திருமாலின் கமல மலர் மார்பில் உறையும் அன்னை லக்ஷ்மி தேவியைப் பூஜிக்கும் இல்லம் வைகுந்தத்திற்கு நிகராகி சகல சௌபாக்கியங்களும் நிறைந்திருக்கும்.
லக்ஷ்மி புத்திரராக -பெரும் செல்வந்தராக எண்ணப்படும் பிர்லா அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட உயர்ந்தவகை சல்வைக்கல்லால் இழைத்து நுணுக்கமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கண்களையும் கருத்தையும் கவர்ந்த பிர்லா மந்திர் என்று அழைக்கப்படும் “லக்ஷ்மி நாராயண் மந்திர்” என்னும் மிகச் சிறப்பாகப் பரமரிக்கப்படும் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம்.
இந்திர பிரஸ்தம்"என்று புராண காலத்தில் அழைக்கப்பட்ட தலை நகர் டெல்லியில் கரோல்பாகின் அருகில் மந்திர் மார்க்” பகுதியில் அமைந்துள்ள அழகான கோவிலாகும்.
Temple decorated on Occasion of Janmashtami, the birth anniversary of Lord Krishna
லக்ஷ்மிநாராயணன் கோவில் நுழைய கெடுபிடிகள் அதிகம். வாரணாசியிலிருந்து சிற்பக்கலை நிபுணர்களை அழைத்து வந்து இங்குள்ள சிற்பங்களை வடிவமைத்துள்ளனர்.
கோவிலின் உள்ளே நுழைந்ததும் இடப்புறத்தில் தனி மண்டபத்தில் விநாயகரும், வலப்புறத்தில் ஆஞ்சனேயரும் அருள்பாலிக்கின்றனர்..
உள்ளே லக்ஷ்மி நாராயணன் அருள்பாலிக்கிறார்.
இருபுறமும், சிவனுக்கும், புத்தருக்கும் தனி கோவில்கள் உள்ளன. வேதங்களிலிருந்து சில காட்சிகளை இங்கே அழகாக செதுக்கி வைத்துள்ளனர். முற்றிலும் ஜெய்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மார்பிள் கற்களால் ஆன சிற்பங்கள் இங்கு உள்ளன. அருகிலேயே பகவான் ஸ்ரீக்ருஷ்ணனுக்காக “கீதா பவன்” என்ற தனி கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே பரிசாக வந்த ஒரு பெரிய உலக உருண்டை அழகாக இருக்கிறது. . கோவிலின் உள்ளே அலைபேசி, புகைப்படக்கருவி போன்ற எந்தப் பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. கோவிலின் வெளியே காலணிகள் வைக்கும் இடத்திலேயே இப்பொருட்களையும் வைக்க சிறு சிறு பெட்டகங்கள் உண்டு. அவற்றில் வைத்துப் பூட்டி அதன் சாவியையும்அவரவரிடமே ஒப்படைத்து விடும் சிறப்பான ஏற்பாடு உண்டு.
புது தில்லி வடமேற்குப் பகுதியில் இந்தர்புரியில் உள்ள அருள்மிகு தேவி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் ஏராளமானோர் தீ மிதித்து, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
இந்தர்புரியில் கடந்த 61 ஆண்டுகளுக்கு முன்பு விரல்விட்டு எண்ணும் வகையில் சில தமிழ் குடும்பங்கள் இருந்தன. அப்போது, பிர்லா மந்திர் பகுதியில் இருந்து மாரியம்மன் சிலையை எடுத்து வந்து இந்தர்புரி புத் நகர் ஏ-பி பிளாக்கில் தமிழர்கள் சிலர் கோயில் அமைத்தனர்.
கோயிலில் உள்ள பிரதான சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில் 5 நாகங்களை தலையில் கிரீடமாகக் கொண்டு அருள்பாலிக்கிறாள் அம்மன். இதனால், தேவி கருமாரி அம்மனை இப்பகுதி மக்கள் நாகம்மாள் கோயில் என்றே அழைக்கின்றனர்.
,விநாயகர், நாகதேவதை, சிவலிங்கம் ஆகிய தெய்வங்களும் பக்தர்களின் வழிபாட்டில் உள்ளன. காலையிலும், மாலையிலும் அம்மனுக்கு பூஜைகளும், நைவேத்தியமும் செய்யப்படுகின்றன.
