Monday, July 11, 2011

ஆட்டோகிராப்

நண்பேண்டா என உடுக்கையிழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களையும் நட்பைப்பற்றித்தொடர் எழுத அழைத்த நாற்றுக்கு நன்றி.

பள்ளியில் படித்த் போது ஆசிரியை யாரும் பேசக்கூடாது. கையைக்கட்டி வாயைமூடி வாய்மேல் விரல் வைக்குமாறு எச்சரிப்பார். தோழி சாந்தாவுடன், வாயில் கைவைத்து மறைத்தவாறே சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து சிரித்துவிடுவார். இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம் மனதில்.

உயர்நிலைப்பள்ளியில் பேபி சரோஜா. லஷ்மி ....எப்போதும் ஆசிரியர் இல்லாத நேரத்தில் பேசிக்கொண்டிருப்பதை வகுப்புத்தலைவனால் கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் சகோதரர்களிடம் போய் என்னதான் அப்படிப் பேசுவார்கள் உங்க அப்பாகிட்டேயாவது சொல்லி பேசாமல் இருக்கச்சொல் என்று கெஞ்சுவதும் நிகழ்ந்திருக்கிறது. ஆசிரியரும் பசங்களை மட்டும் அடித்துவிட்டு எங்களை ஒன்றும் சொல்லமுடியாமல் எச்சரிப்பார்.

கல்லூரியில் காந்திமதி உயிர்தோழியானாள். விடுதியில் இருக்கும் சிறு தனி வீட்டில் இருக்கும் பிரின்சிபாலின் அறையில் இரவில் துணைக்குச் செல்லும் தைரியசாலிகள் நாங்கள் இருவரும் தான். மற்றவர்கள் பிரின்ஸியைப் பார்த்ததும் ஓடி ஒளிந்து கொள்வார்கள். திப்பு என்னும் நாயும் எப்போதும் அவர் பின்னாலேயே சுற்றும். எல்லாம் அல்லி ராஜ்ஜியமாக கொட்டமடித்துக் கொண்டாடுவோம்.மரமல்லி மரத்திலிருந்து உதிர்ந்த மலர்களை எடுத்து தலையில் பூஅலங்காரம் செய்து திருஷ்டி கழிப்பாள்.
விடுதியில் அப்போதைய சினிமாப்பாடல்களை நோட்டில் எழுதிவைத்துக்கொண்டு க்ரூப் க்ரூப்பாக பாடிக்கொண்டிருப்பார்கள். . பழங்காலக் கட்டிடமான அது செலவில்லாமல் பாடியே இடித்ததாக பிரசித்தம். .ஆசிரியைகளுக்கு அமர்க்களமாக பெயர் சூட்டும் விழா நடத்துவார்கள். 

ஒருமுறை மலைக் கோவிலுக்குச் சென்றிருந்தோம். அங்கு இருந்த பாறையில் நம் இருவர் பெயரையும் எழுதியிருக்கிறேன் என்று சொல்ல காந்திமதி அடுத்தமுறை தேடிச்சென்று கண்டுபிடித்து பெருமையடைந்தாள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்துவ தோழி அல்போன்ஸாவுடன் சர்ச்சுக்கும் செல்லுவேன்.முஸ்லீம் சகோதரிகள் ஆமினா பீவி, மைமூனா பீவி தொழுகை நடத்துவார்கள். காலை சர்வமத பிரார்த்தனையில் பைபிள், குர் ஆன் திருக்குறள், கீதை, பரமஹம்சர் மொழிகள் அனைத்தும் தினமும் படிப்போம். 


அதெல்லாம் அந்தக்கால நட்பு.

