பயணங்களில் இனிமையானது ரயில் பயணம். அதிலும் மலைப்பாதைப்பயண அனுபவம் அலாதியான தனிச்சிறப்பு கொண்டது.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நீலகிரி மலை இரயில் பாதை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு அதன் பராமரிப்பிற்கு யுனெஸ்கோவின் உதவியையும் தென்னக இரயில்வே பெறுகிறது.
நமது நாட்டிலுள்ள புகழ்மிக்க கோடைச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிம்லாவிற்குச் செல்லும் கல்கா-சிம்லா இரயில் பாதை உலக பாரம்பரியச் சின்னமாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கோடைக்காலத் தலைநகராக சிம்லா இருந்தது. கல்காவிலிருந்து சிம்லாவி்ற்குச் செல்லும் 96 கி.மீ. இரயில் பாதையில் (இது ஒரு வழிப்பாதை) இன்று பல இரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால் கல்காவிலிருந்து சிம்லா செல்லும் இரயில் பாதையில் மலைகள்தான் உள்ளனவே தவிர, கண்ணி்ற்கு குளுமையான பசுமை இருக்காது. சிம்லாவை நெருங்கும்போது ஓரளவிற்கு அழகாக இருக்கும். எனவே ஊட்டிக்குச் செல்லும் நான்கரை மணி நேர மலை இரயில் பயணத்திற்கும் கல்கா - சிம்லா இரயில் (கோடைக் கால) பயணத்திற்கும் இடையே வேறுபாடு அதிகம்.
ஒரு ருசியான பயண அனுபவத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். கல்காவிற்கும், சிம்லாவிற்கும் நடுவில் உள்ள 103 சுரங்கங்கள் வழியாக இந்த இரயில் செல்கிறது. இதில் ஒரு சுரங்கத்தைக் (பரோக்) கடக்க 3 நிமிடங்கள் ஆகும்.
அதிகாலை இரயிலில் சிம்லா செல்பவர்கள் பரோக் (காலை உணவிற்காக நிறுத்தப்படும்) இரயில் நிலையத்தில் கிடைக்கும் கட்லட் - சூடான, மிகச் சுவையான உணவு - குறிப்பிடத்தக்கது. இதுதான் கட்லட் என்றால் நாம் இங்கெல்லாம் அந்தப் பெயரில் சாப்பிடுவது என்னவென்று கேட்கத் தோன்றும். அப்படியொரு ருசி. மூன்று கட்லட்டை விழுங்கிவிட்டு காஃபி அருந்தினால் போதுமானது. இப்பயணத்தில் கட்லட் முக்கிய அங்கம்.
இந்த இரு மலைப்பாதை ரயில் பயணங்களும் மறக்கமுடியாதவை!
ரயிலோ குயிலோ மயிலோ தங்கள் கை வண்ணத்தில் அவை அழகோ அழகு தான்.
ReplyDeleteஅனைத்துப்படங்களும் அழகோ அழகாக உள்ளன.
ReplyDeleteபல்சக்கரங்கள் நகர்வது அருமையோ அருமை தான்.
//நமது நாட்டிலுள்ள புகழ்மிக்க கோடைச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிம்லாவிற்குச் செல்லும் கல்கா-சிம்லா இரயில் பாதை உலக பாரம்பரியச் சின்னமாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அறிவித்துள்ளது.//
மிகவும் மகிழ்வளிக்கும் செய்தி.
//ஒரு ருசியான பயண அனுபவத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். கல்காவிற்கும், சிம்லாவிற்கும் நடுவில் உள்ள 103 சுரங்கங்கள் வழியாக இந்த இரயில் செல்கிறது. இதில் ஒரு சுரங்கத்தைக் (பரோக்) கடக்க 3 நிமிடங்கள் ஆகும்//
ReplyDeleteஆஹா; நல்லதொரு ஆச்சர்யமான தகவல்.
புனேயிலிருந்து மும்பை செல்லும் போது ஒரு சில குகைப்பாதைகள் வரும். ஒரே இருட்டாகிப்போகும். அதுவே ஆச்சர்யமாக இருந்தது எனக்கு.
