அழகிய மலர்கள் என்றும் ஆனந்தம் தரத் தயங்குவதில்லை.
மலர்கள் மலர்வது மனதையும் வாழ்வையும் ஒருங்கே மலரச்செய்யும்.
வான வில்லின் நிறங்களை மண்ணில் தோற்றுவித்து வண்ணமயமாக்கும் மலர்களின் ராணி ரோஜா.. வசீகரிக்கும் மணமும் ஒருங்கே கூடி கொண்டாடி கவரும் அழகு மனதைக் கொள்ளைகொள்ளும்.
பதிவுலகம் நம்பி பூத்த ரோஜாக்களின் அணிவகுப்பு...
ஹாலந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு வர்ண ரோஜாப்பூக்கள். இவை உண்மையில் வெள்ளை ரோஜாக்கள், அவற்றின் மீது வானவில் வர்ணம் பூசவேண்டும் எனும் சிந்தனை உதயமானதால் இப்போது ஏழு வர்ண ரோஜாவாக உருவெடுத்திருக்கிறது.
purple is most favorite color,have to choose purple as
it represents not only Royalty but also is Godly.
அலையில்லாத ஆழி வண்ணம்
முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
நீலரோஜா ஜொலித்து மயக்கும் வண்ணம்
பூக்களின் ராணியான ரோஜாவைப் பற்றி பேசினால் எந்தெந்த நிறமெல்லாம் நம் நினைவில் உலா வரும்?
சிவப்பு, வெள்ளை, மஞ்சள், பிங்க் போன்ற நிறங்கள்தான் சட்டெனத் தோன்றும்.
நீல நிற ரோஜா பற்றி நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
அந்த நிறத்தில் ரோஜாவை பார்த்திருகக்கவும் வாய்ப்பில்லை.
காரணம் ரோஜாக்களின் இதழ்களில் நீல நிறத்தை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை இல்லை.
நீல நிற ரோஜா வெறும் கனவு என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. இப்போது அதை நிஜமாக்கி விட்டனர் ஜப்பான் விஞ்ஞானிகள்.
நீல நிற ரோஜாக்களை உருவாக்கும் முயற்சிகள் உலக முழுக்க நடந்துவந்தன.
ஜப்பானைச் சேர்ந்த சன்டோரி கார்ப்பரேஷன் மற்றும் ஆஸ்திரேலிய பயோ - வென்சர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு நீல நிற ரோஜாவை உருவாக்கிவிட்டது.
ஜப்பானைச் சேர்ந்த சன்டோரி கார்ப்பரேஷன் மற்றும் ஆஸ்திரேலிய பயோ - வென்சர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு நீல நிற ரோஜாவை உருவாக்கிவிட்டது.
14 வருட தொடர் ஆராய்ச்சியில், புதிய மரமணு வித்தைகள் பலவற்றை பிரயோகித்துப் பார்த்து கடைசியில் நீல நிற ரோஜாவை உருவாக்கி விட்டனர் ஆராய்ச்சியாளர்கள்.
பான்சிஸ் மலரில் உள்ள நீல நிறத்திற்கான மரபணுவை ரோஜாவில் முறைப்படி கலந்துப் பார்த்ததில் நீல நிற ரோஜா மலர்ந்தே விட்டது.
பான்சிஸ் மலரில் உள்ள நீல நிறத்திற்கான மரபணுவை ரோஜாவில் முறைப்படி கலந்துப் பார்த்ததில் நீல நிற ரோஜா மலர்ந்தே விட்டது.
ஆண்டுக்கு லட்சக்கணக்கான நீல நிற ரோஜாக்களை உற்பத்தி செய்து, அவற்றை விற்பனைக்கு விட சன்டோரி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் விலையும், வர்த்தகப் பெயரும் இன்னும் முடிவாகவில்லை. ‘சாதாரண ரோஜாவை விட இது விலை அதிகமாகவே இருக்குமாம்’
நீலநிற ரோஜா முதலில் ஜப்பானில் விற்பனைக்கு வர உள்ளது.
பச்சை நிறமே பச்சை நிறமே..
இச்சை ஊட்டும் பச்சை நிறமே..
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே..
எனக்குச் சம்மதம் தருமே..
இச்சை ஊட்டும் பச்சை நிறமே..