இப்போது.... துவாதசிகளில் நாராயணீயம், வெள்ளிக்கிழமைகளில் சஹஸ்ரநாமங்கள், அனுமன் சாலீசா, சனிக்கிழமைகளில் திருப்புகழ், வருடம் இருமுறை சப்தாகமாக நடைபெறும் பாகவத பாராயணம் , பகவத்கீதை வகுப்பு -ஒவ்வொரு வகுப்பிலும் நூற்றுக்கணக்கான எல்லாவயதிலும் நட்பூக்கள் பூத்து நட்புவட்டம் விரிவடைந்து அவர்களின் சுக துக்கங்களில் கலந்து கொள்கிறோம். விடுமுறைகளில் சுற்றுப்பயணங்களில் வந்தவர்கள் நிறைய பேர் தொடர்பிலிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா சென்ற போது ஆதி, ரூபா தம்பதியர் அறிமுகமானார்கள். அருமையான் பெண். மொழி ஒன்றும் தடையில்லை எங்களுக்கு. வீட்டிற்கு அழைத்து சமைத்து அசத்தினாள். இப்போது கர்ப்பிணியாக இருக்கும் அந்தப் பெண்ணுக்கு நல்லவிதமாக குழந்தைப்பேறு அமைய பிரார்த்திக்கிறேன்.
மகனின் தோழர்கள் ஹயாஸ் மற்றும் பெயர் வாயில் நுழையாத தோழ்ர்கள் அருமையானவர்கள்.


இப்போது. பதிவுலகம் வந்து தினமும் பதிவிடுவதில் நிறைய நட்பூக்கள் பூத்திருக்கின்றன.


திரு ஆர்விஎஸ் அவர்கள் மூன்று விஷயங்களைப்பற்றி தொடர் எழுத சொன்னார். எழுதினேன். சுவாரஸ்யமாக இல்லை எனக்கு. எனவே இந்த பதிவோடு இணைத்துவிட்டேன்.

Flower Screensavers- Animated Flowers

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
எதையும் படிக்கப்பிடிக்கும்

காலைசூரியனை ,வானவில்லை, முழுநிலவை,நட்சத்திரங்களை பூக்களை, கடலலைகளை என மொத்த இயற்கையும் ரசிக்கப்பிடிக்கும்.

என் குடும்பத்தைப் பிடிக்கும்.

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
சுவாமிதரிசனத்தின் போது கிங்கரர்கள் மாதிரி அபச்சாரமாக கத்திக்கொண்டு விரட்டி நிற்கும் காவலர்கள்.

விவஸ்தை கெட்ட உறவுக்கூட்டம். திருமண மற்றும் சுப வீடுகளில் துக்க சமாசாரங்கள் பேசி வெறுப்பேற்றும் கண்டால் தலை மறைவாகிவிடமுடியாமல் தவிப்பது..

தேடிப்பிடித்து வந்து திட்டமிட்ட வதந்திகளைப் பரப்பும் விஷமிகள்

3) பயப்படும் மூன்று விஷயங்கள்


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று அச்சமெல்லாம் கடந்த உணர்வில் இருக்க ஆசை ஆனால்.


இப்போதெல்லாம் பேசவே பயம், விவாதம் பயம், அஞ்சுவது அஞ்சாமை பேதமை அல்லவா...

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?


நிறைய லீவு போடும் வேலைக்காரி எப்போதும் யாராவது இற்ந்துவிட்டார்கள் என்றே கூசாமல் புளுகுவது.


இத்தனை கோடி தங்கப் புதையல் இருக்கும் தாய்த்திருநாட்டை வளரும் நாடு என்று குறிப்பிடுவது.


இந்தியச்சாலைகளின் தரம்.

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

புத்தகங்கள்

உலகத்தைக்கண்முன் விரியவைக்கும் கணிணிகள், டெலிபோன்கள், செல்போன்கள்

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
நகைச்சுவை பதிவுகள் பல படிக்கும் போதே சிரிக்கவைக்கும்.

வெளிநாட்டிலிருந்து உரையாடும் மகன்கள் சிரிக்கவைப்பார்கள்.