//அதிகாலை இரயிலில் சிம்லா செல்பவர்கள் பரோக் (காலை உணவிற்காக நிறுத்தப்படும்) இரயில் நிலையத்தில் கிடைக்கும் கட்லட் - சூடான, மிகச் சுவையான உணவு - குறிப்பிடத்தக்கது. இதுதான் கட்லட் என்றால் நாம் இங்கெல்லாம் அந்தப் பெயரில் சாப்பிடுவது என்னவென்று கேட்கத் தோன்றும். அப்படியொரு ருசி. மூன்று கட்லட்டை விழுங்கிவிட்டு காஃபி அருந்தினால் போதுமானது. இப்பயணத்தில் கட்லட் முக்கிய அங்கம்.//
ReplyDeleteகாலை எழுந்தவுடன் எல்லோருக்கும் பசியைக் கிளப்பிவிட்டுட்டீங்களே! இது நியாயமா!!
//இந்த இரு மலைப்பாதை ரயில் பயணங்களும் மறக்கமுடியாதவை!//
ReplyDeleteஉங்களுடனேயே நாங்களும் இன்று ரயிலில் பயணித்து மகிழ்ந்தோம். கூடவே கூட்டிச்சென்று, மகிழ்வித்தத்ற்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தொடரட்டும் பயணங்கள்!
அன்புடன் vgk
அழகு...
ReplyDeleteஒவ்வொரு பதிவுலும் உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது!
ReplyDeleteகல்கா எங்கே இருக்குனு சொல்லியிருக்கலாமே? :)
படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு..
ReplyDeleteபகிர்வுக்கு நன்று..
படங்களும் பதிவும் மிக மிக அருமை
ReplyDeleteதொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
This comment has been removed by the author.
ReplyDelete@ வை.கோபாலகிருஷ்ணன் said.../
ReplyDeleteதங்களின் அனைத்து கருத்துரைகளும் நிறைவாக மகிழ்ச்சி அளித்தன. மிக்க நன்றி ஐயா.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஅழகு.../
நன்றி.
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteபடங்கள் அனைத்தும் கொள்ளை அழகு..
பகிர்வுக்கு நன்று../
கருத்துரைக்கு மிக்க நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteRamani said...
ReplyDeleteபடங்களும் பதிவும் மிக மிக அருமை
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்/
தொடர்ந்து வாழ்த்துக்களை அளித்து உற்சாகப்படுத்தும் பணிக்கு நன்றி ஐயா.
கூ கூ என்று ரயில் கூவாதோ... ஆஹா..ரயில் படங்கள் அருமை...வாழ்த்துக்கள்
ReplyDeleteசிம்லா கட்லெட் சாப்பிட ஆசை வந்துருச்சு
ReplyDeleteஓட்டி ரயில் பயண அனுபவம் அனுபவிக்க ஆசை.ஆனால் புக்கிங் ஆகிடுமாமே..நிறைய ரயில் அரசு விட்டா நல்லது
ReplyDeleteதொடர் ஊர்ந்து பயண அனுபவம் படங்கள் ரசிக்கவைக்கின்றன.
ReplyDeleteபல பயணங்கள் யாபகம் வருகின்றன
கப்பலுக்கு அடுத்து
ReplyDeleteஇப்போ இரயிலா ?
இரயில் பயன்ம ஒரு சுகமான அனுபவம் தான்...
ஓடும் இரயிலில் சாளரம் வழியாக
இயற்கையை அதுவும் ஓடும் இயற்கையை ரசிப்பது
கண்கொள்ளாக் காட்சிதான்....
ரசித்தேன்.
ReplyDeleteநல்ல அழகான பயண பதிவு
ReplyDeleteசூடான கட்லெட்டுடன் சுவையான மலை ரெயில் பயணம்.அருமை.
ReplyDeleteபடங்கள் மனதை கவரும் வண்ணமாக இருப்பது அதைவிட அருமை.
