Thursday, August 25, 2011

உற்சாகம் நிறையும் குற்றாலம்






















கற்றாரையான் வேண்டேன்
கற்பனவும் இனியமையும
குற்றாலத்து அமர்ந்துறையும்
கூத்தாஉன் குரைக்கழற்கே
கற்றாவின் மனம் போலக்
கசிந்துருக வேண்டுவனே.

என்று மாணிக்க வாசகர் பாடிய குற்றாலத்து கூத்தனைக் கண்டு
கண்களில் நிறைத்து மனதில் நிறுத்தி வணங்குகின்றோம்,

சிறந்த சுற்றலாத் தலமாக விளங்கும் குற்றாலம் மிகப் பழமை வாய்ந்த ஆன்மிகத் தலமும்கூட. இத்தலத்தைச் சார்ந்த குற்றால மலை தமிழோடும் தமிழ் முனிவர் அகத்திய ரோடும் நெருங்கிய தொடர்புடையது.  சுமார் 2000 வகை மலர்களும் மூலிகைகளும் , சாதிக் காய், ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்களும் விளைகிறது.


"திருநெல்வேலி மாவட்ட' வரலாற்று நூலில், உலகிலேயே மிகச்சிறந்த நீராடும் இடம் என குற்றாலத்தைக் குறிப்பிடப்பட்டுள்ளது. திரிகூட ராசப்பக் கவிராயர் குற்றாலத்தைப் பற்றி "குற்றாலக் குறவஞ்சி' என்னும் அற்புதமான சிற்றிலக்கியம் படைத்திருக்கிறார்.



இவ்வாறு பல பெருமைகள் வாய்ந்த குற்றாலத்தில் ஈசன் திருக்குற்றாலநாதர் என்னும் திருப்பெயரோடும்; அன்னை குழல்வாய் மொழியம்மை என்னும் திருப்பெயரோடும் அருள்புரிகிறார்கள்.

யுகந்தோறும் நிலைத்திருக்கும் இவ்வாலயத்தில் இறைவன் முதலில் பிரம்மாவாகவும் பின்பு விஷ்ணுவாகவும் அதன்பின் சிவனாகவும் அருள்கிறார் என்பர்.

விஷ்ணுவின் கையிலுள்ள சங்கு வடிவில் இவ்வாலயம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு ஆலயமாக இருந்த இதை சிவாலயமாக மாற்றியவர் அகத்தியர் என்கிறது தலபுராணம். 

கயிலையில் சிவ-பார்வதி திருமண வைபவம் நடந்த சமயம், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தபோது அதை சமன் செய்ய அகத்தியரை தென்திசைக்கு அனுப்பி னார் சிவன். பெருமானின் திருமணக் காட்சியைக் காணும் பாக்கியம் தனக்கில்லையே என்று அகத்தியர் வருந்த, "குற்றாலத்தில் விஷ்ணு ரூபமாக இருக்கும் என்னை சிவலிங்கமாக மாற்றி வழிபடு. உமக்கு என் திருமணக் கோலத்தை அங்கு காட்டியருள்கிறேன்' என்றார் ஈசன்.

அதன்படி குற்றாலம் வந்த அகத்தியர் விஷ்ணு சந்நிதிக்குள் நுழைய முயன்றபோது, வாயிற்காவலர்கள், "சிவ சின்னம் தரித்த உமக்கு விஷ்ணு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி இல்லை' என்று தடுத்தனர்.

அதனால் மனம் வருந்திய அகத்தியர் இலஞ்சி என்னும் தலத்திற்கு வந்து, அங்கு கோவில் கொண்டுள்ள முருகப் பெருமானிடம் முறையிட்டார். அவர்முன் தோன்றிய முருகப் பெருமான்,
  "வஞ்சக மறையோரை வஞ்சகத்தால் தான் வெல்ல வேண்டும்' என்று கூறி, வைணவச் சின்னம் தரித்து ஆலயத்திற்குள் சென்று, வேத மந்திரங்களால் விஷ்ணுவை சிவலிங்கமாக்கி வழிபடுமாறு கூறி, சிவாக மங்களையும் உபதேசித்தார்.

