Wednesday, November 30, 2011

வேதம் ஓதும் கிளி:


வேதம் ஓதும் கிளி:

parrots
LATO SUMMER  ANIMATED BIRD

Parrots Photos Parrot Pictures Birds
முருகன் என்னும் ஒரு அழகன்அவன் பழகும் அழகில் மிக இனியன்
தந்தை நுதல் தந்த கனல் தன்னில்  
மணம் வீசும் மலராய் அவன்
உதித்தான் இதழ் விரித்தான் சிரித்தான் அவன் மணத்தான்
சரவணப் பொய்கையில் பிறந்தான்
முருகன் பிறக்க காரணமான, அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது. 

 பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறைபோக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது. 

அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. 

முருகன் பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது.

 தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது. 

கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.


  கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை.  திருமணத்தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் புண்ணிய நதிகளின் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.


வேதம் ஓதும் கிளி: மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ் தானம்பிகையின் கையில் கிளி இருக்கிறது. 

இதற்கு வேதாமிர்த் கீரம் என்று பெயர். மற்ற கரங்களில் நீலோத்பவ மலர், சங்கு, சக்கரம் வைத்திருக்கிறாள். சிவனே வேத சக்தியாக கிளி வடிவில் அம்மனின் இடதுதோளில் அமர்ந்திருப்பது சிறப்பு. 
இது வேதமோதும் கிளியாகும். 


 துங்கபாலஸ் தானம்பிகை அம்மனை வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்தக் கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். 

மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் இரவு சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

கோயில் பிரகாரத்தில் செல்வ விநாயகர், நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், மேதா தட்சிணாமூர்த்தி, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. 

மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. 

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வள்ளலார் கோயில், திருஇந்தளூர், பல்லவனீஸ்வரர் ஆகிய கோயில்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் பிடிப்புடன் திகழ்வர். கலைகளை ஆர்வமுடன் கற்கும் சுபாவமிருக்கும். மனதில் மென்மை குடி கொண்டிருக்கும். பெண்களிடம் நட்புடன் பழகும் இயல்பைப் பெற்றிருப்பர். கல்வியில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்குத் தேவையான தகுதிகள் யாவும் இவர்களிடம் இருக்கும்.

சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். 63 நாயன்மார்களில் மானக்ஞ்சார நாயனார் இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்தி அடைந்துள்ளார். 

இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

திறக்கும் நேரம் : காலை 10 - 11 மணி,  மாலை 4 - 5 மணி


மனம் கவர்ந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்..
madurai meenakshi amman in navaratri.


[Madurai+Meenakshi.jpg]

Some beautiful carvings(painted)
Madurai Meenakshi Sundareswarar Temple

--
Kind Regards,

RajaRajeshwari Jaghamani

Tuesday, November 29, 2011

ஞானச்சுடர் விளக்கு







அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

-என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்




தேவாரம் போற்றும் திருவண்ணாமலை... ஊரை நெருங்கும்போதே, விண் தொட்டுத் தெரிகிறது அண்ணாமலையாம் அருணாசலம்!

அருணகிரி, அருணாசலம், சோணாசலம், சோணகிரி, முக்திகிரி, தென்சிவகிரி, சிவலோககிரி, சோணாத்ரி, அருணாத்ரி என்றெல்லாம் அழைக்கப்படுகிற அழகான மலை.

ஆமைப் பாறை, மயிலாடும் பாறை, வழுக்குப் பாறை முதலான மலையும் சுனைகளோடும் இயற்கை கொஞ்சித்தவழும் எழில் மலை!
Arunachaleswarar Temple, Tiruvannamalai - Tiruvannamalai, Tamil Nadu

'அடிக்கொரு லிங்கம், அடித் துகள் பட்ட இடமெல்லாம் கோடி கோடி லிங்கங்கள்' என்று பெரியோர்களால் போற்றப்படும் தலம்.

கரும்பாறை மலையாகக் கண்ணுக்குப் புலப்பட்டு, காந்த மலையாக
இருந்து மகான்கள் பலரையும் ஈர்த்துக் கொள்ளும் தலம்.
ஞானியர் இல்லம், சித்தர்களின் சரணாலயம் எனும்
அடைமொழிகளுக்கு விளக்கமாகத் திகழும் விந்தைத் தலம்.

ஊரே சக்கர வடிவில் இருப்பதாலும், அதன் ஒன்பது கோணங்கள் ஒளிர்வதாலும், 'நவ துவார புரி' என்றழைக்கப்படும் தலம்.
வேதங்களால் 'ஞானாக்கினி' என விவரிக்கப்படும் தலம்.
தமிழர்தம் திருநாட்களிலேயே பழைமை மிக்கதான கார்த்திகை தீபத் 
திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பெறும் தலம்.
Sri Arunachaleswarar
மாசி சிவராத்திரியும், கார்த்திகை திருக்கார்த்திகையும், 
மார்கழித் திருவாதிரையும் தோன்றுவதற்குக் காரணமான தலம்.