சிம்லா (ஒரு வேளை) சென்றால் உங்கள் ஞாபகமும் கட்லெட் ஞாபகமும் கண்டிப்பாக வரும். ஹ்ம்ம்..புதிய விஷயங்கள்.
ReplyDeleteரயில்கள் அழகு... பயணம் போலவே :-))
ReplyDeleteஇதுவரை ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்தது இல்லை. அதே போல குகைக்குள்ளும் ரயிலில் போனதில்லை. கூடிய விரைவில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
ReplyDeleteஇதுபோல அருமையான ரயில் பயணங்கள் படங்களில் தான் காணக்கிடைக்கின்ரன,
ReplyDeleteதகவல்களின் தொகுப்பாக இருக்கிறது. அரிய விஷயங்களைத் தொகுத்துள்ளீர்கள்..
ReplyDeleteதகவல்களின் தொகுப்பாக இருக்கிறது. அரிய விஷயங்களைத் தொகுத்துள்ளீர்கள்..
ReplyDeleteபடங்கள் அருமை...வாழ்த்துக்கள்...
ReplyDeleteமலைப்பாதை ரயிலில் பயணம் செய்ததில்லை.
ReplyDeleteஇந்த பதிவு ஆசையை தூண்டுகிறது.
படங்கள் அனைத்தும் அருமை.
சென்னை- தில்லி பயணத்தில் ஏழு குகைகள் வரும்.
நான் ரயிலில் பயணம் செய்ய அதிக வாய்ப்பு கிடைத்ததில்லை.இனி ரயிலில் தான் பயணம் செய்ய வேண்டுமென தூண்டுகிறது உங்கள் பதிவு!
ReplyDeleteகுளிர்வான பகிர்வு!
ReplyDeleteஎப்போதும் பார்க்க அலுக்காத விஷயங்கள்,ரயில்,யானை......அப்புறம் உங்கள் வலைப்பதிவு.
ReplyDeleteநல்ல பகிர்வு. படங்களும் அருமை.
ReplyDeleteஒரு விஷயம்.... கல்கா-ஷிம்லா இரயில் பாதையில் வரும் கல்கா, ஹரியானா மாநிலம் பன்ச்குலா மாநிலத்தில் மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு இடம். ஷிம்லா செல்லும் ரயில் இந்த இடத்தில் இருந்து தான் கிளம்புகிறது.
தில்லியில் இருக்கும் கல்காஜிக்கும் இந்த இரயிலுக்கும் சம்பந்தம் இல்லை...
@ வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநல்ல பகிர்வு. படங்களும் அருமை.
ஒரு விஷயம்.... கல்கா-ஷிம்லா இரயில் பாதையில் வரும் கல்கா, ஹரியானா மாநிலம் பன்ச்குலா மாநிலத்தில் மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு இடம். ஷிம்லா செல்லும் ரயில் இந்த இடத்தில் இருந்து தான் கிளம்புகிறது.
தில்லியில் இருக்கும் கல்காஜிக்கும் இந்த இரயிலுக்கும் சம்பந்தம் இல்லை...//
மிக்க நன்றி.
உங்கள் பதிவுகள் இப்போது வித்தியாசமான தடத்தில்.
ReplyDeleteஅருமையான படங்கள்.
அருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு...
ReplyDeleteஹைய்யோ!!!!!!!!
ReplyDeleteஅட்டகாஸமா இருக்கு படங்கள் எல்லாம்!!!!
@ அப்பாதுரை,
ReplyDeleteசண்டிகர் நகரில் இருந்து 28 கிமீதூரத்தில் கல்கா இருக்கிறது.
இங்கே ஒரு காளி கோவில் ரொம்ப ஃபேமஸ். சக்தி பீடம்.
அருமையான் அனிமேஷன் படங்கள், விளக்கங்கள்
ReplyDelete1051+6+1=1058 ;)
ReplyDeleteஏதோ ஒரு குட்டியூண்டு பதிலுக்கு நன்றிகள்.
ரசிக்கவைக்கும் ரயில்பயணங்கள்... படங்களும் தகவல்களும் சிறப்பு. பாராட்டுகள் மேடம்.
ReplyDelete