அதன்படி நெற்றியில் நாமமும் மார்பில் துளசி மாலையுமாகச் சென்ற அகத்தியரை துவார பாலகர்கள் தடுக்கவில்லை. நேராக கருவறைக்குச் சென்ற அகத்தியர், விஷ்ணு பகவானின் திருமேனியைக் குறுக்கி சிவலிங்கமாக மாற்றினார். அபிஷேகம் செய்து வழிபட்டார்.

அதன்பின் அங்கு வந்த வைணவ அடியார்கள் மகாவிஷ்ணு இருந்த இடத்தில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு திகைக்க,
"அரி வேறு, அரன் வேறு என்று பேதம் கொள்ளாதீர்கள்' என்று உபதேசித்தார். பின்னர் அவர் பொதிகை மலை நோக்கிச் செல்லும் முன் ஈசன் தன் திருமணக் கோலத்தை யும் திருநடனத்தையும் அகத்தியருக்குக் காட்டியருளினார்.

இவ்வாறு சிவத்தலமாக மாறிய குற்றாலநாதர் ஆலயம் ஐந்து வாயில்களை உடையது. அகத்தியர் கை வைத்து அழுத்தி திருமால் மேனியை லிங்கமாக மாற்றியதால், அகத்தியரின் விரல் படிந்த தடங்களை லிங்கத்தின்மீது காணலாம். இவ்வாறு அழுத்தியதால் ஈசனுக்கு தலைவலி உண்டாயிற்றாம். எனவே அதைப் போக்க தினமும் காலை சிவலிங்கத்தின் தலைப் பகுதியில் தைலம் தடவுகின்றனர்.

பசும்பால், இளநீர், சந்தனம் ஆகிய வற்றுடன் 42 வகை மூலிகைகளைச் சேர்த்து 90 நாட்கள் பதப்படுத்தி, அந்தக் கலவையை செக்கிலிட்டு ஆட்டி எடுத்து, அத்துடன் தூய நல்லெண் ணெய் கலந்து இந்த தைலத்தைத் தயாரிக்கின்றனர். இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் இந்தத் தைலம் பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் கொடுக்கப்படுகிறது.

 அர்த்த ஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயத்தை இறைவனுக்குப் படைக்கின்றனர். இறைவன் அருவி விழும் இடத்திற்கருகே குளிர்ச்சியான சூழலில் இருப்பதால், அவருக்கு குளிர் காய்ச்சல் வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தக் கஷாய நிவேதனமாம்!




அகத்தியர் விஷ்ணுவை சிவலிங்க மாக மாற்றியபொழுது, சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை குழல்வாய்மொழி நாயகியாகவும் இடப் புறம் இருந்த பூதேவியை பராசக்தி யாகவும் மாற்றினாராம். அதன்படி பராசக்தி இங்கு
ஸ்ரீசக்கர பீட வடிவில் காட்சி தருகிறாள்.



பூமாதேவியாக இருந்த அம்சம் பீடமாக உள்ளதால் இதற்கு தரணி பீடம் என்று பெயர். சக்தி பீடங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இங்கு பௌர்ணமி இரவில் நவசக்தி பூஜை செய்கின்றனர். அப்போது பாலும் வடையும் முக்கியமான பிரசாதமாகப் படைக்கப்படும்.

ஆலயத்தில் பெருமாளுக்கும் சந்நிதி இருக்கிறது. தன்னை வணங்குபவர்களுக்கு நன்மைகள் தருபவர் என்பதால் இந்தப் பெருமாள் நன்னகரப் பெருமாள் என்னும் திருநாமம் கொண்டு விளங்குகிறார். அருகில் கிருஷ்ணரும் உள்ளார்.

தல விருட்சமாகப் பலா மரம் விளங்குகிறது. இதில் எப்போதும் பலா பழுத்துக் கொண்டிருக்கும். இதிலுள்ள பலாச்சுளை லிங்க வடிவில் இருப்பது அதிசயம்! இதை குற்றாலக் குறவஞ்சி, "சுளையெலாஞ் சிவலிங்கம்' என்று வர்ணிக்கிறது. இது தவிர மிகப் பழமையான பலா மரம் ஒன்று பிராகாரத்தில் உள்ளது. இதை சிவனாகவே பாவித்து தீபாராதனை செய்து நிவேதனம் படைக்கின்றனர்.



பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபை இவ்வாலயத்திற்கு வெளியே தனியாக அமைந் துள்ளது. இதில் பழமையான- மூலிகைகளால் வரையப்பட்ட இறை ஓவியங்கள் காட்சியளிக் கின்றன. மற்ற சபைகளில் விக்ரக வடிவில் உள்ள நடராஜர் இங்கு ஓவிய வடிவில் உள்ளதும் சிறப்பாகும்.
[panja_sabai3.JPG]
ஆனந்த நடராஜேஸ்வரர் அம்மை சிவகாமியுடன்
[chitra+sabha.jpg]

காலன் வருமுன்னே
கண்பஞ் சடை முன்னே
பாலுண் கடைவாய்
படு முன்னே - மேல் விழுந்தே
உற்றார் அழுமுன்னே
ஊரார் சுடுமுன்னே
குற்றாலத்தானையே கூறு
என்ற பட்டினத்தடிகள் பாடியபடி நாளைக்கென்று ஒதுக்கி வைக்காமல் இன்றே ஆனந்த நடராஜேஸ்வரரின் தரிசனம் பெற்று உய்வடைய அவனே அருள வேண்டும். அவனருளாலே அவன் தாள் வணங்குவோம்...
வருடாந்திர பிரம்மோற்சவம், ஆருத்ரா தரிசனம், வசந்த உற்சவம், பவித்ரோற்சவம், கந்த சஷ்டி, நவராத்திரி, சிவராத்திரி என எல்லா விழாக்களும் இங்கே சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.
கோவிலின் வடக்கே அருகில் சித்திர சபை உள்ளது . இரு மண்டபங்கள் உள்ளன, கேரளப்பாணியில் கட்டப்பட்டுள்ளன்.ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் உள்ளன. நடுவே ஒரு சிறு வசந்த மேடை. மரக்கூரை கூரை செப்புத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. எட்டு கலசங்கள்.சித்திர சபையெங்கும் சித்திரங்கள் மூலிகைகளை குழைத்து தீட்டிய வண்ணம். தஞ்சாவூர் ஓவியம் போன்று சிவப்பு, நீலம், தங்க நிறத்தில் அற்புதமான சித்திரங்கள்.யமனை வென்ற மிருத்யுஞ்சய மூர்த்தியாக , ஆனந்த நடராஜேஸ்வரராக தலையில் பிறை சூடி , அம்மை சிவகாம சுந்தரியை இடப்பக்கதில் சுமந்து மார்க்கண்டனுக்க்கு அருளிய மூர்த்தியாக ஆன்ந்த தாண்டவம் ஆடும் சித்திரம் அருமை. முப்பத்து முக்கோடி தேவர்களும் ஐயனின் அடிபணிந்து ஆனந்த தாண்டவத்தை கண்டு களிக்கின்றனர். தாமரைகள் மலர்ந்திருக்க, வண்டுகள் ரீங்காரமிட மயில்கள் ஆட அருமையாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
[chitrasabhai.JPG]

சித்திர சபையில் ஐயன் திரிபுர தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். பிரம்மன் தான் கண்ட அந்த தாண்டவத்தை தானே வரைந்ததாக ஐதீகம். புராண நிகழ்ச்சிகளை ஒட்டிய சித்திரங்களும், 64 திருவிளையாடல்களை விளக்கும் சித்திரங்கள் என்று சபை எங்கும் நிறைந்திருக்கின்றன. ஸ்படிக லிங்கமும் சக்கரமும் உள்ளன. திருவாதிரை உற்சவ பத்து நாள் உற்சவத்தின் போது தினமும் காலையிலும் மாலையிலும் திருவெம்பாவை, தேவாரம், பல்லாண்டு பாடப்பட்டபின்னரே ஆசிர்வாத நிகழ்ச்சி வட மொழியில் நிகழ்த்தப்படுகின்றது. ஆருத்ரா தரிசனத்தன்று தாண்டவ தீபாரதனை நடைபெறுகின்றது.




பல சிறப்புகள் கொண்ட குற்றாலம் உடற்பிணியோடு பிறவிப் பிணியையும் தீர்க்கும் தலமாக விளங்குகின்றது. "கு' என்றால் பிறவி; "தாலம்' என்றால் தீர்ப்பது என்று பொருள். குற்றாலம் என்றால் பிறவிப் பிணி நீக்கும் இடம் என்று பொருள்.

