Sunday, December 4, 2011

திருக்கார்த்திகை சங்காபிஷேகம்


Beautiful Lord Shiva Images Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs
சங்கிற்கென்றே தனி காயத்ரியும் உள்ளது
ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே பவமாநாய தீமஹ’ |
தந்ந: சங்க: ப்ரசோதயாத் ||
இவ்வளவு சிறப்புகள் பெற்ற சங்கால் சிவபெருமானுக்கு 
கார்த்திகை மாதத்தில் சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறும் 

பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங் காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்ச நின்றார்
சங்க நான் மறையவர் நிறைதீர அரிவையர் ஆடல் பேணத்
திங்கள் நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர் தாமே.

சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். கார்த்திகை மாதம் வரும் 
திங்கட்கிழமை சோமவார விரதம்....
கார்த்திகை மாத திங்கள் கிழமைகள், சிவ வழிபாட்டுக்கு சிறந்தவை...
ததி சங்க துஷாராபம் க்ஷீரோ தார்ணவ ஸம்பவம்
நமாமி சசி நம் ஸோமம் ஸம போர் மகுட பூஷணம்

தயிர், சங்கு, பனித்துளி ஆகியவற்றின் வெண்மைக்கு நிகராக தூய வெண்ணிறத் தோடு திகழும் சந்திரனே! எல்லாவிதமான நன்மைகளையும் அருளும் சிவபெருமானின் செஞ்சடையில் அழகுடன் திகழ்பவனே! உன்னைத் தலை வணங்கிப் போற்றுகின்றேன்.
எல்லா திருமணத்திலும் அருந்ததியை பார்ப்பது 
என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். 

கற்புக்கரசியாகிய அருந்ததியை வசிஷ்டர் தன் மனைவியாக 
அடைந்தது இந்த சோமவார விரதத்தை கடைபிடித்ததால் தான். 

பொதுவாக இந்த விரதத்தை பெண்களே கடைபிடிக்கின்றனர். 

ஆண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து 
நல்ல வாழ்க்கை துணைவியை அடையலாம். 

சோம வாரத்தில் குற்றாலத்தில் நீராடி குற்றாலநாதர், 
குழல் வாய்மொழி அம்மையை தரிசிப்பது நல்லது. 

இதே போல சுசீந்திரம், தாணுமாலய சுவாமியை 
வணங்கி வருவதும் உத்தமம்.
சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்து சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.
ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்க சிவன், காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக சிவபூஜை தினமும் செய்யும் ஒரு வேதியரையும் அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவ-பார்வதியாக நினைத்து, அவர்களுக்கு முடிந்தவரை தானம் செய்ய வேண்டும். 


அதன் பின் பகல் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து முன் இரவில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி சிவ சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டும். 

வீட்டிலேயே விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வேதியர்களுக்கும், அடியவர்களுக்கும் அன்னதானம் செய்யவும். 

இந்த சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். அவர்களுக்கு என்னிடத்தில் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறுகிறார்.
கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வார்கள். 

கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். 

எனவே குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். 

கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். 

அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் 
தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.


ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் ஸ்ரீமன் நாராயணன் 
கார்த்திகை மாதத்தில் தினமும் எழுந்தருள்கிறார். 


கார்த்திகைமாதத்தில் செய்யப்படும் பூஜை ஆயிரம் மடங்கு பலன் தரும். இப்பூஜையால் பாவங்கள், வறுமை விலகுவதுடன்; 
வளமான வாழ்வும் பெறலாம். 

கார்த்திகை மாதத்தில் கஸ்தூரியால் அபிஷேகம் செய்து, 
தாமரை மலரால் அர்ச்சனை செய்தால் மகா விஷ்ணுவுடன் 
லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள். 
வில்வ இலையால் சிவனை பூஜிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டம் செல்லும் பாக்யம் கிட்டும். 
ஆலயத்தில் சுவாமிக்குமுன் பூஜை நேரத்தில் ஷோடச தீபாராதனை செய்வார்கள். 

இதனை வெறும் சடங்காக நினைக்கக்கூடாது. 

உலகின் தோற்றத்தையும், ஒடுக்கத்தையும் காட்டும் 
குறியீடாகக் கருதி இந்த தீபாராதனையை வழிபட வேண்டும். 

அதனால் சுகபோகமும் ஞானமும் கிட்டும்.
கார்த்திகைப் பொரி மிகவும் வெண்மையாகவும் 
தூய்மையாகவும் இருக்கும். 