ஆறுமுகப் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு, சந்தக் கவிகளால் முருகனைச் சொந்தமாகப் பாடிய அருணகிரிநாதரின் பிறப்புத் தலம்.

வியாசர் தொடங்கி துர்வாசர் தொடர்ந்து அகத்தி யரும் இடைக்காடரும் 
குகை நமசிவாயரும் குரு நமசிவா யரும் தவமியற்றிய தலம்.
காட்சிக்கு இனிய மலை, 
கண்டார் துயர் தீர்க்கு மலை, 
முந்தைப் பழவினைகள் முடிவுறச் செய்யும் மலை, 
எத்திசையும் தோற்று மலை, 
முக்திக்கு ஒரு மலை, 
நெஞ்சை இளக்கும் மலை, 
நெஞ்சத்துள் பேரின்பம் வளர்க்கும் மலை, 
தாயாய் சற்குருவாய் நின்ற மலை என்றெல்லாம் குரு நமசிவாயர் இந்த மலையைப் போற்றுகிறார்.
 
குன்றக்குடி ஆதீனம் தோன்றிய தலம்.
வனவாச காலத்தில் பாண்டவர்கள் தவம் செய்த தலம்.

சூர சம்ஹாரம் செய்யப் போகும் வழியில், அண்ணாமலையாரிடம்
முருகப் பெருமான் அருள்பெற்ற தலம்.

மங்கைபாகனாரான சிவபெருமான், மலையாக இருந்து, ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒவ்வொரு வகையாகக் காட்சி தந்து அருள் வழங்கும் தலம்.
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக, சொல்லச் சொல்லத் திகட்டாத சுகமாக, எண்ண எண்ணக் குன்றாத ஏற்றமாக, திருவண்ணாமலையின் சிறப்புகள் தொடர்கின்றன.
ஒரே மலையில் நிறைய சிகரங்கள். எனவே, ஒவ்வொரு திசையிலிருந்தும் இடத்திலிருந்தும் பார்த்தால், ஒவ்வொருவிதமாகத் தோற்றம் தரும் இந்த மலை,

இறைவனும் ஒவ்வொருவர் பார்வைக்கு ஒவ்வொரு விதமாகவும்,
ஏகன் அநேகனாகவும் தோற்றம் தருபவர்தாம் எனும் தத்துவத்தை
விளங்க வைக்கிறது.
அண்ணுதல் என்றால் அணுகுதல் என்று பொருள்;

தேடியவர் அணுக முடியாத மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர்.

ஆனாலும் வேடிக்கை! ஆணவத்தால் தேடியபோது அடியோ முடியோ கிட்டவில்லை; 

ஆயின், அன்புடன் பக்தர்கள் தேடினால், அடியையும் முடியையும் காணலாம் என்று அத்தாட்சியாக நிற்கிறது மலை.!!!!!
அருணம், சோணம் என்ற சொற்கள் செம்மை நிறத்தைக் குறிப்பவை;
சிவந்த மலை என்பதால் சோணாசலம், அருணாசலம்!

மலையே சுயம்பு. இறைவனாரே மலையாக உருவெடுத்ததால், இந்தத் தலத்தில் மலை வழிபாடு பிரதானம். மலை சுற்றுவதும் மலையை வழிபடுவதும் தவறாமல் செய்யப்படுகின்றன.
அது சரி... மலையை வழிபடலாம்; ஆனால் அபிஷேகம் ஆராதனை செய்வதென்றால்... மலைக்கு எப்படிச் செய்வது?

பார்த்தார் பரமனார்! பக்தர்களுக்காகத்தானே அவர் வடிவம் எடுக்கிறார்!

சிறிய மனங்களுக்குப் புரிவதற்காக சிறிய வடிவில்
மலையடிவாரத்தில் கோயில் கொண்டுவிட்டார்.

உலக வாழ்க்கை முறையில், திருவண்ணாமலைக்கு
முக்கியமான இடம் உண்டு.
பஞ்ச பூதங்களில், ஆகாயமும் காற்றும் சாதாரண மனிதக் கண்களுக்குப் புலப்படாதவை.

அந்த வகையில் கண்களுக்குப் புலனாகும் முதல் நிலை, அக்னியான நெருப்புக்கு மட்டுமே உண்டு.

அருவமாக, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த ஆண்டவன், சராசரி மனிதக் கண்களுக்குப் புலனாவதற்காக எடுத்த முதல் நிலை, அக்னி நிலை.