""மன பாரத்தோடும் பிணியோடும்தான் வருபவர்களை குற்றாலச் சாரலும் மூலிகைக் காற்றும் உடற்பிணியைப் போக்கி, குற்றாலநாதரின் அருள் மனக் கவலைகளைத் தீர்த்து நிம்மதியோடு செல்ல வைக்கிறது













Aiyanar Sastha temple-kutralam(five falls). 






குற்றாலத்தில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்

72 comments:

  1. குற்றாலச் சாரலில் குளித்ததோடு திரும்பியிருக்கிறேன்
    இன்றுதான் பக்தி சாரலில் குளித்தாற்போல் உணர்கிறேன்

    ReplyDelete
  2. குற்றாலம் என்றாலே உற்சாகம்தான்.
    படங்கள் அழகாக இருக்கு.அதிலும் மேலிருந்து மூன்றாவதாக உள்ள பெரிய அருவி படம்,பிரமாதம்.

    ReplyDelete
  3. நேற்றுதான், ஊரில் எங்க உறவினர்கள் குற்றாலம் சென்று விட்டு வந்ததாக சொன்னார்கள். சும்மாவே மிஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். ம்ம்ம்ம்......

    ReplyDelete
  4. குற்றாலத்திற்கு குடும்பத்துடன் சென்று அருவியில் குளித்தது, அந்த சிவன் கோயிலுக்குச்சென்று ஹர ஹரா என்று கன்னத்தில் போட்டுக்கொண்டது, முழுப்பலாப்பழத்தை வாங்கி வேனில் வைத்ததுக்கொண்டது, மற்ற ஒரு சில இடங்களை மட்டும் போய்ப்பார்த்தது போன்ற சில ‘மலரும் நினைவுகள்’ மட்டும் நினைவுக்கு வருகிறது.

    குற்றால அருவி போல இத்தனைப்படங்களையும், இத்தனை விஷயங்களையும் வெகு அருமையாக வழங்கி இன்று பக்திச் சாரலில் நனையச் செய்து விட்டீர்களே!

    எந்தச்சுற்றுலா மையத்திற்குச் சென்றாலும், உங்களின் பார்வையும், ரசனையும் இறைவனை நோக்கியே இருப்பது, அந்த இறையருளால் கிடைக்கப்பெற்ற மிகவும் விசேஷமான அனுக்கிரஹம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    நன்றிகள்.
    vgk

    ReplyDelete
  5. அருமையான குற்றால தரிசனம்

    ReplyDelete
  6. குற்றால குறவஞ்சி மறக்க முடியுமா

    ReplyDelete
  7. குற்றாலம் தமிழகத்தின் தேவ அருவி

    ReplyDelete
  8. பதிவும், படங்களும், அத்ற்கான விளக்கங்களும் சூப்பர்.

    ReplyDelete
  9. 1980 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். குடும்பத்துடன் குற்றாலம் + கேரளா சுற்றுலா சென்றோம். பெரியவனுக்கு 6 வயது அடுத்தவனுக்கு 4 வயது. [மூன்றாவது பையன் பிறக்கவே இல்லை].

    அருவியில் நிறைய தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. அருவியை நெருங்கி நின்றும் கும்பலான கும்பலால் குளிக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றோம்.

    அந்த சமயம் குளித்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் சற்று நேரம் முன்பு மிகப்பெரிய பாம்பு ஒன்று தண்ணீருடன் வந்ததாகப் பேசிக்கொண்டே குளித்துக்கொண்டிருந்தனர். எங்களுக்கு கொஞ்சம் பயமாகி விட்டது.

    சற்று நேரத்திற்குப்பிறகு, என் காலை ஏதோவொரு தண்ணீர் பாம்பு போல சுற்றிக்கொண்டது போல ஒரு பிரமை ஏற்பட்டது.

    பாம்பு பாம்பு என்று கத்தியவாறு, ஒரு பரத நாட்டியமே ஆடி விட்டேன். அதைப்பார்த்த அனைவரும் ஓட்டம் பிடிக்க எங்களுக்கு செளகர்யமாக குளிக்க இடம் கிடைத்தது. நிம்மதியாகக் குளித்தோம்.

    என் பிள்ளைகள் பாம்பு எங்கே அப்பா? உன்னைக்கடித்து விட்டதா? என்றெல்லாம் கேட்க, நான் “அது என்னைக் கடிக்க வந்தது. ஒரே மிதி மிதித்து விட்டேன். அது என் மிதிக்கு பயந்து கொண்டு தண்ணீரில் எங்கோ ஓடி விட்டது. இனி இந்தப்பக்கமே வராது, பயப்படாமல் குளியுங்கள்” என்று சொன்னேன்.