இப்பகுதியைச் சுற்றியுள்ள சில இடங்களில் கோயில்கள் கட்டும் பணி தொடங்கியபோது மிகுந்த சக்தி வாய்ந்தஇக்கோயிலில் இருந்துதான் மண் எடுத்துச் செல்லப்பட்டது. . இந்த அம்மனை பயபக்தியுடன் வழிபடுவோருக்கு நினைத்தது நிறைவேறும்''என்பது நம்பிக்கை..
கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 9 நாள்கள் நடத்தப்படும். அப்போது அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை, விளக்கு பூஜை, அரண்மனை முத்து எடுத்தல், அம்மன் திருவீதி உலா, பொங்கலிடுதல், அக்னி கரம், பால் குடம் எடுத்தல், அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 61-ம் ஆண்டு சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டிருக்கிறது.
திருவிழாக் காலங்களில் இந்தர்புரி பகுதி தமிழர்கள் மட்டுமன்றி வட இந்தியரும், பிற தென் இந்திய மக்களும் திரளாக கலந்துகொண்டு தீமிதித்து, காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
அம்மனுக்கு தங்கத் தாலி: 61-ம் ஆண்டு சித்திரைத் திருவிழாவின்போது அம்மனுக்கு 100 கிராமில் தங்கத் தாலி அணிவிக்கப்பட்டது.
வெள்ளிக் கவசம் அம்மனுக்கு அணிவிக்க கோயில் நிர்வாகக் கமிட்டி மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
கோயிலில் நடைபெறும் பல்வேறு பணிகளுக்கும் கோயில் வீட்டுவரி மூலம் பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் நன்கொடையும் பெறப்படுகிறது
This comment has been removed by the author.
ReplyDelete@FOOD said...
ReplyDeleteபதிவைப் பார்த்து இன்று வெள்ளிக்கிழமை என்று தெரிந்து கொள்ளலாம். நன்றி//
நன்றி கருத்துரைக்கு.
Mika arumaiyana muyarchi...elimaiyana Athe samayam vaseekarikkum varthai vannangal...evaraiyum eerkkum...intha eliyaenaiyum ungal valaippoo eerthathu eyalbuthanae...Vazhthukkal...Valarattum ungal valamaana valaippadhivugal...Artist Anikartick,Chennai
ReplyDelete@Artist ANIKARTICK said...//
ReplyDeleteவசீகரிக்கும் வண்ணமய கலைஞரின் வாழ்த்துக்கு மிக நன்றி.
கோயில் பார்ப்பதற்கே கலையம்சமாக உள்ளது. முதல் படமான கருணை பொங்கும் தேவியின் முகம் மிகுந்த நிம்மதி அளிக்கிறது.
ReplyDeleteமீண்டும் ஒரு அருமையான ஆலய தரிசனம் .......நன்றி அக்கா .
ReplyDeleteஇன்னைக்கு வெள்ளிக்கிழமையா?ன்னு காலண்டர் பார்க்க வேணாம், மேடம் பதிவுல லட்சுமி பதிவு வந்தா அன்னைக்கு வெள்ளி..// 100% TRUE..
ReplyDelete@from vinothmaligai@gmail.com//
ReplyDeleteThanks!
----------
Sent from my Nokia Phone//
நன்றி.
@ பாலா said...
ReplyDeleteகோயில் பார்ப்பதற்கே கலையம்சமாக உள்ளது. முதல் படமான கருணை பொங்கும் தேவியின் முகம் மிகுந்த நிம்மதி அளிக்கிறது.//
கருத்துரைக்கு நன்றி.
@koodal bala said...
ReplyDeleteமீண்டும் ஒரு அருமையான ஆலய தரிசனம் .......நன்றி அக்கா //
நன்றி.
@ !* வேடந்தாங்கல் - கருன் *! //
ReplyDeleteநன்றி.
அருமையான பதிவு அருமையான படங்கள்
ReplyDeleteகூடுதலாக பதினாறு லெட்சுமிகளையும் வெள்ளி ஆதலால்
மீண்டும் ஒருமுறை தரிசித்து மகிழந்தேன்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
இன்றைய பகிர்வுக்கும் என் மனமுவந்த பாராட்டுக்கள்...
ReplyDeleteஅழகான படங்களுடன் அருமையான பதிவு இராஜராஜேஸ்வரி மேடம்...
ReplyDeleteகோவில் கருவறைக்கே சென்று மூலவரை தரிசித்தது போல் உள்ளது முதல் படம் . படங்களும் , கட்டுரையும் அருமை .படங்கள் பதிவிறக்க வேண்டிய படங்கள் .அருமை மேடம்
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஉங்கள் பதிவுகளால் நிறைய கோவில்களை தரிசனம் செய்கிறோம்.
