும் வேதப் பொருளாகி ஓயாது துதிப்பவர்க்கருள்பவள்

ஔஷதமாய் விளங்கி ஔசித்யம் அருள்பவள் 
ஔவியத்தை அழிப்பவள் ஔடதமின்றிக்காப்பவள்
ஔவை போல் என்னையும் கவிமழை பொழியச் செய்த தேவி அவளே!!

[meenkulathi-10.JPG]

[meenkulathiamman_temple.JPG]

[meenkulathi-8.JPG]

[meenkulathi-9.JPG]

[meenkulathi-5.JPG]

2.JPG (527×222)

1.JPG (326×176)
பரசுராமரால் உத்தாரணம் செய்யப்பட்ட பரசுராம ஷேத்திரம் கேரளபூமி...



11 comments:

  1. வழக்கம்போல் அருமையான படங்களும், விளக்கங்களும். இந்தக்கோவில் பற்றி ஓரளவு என்னுடன் வேலை பார்த்த மலையாள நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்கள் பதிவு மூலம் மேலும் பல தகவல்களை முழுமையாக அறிய முடிந்தது. பாராட்டுக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  2. வித்தியாசமான பெயருடன் அம்மன்..

    கோயிலின் வரலாறு, மற்றும் தங்களின் விளக்கம், மேலும் ஆலயத்தின் படங்கள் அருமை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. நான் அந்த திருத்தலம் போய் வந்துள்ளேன்
    ஆயினும் ஸ்தல வரலாறு தெரியாது
    தங்கள் பதிவில் படங்கள் மட்டும் சிற்ப்பு அல்ல
    அத்தலம் குறித்த அனைத்து விவரங்களையும்
    தெளிவாகக் கொடுத்து விடுகிறீர்கள்
    இனி எங்கு சென்றாலும் தங்கள்
    பதிவினைப் படித்துவிட்டே செல்லுவது
    நல்லது எனக் கருதுகிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நான் பார்த்திராத கோவிலைப் பற்றி கேட்டிராத தகவல்கள். நான் ஆட்டுக்கல் (ஆற்றுக்கால்?) பகவதி அம்மன் ஆலயம்தான் சென்றுள்ளேன்!

    ReplyDelete
  5. தெளிவான செறிவான பதிவு ! அருமையான ஆய்வு!

    ReplyDelete
  6. சக்குளத்து பகவதி அம்மன் கேள்விபட்டிருக்கேன். இது எனக்கு புதிய தகவல். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  7. பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. Very nice article Rajeswari.
    I miss ti see the Sivalinga.
    Next visit i must look it carefully. Thanks Rajeswari.
    Then, the kaidai.... written by you?
    Very nice prayer Rajeswari.
    Day by day i love to read your blog without fail Rajeswari.
    yOU ARE GIVING A LOT OFVALUABLE INFORMATION DEAR
    Thanks for thepost. Pictures.
    viji

    ReplyDelete
  9. ;)

    கேஸவா
    நாராயணா
    மாதவா
    கோவிந்தா
    விஷ்ணு
    மதுசூதனா
    திருவிக்ரமா
    வாமனா
    ஸ்ரீதரா
    ஹ்ருஷீகேஷா
    பத்மநாபா
    தாமோதரா
    -oOo-

    ReplyDelete
  10. கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதில் சிரமத்தில் விடுபட இந்த கோயில் பற்றி தெரிவித்துள்ளார். கோயிலுக்கு வந்து சென்றால் பிரச்னை தீரும் என்றார். அது பற்றி நண்பர்...

    ReplyDelete