அரசியல் தலைர்களின் நாடகங்களும், மாற்றிப் பேசும் பேச்சுகளும் நிரந்தர முதல்வரே என்ற அழைப்பும் சிரிக்கவைக்கும்.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
படிப்பது
பதிவிடுவது
பிள்ளைக்ளுக்கு திருமண முயற்சி

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?


வாடகைதராமல் பல வருடங்களாக குடியிருந்துகொண்டு வழக்குப்போட்டு வாய்தா வாங்கி அலைக்கழித்து சட்டென்று குடும்பத்தின் ஒட்டு மொத்த மகிழ்சியைப் பறித்த தொல்லை தருபவர் நீங்க வேண்டுமென பிரார்த்தனை.

வாழ்நாளின் மொத்த உழைப்பையும் உறவு சொல்லிப் பறித்து சென்றஉடன்பிறந்தே கொல்லும் வியாதிகளைப் போன்ற உறவுக் கூட்டத்தின் கயமைதனத்தை புரிந்துகொள்வது


பிள்ளைகளின் நிறைவான வாழ்வைக்காண நினைப்பதல்லாமல் வேறென்ன..

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
தூக்கமில்லாமல் படிக்கமுடியும்


பதிவு எழுதமுடியும்


பழைய நினைவுகளை அசைபோடமுடியும்

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
சுய புராணங்கள் அவசர நேரத்தில் வந்து சாவதானமாக ஷேமலாபம் விசாரிப்பது

வெட்டியாக நம்நேரத்தை வீணடிக்கும் உறவுக்கூட்டம்
எப்போதும் ஊருக்கு உபதேசம் செய்து வெறுப்பேற்றும் வெட்டிப்பேச்சு கள்.
நமக்கு சௌகரியமில்லாத நேரத்தில் வீட்டில் வந்து அமர்ந்துகொண்டு உபதேசிப்பது


எப்போதும் அலறும் ஹார்ன் சத்தம்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
கணிணியில் அத்தனை விஷயங்களும்


வாழக்கற்றுக் கொள்ள வேண்டும்


நம் பிள்ளைகளின் மனநிலை அறிந்து கொள்ள கற்கவேண்டும் 

12) பிடிச்ச மூன்று உணவு வகை?
உணவில் அவ்வளவாக கவனம் கொள்வதில்லை.
சாப்பிடுவதை விட பரிமாறுவதில் ஆர்வம்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?


குறையொன்றும் இல்லை மறைமூர்த்திகண்ணா


மயக்கமா கலக்கமா வாழ்விலே குழப்பமா... வந்ததுன்பம் எதுவென்றாலும் வாடிநின்றால் ஓடுவதில்லை...


சின்னசின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னைகையோ

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
 படிக்க புத்தகம், 
பதிவிட கணிணி, 
மின்சாரம்

16) இதை எழுத அழைக்கப்போகும் ....





அசாதாரணமான வை. கோபால்கிருஷ்ணன்

சந்திரவம்சம்

47 comments:

  1. ஆஹா... அருமை. உங்களைப்பற்றிய ஆட்டோபயோகிராபி பார்த்த மாதிரி இருந்தது. ரொம்ப நன்றிங்க. இயற்கையோடு இயைந்து வாழ்வை ரசிப்பவர்களுக்கு என்றுமே இன்பம்தான்.

    ReplyDelete
  2. ஆஹா... அருமை. உங்களைப்பற்றிய ஆட்டோபயோகிராபி பார்த்த மாதிரி இருந்தது. ரொம்ப நன்றிங்க. இயற்கையோடு இயைந்து வாழ்வை ரசிப்பவர்களுக்கு என்றுமே இன்பம்தான்.

    ReplyDelete
  3. ஆஹா... அருமை. உங்களைப்பற்றிய ஆட்டோபயோகிராபி பார்த்த மாதிரி இருந்தது. ரொம்ப நன்றிங்க. இயற்கையோடு இயைந்து வாழ்வை ரசிப்பவர்களுக்கு என்றுமே இன்பம்தான்.