நன்றி அம்மா.
படித்து முடிந்தவுடன் லட்சுமி அருள் பெற்ற
ReplyDeleteதிருப்தி.
பதிவுக்கு நன்றி.
வெள்ளிக் கிழமைப் பதிவு +லக்ஷ்மி கடாட்சம்.
ReplyDeleteபளிச்சென்று சலவைக் கல்லில் சுவாமி விக்கிரகங்கள். பிர்லா மந்திர் அழகாக இருக்கிறது. பணிக்கர் டிராவல்ஸ் மூலமாக சென்றதால் ஒரே நாளில் நிறைய கோவில்களை பார்த்ததால் சற்று குழம்பிப்போய் கேட்கிறேன், இந்த கோவிலில்தானே ஒரு சுவாமிஜியின் மெழுகுச் சிலையும் உள்ளது?. மலாய் டெம்பிள் ( மலைக்கோவில்) கூட அழகாக இருக்கும். முடிந்தால் புகைப்படங்கள் வெளியிடுங்களே தோழி. (நான் எடுக்க முடியவில்லை)
ReplyDeleteபடங்களும், தகவல் பகிர்வும் அழகு.
ReplyDeleteஅதுவும் அந்த ரோஜா செடி.... கொள்ளையழகு!
உம்க்கள் பதிவுகளின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. பதிவுகளின் நீள ,அகல, ஆழ, பரிணாமங்கள் ஆச்சரியப் படவைக்கின்றன.பிரசுரிப்பிலும் புகைப்படங்களின் தேர்விலும் ஒரு சிறந்த தொழில் வல்லுனரின் லாகவம் தெரிகிறது. இவையெல்லாம் ஒரு தனி மனிதரின் உழைப்பின் விளைவு என்று நம்புவது கஷ்டமாயிருக்கிறது.உங்கள் பதிவில் காணும் இடங்கள் பலவற்றுக்கும் சென்று வந்திருக்கிறேன். அநேகமாக நிறைய விவரங்களறியப்படாதவை. பாராட்டுக்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்/
ReplyDelete@Ramani said...
ReplyDeleteஅருமையான பதிவு அருமையான படங்கள்
கூடுதலாக பதினாறு லெட்சுமிகளையும் வெள்ளி ஆதலால்
மீண்டும் ஒருமுறை தரிசித்து மகிழந்தேன்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
@# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஇன்றைய பகிர்வுக்கும் என் மனமுவந்த பாராட்டுக்கள்..//
பாராட்டுக்களுக்கு நன்றி.
@RAMVI said...
ReplyDeleteஅழகான படங்களுடன் அருமையான பதிவு இராஜராஜேஸ்வரி மேடம்...//
நன்றி தோழி.
@ M.R said...
ReplyDeleteகோவில் கருவறைக்கே சென்று மூலவரை தரிசித்தது போல் உள்ளது முதல் படம் . படங்களும் , கட்டுரையும் அருமை .படங்கள் பதிவிறக்க வேண்டிய படங்கள் .அருமை மேடம்//
கருத்துரைக்கு நன்றி.
ஐ... எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே [200 மீட்டர் அருகில்] இருக்கிற லக்ஷ்மி நாராயண் மந்திர் பத்தி எழுதி இருக்கீங்களே.... நல்ல பகிர்வு.
ReplyDeleteஇந்திரபுரி கோவில் இதுவரை சென்றதில்லை... சீக்கிரமே செல்ல முயல்வேன்...
பகிர்வுக்கு நன்றி.
அறியாத பல விஷயங்கள்.சிறப்பான பதிவு.
ReplyDeleteஆலய தரிசனம்-தினம்
ReplyDeleteஆனந்த தரிசனம்
சாலவே நன்றே-நல்
சரித்திரம் ஒன்றே
காணவும் தேடி-தேவை
கண்களும் கோடி
ஆணவம் அழியும்-உண்மை
அன்பினை பொழியும்
புலவர் சா இராமாநுசம்
படங்களில் உள்ள ரோஜாக்கள் போல் அழகான பதிவு!
ReplyDelete@ Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவு.
உங்கள் பதிவுகளால் நிறைய கோவில்களை தரிசனம் செய்கிறோம்.
நன்றி அம்மா.//
தரிச்னத்திற்கு நன்றி ஐயா.
@ மகேந்திரன் said...
ReplyDeleteபடித்து முடிந்தவுடன் லட்சுமி அருள் பெற்ற
திருப்தி.
