Tuesday, July 5, 2011

அனந்தமங்கலம் - திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர்


ஒரு ஆலயத்திற்குச் சென்றால் அதன் தலவரலாற்றைத் தெரிந்துகொண்டு வழிபடுவதின் மூலம் நம்பிக்கைகள் இன்னும் ஆழமாகப் பதியும் .

[Image1]

வரலாறு : இலங்கையில் யுத்தம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். அப்போது அங்கே வந்த நாரதர் ராமனிடம்,""இலங்கøயில் யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. உனது வில்லுக்கு இன்னும் வேலை உள்ளது. அரக்கர்களின் வாரிசுகள் உயிருடரன் உள்ளனர். அவர்கள் ராவணனின் அழிவால் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். பழிக்குப்பழி வாங்கும் வகையில் உன்னை அழிப்பதற்காக சபதம் செய்துள்ளனர்.இரக்கபிந்து, இரக்தராட்சகன் என்ற அசுரர்கள் கடலுக்கடியில் தவம் செய்து கொண்டிருக்கின்றனர்.இந்த தவம் பூர்த்தியானால் இறந்து போன அனைத்து அசுரர்களும் உயிர் பெறுவார்கள். எனவே நீ அவர்களை அழித்து தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய வேண்டும்,'' என்றார்.உடனே ராமன்,"" மகரிஷியே! தாங்கள் கூறியபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அயோத்தி திரும்பாவிட்டால் தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி உயிரை விட்டு விடுவான். எனவே நீங்கள் வேறு யார் மூலமாவது அசுரர்களை அழிக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார்.அதற்கு நாரதர் தன்னுடன் லட்சுமணனை அனுப்பும் படி கேட்டார். "லட்சுமணன் என் நிழல் போன்றவன். அவனை அனுப்ப என்னால் முடியாது' என்றான் ராமன்.இதற்கெல்லாம் சரியான நபரான அழியா வரம் பெற்றவரும், அளவிலா ஆற்றல் பெற்றவரும், அஷ்டமா சித்திகள் கற்றவருமான அனுமனை அனுப்புவோம் என கூறினார்.அனுமனுக்கு திருமால் சங்கு, சக்கரத்தை கொடுத்தனுப்பினார். பிரம்மா பிரம்ம கபாலத்தை கெடுத்தார். ருத்ரன் மழுவைத்தந்தார். ராமன் வில்லையும் அம்பையும் கொடுத்தான். இந்திரன் வஜ்ராயுதத்தை கொடுத்தான். கிருஷ்ணனின் வெண்ணை இடது கையில் உள்ளது. கருடன் தனது பங்கிற்கு இறக்கைகளை கொடுத்தான். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் பத்து கரங்களில் பத்து விதமான ஆயுதங்களுடன் காட்சிதந்தார்.கடைசியாக அங்கு வந்த சிவன், தனது சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணை (நெற்றிக்கண்) அனுமனுக்கு தந்தார். இந்த ஆயுதங்களுடன் அனுமன் புறப்பட்டு கடலுக்கடியில் தவமிருந்த அசுரர்களை அழித்து விட்டு அயோத்தி திரும்பினார்.திரும்பும் வழியில் கொண்டு சென்ற ஆயுதங்களுடன் ஆனந்தமயமாக இத்தலத்தில் தங்கியதால் "ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. இது நாளைடைவில் அனந்த மங்கலம் ஆனது.


திருவிழா : அனுமன் ஜெயந்தியும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைத்து அமாவாசை, மற்றும் பெருமாளுக்குரிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
சிறப்பு : இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடன் "திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த விதமான ஆஞ்சநேயரை காண்பது அரிது.
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : மூலவர் வாசு தேவ பெருமாள் ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் அருள்பாலிக்கிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி பாமா, ருக்மணியுடன் வீற்றிருக்கின்றனர். தனி சன்னதியில் செங்கமல வல்லி தாயார்.முன்மண்டபத்தின் வடக்கு பகுதியில் தெற்கு நோக்கியபடி தனி சன்னதியில் "திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்' எழுந்தருளியுள்ளார். கோயிலுக்கு வெளியே தனி கோயிலில் சதுர்புஜ ஆஞ்சநேயர் மான் வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.