    ReplyDelete
  4. மிகவும் அழகான பதிவு இராஜி மேடம், உங்கள் விருப்பு வெறுப்புகளை தெரிந்துகொள்ள முடிந்தது.

    ReplyDelete
  5. அட ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.... அதாங்க.. இரண்டு தொடர்பதிவும் ஒரே பதிவில் போட்டுட்டீங்களே....

    கேள்விகளுக்கான சுவாரசியமான பதில்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் பற்றிய பதிவும் நன்று.

    ReplyDelete
  6. எப்போதும் போல குழப்பமில்லாத தெளிவான பதிவு
    கூடிய விரைவில் குழந்தைகளுக்கு நல்ல வரன் அமையவும்
    திருமணம் சிறப்பாக நடைபெறவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்ல நட்புக்கள் சர்வமத நட்பு வட்டாரங்கள்

    ReplyDelete
  8. @ கடம்பவன குயில் said...
    ஆஹா... அருமை. உங்களைப்பற்றிய ஆட்டோபயோகிராபி பார்த்த மாதிரி இருந்தது. ரொம்ப நன்றிங்க. இயற்கையோடு இயைந்து வாழ்வை ரசிப்பவர்களுக்கு என்றுமே இன்பம்தான்./

    உண்மைதான். இயற்கை ஆனந்தத்தை அள்ளித்தரும் அட்சயபாத்திரம்.

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  9. @ FOOD said...
    பசுமை நிறைந்த நினைவுகள்.//

    நன்றி ஐயா.

    ReplyDelete
  10. @ RAMVI said...
    மிகவும் அழகான பதிவு இராஜி மேடம், உங்கள் விருப்பு வெறுப்புகளை தெரிந்துகொள்ள முடிந்தது.//

    நன்றிங்க.

    ReplyDelete
  11. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    oru arumaiyaana pakirvukku nanri thozhi.//

    நன்றி.

    ReplyDelete
  12. @வெங்கட் நாகராஜ் said...
    அட ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.... அதாங்க.. இரண்டு தொடர்பதிவும் ஒரே பதிவில் போட்டுட்டீங்களே//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  13. @Ramani said...
    எப்ஐபோதும் போல குழப்பமில்லாத தெளிவான பதிவு
    கூடிய விரைவில் குழந்தைகளுக்கு நல்ல வரன் அமையவும்
    திருமணம் சிறப்பாக நடைபெறவும் வாழ்த்துக்கள்.//

    சிறப்பான வாழ்த்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  14. @கவி அழகன் said...
    நல்ல நட்புக்கள் சர்வமத நட்பு வட்டாரங்கள்//

    நிறைய சர்வமத நட்புகள் உற்சாகம் தரும். நன்றி.

    ReplyDelete
  15. "சாப்பிடுவதை விட பரிமாறுவதில் ஆர்வம்." - மேலோட்டமான வரிகளாக தென்படினும் தங்களின் மென்மையான மற்றும் மேன்மையான சுபாவத்தினைக் கூறுகின்றது.

    ReplyDelete
  16. அருமையான பகிர்வு .

    ReplyDelete
  17. @நெல்லி. மூர்த்தி said...
    "சாப்பிடுவதை விட பரிமாறுவதில் ஆர்வம்." - மேலோட்டமான வரிகளாக தென்படினும் தங்களின் மென்மையான மற்றும் மேன்மையான சுபாவத்தினைக் கூறுகின்றது.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  18. @angelin said...
    அருமையான பகிர்வு .//

    நன்றி.

    ReplyDelete
  19. மற்ற பதிவர்கள் இரண்டு தொடர்பதிவுகளை தனித் தனியாக இரண்டு பதிவாக்கும்போது நீங்கள் ஒரே பதிவாக்கி விட்டீர்கள். பிடித்த மூன்றை விட பழைய நினைவுகள் அருமை.