பதிவுக்கு நன்றி//
கருத்துக்கு நன்றி.
@ சத்ரியன் said...
ReplyDeleteபடங்களும், தகவல் பகிர்வும் அழகு.
அதுவும் அந்த ரோஜா செடி.... கொள்ளையழகு!//
அழகு கருத்துக்கு நன்றி.
@ G.M Balasubramaniam said...//
ReplyDeleteபாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
எளிய முயற்சி.
//பிரசுரிப்பிலும் புகைப்படங்களின் தேர்விலும் ஒரு சிறந்த தொழில் வல்லுனரின் லாகவம் தெரிகிறது//
மகிழ்ச்சி. நுணுக்கம் எதுவும் தெரியாது. ஆர்வம் மட்டுமே உண்டு.
@சாகம்பரி said...//
ReplyDeleteமலை மந்திர் என்னும் முருகன கோவிலுக்கும் சென்றோம். பதிவிட நினைவூட்டியதற்கு நன்றி தோழி.
@வெங்கட் நாகராஜ் said...//
ReplyDeleteதலைநகர் தங்கப் பதிவரின் கருத்துக்கு நன்றி.
@shanmugavel said...
ReplyDeleteஅறியாத பல விஷயங்கள்.சிறப்பான பதிவு.//
நன்றி.
@ புலவர் சா இராமாநுசம் said...//
ReplyDeleteஅன்பினைப்பொழியும்
அருமையான கருத்துக்கு நன்றி ஐயா.
@ சென்னை பித்தன் said...
ReplyDeleteபடங்களில் உள்ள ரோஜாக்கள் போல் அழகான பதிவு!//
அழ்கான கருத்துக்கு நன்றி ஐயா.
@ ஸ்ரீராம். said...
ReplyDeleteவெள்ளிக் கிழமைப் பதிவு +லக்ஷ்மி கடாட்சம்.//
நன்றி.
அன்னை லஷ்மி - உண்மையில் லஷ்மிகரமான படம்.
ReplyDeleteபழைய காலத்தில் டெல்லிக்கு இந்திரபிரஸ்தம் அப்படிங்குற பேரா.....புதுசாருக்கே!!!!
சிற்பகலை நிபுணர் - வாரணாசி
மார்பில்கற்கள் - ஜெய்பூர்
எப்படி தான் கண்டுபிடிக்கிறீங்களோ...
ஆமா..! கேமரா தான் அலோ இல்லையே அப்பறம் எப்படி படங்கள்..
கேமரா ரகசியமா எடுத்துப் போனீங்களா..எங்கிட்ட மட்டும் சொல்லுங்க யார்கிட்டயும் சொல்லமாட்டேன்..
இந்தர் புரி மாரியம்மனை மனதார வேண்டிக்கொள்வோம்..நினைத்தது நடக்கட்டும்...
லஷ்மிகரமான பதிவு....வாழ்த்துக்கள்
rajeshnedveera
http://maayaulagam-4u.blogspot.com
@kavitendral panneerselvam m
ReplyDeleteImportant mainly because it was sent directly to you.
படங்கள் மிக அருமை ! தங்களது வர்ணனை மிக மிக அருமை !
வாழ்த்துக்கள்! //
நன்றி.
அருள் பொங்கும் முகத்துடன் கூடிய முதல் படத்தையும், அழகிய மலர்களால் அலங்கரித்துள்ள கடைசி படமான ரோஜாத்தோட்டத்தையும் நீண்ட நேரம் கண்டு களித்தபடியே இருந்ததால் பின்னூட்டமிட தாமதமாகி விட்டது. பொருத்தருள வேண்டும்.
ReplyDeleteஇந்தக்கோவிலுக்கும் நான் நேரில் சென்று வரும் பாக்யம் பெற்றேன்.
நல்ல அருமையான பதிவு.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி. vgk
ராமாய ராமபத்ராய
ReplyDeleteராமசந்த்ராய வேதஸே!
ரகுநாதாய நாதாய
ஸீதாயா: பதயே நம:!!-4
அக்ரத: ப்ருஷ்டதச்சைவ
பார்ஸ்வதஸ்ய மஹாபலெள!
ஆகர்ண பூர்ணதந்வாநெள
ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!-5
ஸந்நத்த: கவசீ கட்கீ
சாபபாணதரோ யுவா!
கச்சந் மமாக்ரதோ நித்யம்
ராம: பாது ஸலக்ஷ்மண:!!-6
756+2+1=759
ReplyDelete[as stated earlier]