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே..
எனக்குச் சம்மதம் தருமே..
இலையின் இளமை பச்சை நிறமே..
உந்தன் நரம்பும் பச்சை நிறமே..
பச்சை நிறத்தில் இச்சை கொள்ளும் ராஜமலர் உந்தன் நரம்பும் பச்சை நிறமே..
பச்சை வண்ண ரோசாவாம்.. பார்த்த கண்ணு மூடாதாம்...
வசந்தகாலத்தேரில் உலா வரும் தென்றல் காற்றில் மிதந்து வரும் சொர்க்கம்..ஆசை ரோஜாக்களின் அருமை வண்ணக்காட்சி...
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே..
மழையில் உடையும் தும்பை நிறமே..
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே..
விழியில் பாதி உள்ள நிறமே..
மழையில் உடையும் தும்பை நிறமே..
உனது மனசின் நிறமே..
உனது மனசின் நிறமே.. உனது மனசின் நிறமே.
உனது மனசின் நிறமே.. உனது மனசின் நிறமே.
பளபளக்கும் வண்ணத்தாலேயே பெயர் பெற்ற வண்ணத்துப்பூச்சியையும், நமது தேசீயப்பறவை மயிலையும் வண்ணமில்லாமல் வெளை நிறத்தில் கற்பனை செய்ய முடிகிறதா?
வண்ணக்க்லாப மயில் தன் பளபளக்கும் நிறத்தாலேயே பிரசித்தி பெற்றது.
ஒரிசாவின் புகழ்பெற்ற நந்தன்கனான் விலங்கியல் பூங்காவிலும்,கோவையிலும் வெள்ளை மயில் காட்சிப்பட்டது.
தூய வெள்ளை நிறத்தில் அன்னப்பற்வைபோல் அழகாக மனம் கவர்ந்தது.
வண்ணக்க்லாப மயில் தன் பளபளக்கும் நிறத்தாலேயே பிரசித்தி பெற்றது.
ஒரிசாவின் புகழ்பெற்ற நந்தன்கனான் விலங்கியல் பூங்காவிலும்,கோவையிலும் வெள்ளை மயில் காட்சிப்பட்டது.
தூய வெள்ளை நிறத்தில் அன்னப்பற்வைபோல் அழகாக மனம் கவர்ந்தது.
அழகு அழகு அழகு
ReplyDeleteரோஜா.... ராஜா....
ReplyDeleteRajeswari, I am procedding to North for a pilgrimage tour. Before that yesterday i had gone a general checkup and had a little tention about the results. Today i am going to receive the test result.
ReplyDeleteBut on opening your post all my tention relived. I felt very happy seeing all the flowers. I love flowers very much. The first photo itself so nice.
Thanks Rajeswari.Your posts not only informative but also so enthustiatic.
viji
படங்களின் அழகில் இருந்து என் மனம் வெளியே வர மறுக்கிறது. முக்கியமாக வெள்ளை மயில் !
ReplyDeleteவாவ்....
ReplyDeleteபச்சை ரோஜாவும், வெள்ளை மயிலும் மனதை கொள்ளை கொண்டது...
ஊட்டியில் ஒரு முறை பச்சை ரோஜாவையும், மைசூரில் ஒரு முறை வெள்ளை மயிலையும் பார்த்தது நினைவுக்கு வந்தது...
மற்றபடி இந்த பதிவில் அணிவகுத்த அனைத்து ரோஜாக்களும் என் மனம் கவர்ந்தது...
மலர்களின் ராஜா என்று சும்மாவா சொல்கிறார்கள். ரோஜாவின் சிறப்பே தனி.
ReplyDeleteNice post,
ReplyDeleteThanks 4 sharing..
மலரே மவுனமா ?
ReplyDeleteமலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்..
வலையுலக மலர் ஒன்று
பல மலர்களை தொகுத்திருக்கிறது..
வாழ்த்துக்கள்..
ரோஜாவில் எத்தனை நிறங்கள்?ரொம்ப அழகான பதிவு இராஜி மேடம்...
ReplyDelete@from kavitendral panneerselvam//
ReplyDeleteரோஜாவில் இத்தனை நிறங்களா ? தங்களது வர்ணனை மிகவும் அருமை .