கோயில் உள்தோற்றம்


உற்சவர் ராஜகோபால்

[Gal1]
ஆதியும் அந்தமும் இல்லாதவனாகிய அனந்தன் (திருமால்) எழுந்தருளியிருப்பதால், அத்துடன் மங்கலத்தைச் சேர்த்து அனந்தமங்கலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றும் கூறுவர்.

இந்த ஆஞ்சனேயர் மூன்று கண்களும் பத்து கைகளோடும் காட்சி அளிப்பதால், திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர் என அழைக்கப் படுகிறார்.


விரிந்த மார்பு, திண்தோள்கள், தலையில் நீண்டுயர்ந்த மணிமகுடம் ஆகியவற்றைக் கொண்ட கம்பீரமான தோற்றத்துடன், நின்ற கோலத்தில் ஸ்ரீஆஞ்சனேயர் காட்சி அளிக்கிறார். கரங்களில் சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் ஆகிய வற்றைத் தாங்கி, இரு சிறகுகளுடன் காணப்படும் இவரது தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கும். இவ்வாலயத்தின் கிழக்கு நோக்கிய வாயிலைக் கடந்து சென்று பலிபீடம், கருடாழ்வார் வசந்த மண்டபம் ஆகியவற்றைக் கீழைத் திருச்சுற்றில் காணலாம். செங்கமலத் தாயார் தனிக்கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளார். 
 
தாயார் செங்கமலவல்லி
[Gal1]

கீழைத் திருச்சுற்றுக்கு நேரே பெருமாள் சந்நிதியைக் கடந்து செல்லும்போது ஒரு மண்டபம் உள்ளது. அதில்தான் தெற்கு நோக்கிய விமானத்துடன் கூடிய சந்நிதியில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர் எழுந்தருளி உள்ளார்.


மூலவர் அனுமான்



இதை அடுத்துள்ள மகா மண்டபத்தில் திருமால், கண்ணன், ஆழ்வார், விஷ்வக்சேனர் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.


[Gal1]
மூலவர் வாசுதேவ பெருமாள்




கோவிலுக்கு வெளிப்புறமுள்ள சந்நிதித் தெருவின் வலப்புறத்தில் வடக்கு நோக்கிய தனிக்கோவிலில், கஜாசுரனை வதம் செய்த சதுர்புஜ ஆஞ்சனேயர் சங்கு, சக்கரம், சாட்டை, நவநீதம் ஆகியவற்றை நான்கு கைகளில் தாங்கியபடி தரிசனம் அளிக்கிறார். மூல ஆஞ்சனேயர் தனிக்கோவிலிலும், இடப்புறத்தில் பூமிதேவியும் அருள்பாலித்து வருகிறார்கள். கோயிலுக்கு வெளியே தனி கோயிலில் சதுர்புஜ ஆஞ்சநேயர் மான் வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.



மூலவர் விமானம்
[Gal1]


ஆபத்துக் காலத்தில் கைகொடுக்கும் தெய்வமான ஆஞ்சனேயரை உண்மையான பக்தியுடன் வழிபடுவோர் அனைத்து நலன்களையும் பெறுவர். புத்திர விருத்தி, உடல் பலம், மனோ பலம், ஆன்ம பலம் கிட்டும். பயம், நோய் போன்றவை நீங்கி நல்வாழ்வு பெறலாம்!

அனுமன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர். தலைவன் இட்ட பணியை சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல் வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம்.





