Saturday, October 29, 2011

ஞானப் பேரொளி.


[m1.jpg]

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், – வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் 
குன்றும் துளைத்த வேல் உண்டே துணை. – 
காலத்தால் முந்திய முந்து தமிழ் மாலை திருமுருகாற்றுப்படை. சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை
அருவமும் உருவுமாகி அநாதியாய்ப்பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாக
கருணைகூர் முகங்களாறும் கொண்டேஒரு 
திருமுருகன் வந்தாங்கு உதித்தனன்உலகம் உய்ய.
- கந்தபுராணம் -

வந்த வினையும் வருகின்ற வினையும் கந்தா என்றிடக் கரைந்திடும்' என்பர். அத்தகைய கந்தப் பெருமான் நிகழ்த்திய அருளாடல்களில் முக்கிய மான ஒன்று செந்தூரில் நிகழ்ந்த சூர சம்ஹார நிகழ்ச்சி.
[skottam2.JPG]
சூர சம்ஹாரம்... அசுரரை வென்று தேவரைக் காத்த நன்னாள். 
எம்பெருமான் வேலவனின் அவதார நோக்கம் நிறைவேறிய திருநாள்.  
முருகன் சூரபதுமனை வென்ற பொன்னாள். 
அள்ள அள்ளக் குறையாத கந்தனருள் கொண்டு இன்பம் கண்ட நாள்..

ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி “என்கிறார் நக்கீரனார். 
எல்லை என்று ஏதுமற்று நீக்கமற எங்கும் நிறைந்து ஒளிர்கின்ற கதிரவனை விஞ்சிய ஒளி. காலத்தின் ஓட்டமோ ஞாலத்தின் தூரமோ கட்டுப்படுத்த இயலாத நெடுந்தொலைவுக்கு வீசிவரும் ஞானப் பேரொளி. அத்தகு பெருமை கொண்ட முருகனின் திருக்கைவேல் கடுந்துன்பங்களை எல்லாம் எளிதில் தீர்க்கும்.

மூட இருளை முற்றிலும் அழித்து அறிவுச்சுடர் பிரகாசிக்க வழிசெய்த ஞானத்திருவொளியின் அருந் தகமையைக் கொண்டாடுவது சூர சம்ஹார விழா

எங்கும் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா! செந்திலாண்டவனுக்கு அரோகரா!' என்னும் கோஷம் விண்ணை முட்டுகிறது.
"காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட'
என்று கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து, கந்தப் பெருமானை மனதில் இருத்தி ஆறு நாட்கள் விரதம் இருந்த லட்சக்கணக் கான பக்தர்கள், சூர வதத்திற்குப்பின் கடலில் மூழ்கி தங்கள் விரதத்தை முடிக்கின்றனர்.

இறையனாரின் அம்சமாய்ப் போற்றப்படும் ஆதிசங்கர பகவத் பாதர் ஷண்மதங்களை நிறுவிச் சநாதன தர்மம் ஓங்கச்செய்த சங்கரர் துன்புற்றிருக்கையில்..சீரலைவாய் சென்று சிவக்குமரனை வழிபட்டால் சீக்கிரம் தீரும் சீக்கு” என்று அசரீரி ஒலித்தது

சங்கரர் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை இயற்றிக் கந்தனை வேண்டினார். ஆதிமதம் தழைக்க அயராது உழைக்கும் தமக்கு வந்த அல்லல்களை நீக்கி அருள்புரியப் பிரார்த்தித்தார். 33 சுலோகங்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்கத்தைப் பாடிவர 25ஆவது சுலோகத்தினைப் பாடியதும் பிடித்த பிணிகளும் பீடித்த பிசாசப் பீடைகளும் நீங்கி நலம் பெற்றார்.

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே

இந்தச் சுலோகத்தைப்ப் படிக்கும் யாருக்கும் இது போன்ற பிணிகளோ பீடைளோ அண்டாது என்பது பகவத் பாதர் வாக்கு.