தங்களது படைப்பிற்கு எங்களது வாழ்த்துக்கள் பல!//
வாழ்த்துக்களுக்கு நன்றி.
@FOOD said...
ReplyDeleteவகை வகையான ரோஜாக்கள்.//
நன்றி.
@கவி அழகன் said...
ReplyDeleteஅழகு அழகு அழகு//
நன்றி.
@சரியில்ல....... said...
ReplyDeleteரோஜா.... ராஜா....//
நன்றி.
This comment has been removed by the author.
ReplyDelete@ viji said...//
ReplyDeleteசந்தோஷத்திலே மிகப்பெரிய சந்தோஷ்மே அடுத்தவர்களை சந்தோஷப்படித்திப் பார்ப்பதுதானே!
சந்தோஷமளிக்கும் தங்கள் கருத்துரைகள்
அனைத்திற்கும் நன்றி தோழி.
வட இந்திய பயணம் வசதிகளோடு அமையப் பிரார்த்திக்கிறேன்.
@நாய்க்குட்டி மனசு said...
ReplyDeleteபடங்களின் அழகில் இருந்து என் மனம் வெளியே வர மறுக்கிறது. முக்கியமாக வெள்ளை மயில் !//
நன்றி.
@R.Gopi said...//
ReplyDeleteகருத்துரைகளுக்கு நன்றி.
@ பாலா said...
ReplyDeleteமலர்களின் ராஜா என்று சும்மாவா சொல்கிறார்கள். ரோஜாவின் சிறப்பே தனி.//
சிறப்பான கருத்துரைக்கு நன்றி.
@!* வேடந்தாங்கல் - கருன் *//
ReplyDeleteகருத்துரைகளுக்கு நன்றி.
@சிவ.சி.மா. ஜானகிராமன் sai//
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
@RAMVI said...
ReplyDeleteரோஜாவில் எத்தனை நிறங்கள்?ரொம்ப அழகான பதிவு இராஜி மேடம்...//
அழகான கருத்துரைக்கு நன்றி தோழி.
எல்லா ரோஜாக்களுமே கொள்ளை அழகு தான்! இருந்தாலும் பச்சை ரோஜாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! பழக்கம்தான் காரணமோ? மிகுந்த சிரத்தை எடுத்து அனைத்தையும் அழகாக தொடுத்திருப்பதற்கு இனிய பாராட்டுக்கள்!
ReplyDeleteமனதை பரிகொடுத்தேன்..
ReplyDeleteஎனக்கு பிடித்த ரோஜாக்கள் விதவிதமாக பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமிகவும் ரசித்தேன் மேடம்..
ReplyDeleteநிறைய செய்திகளை உள்ளடக்கி அற்புத படங்களை
கொண்டு இனிமை தரும் இன்ப பதிவு ...
@மனோ சாமிநாதன் said...
ReplyDeleteஎல்லா ரோஜாக்களுமே கொள்ளை அழகு தான்! இருந்தாலும் பச்சை ரோஜாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! பழக்கம்தான் காரணமோ? மிகுந்த சிரத்தை எடுத்து அனைத்தையும் அழகாக தொடுத்திருப்பதற்கு இனிய பாராட்டுக்கள்!//
இனிய பாராட்டுக்களுக்கு நன்றிங்க.
@# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteமனதை பரிகொடுத்தேன்//
நன்றி.
@தோழி பிரஷா( Tholi Pirasha) said...
ReplyDeleteஎனக்கு பிடித்த ரோஜாக்கள் விதவிதமாக பகிர்வுக்கு நன்றி//
உங்களின் அழ்கான தளம் கண்களில் நிற்கிறது. நன்றி.
@ அரசன் said...
ReplyDeleteமிகவும் ரசித்தேன் மேடம்..
நிறைய செய்திகளை உள்ளடக்கி அற்புத படங்களை
கொண்டு இனிமை தரும் இன்ப பதிவு ...//
இனிமையான கருத்துக்கு நன்றி.
@ Nisha Subramanian said...
ReplyDeleteNice post.//
நன்றி.
வானவில் ரோஜாவில் மனதை பறிகொடுத்தேன்.
ReplyDeleteபூக்களில் இத்தனை வர்ணமா
அதிசயித்து போனேன்
ரோஜாக்கள் கொள்ளை அழகு..பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteஅழகிய ரோஜாக்களின் அணிவகுப்பு...
