விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும் – சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;
அசைவறு மதி கேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
வசந்தங்கள் வந்து வாழ்த்தும் பொழுது கிளையில் பூவாகி
இலை உதிர் காலம் முழுதும் மகிழ்ந்து வேராகி.......
பிறந்தது இனிய புத்தாண்டு
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனதிற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலைவந்திட நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாய்.
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? – அட,
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்பட லாகாதோ?
பூத்த புத்தாண்டில் நலமும் வளமும் பெற இறையருள் நாடி பிரார்த்திப்போம்..
"
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
மலர் இல்லாத பூங்கொடியா
பதிவில்லாத புத்தாண்டா!!
புத்தம் புதிதான பாதைகளில் முன்னடி வைத்து
இன்னும் இன்னும் என நகர்ந்து செல்லும் துணிவை
நெஞ்சுரத்தை தன்னம்பிக்கையை
புத்தாண்டு வாழ்த்துகள் வழங்குகின்றன்..
புதுரத்தம் ஊற்றெடுக்கும் உற்சாக நாளை துவக்குக்கிறோம்..
பழையன கழிதலும் புதியன புகுதலும்வழுஅல கால வகையின்ஆனே.
இன்று நாம் புதிதாய் பிறந்தோம்,
இனியது பிறர்க்கே செய்ய!
நன்றிது என மனம் நினைக்கும்,
பிறக்கும் இப்புத்தாண்டில்
புத்தொளி பரவி நிற்கபுது வசந்தம் வீசி வர
இன்னல்கள் பறந்தோடஇன்பத் தென்றல் எமை வருட
வல்லமைகள் கரம் சேர்ந்த வாழ்வெங்கும் மகிழ்ச்சி பொங்க
வருக வருக புத்தாண்டே.... வாழ்கையில் வளங்கள் பொங்க
வசந்த காற்று வீசி உற்சாக ஊற்றாய் வளங்கள் பல பெற்று வாழ
உவப்புடன் உளம் மகிழஉளமார வாழ்த்துகின்றேன்
இறைவனை வேண்டி.....இனிய இணைய நண்பர்களே....
வாழ்க வளமுடன்.. வளர்க நலமுடன்..
கோள்களின் கோலாட்டம் வாழ்வை கோலாகலமாக்கட்டும்..
ஹாய் எவ்ரி படி ...விஷ் யூ ஹேப்பீ நியூ இயர்
எங்கேயும், எப்போதும் பதிவுலகில் சந்தோஷம்.
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம்
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்
துணையிருந்த தெய்வம்
நெல்லுக்குள்ளே மணியை
நெருப்பினிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
நம்பிக்கைதானே வாழ்க்கை!
விண்ணில் பறக்க ராக்கெட்டு ஆயத்தம்....
வாழ்க்கை உயரும் வேகம்..
வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி
பூமழைதூவி வசந்தங்கள் வாழ்த்த
மேகம் கூடி மழைச்சால்வை போர்த்த
இசைச்சோலை பூக்கும் நேரமே..
தமிழ் வந்து தாயமாடுமே..
நீர்வீழ்ச்சித் தாளிலே வண்ணங்கள் தீட்டி
ஒரு கோடி நாட்களை இனிதே வாழ்ந்திட ஒரு நாளில் வாழ்த்துகிறேன்!!