அறியாமை மிகுந்த மனத்தின் தீச்செயல்களால் விளையும்
அல்லல்களை அகற்றுவான் கந்தன் ...
சக்தி வடிவேலுடன் தத்தும் மயிலேறிடும் சரவணபவன்..
[ks19.jpg]
சூரனைக்கடிந்த கதிர்வேலன்..வெற்றிக்களிப்பில் ஜெயந்திநாதர்
[ks20.jpg]
பேசாத குருபரரைப் பேச வைத்துப் பைந்தமிழ்ப் புலவராக்கிப், பின் அவரைப் பன்மொழி வித்தகராக்கி அழகு பார்த்தவன் சீரலைவாய்க் கந்தபிரான். 

அறியாமையின் ஒரு பிரிவாம் கோபம் கொண்டு அவர் தந்தை ஒரு சான்றோரை அவமதிக்க, அதுவொற்றி மகர்க்கு வந்த பேசாப்பிணியை நீக்கியதோடு நில்லாமல் காசி நகர்ப்புலவரால் இயலாத பெருஞ்செயல்கள் புரிய வைத்தான். 

குருவுக்கெல்லாம் குருவான சிவனுக்கே உரைத்த 
நல்லாசான் உயர்வன்றி வேறென்ன தருவான்?

உள்ளம் ஒன்றிக் கந்தனை வேண்டி பிரார்த்திப்போம்.
அறியாமை நீங்கி அகம் தெளிந்தோர் ஆவோம்.
திருக்கல்யாண கோலத்தில் எழில் குமரன் தேவியருடன்
[ks23.jpg]

22 comments:

  1. ஞானப்பேரொளியின் அழகு கண்களையும், மனதையும் கட்டிப்போட்டு மயங்க வைப்பதாக உள்ளது.

    அதிக சந்தோஷம் அளிக்கும் அற்புதமான பதிவு. நன்றிகள். vgk

    ReplyDelete
  2. முருகப்பெருமானின் போர்க்கோலக் காட்சியை
    அழகாய் விவரித்திருக்கிறீர்கள்.
    முருகனருள் மணக்கிறது.

    ReplyDelete
  3. சஷ்டிக்கான சிறப்புப்பதிவா?

    ReplyDelete
  4. வெற்றிவேல் வீர வேல். கந்த சஷ்டியை முன்னிட்டு பகிர்ந்த பதிவு அருமை

    ReplyDelete
  5. முருகப்பெருமானைப் பற்றிய அருமையானதொரு ஆன்மீக பகிர்வு.. நன்றி.. நன்றி... மறுபடியும் வந்து படிக்க வேண்டும்...

    ReplyDelete
  6. கந்த ஷஷ்டிக்கு ஒரு கருத்தான பதிவு !

    ReplyDelete
  7. ஒவ்வொரு படமும் அவ்வளவு அழகு!நன்றி.

    ReplyDelete
  8. முருகனைப் பற்றிய பதிவும் அவனைப் போலவே அழகு!

    ReplyDelete
  9. படங்களில் வைத்த கண்களும் பதிவில் வைத்த மனமும் மீண்டு வர மறுக்கிறது.அருமை..

    ReplyDelete
  10. வழக்கம் போல அசத்தல் படங்களுடன் ஒரு ஆன்மீகப் பதிவு..
    நன்றி சகோ...

    ReplyDelete
  11. படங்கள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
  12. மனதைக்கவர்ந்தது.படங்களை பார்க்க அவ்வளவு சந்தோஷம்.

    ReplyDelete
  13. மூன்றாம் நாளும் முருகப் பெருமான் தரிசனம்... நன்றி..

    ReplyDelete
  14. அழகிய படங்களுடன் அருமையான தரிசனம்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  15. ஒவ்வொரு பதிவிலும் உள்ள படங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது.

    ReplyDelete
  16. அதி அற்புதமாக மிகவும் சிரத்தை எடுத்து செய்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. "மயில் நடமிடுமோர் மலரடி சரணம்" என்று நெஞ்சுருக சொல்ல வைக்கும் அழகான படங்களுக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கள்!

    இப்படிக்கு,
    முருகனடிமை

    ReplyDelete
  18. சஷ்டிக்கான சிறப்புப்பதிவு
    மிக மிக அருமை
    படங்களும் விளக்கமும் அதி அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  20. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
    இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
    ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

    இங்கே சொடுக்கவும்


    ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
    அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    ReplyDelete