ReplyDeleteநிறம் எதுவானால் என்ன , பிஞ்சு குழந்தையின் போக்கை வாய் சிரிப்பே அழகு
ReplyDeleteஅதுபோல் ரோஜாவின் நிறம் எதுவானால் என்ன ,அதன் அழகை பார்க்க கண்கள் இரண்டு போதாது
என்னக்கு பிடித்தமான ரோசாபூ நான் எங்கு பார்த்தாலும் அதை அதன் அழகில் மயங்கி சுவைப்பவன் உங்களின் இடுகையையும் சுவைத்தேன் பாராட்டுகள் தெடருங்கள் ...........
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteமலர்களின் குவியல்.
வாழ்த்துக்கள்.
ரோஜாக்களின் அணிவகுப்பை கண்டு மகிழ்ச்சியடைந்தோம். பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteரோஜா... ரோஜா...ரோஜா... ரோஜா கண்ட உடன்...காதல்கொண்டேன்.
ReplyDeleteமலர்களின் ராஜாவை
ReplyDeleteவண்ணமயமாகக் காட்டி அசத்திவிட்டீர்கள்
விளக்கங்களும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
அருமையான, அழகான மலர்கள்.... அரிதான வெள்ளை மயில்.... என அழகிய தொகுப்பு.... மிக்க நன்றி.
ReplyDelete@A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteவானவில் ரோஜாவில் மனதை பறிகொடுத்தேன்.
பூக்களில் இத்தனை வர்ணமா
அதிசயித்து போனேன்//
அதிசயித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.
@பாச மலர் / Paasa Malar said...
ReplyDeleteரோஜாக்கள் கொள்ளை அழகு..பகிர்வுக்கு நன்றி..//
பாசமலருக்கு நன்றி.
@ ஸ்ரீராம். said...
ReplyDeleteஅழகிய ரோஜாக்களின் அணிவகுப்பு...//
நன்றி,
@ M.R said...//
ReplyDeleteஅழகான கருத்துரைக்கு நன்றி.
குட்டி வயதில் நீல ரோஜாவை உருவாக்க மெனக்கெட்டது நினைவிற்கு வருகிறது. அது வெள்ளை ரோஜவை நீலமாக மாற்றும் முயற்சி. குழந்தைகளாக ரோஜாக்கள். அழகு.
ReplyDelete@போளூர் தயாநிதி said...//
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDelete@ Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவு.
மலர்களின் குவியல்.
வாழ்த்துக்கள்.//
வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.
@ கோவை2தில்லி said...
ReplyDeleteரோஜாக்களின் அணிவகுப்பை கண்டு மகிழ்ச்சியடைந்தோம். பகிர்வுக்கு நன்றிங்க.//
மகிழ்ச்சிக்கு நன்றி.
@ மாதேவி said...
ReplyDeleteரோஜா... ரோஜா...ரோஜா... ரோஜா கண்ட உடன்...காதல்கொண்டேன்.//
நன்றி தோழி.
@ Ramani said...
ReplyDeleteமலர்களின் ராஜாவை
வண்ணமயமாகக் காட்டி அசத்திவிட்டீர்கள்
விளக்கங்களும் அருமை
தொடர வாழ்த்துக்கள்//
அசத்தலான வாழ்த்துக்களுக்கு நன்றி.
@வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஅருமையான, அழகான மலர்கள்.... அரிதான வெள்ளை மயில்.... என அழகிய தொகுப்பு.... மிக்க நன்றி.//
அரிதான கருத்துரைக்கு நன்றி.
@சாகம்பரி has left a new comment on your post "ரோஜா மலரே ராஜகுமாரி..":
ReplyDeleteகுட்டி வயதில் நீல ரோஜாவை உருவாக்க மெனக்கெட்டது நினைவிற்கு வருகிறது. அது வெள்ளை ரோஜவை நீலமாக மாற்றும் முயற்சி. குழந்தைகளாக ரோஜாக்கள். அழகு.//
மிக்க நன்றி தோழி கருத்துக்கு.