அதுவே திருவண்ணாமலை என்பதால் இந்த முக்கியத்துவம்!

அக்னியாக இருந்தால் கண்ணுக்குப் புலப்படும்; ஆனாலும், அருகில் நெருங்க முடியுமா? தகித்துப் போய்விட மாட்டோமா? 

ஆதலால், ஆண்டவன் குளிர்ந்தார்; குவலயம் காக்கத் 
தாமே கல்லாகிப் போனார்.


நெருப்புப் பிழம்பு மெள்ளக் குளிர்ந்தது; மலையாக உருவெடுத்தது. 
அதுவே திருவண்ணா மலை ஆனது.

ஆணவத்தால் தேடினால் கிடைக்காத ஆண்டவன், அன்பால் தேடினால் கிடைப்பார் என்பதால்தான், அடிமுடி கதை நடந்த அதே இடத்தில், பிற்காலத்தில் பற்பல ஞானியர் வந்து ஆண்டவனின் அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.

மலையைச் சுற்றி வரும்போது. கிழக்குப் பகுதியி லிருந்து பார்த்தால், மலை ஒற்றையாகத் தெரியும். ஏக லிங்கமாக, ஒன்றே கடவுள் என்பதை உணர்த்தும்.

சற்று தூரம் சென்ற பின்பு பார்த்தால், இரண்டாகத் தெரியும். ஆணாகவும் பெண்ணாகவும் உலகை இயங்க வைக்கும் அர்த்தநாரீஸ்வரர்.

மேற்கு திசையிலிருந்து நோக்கினால், மூன்று சிகரங்களைக் காணலாம். மும்மூர்த்திகளின் திருவிளையாட்டுதானே திருவண்ணாமலை! மூன்றாகப் பிரிந்து உலகை நடத்தும் மும்மூர்த்திகளுக்கிடையே போட்டியாவது பொறாமையாவது?! நமக்குப் புரியவைக்க அவர்கள் அப்படியரு ஆட்டம் ஆடினால்தானே உண்டு. 

இன்னும் இன்னும் நடந்து மலையைத் திரும்பிப் பார்த்தால், இப்போது ஐந்து கூம்புகள்... ஆமாம், இறைவனாரின் பஞ்சமுக தத்துவம்... பஞ்ச பூதப் பெருமை.
அண்ணாமலை மலையும் சரி, லிங்கமும் சரி, 250 கோடி ஆண்டுகள் பழைமையானவை என்று கணிக்கப்பட்டுள்ளன (அடேயப்பா! இமயத்தின் தொன்மை எவ்வளவு தெரியுமா? 5 கோடி ஆண்டுகள். அப்படியானால், திருவண்ணாமலை, முன்னைப் பழைமைக்கும் பழைமையானது!).
அண்ணாமலையார் அக்கினிப் பிழம்பு; அதே போன்று மகனான முருகனும் அக்கினிப் பிழம்பு. அவர் தந்தையார்... ஆகவே மூத்தவர்; இவர் மகனார்... ஆதலால், இளையனார். முருகப் பெருமான் சந்நிதிதான் கம்பத்து இளையனார் சந்நிதி என்பது!

 
திருவண்ணாமலையில் அரசவையின் ஆஸ்தான புலவராக விளங்கிய சம்பந்தாண்டான் பொறாமை கொண்டு, அருணகிரியாரை எப்படியேனும் மட்டம் தட்டவேண்டும் என்று . அரசராக இருந்த பிரபுட தேவ மகாராஜாவிடம்  அருணகிரியாரை முடியுமானால் முருகனை வரவழைக்கச் சொல்லுங்கள் என்று தூண்டி விட்டார்.

அருணகிரிநாதர் மயிலை வேண்டிப் பாடினார்; மயில் முருகனை வேண்ட, ஆடும் மயில் மீது ஆடிக்கொண்டே ஆறுமுகனும் காட்சி கொடுத்தார். அதுவும் கம்பத்தில் வந்து காட்சி கொடுத்தார். அந்தக் கம்பமே கருவறையாக அமைந்த சந்நிதியே, கம்பத்தில் இளையனார் தோன்றிய கம்பத்து இளையனார் சந்நிதி.