    ReplyDelete
  20. வாழ்க்கையின் நிதர்சனங்களை , அருமையாக தந்தமைக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  21. மிகவும் அழகான பதிவு , உங்கள் விருப்பு வெறுப்புகளை தெரிந்துகொள்ள முடிந்தது.

    ReplyDelete
  22. பழங்காலக் கட்டிடமான அது செலவில்லாமல் பாடியே இடித்ததாக பிரசித்தம். .

    மேடம் கட்டிடம் இருக்குங்களா இல்லை இடிஞ்சிடுச்சா?

    ஹி ஹி தமாசு ....

    பதிவு அருமை மேடம் .நினைவுப் பதிவுகள் தொடரட்டும் மேடம்.இதை படிக்கும் அனைவருக்கும் அவர்களது நினைவு சிறிதேனும் எட்டிப்பார்க்கும்
    பஹிர்வுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  23. அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி

    ReplyDelete
  24. படித்தேன்... மீண்டும் படித்தேன்... மகிழ்ந்தேன்...

    தங்களின் பதிவுலக வலை நட்பில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி...

    ReplyDelete
  25. \\\\ வாடகைதராமல் பல வருடங்களாக குடியிருந்துகொண்டு வழக்குப்போட்டு வாய்தா வாங்கி அலைக்கழித்து சட்டென்று குடும்பத்தின் ஒட்டு மொத்த மகிழ்சியைப் பறித்த தொல்லை தருபவர் நீங்க வேண்டுமென பிரார்த்தனை \\\ யாரு அது ? எடு அரிவாளை ....!

    ReplyDelete
  26. @koodal bala said...//

    நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அப்படி அரிவாள் எடுக்கும் அடாவடிஆள் நாம் இல்லை என்று தெரிந்துதானே பொய் வழக்கு போட்டிருக்கிறார்.
    கோயில், கும்பாபிஷேகம் என்று சுற்றும் இளித்தவாய் ஆன்மீக தமிழ் குடும்பமல்லவா நாம்.அவர்கள் வட இந்திய சேட்டு.
    பிள்ளைகளுக்கு திருமணம் ,படிப்பு என்று பெரிய கடமைகள் இருப்பதால் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறோம்.

    ReplyDelete
  27. மனதுக்கு நிறைவாக இருந்தது உங்கள் பதிவு!

    வாழ்த்துக்களும் மென்மேலும் உங்கள் சேவைக்கு பிரார்த்தனைகளும்!

    ReplyDelete
  28. இரண்டு பதிவுமே அழகாக இருந்தது. வாய் மேல் கைவைத்து மறைத்து கொண்டு பேசுவது ரொம்ப நல்லா இருந்ததுங்க.

    உங்களின் குணாதிசியங்களை பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  29. மிக்க நன்றி, ராஜரஜேஸ்வரி!
    தங்கள் தளத்தினை பின் தொடரும் 303 நபர்களில் மூவரில் ஒருத்தியாக தேர்ந்து எடுத்தமைக்கு என் பணிவான நன்றி...பத்மாசூரி

    ReplyDelete
  30. மிக்க நன்றி, ராஜரஜேஸ்வரி!
    தங்கள் தளத்தினை பின் தொடரும் 303 நபர்களில் மூவரில் ஒருத்தியாக தேர்ந்து எடுத்தமைக்கு என் பணிவான நன்றி...பத்மாசூரி

    ReplyDelete
  31. மிக்க நன்றி, ராஜரஜேஸ்வரி!
    தங்கள் தளத்தினை பின் தொடரும் 303 நபர்களில் மூவரில் ஒருத்தியாக தேர்ந்து எடுத்தமைக்கு என் பணிவான நன்றி...பத்மாசூரி

    ReplyDelete
  32. //இப்போதெல்லாம் பேசவே பயம்// சட்டென்று சிரித்து விட்டேன்.