மான் வாகனம்
[Gal1]

ஆலய விலாசம்
த்ரினேத்ர சதுர்புஜ ஆஞ்சநேயசுவாமி ஆலயம் மற்றும் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி ஆலயம்,
அனந்தமங்கலம்- 609 307,
தரங்கம்பாடி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்,
தமிழ்நாடு
போன்: 04364 -289888



அனந்தமங்கலத்துக்கு செல்பவர்கள் முதலில் மூலவர் ஆலயத்தில் உள்ள த்ரினேத்ர சதுர்புஜ புஜ ஆஞ்சநேயரை வணங்கிய பிறகு,  அதன் எதிரில் அமைந்து உள்ள ஸ்ரீ ராஜகோபாலப் பெருமாள் ஆலயத்தில் அமர்ந்துள்ள த்ரினேத்ர தசபுஜ புஜ ஆஞ்சநேயரையும் சென்று வணங்க வேண்டும்.  அமாவாசைகளில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் சாற்றி விசேஷ பூஜைகள் செய்கிறார்கள்.  இந்த ஆலயங்களில் வந்து ஹனுமானை வழிபட்டால் அவருக்கு ஆயுதங்களையும் தனது கண்ணையும் தந்த சிவன், விஷ்ணு, பிரும்மா, ராமர், இந்திரன், ருத்திரன், கருடாழ்வார் போன்ற அனைவரையும் ஒரு சேர வழிபட்ட பலன் கிடைக்குமாம்.  மேலும் உடல் வலிமை, நீண்ட ஆயுள், எதிரிகள் நாசம், நோய் நொடிகள் விலகி மனத் தெளிவு ஏற்படுவது திண்ணம் என்கிறார்கள். முக்கியமாக மூல நட்ஷத்திரத்துடன் வரும் அம்மாவாசையில் அல்லது கேட்டை நட்சத்திர காலத்திலும் இங்கு வந்து அவருக்கு துளசி இலை மாலை, அல்லது வடை மாலை சாற்றி வழிபட்டால் அனைத்து தீமைகளும் விலகுமாம்.  அதற்கும் மேலாக அவர் வாலில் அனைத்து நவகிரகங்களும் அமர்ந்து உள்ளன எனவும் நவகிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடுவது சிறந்ததாம்.

ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க:சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.

ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !ராம !!
சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !ராம !!



வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு சிம்ஹிகை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !ராம !!



இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !ராம !!



ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !ராம !!



பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !ராம !!



அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
“கண்டேன் சீதையை’ என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !


ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !ராம !!



எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை
பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.
ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !ராம !!


ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !ராம !!


32 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. காலையிலேயே த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயரின் தரிசனம் உங்கள் தளத்தில்.... நன்றி.

    ReplyDelete
  3. ஜெய் ராம்..!!

    ReplyDelete
  4. அருமையான ஆன்மீகப் பதிவு
    ராமயணத்திலிருந்து நான் அறியாத தகவல் இது
    பக்திக்கும் சரணாகதிக்கும் அர்த்தம் சொன்ன
    ஆஞ்சநேயரின் அருள் கிடைக்க செய்தமைக்கு நன்றி
    அந்த கோவிலை வணங்கும் முறை சொன்னது பயனுள்ளதாக இருந்தது
    சுந்தர காண்டத்திர்ன் அருமை சொன்னதும் அதன் எளிமையான பகுதி தந்தது பதிவின் சிகரம்
    நன்றி மேடம்

    ReplyDelete
  5. சிறப்பான கட்டுரை படங்களும் அழகு
    --

    ReplyDelete
  6. இன்று காலை எழுந்ததும் நல்ல தரிஸனம்:

    "அனந்தமங்கலம் - திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர்"

    வெற்றிக்கான நம்பிக்கையை அளித்தது.
    நிறைய புதிய தகவல்கள். அழகான ஆச்சர்யமான படங்கள்.

    நன்றி...நன்றி...நன்றி.

    ReplyDelete
  7. சுந்தரம் என்றாலே அழகு. அந்த அழகான சுந்தர காண்டத்தை, அழகு தமிழில் ஸ்லோகம் போல வெளியிட்டு தினமும், தியானிக்கச்சொல்லியுள்ளது அருமை.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. ஸ்ரீமத் இராமயணத்தில் பல காண்டங்கள் இருப்பினும், இதற்கு மட்டுமே சுந்தர காண்டம் என்ற சிறப்புப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    சுந்தரம் என்றால் அழகு. குரங்குகள் வரும் இந்தப்பகுதியில் என்ன பெரிய அழகு உள்ளது என்று கேட்கக்கூடாது.