    இன்றுவரை என் காலைச்சுற்றிய அது கடிக்காமல் இருப்பதால், அது பாம்பாகவே இருக்க முடியாது, என்பது எனக்கு மட்டும் தெரிந்ததோர் தேவ ரகசியம்.

    குற்றாலம் என்றாலே என் மனைவி + 2 பையன்களுக்கு இந்தச்சம்பவமே நினைவுக்கு வரும்.

    இன்றும் இந்தப்பதிவைப் படித்ததும், எனக்கு அந்த இனிய நினைவலைகள் தான் நினைவுக்கு வந்தது.

    பகிர்வுக்கு நன்றி. vgk

    ReplyDelete
  10. @ goma said...
    குற்றாலச் சாரலில் குளித்ததோடு திரும்பியிருக்கிறேன்
    இன்றுதான் பக்தி சாரலில் குளித்தாற்போல் உணர்கிறேன்

    பக்தி சாரலில் குளித்த கருத்துரைக்கு நிறைந்த நன்றி.

    ReplyDelete
  11. @ RAMVI said...
    குற்றாலம் என்றாலே உற்சாகம்தான்.
    படங்கள் அழகாக இருக்கு.அதிலும் மேலிருந்து மூன்றாவதாக உள்ள பெரிய அருவி படம்,பிரமாதம்.//

    உற்சாகமான கருத்துரைக்கு நிறைந்த நன்றி.

    ReplyDelete
  12. @
    வை.கோபாலகிருஷ்ணன் said...
    குற்றாலத்திற்கு குடும்பத்துடன் சென்று அருவியில் குளித்தது, அந்த சிவன் கோயிலுக்குச்சென்று ஹர ஹரா என்று கன்னத்தில் போட்டுக்கொண்டது, முழுப்பலாப்பழத்தை வாங்கி வேனில் வைத்ததுக்கொண்டது, மற்ற ஒரு சில இடங்களை மட்டும் போய்ப்பார்த்தது போன்ற சில ‘மலரும் நினைவுகள்’ மட்டும் நினைவுக்கு வருகிறது.//

    மலரும் நினைவுகளுக்கு மணக்கும் நன்றி.

    அருமையான சக்தி பீடமாயிற்றே!.
    கோவிலில் கூட்டமில்லை. நிறைய நேரம் கோவிலில் தங்கி நிறைய தகவல்கள் கேட்டு வியந்தேன்.

    ReplyDelete
  13. @ ஆர்.கே.சதீஷ்குமார் said...//

    அனைத்துக் கருத்துரைகளுக்கும் நிறைந்த நன்றி.

    குற்றாலக்குறவஞ்சி பாடல்கள் எளிமையும் கருத்துகள் நிரம்பிய இனிமை வாய்ந்தவை.

    ReplyDelete
  14. குற்றால அருவியில் நனைந்த
    சுகம். ஜூலை, ஆகஸ்ட்தான்
    சீசன் டைம். நல்ல பதிவு, படங்கள்.

    ReplyDelete
  15. குற்றாலத்துப் பொங்கல் விழாப் படம் சூப்பர் பாதி வாசித்தேன் மீதியை பின்நேரம் வாசிப்பேன் வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. @ வை.கோபாலகிருஷ்ணன் said...//

    //பாம்பு பாம்பு என்று கத்தியவாறு, ஒரு பரத நாட்டியமே ஆடி விட்டேன். அதைப்பார்த்த அனைவரும் ஓட்டம் பிடிக்க எங்களுக்கு செளகர்யமாக குளிக்க இடம் கிடைத்தது. நிம்மதியாகக் குளித்தோம். //

    காட்சி நகைசுவையாகவும் சமயோசிதமாகவும் யோசித்துச் செயல்படும் தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறது.
    சினிமா தியேட்டர்களிலும், பஸ்நிலையங்களிலும் ,இதே இல்லாத பாம்பை சொல்லி நிம்மதியாக டிக்கெட் எடுத்த கதை கேள்விப்படிருக்கிறேன்.