அதல சேடனார் ஆட அகில மேரு மீதாட
அபினகாளி தானாட அவளோடு அன்(று)
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட
அருகு பூத வேதாளம் அவையாட
மதுர வாணி தானாட மலரில் வேதனார் ஆட
மருவு வானுளோர் ஆட மதியாட
வனச மாமியாராட நெடிய மாமனார் ஆட
மயிலுமாடி நீயாடி வரவேணும்  

இதுதான் அருணகிரியார் மயிலை வேண்டிப் பாடிய திருப்புகழ்.
 அருணகிரிநாதர் கிளியாக மாறி, பாரிஜாத மலருடன் திரும்பி வந்தபோது, தன் பூத உடல் இல்லாததைக் கண்டு, கிளி உருவிலேயே `கந்தர் அனுபூதி' பாடிய கிளிக் கோபுரம் அமைந்திருப்பதும் இங்கேதான். 
அண்ணாந்து பார்த்தாலே அண்ணாமலையில் ஆயிரம் கதைகள்!

ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம் மூன்றையும்தான் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.

அதிகாலையில் நான்கு மணிக்கே திருவண்ணாமலைக் கோயிலில் பரணி தீப தரிசனம் காட்டப்படும். அண்ணாமலையின் திருச்சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டு, அந்த தீபம் கோயிலிலுள்ள பிற தேவதைகளின் சன்னதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தச் சன்னதிகளில் ஏற்றப்படும். பின்னர் அந்த எல்லா தீபங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்படும். "ஒரே பரம்பொருள் பலவாய்த் தோன்றி மீண்டும் ஒன்றாகிறது" எனும் தத்துவத்தை இந்நிகழ்ச்சி விளக்குகிறது. 

தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது இன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கார்த்திகை தீபக் காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் ” என்றார் பொங்கையாழ்வார்

காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.

முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக ‘பரணி தீபம்’ கொண்டாடப்படுகிறது.

வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் ‘நமசிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.

ருக்வேகத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னி பகவான் முக்கிய இடம் பெறுகிறார்.

கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்

நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி…
என்று கார்நாற்பது கூறுகிறது.
நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது பொருள்.
இறைவன் சந்நதியில் ஏற்றப்படும் தீப ஒளியின் மகிமையை மகாபலி சக்கரவர்த்தியின் கதை மூலம் அறியலாம்.

முற்பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தான். தான் அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்ததன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று.

அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது.

இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.

அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.
தை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் சந்நிதியில் ‘மகரஜோதி’ தரிசனம் கேரளத்தில் மிகவும் பிரசித்தம்.

தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால் சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.

‘சொக்கப்பானையை வணங்குவது சொக்கப்பனையாகும்’. சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆகும்.

தொல்காப்பியம் ‘வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்’ என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.

கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழா கும்.
பிறவிப் பிணி தீர வாழ்வில் எல்லா நலன்களும் பெற, கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று தொழுது, முற்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கி நன்மை அடைவோம்.

கயமுகாசுரனைக் கொன்று, அவன் குருதியைத் தன் உடலில் பூசிக்கொண்ட செந்தூர விநாயகர், அமுதப்பாலை ஊட்டும் தாயாக, அருளை வழங்கும் அன்னையாகக் காட்சி தரும் அபீத குசலாம்பாள் என்னும் உண்ணாமுலையம்மை.

முருகன் காட்சி தந்த கம்பத்திளையனார் சன்னதி, ரமணர் தவமிருந்த பாதாளலிங்கேஸ்வரர் சன்னதி, தலபுராணத்தைச் சொல்லும் லிங்கோத்பவர் சன்னதி என்று, பார்த்துப் பார்த்துப் பரவசப்பட இங்கே ஏராளமான கடவுள் தரிசனம்.

எல்லாவற்றிலும் மேலாக, கருவறையில் லிங்க உருவில் காட்சி தரும் அண்ணாமலையாரைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்படுகிறது. விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி தந்தவர்; நினைத்தாலே முக்தி தருபவர்


தமிழ் மன்னர்களின் கட்டடக்கலை சிறப்புக்கு மட்டுமல்ல பண்டைய தமிழகத்தின் செல்வ வளத்திற்கும், சமயப்பற்றுக்கும் சாட்சியாக இன்றும் நின்று கொண்டிருக்கிறது அண்ணாமலையார் ஆலயம். 

தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். தீப தரிசனத்துக்குப் பின்பு அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வருவார்.

பதிமூன்றாம் நாள் அண்ணாமலையார் தெப்போற்சவம் நடைபெறும். பதினான்காம் நாள் அண்ணாமலையார் கிரிவலம் செய்வார். பின்னர் பதினைந்தாம், பதினாறாம் நாட்களில் முறையே அம்பிகைக்கும் முருகனுக்கும் தெப்போற்சவம் நடைபெறும்.

கடைசி நாளான பதினேழாம் நாள் சண்டிகேசுவரர் உற்சவத்துடன் கார்த்திகை தீப விழா நிறைவு பெறுகிறது.
விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம.

picture for poem
நன்றி....