    ஏனென்றால் இந்த ஸ்ரீ இராமயணக்கதையில் மிகப்பெரிய திருப்பு முனையே இந்தப்பகுதியில் தான் வருகிறது.

    காட்டிலுள்ள ஸ்ரீராமர், லெக்ஷ்மணர், சுக்ரீவன் மற்றும் இலங்கையில் உள்ள சீதை, விபீஷணர், மண்டோதரி, அயோத்தியில் உள்ள பரதன், கெள்சல்யா, போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருமே, ஏதோவொரு வகையில் மிகுந்த துக்கத்தில் இருக்கிறார்கள்.

    அந்த அவர்களின் துக்கங்களை, துயர்களை களைந்து, வரப்போகும் வெற்றிகளுக்கு அறிகுறியான ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திய பகுதியே இந்த சுந்தரகாண்டம்.

    ஸ்ரீராம தூதனாகச் சென்ற ஹனுமனின் வீர தீர பராக்ரமங்களையும், அதே சமயம் பெளவ்யமாக, புத்திச்சாதுர்யமாக அவர் நடந்து கொண்ட செயல்களையும் விளக்கும் அழகான பகுதி இது.

    எனவே இது சுந்தரகாண்டம் என்று அழைக்கப்படுகிறது.

    தினமும் இதில் ஒரே ஒரு ஸ்லோகம் சொன்னாலே போதும், அனைத்து வெற்றிகளும், சந்தோஷங்களும் நம்மைத்தேடி வரும் என்கிறார்கள், நம் முன்னோர்கள்.

    ReplyDelete
  9. ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !
    என்பது தாரக மந்திரம்.

    தாரகம் என்றால் கடத்துவிப்பது.

    [தங்கக் கடத்தலோ, கருப்புப்பணக்கடத்தலோ இல்லை]

    படகிலே வைத்து ஓட்டிக்கொண்டுபோய் அக்கரை சேர்ப்பது என்று அர்த்தம்.

    ப்ரணவத்தையும், ராமநாமத்தையும் தாரக மந்த்ரம் என்று சொல்வது வழக்கம்.

    “தாரகநாமா” என்று தியாகராஜர் கூட ராமாசந்த்ர மூர்த்தியைத் தாபத்தோடு கூப்பிட்டு பாடியிருக்கிறார்.

    ஸம்சாரக் கடலில் விழுந்து தத்தளித்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் நம்மை படகிலே தூக்கிப் போட்டுக்கொண்டு, பரமபதமான அக்கரையில் கொண்டு போய்ச் சேர்ப்பது தான் தாரக மந்த்ரம்.

    அது தான் ஸ்ரீ ஹனுமனுக்கும் வெற்றியைத் தேடித்தந்த

    ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம!

    உச்சரிக்கும் போதே சுகமும் வெற்றியும் கிட்டிடச்செய்யும் சுலபமான மந்த்ரம்.

    தயவுசெய்து இதைப்படிக்கும் அனைவரும், எப்போதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிப் பயன் அடையுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். vgk

    ReplyDelete
  10. அடுத்து வரும் நாட்களை எண்ணி மன்க் கிலேசத்துடன் இருந்து வந்த எனக்கு, மிகவும் ஆறுதல் அளிப்பது போன்ற இந்தப்பகுதியை இன்று வெளியிட்டுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும், சந்தோஷங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மனச் சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி கிடைத்திடும் என்ற என் நம்பிக்கைக்கு, மேலும் ’அதே அதே’ என்று சொல்லுவது போல உள்ளது தங்களின் இந்த அருமையான வெளியீடு.

    நன்றி கலந்த மகிழ்ச்சியுடன்.... vgk

    ReplyDelete
  11. அடுத்து வரும் நாட்களை எண்ணி மன்க் கிலேசத்துடன் இருந்து வந்த எனக்கு, மிகவும் ஆறுதல் அளிப்பது போன்ற இந்தப்பகுதியை இன்று வெளியிட்டுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும், சந்தோஷங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மனச் சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி கிடைத்திடும் என்ற என் நம்பிக்கைக்கு, மேலும் ’அதே அதே’ என்று சொல்லுவது போல உள்ளது தங்களின் இந்த அருமையான வெளியீடு.