    ReplyDelete
  17. @ Chitra said...
    நேற்றுதான், ஊரில் எங்க உறவினர்கள் குற்றாலம் சென்று விட்டு வந்ததாக சொன்னார்கள். சும்மாவே மிஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். ம்ம்ம்ம்......//

    பரவாயில்லைங்க. பதிவைப்படித்தும், பார்த்தும் குற்றாலம் அருவியில் குளித்தமாதிரி நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.

    ReplyDelete
  18. @ SANKARALINGAM said...
    பதிவும், படங்களும், அத்ற்கான விளக்கங்களும் சூப்பர்.//

    உணவு உலகத்தின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  19. @ Lakshmi said...
    குற்றால அருவியில் நனைந்த
    சுகம். ஜூலை, ஆகஸ்ட்தான்
    சீசன் டைம். நல்ல பதிவு, படங்கள்.//

    கருத்துரைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  20. @ kovaikkavi said...
    குற்றாலத்துப் பொங்கல் விழாப் படம் சூப்பர் பாதி வாசித்தேன் மீதியை பின்நேரம் வாசிப்பேன் வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.//

    வாருங்கள் சகோதரி. நன்ற்.

    ReplyDelete
  21. ஆஹா.. சீசன் நேரத்துல ஞாபகப்படுத்தறீங்களே :-)))

    படங்களெல்லாம் இடுகைக்கு இன்னும் அழகைக் கூட்டிடுச்சு.

    ReplyDelete
  22. அமைதிச்சாரல் said...
    ஆஹா.. சீசன் நேரத்துல ஞாபகப்படுத்தறீங்களே :-)))

    படங்களெல்லாம் இடுகைக்கு இன்னும் அழகைக் கூட்டிடுச்சு//

    அமைதிச்சாரலின் அழகான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  23. இதோ ...மறு படியும் வந்துட்டேன் ....போராட்டத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் ...

    ReplyDelete
  24. @ koodal bala said...
    இதோ ...மறு படியும் வந்துட்டேன் ....போராட்டத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் ...//

    நியாயமான போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. குற்றால நாதரின் தரிசனமும்... குற்றால சாரலின் சிலிர்ப்பும்... படிக்கும் சமயம் மனதில் தோன்றியது... பகிர்விற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  26. குற்றாலக் காட்சிகளும்
    அதன் விவரங்களும்
    அழகு,
    குற்றாலக் கோயில்களின்
    விவரிப்பு அருமை
    சகோதரி.

    ReplyDelete
  27. படங்களும் பதிவும் அருமை
    குறிப்பாக குற்றாலச் சாரல்
    குளுமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. இங்கு மதுரையில் குற்றாலம் என்றாலே கொத்து பரோட்டாதான் நினைவிற்கு வருகிறது என்பார்கள். உண்மையில் அது எவ்வளவு சிறப்பான ஆன்மீக தலம். பகிர்விற்கு நன்றி தோழி.

    ReplyDelete
  29. குற்றாலம் என்றால் அருவி மட்டுமே நினைவுக்கு வரும் என் போன்றோர்க்கு அங்கிருக்கும் கோவில்கள் பற்றியும் எடுத்துச் சொன்னதற்கு நன்றி!

    ReplyDelete
  30. @ Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
    குற்றால நாதரின் தரிசனமும்... குற்றால சாரலின் சிலிர்ப்பும்... படிக்கும் சமயம் மனதில் தோன்றியது... பகிர்விற்கு மிக்க நன்றி...//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  31. @ மகேந்திரன் said...
    குற்றாலக் காட்சிகளும்
    அதன் விவரங்களும்
    அழகு,
    குற்றாலக் கோயில்களின்
    விவரிப்பு அருமை
    சகோதரி.//

    அழகான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  32. # Ramani said...
    படங்களும் பதிவும் அருமை
    குறிப்பாக குற்றாலச் சாரல்
    குளுமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்..//

    குளுமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  33. @ சாகம்பரி said...
    இங்கு மதுரையில் குற்றாலம் என்றாலே கொத்து பரோட்டாதான் நினைவிற்கு வருகிறது என்பார்கள். உண்மையில் அது எவ்வளவு சிறப்பான ஆன்மீக தலம். பகிர்விற்கு நன்றி தோழி./

    சிறப்பான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  34. @ சென்னை பித்தன் said...
    குற்றாலம் என்றால் அருவி மட்டுமே நினைவுக்கு வரும் என் போன்றோர்க்கு அங்கிருக்கும் கோவில்கள் பற்றியும் எடுத்துச் சொன்னதற்கு நன்றி!//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  35. ஆஹா, பொடிமணம் கமழ்ந்த இரண்டு அறிவிப்புப்பலகைகளையும் இப்படி அநியாயமாக நீக்கி விட்டீர்களே ! என்று வ.வ.ஸ்ரீ. அவர்கள் மிகவும் வருத்தப்படுவதாகக் கேள்வி. vgk

    ReplyDelete
  36. உள்ளம் நிறையும் பதிவு..