பூவின் காம்பை ப்ளேடு கொண்டு குறுக்காக வெட்டிவிட்டு, நீல இங்கில் ஊற வைத்தால் சிறிய வெள்ளைப் பூக்கள் தந்துகிக் கவர்ச்சியினால் நீலத்தை உள்ளிழுத்து வெளிர் நீலமாகிவிடும். ஆனால் ரோஜாவிடம் இதெல்லாம் பலிக்கவில்லை. என்னையும்தான் ரொம்பவும் கேலி செய்தார்கள்.
ReplyDelete@சாகம்பரி said...//
ReplyDeleteஆமாம் விஞ்ஞான வகுப்பில் காசித்தும்பைச்செடியை வேரோடு சிவப்பு இங்க் நீரில்வைத்து தண்டில் சிவப்பு இழையோடியதை தந்துகிகவர்ச்சியில் நடத்தினார்களே.
நீல ரோஜாவை ஒட்டுக்கட்டி உருவாக்கியிருப்பார்கள். அல்லது மரபணு மற்றமே செய்திருப்பார்கள். அவர்களுக்கு இல்லாத வசதியா. யாரும் கேலி செய்யமாட்டார்கள். ஆராய்ச்சிக்கூடத்தில் பாராட்டி பட்டமல்லவா அளிப்பார்கள்.
ரோஜாவை எந்தப் பெயரால் அழைத்தாலும் மணம் மாறாதுதான்! ஆனால் பெயர் அதே ரோஜாவாக இருந்தாலும் வண்ணங்கள் எத்தனை!
ReplyDeleteஅசத்தல்!
@சென்னை பித்தன் said...//
ReplyDeleteThank you.
மனிதர்களையும் நம் மனதுக்குப் பிடித்தமாதிரி மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்
ReplyDelete@ goma said...
ReplyDeleteமனிதர்களையும் நம் மனதுக்குப் பிடித்தமாதிரி மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்//
அருமையான சிந்தனை. அன்பு அப்படி மாற்றும் வல்லமை உடையது.
ரோஜாவை தாலாட்டும் தென்றல்..
ReplyDeleteபல வண்ண ரோஜாக்களின் அழகான படங்களோடு தென்றலாய் பதிவு.... பாராட்டுக்கள்
ரோஜாப்பூக்கள் பற்றிய இந்தப்பதிவு
ReplyDeleteமிகவும் அருமையான் ”பட்டுரோஜா” போல வெகு அழகாக உள்ளது.
பல வண்ணங்களில் ஜொலிக்க வைத்து அசத்திவிட்டீர்கள்.
ஆங்காங்கே பொருத்தமான பாடல் வரிகள்.
பதிவுலகின்
“ரோஜா மலரே ....
இராஜராஜேஸ்வரி”
என்று தான் அனைவரும் பாடுவார்கள்.
அற்புதமான அழகிய பதிவுக்கு என் நன்றிகள்.
வெள்ளை மயிலை நானும் எங்கோ பார்த்திருக்கிறேன். இருப்பினும் கழுத்தினிலும், தோகைகளிலும், கலர்கலரான மயில்தாங்க மனதை மயக்கும் இயற்கையின் அழகோ அழகு!
ReplyDeleteஹப்பப்பா...!எத்தனை வகை ரோஜாக்கள்! நீலம், பச்சை, அடுக்கு ரோஜாக்கள் கண்களையும் மனதையும் கவர்ந்தன. எங்க் பிடிச்சீங்க?
ReplyDeleteஅதோடு உஜாலாவில் குளித்து வந்த வெண்மயில், கண் கொள்ளாக் காட்சி.
ராமாய ராமபத்ராய
ReplyDeleteராமசந்த்ராய வேதஸே!
ரகுநாதாய நாதாய
ஸீதாயா: பதயே நம:!!-4
அக்ரத: ப்ருஷ்டதச்சைவ பார்ஸ்வதஸ்ய மஹாபலெள!
ஆகர்ண பூர்ணதந்வாநெள
ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!-5
ஸந்நத்த: கவசீ கட்கீ
சாபபாணதரோ யுவா!
கச்சந் மமாக்ரதோ நித்யம்
ராம: பாது ஸலக்ஷ்மண:!!-6
749+3+1=753 ;)
ReplyDelete[எனக்கு மட்டும் பதில் தரப்படவில்லை. OK அதனால் பரவாயில்லை.]