    நன்றி கலந்த மகிழ்ச்சியுடன்.... vgk

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அன்புள்ள அம்மா,

    வாயு புதல்வரின் கதை கேட்க்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.

    உன்மை தான் ஸ்தலபுரானங்களை தெரிந்து கொண்டு வழிபடுவதால் நம்பிக்கைகள் ஆழமாக பதிகின்றன.

    புகைபடங்கள் கதைக்கு உயிரூட்டுவனவாக இருக்கிறது!

    ஶ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்.

    அன்பு மகள்,
    லக்ஷ்மி

    ReplyDelete
  14. அன்புள்ள அம்மா,

    வாயு புதல்வரின் கதை கேட்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.

    உன்மை தான், ஸ்தல வரலாற்றைத் தெரிந்து கொண்டு வழிபடுவதால் நம்பிக்கைகள் ஆழமாகப் பதிகின்றன. விழிப்புணர்வு பெருகுகிறது.

    படங்களுடன் ராம பக்தனின் கதை மிகவும் இனிமை.

    தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

    அன்பு மகள்,
    லக்ஷ்மி.

    ReplyDelete
  15. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    Nice post..
    thanks for sharing...

    நன்றி.

    ReplyDelete
  16. @ வெங்கட் நாகராஜ் said...
    காலையிலேயே த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயரின் தரிசனம் உங்கள் தளத்தில்.... நன்றி.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  17. @FOOD said...
    ஆஞ்சநேயர் அருள் கிடைத்தது.//

    நன்றி ஐயா.

    ReplyDelete
  18. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    ஜெய் ராம்..!!//

    ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம!ராம்!!

    ReplyDelete
  19. @A.R.ராஜகோபாலன் said...//

    அருமையான கருத்துரைக்கு நன்றி .

    ReplyDelete
  20. @கவி அழகன் said...
    சிறப்பான கட்டுரை படங்களும் அழகு //
    அழகான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  21. @ வை.கோபாலகிருஷ்ணன் s//

    விரிவானதும் அனைவருக்கும் பயனளிக்கும் அருமையான தகவல்களைத் தாங்கி வந்திருக்கும் தங்களின் கருத்துரைகள் அனைத்துக்கும் நமஸ்காரங்கள் ஐயா.

    ReplyDelete
  22. @ koodal bala said...
    பக்தி மணம்//
    நன்றி.

    ReplyDelete
  23. @ Rathnavel said...
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  24. @ லக்ஷ்மி said...//

    வருக. அருமையான தெளிவான கருத்துரைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  25. இன்று செவ்வாய்க் கிழமை ஆஞ்சிநேயர் தரிசனம்
    கிடைக்கப்பெற்றது சகோதரி தங்களால்.மிக்க மகிழ்ச்சி.
    எங்கே எங்கள்வீட்டுப்பக்கம் தங்களைக் காணவில்லை?...

    ReplyDelete
  26. ஒரு ஆலயத்திற்குச் சென்றால் அதன் தலவரலாற்றைத் தெரிந்துகொண்டு வழிபடுவதின் மூலம் நம்பிக்கைகள் இன்னும் ஆழமாகப் பதியும்
    Yes Rajeswari. You are 100% correct.
    Inthis way your writing is helpful others to know all details. So we are thankful to you.
    Then I wounder this is the slogam i used chant daily felt happy seeing here again.
    I enjoyed the post dear.
    Thanks.
    viji

    ReplyDelete
  27. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அனுமனின் புகழ் அறிந்தேன். ம்கைழ்ந்தேன் - பத்து கைகள் - மூண்றுகண்கள் - பல வித ஆயுதங்கள் - ஆஞ்சநேயனைக் காண கண் கோடி வேண்டும். அழகான படங்கள் - அருமையான பதிவு. தல புராணம் அருமை. சுந்தர் காண்டம் படித்தேன் -மிக மிக இரசித்தேன். நன்று நன்று - நல்வாழ்த்துகள் இராஜ இராஜேஸ்வரி - நட்புடன் சீனா

    ReplyDelete