    ReplyDelete
  37. படங்களுடன் பதிவும் அற்புதம்.
    குற்றாலத்துக்கு இன்னும் போக முடியவில்லை. போக வேண்டும்.

    ReplyDelete
  38. @ வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆஹா, பொடிமணம் கமழ்ந்த இரண்டு அறிவிப்புப்பலகைகளையும் இப்படி அநியாயமாக நீக்கி விட்டீர்களே ! என்று வ.வ.ஸ்ரீ. அவர்கள் மிகவும் வருத்தப்படுவதாகக் கேள்வி. vgk//

    பொடி இனி போடவேண்டாம் என்று வ.வ.ஸ்ரீ. அவர்களிடம் எழுச்சியாக தெரிவித்துவிடுங்கள் ஐயா.

    சில அர்ச்சகர்கள் பொடி போட்ட கையோடு தரும் பிரசாதங்களை சுவீகரிப்பதற்கே சிரமமாக அல்லவா இருக்கிறது?

    ReplyDelete
  39. @ கோவை2தில்லி said...
    படங்களுடன் பதிவும் அற்புதம்.
    குற்றாலத்துக்கு இன்னும் போக முடியவில்லை. போக வேண்டும்.//

    சீக்கிரம் குடும்பத்தோடு குதூகலமாகச் சென்று ரசித்து வாருங்கள் . நன்றி.

    ReplyDelete
  40. @ DrPKandaswamyPhD said...
    ஆஜர்.//

    ஆஜர் கொடுத்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  41. குற்றாலத்தில் குளித்து சிவனை தரிசித்தது போல் இருக்கிறது தங்களது பதிவு... ஆன்மீக பொக்கிசமாக மெருகேரிக்கொண்டிருக்கிறது தங்களது பதிவுகள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  42. @ மாய உலகம் said...
    குற்றாலத்தில் குளித்து சிவனை தரிசித்தது போல் இருக்கிறது தங்களது பதிவு... ஆன்மீக பொக்கிசமாக மெருகேரிக்கொண்டிருக்கிறது தங்களது பதிவுகள் பாராட்டுக்கள்//

    மெருகேறிய தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  43. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    உள்ளம் நிறையும் பதிவு..//

    உள்ளம் நிறைந்த கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  44. சீசன் டைமில் இப்படி அழகழகான கலக்கல் அருவியின் போட்டோவுடன் கட்டுரை போட்டு ஆவலைத்தூண்டிவிட்டுவிட்டீர்களே .

    குற்றால நாதரைப்பற்றிய அரிய, புதிய தகவல் இது எனக்கு. இத்தனை நாட்களாய் குற்றாலத்துள் உறையும் இறைவனின் நுண்ணிய செய்திகள் தெரியாமல் போய்விட்டதே என்று எனக்கே வெட்கமாய் போய்விட்டது. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  45. குற்றாலம் பற்றிய பதிவுகளில் இவ்வளவு பக்தியை கலந்தவர்கள் யாருமில்லை.நன்று

    ReplyDelete
  46. @ கடம்பவன குயில் said...//

    கடம்பவன குயிலின் இனிய கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  47. @ shanmugavel said...
    குற்றாலம் பற்றிய பதிவுகளில் இவ்வளவு பக்தியை கலந்தவர்கள் யாருமில்லை.நன்று//

    பக்தியை ரசித்த கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  48. குற்றாலம்.... அருமையான இடம்....

    கோவில்கள் பற்றிய தகவல்கள் நன்று....

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  49. வணக்கங்களும், வாழ்த்துகளும்,

    ReplyDelete
  50. @வெங்கட் நாகராஜ் said...
    குற்றாலம்.... அருமையான இடம்....

    கோவில்கள் பற்றிய தகவல்கள் நன்று....

