Friday, May 27, 2011

வாசுதேவபுரம் மகாலட்சுமி மகாவிஷ்ணு

          









[48056660_4e92cbb6e7.jpg]
கேரளாவில் அடுவாச்சேரி எனும் இடத்தில் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய பெருமாள் கோயில் பல தலைமுறைகளுக்குப் பின்னர் கவனிப்பாரின்றிக் கிடந்ததனால் அந்த ஊர் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டனர். 


ஒருநாள் அவ்வழியாகச் சென்ற ஒரு முனிவர், இந்த ஊர்க்கோயில் குளத்தில் அந்த மகாலட்சுமியே நீரெடுத்துச் செல்வதைப் பார்த்ததும், அதற்கான காரணத்தை தேவியிடமே கேட்டார். 


அங்குள்ள கோயிலில் பூஜைகள் எதுவும் நடைபெறாததால், தான் விஷ்ணுவை பூஜித்து வருவதாகவும், அந்த ஊர் மக்களுக்கு அருள் பாலிக்கவில்லையென்றும் சொன்னாள். 


உடனே அந்த முனிவர், வறுமையில் வாடும் மக்களுக்கு உதவுமாறு மன்றாட, அதை ஏற்றுக் கொண்ட மகாலட்சுமி, வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் தான் அருள்பாலிப்பதாகக் கூறினாள். 


அதன்படி, அட்சய திருதியை அன்று அந்த நாட்கள் ஆரம்பிக்கின்றன.

இன்றும் இக்கோயிலில் அட்சய திருதியை முதல் எட்டு நாட்கள் மட்டுமே மகாலட்சுமியை தரிசனம் செய்ய முடியும். 


மற்ற நாட்களில் விஷ்ணுவை மாத்திரமே தரிசிக்கலாம். 


பிற நாட்களில் மகாலட்சுமி விஷ்ணுவுக்குப் பணிவிடை செய்வதாக 
ஐதீகம் நிலவுகிறது. 


அதன்படி அட்சய திருதியையன்று வீரலட்சுமியாக காட்சியளித்து நம்முடைய பயத்தைப் போக்கி தீங்குகளிலிருந்து பாதுகாக்கிறாள். 


இரண்டாம் நாள் கஜலட்சுமியாகத் தோன்றி ஆயுள், ஆரோக்கியம், சௌக்கியம் முதலியவற்றைத் தருகிறாள். 


மூன்றாம் நாள் சந்தான லட்சுமியாக வந்து சந்தான பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் அருள்கிறாள்.


 நான்காம் நாள் விஜயலட்சுமியாக வந்து தேர்வில் வெற்றி, வியாபாரத்தில் வெற்றி, தொழிலில் அபிவிருத்தி, கலைகளில் வெற்றி முதலியன கிடைக்கச் செய்கிறாள். 


ஐந்தாம் நாள் தான்யலட்சுமியாக வந்து பூமி பாக்கியம், விவசாய அபிவிருத்தி, சொந்த வீடு முதலிய ஆசைகளை நிறைவேற்றுகிறாள். 


ஆறாம் நாள் ஆதிலட்சுமியாகத் தோன்றி பாவதோஷ நிவாரணம், கிரகதோஷ நிவாரணம் அளித்துக் காக்கிறாள்.

ஏழாம் நாள் தனலட்சுமியாக வந்து தனபாக்கியம், நிலையான செல்வம் முதலியவற்றைத் தருகிறாள். 


எட்டாம் நாள் மகாலட்சுமியாக வந்து எல்லாவிதமான ஐஸ்வர்யங்களையும் அருள்கிறாள். 


அட்சய திருதியையொட்டி இங்கு வந்து மகாலட்சுமியை வழிபட்டால், அஷ்ட லட்சுமிகளின் கடாட்சம் நமக்கு கிடைக்கும் என்கின்றனர். 


இதற்காக அவள் தரிசனம் தரும் எட்டு நாட்களும் தாம்பூல சமர்ப்பண வழிபாடு நடக்கிறது.

இது தவிர, பட்டுத் துணியும், கண்ணாடியும் சன்னதியில் சமர்ப்பிப்பது என்ற சடங்கும் இங்கு செய்யப்படுகிறது. 