    சாப்பிடுவதை விட பரிமாறுவது பிடிக்குமா? அடடே.. உங்க வீட்டுக்கு நானே என்னை இன்வைட் செய்துக்குறேன். (கண்டதிப்பிலி காணாத திப்பிலினு ஏதாவது செய்யுறதா இருந்தா மட்டும் இப்பவே சொல்லிடுங்க :)

    பிள்ளைகள் திருமண முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. @அப்பாதுரை said...//

    பிடித்தை மட்டுமே பரிமாறுவேன்.

    வாழ்த்துரைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  34. @ சந்திர வம்சம் said...
    மிக்க நன்றி, ராஜரஜேஸ்வரி!
    தங்கள் தளத்தினை பின் தொடரும் 303 நபர்களில் மூவரில் ஒருத்தியாக தேர்ந்து எடுத்தமைக்கு என் பணிவான நன்றி...பத்மாசூரி//

    நன்றி. தொடருங்கள் "நண்பேண்டா"..

    ReplyDelete
  35. @கோவை2தில்லி said...//

    நன்றிங்க.

    ReplyDelete
  36. @middleclassmadhavi said...//

    வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி தோழி.

    ReplyDelete
  37. எளிமை, உண்மை, உறுதி, எல்லாம் வெளிப்ப‌டையாய்... பாராட்டுகிறேன் ச‌கோ. அந்த‌ப் பெண் ந‌ல்ல‌ப‌டி பெற்று ந‌ல‌ம‌டைய‌வும், பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ வ‌ர‌ன்க‌ள் அமைந்திட‌வும் எம் பிரார்த்த‌னைக‌ள்.

    ReplyDelete
  38. இரட்டைக்குழந்தைகள் போல இரண்டு பதிவுகளும் வெகு அருமை.

    இந்தப்பதிவுகளின் மூலம் உங்களைப்பற்றி மேலும் பல விஷயங்களை சேகரித்து மனதில் பதிந்து கொள்ள முடிந்தது.

    அதி சீக்கரமேவ (தங்கள் மகன்களுக்கு) விவாஹப்ப்ராப்திரஸ்து!

    மருமகள்கள் மெச்சும் மாமியாராக திகழப்போகிறீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

    பெண் குழந்தையில்லாததால் தங்களை சம்பந்தியாக்கிக்கொள்ள முடியவில்லையே என்று எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

    மூன்று விஷயங்கள் மூலம் தங்களின் மென்மையான உணர்வுகளை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.

    எல்லாவற்றையும் மிக அழகாக தெளிவாக, எழுதி முடித்துள்ள தாங்கள், கடைசிக்கு முன்னுள்ள (Last but one Line) என் பெயருக்கு முன்னால் அசாதாரணமாக என்று எழுதி, கூச்ச சுபாவமுள்ள என்னை மிகவும் கூசவைத்துள்ளது நியாயமா?

    நான் எப்போதுமே மிகச்சாதாரணமானவன் தான் என்பதே உண்மை.

    தெய்வாம்ச குணங்கள் கொண்ட தங்கள் நட்பு, வலைப்பூ மூலம் கிடைத்ததை நான் பெரும் பாக்யமாகக் கருதுகிறேன்.

    பதிவுகளுக்கு என் நன்றிகளும். பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  39. நா ரொம்ப லேட்! சாரி. இரண்டுமே நன்றாக இருந்தது. :-)

    ReplyDelete
  40. ராமாய ராமபத்ராய
    ராமசந்த்ராய வேதஸே!

    ரகுநாதாய நாதாய
    ஸீதாயா: பதயே நம:!!-4

    அக்ரத: ப்ருஷ்டதச்சைவ பார்ஸ்வதஸ்ய மஹாபலெள!

    ஆகர்ண பூர்ணதந்வாநெள
    ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!-5

    ஸந்நத்த: கவசீ கட்கீ
    சாபபாணதரோ யுவா!

    கச்சந் மமாக்ரதோ நித்யம்
    ராம: பாது ஸலக்ஷ்மண:!!-6

    ReplyDelete