    பகிர்வுக்கு நன்றி.//

    அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  51. @ பாரத்... பாரதி... said...
    வணக்கங்களும், வாழ்த்துகளும்,/

    நன்றிகள்.

    ReplyDelete
  52. நல்ல பகிர்வு ..
    அறிந்து கொண்டேன் , குறித்து கொண்டேன் ..
    ஒருமுறை சென்று வரவேண்டும்

    ReplyDelete
  53. குட்ட்ராச்சாரலில் எங்கள் மனதை நனைத்து விட்டீர்கள்! நன்றி!

    ReplyDelete
  54. குற்றாலம் என்றாலே உற்சாகம்தான்...
    படங்கள் அழகாக இருக்கு...பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  55. @ அரசன் said...
    நல்ல பகிர்வு ..
    அறிந்து கொண்டேன் , குறித்து கொண்டேன் ..
    ஒருமுறை சென்று வரவேண்டும்/

    கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  56. @ Rathnavel said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  57. @ கோகுல் said...
    குட்ட்ராச்சாரலில் எங்கள் மனதை நனைத்து விட்டீர்கள்! நன்றி!/

    கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  58. @ ரெவெரி said...
    குற்றாலம் என்றாலே உற்சாகம்தான்...
    படங்கள் அழகாக இருக்கு...பகிர்வுக்கு நன்றி...//

    உற்சாகமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  59. குற்றாலம் என்றாலே உற்சாகம்தான்.
    படங்கள் அழகாக ......

    ReplyDelete
  60. குற்றால அருவியிலே குளித்துவிட்டோம்.

    ReplyDelete
  61. குற்றாலத்துக்கு நான்கைந்து முறை சென்றிருந்தாலும் முதன் முதலில் 1968-ல் நண்பர் ஒருவருடைய திருமணத்துக்குச் என் இரண்டாம் மகன் பிறந்து 60- நாள் கூட ஆகாதசமயம் குடும்பத்தோடு சென்றிருந்தது பசுமையாய் நினைவில் உள்ளது. படித்தபிறகுதான் தெரிகிறது, குற்றாலத்தின் இவ்வளவு பின்னணிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  62. G.M Balasubramaniam said...
    குற்றாலத்துக்கு நான்கைந்து முறை சென்றிருந்தாலும் முதன் முதலில் 1968-ல் நண்பர் ஒருவருடைய திருமணத்துக்குச் என் இரண்டாம் மகன் பிறந்து 60- நாள் கூட ஆகாதசமயம் குடும்பத்தோடு சென்றிருந்தது பசுமையாய் நினைவில் உள்ளது. படித்தபிறகுதான் தெரிகிறது, குற்றாலத்தின் இவ்வளவு பின்னணிகள். பாராட்டுக்கள்.//

    அருமையான மலரும் நினைவுகளுடன் கருத்துரைப் பகிர்விற்கும் பாராட்டுக்களுக்கும் நிறைந்த நன்றிகள்
    ஐயா.

    ReplyDelete
  63. போளூர் தயாநிதி said...
    குற்றாலம் என்றாலே உற்சாகம்தான்.
    படங்கள் அழகாக ......//

    உற்சாகமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  64. மாதேவி said...
    குற்றால அருவியிலே குளித்துவிட்டோம்.//

    உற்சாகமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  65. குற்றாலத்துக்கு சென்றிருந்தாலும் படித்தபிறகுதான் தெரிகிறது குற்றாலத்தின் இவ்வளவு பின்னணிகள்.உங்கள் எழுத்துக்கள் மிக அருமை வழ்த்துக்கள்

    ReplyDelete
  66. திருக்குற்றாலம் குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய சிறப்பான முதன்மையான பதிவு. குற்றாலத்திலேயே இருப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. நன்றி. வாழ்த்துக்கள். தாமிரசபை என்பது நெல்லை இராஜவல்லிபுரத்தையடுத்த "செப்பறையையே" குறிக்கும். இந்துக்கள் பலரே நெல்லையப்பர் கோவிலோடு நிறுத்திக்கொள்கின்றனர். "செப்பறை" தான் தாமிர சபை. அதைப்பற்றியும் எழுதுங்கள். நன்றி

    ReplyDelete
  67. 937+4+1=942 ;)))))

    ஆஹா, எல்லாவற்றிற்கும் இனிமையான பதில்கள். சந்தோஷம். மிக்க நன்றி.

    ReplyDelete