தேவிக்கு சமர்ப்பித்த துணியையும் கண்ணாடியையும் நமக்கே திருப்பித் தந்து விடுவார்கள். அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பதால் இங்கு வருபவர்கள் எல்லோரும் இந்தச் சடங்கைச் செய்கின்றனர். 


இங்கு வரும் பக்தர்கள் இதோடு நின்றுவிடுவதில்லை. மஞ்சள், மற்றும் அரிசியை (அட்சதை) அர்ச்சித்து தேவியை திருப்திப்படுத்துவார்கள். இச்சடங்கை சுமங்கலிகள் மட்டுமே செய்வார்கள். 


அரிசியை மஹாவிஷ்ணுவுக்கும், மஞ்சளை லட்சுமி தேவிக்கும் சமர்ப்பிப்பதாக சங்கல்பம் செய்து, புரோகிதர் சொல்லித் தரும் மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லி இச்சடங்கைச் செய்கின்றனர்.

பயம் விலக, ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க, சந்தான பாக்கியம், மாங்கல்ய பாக்கியம், விவசாய அபிவிருத்தி, நிலையான செல்வம் கிடைக்க இங்குள்ள மகாலட்சுமியை வழிபடுகின்றனர்.

Lakshmi,Saraswati and Ganesha - (Poster with Glitter) - Reprint on ...


16 comments:

  1. ப்ருகு வாஸர யுக்தாயமாகிய இன்று, தஸமி திதியில், சித்த அமிர்த யோகத்தில், தங்கள் உதவியால் அஷ்டலக்ஷ்மி தரிஸனமும், அரிய தகவல்களும் கிடைக்கப்பெற்றோம். நன்றி.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  2. ஐஸ்வரியமா இருக்கு.அசத்துங்க.

    ReplyDelete
  3. இன்றைய பதிவும் அருமை...

    படங்கள் காபி செய்து விட்டேன்..

    ReplyDelete
  4. லக்ஷ்மீகரம். லக்ஷ்மிகடாட்சம்.
    தேவி நினைத்தால் நினைக்கும் இடத்திலேயே நீரை வரவழைக்க முடியும் என்னும்போது குளம்வரை வந்து நீரெடுப்பதேன்... பக்தர்களுக்கு அருள்பாலிக்கவா...

    ReplyDelete
  5. @வை.கோபாலகிருஷ்ணன் said.../
    சுபயோக சுபதினத்தில் சுபமான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. @ FOOD said...
    ஐஸ்வரியமா இருக்கு.அசத்துங்க.//
    ஐஸ்வர்யமான அசத்தலான கருத்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  7. @ # கவிதை வீதி # சௌந்தர் said...
    இன்றைய பதிவும் அருமை...

    படங்கள் காபி செய்து விட்டேன்..//
    மகிழ்ச்சி. நன்றி ஐயா.

    ReplyDelete
  8. @ ஸ்ரீராம். said.../
    பக்தருக்கு அன்னையின் திரு உள்ளம் தெரியாததா என்ன?
    எட்டு நாட்களும் எட்டு சக்தியாக அருள் புரிய அன்னைக்கு ஆவல்.
    அருமையான கருத்துக்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  9. படங்கள் அதிகமா இருக்கு.. அரிய தகவல்களும் கிடைக்கப்பெற்றோம். நன்றி.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. நல்ல பதிவு , யார் மறந்தாலும் துணைவி துணையிருந்தால் தன் நிலை தாழாது என உணர்த்திய புராணம் , இன்னும் அட்சய திதியின் காரணம் சொல்லும் பதிவு, உங்கள் பதிவுகளின் மூலம் பல நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது நன்றி அம்மா

    ReplyDelete
  11. I had Lakshmi's Darshan in this Friday morning.
    Very nice pictures. Thanks for sharing dear.
    viji

    ReplyDelete
  12. ;)

    அச்யுதா!

    அனந்தா!!

    கோவிந்தா!!!

    ReplyDelete
  13. 520+2+1=523 ;)

    [சுபயோகமான பதிலுக்கு நன்றிகள்]

    ReplyDelete