பொரியுடன் தேங்காயின் துருவலைச் சேர்க்கிறோம். 
தூய பக்திக்கு அடையாளமாக வெல்லம் சேர்க்கிறோம். 


வெண்பொடி பூசிய, என்றென்றும் களங்கமற்ற 
தூயவனாகிய சிவபெருமானை நெல் பொரி குறிப்பிடுகிறது. 


வள்ளல் தன்மை படைத்த மாவலியை 
தேங்காயின் துருவல் உணர்த்துகிறது. 


கள்ளங்கபடமில்லாத தூய பக்திக்கு வசப்படும் இறைவன் 
பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பது தத்துவம்.

கார்த்திகை திங்களன்று, கணவனும், மனைவியும் இணைந்து கோவிலுக்குச் சென்று வருவது, சிவசக்தியின் ஆசியால் காலம் முழுவதும் ஒற்றுமையாக  காலமெல்லாம் கருத்து வேறுபாடின்றி இணைந்திருக்க வகை செய்யும்.
  •  "மாத்ருகாரகனான'  சந்திரன் தாய் ஸ்தானத்தைக் குறிப்பவர். தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, அவருடன் மனஸ்தாபம் இருந்தாலோ இந்த விரதம் நிவர்த்தியைத் தரும்.

  •  சந்திரதசை மற்றும் சந்திரபுத்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் நன்மை உண்டாகும்.
கார்த்திகை சோமவாரத்தன்று அருவிகளில் நீராடுவது 
உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும். 

புண்ணிய அருவிகளான குற்றாலம், பாபநாசம் அகத்தியர் அருவிகளுக்கு தம்பதி சமேதரா நீராடி, குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்பிகை, பாபநாசநாதர் - உலகாம்பிகையை வணங்கி வந்தால், காலமெல்லாம் களித்திருக்கலாம்.
அனைவரும் இந்த கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் இருந்து சிந்தையில் உறையும் சிவனின் அன்புக்கு உரியவர்களாகி 
சிவனது பொற்பாதத்தில் சரணடைவோம்.
வலம்புரி சங்கு 
  உலக உயிர்களுக்கு அமுதத்துக்கு ஒப்பானது நீர்..   
1008சங்கினால் நீராட்டல் என்பது உயர்வான 
பொருளை கொண்டு உயர்வானவரை கொண்டாடுதல் ஆகும்.





Maha Shivaratri%2BLord%2BShiva%2Bwallpapers Free wallpaper of god shiva

Creative Wallpaper Lord Shiva 026484  Free wallpaper of god shiva

32 comments:

  1. சங்கு அபிஷெக்க மகிமை பத்தி ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க. நன்றி

    ReplyDelete
  2. சிவன் அத்தனை அழகு.சங்கபிஷேகம் பற்றி விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்.அருமை.

    ReplyDelete
  3. அருமையா படங்கள். அழகான கட்டுரை. சங்கினுள் தோன்றும் நம் தொந்திப்பிள்ளையார் நல்ல அழகு.

    வை. கோபாலகிருஷ்ணன்

    [மற்றொருவர் உதவியால் ஏதோவொரு வழியில் போய் எத்கிஞ்சிது பின்னூட்டம் கொடுக்கப்பட்டுள்ளது - சங்கினால் கைக்குழந்தைக்கு பால் புகட்டுவது போல]

    ReplyDelete
  4. கார்த்திகை சோம வாரப் பெருமைகள் பற்றியும் சங்காபிஷேகத்தின் விளக்கங்களும் அருமை.பல தகவல்கள் அறிந்தேன்.

    தாங்கள் ஷோடச தீபாராதனைக்கு தந்திருக்கும் விளக்கம் எனக்குப் புரியவில்லை.முடிந்தால் பின்னூட்டத்தில் எனக்குப் புரியுமாறு சற்று விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  6. படங்கள் அனைத்தும் மிக அருமை. பல அற்புதமான தகவல்களையும் கலந்து தந்திருக்கிறிர்கள். வளர்க தங்கள் தொண்டு.

    ReplyDelete
  7. படங்கள் அருமை அழகிய தரிசனம்

    ReplyDelete
  8. சங்கத்திற்கென்றே தனி காயத்ரியும் உள்ளது.. அது சங்கிற்கென என்று வரவேண்டுமென நினைக்கிறேன் சகோ!

    ReplyDelete
  9. சோம வார விரதம் பற்றிய அருமையான செய்தி பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  10. சோம வார விரதம் இருப்பவர்கள் என்னிடம் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறியிருப்பதாக சொல்லியுள்ளீர்கள்.. இனி அதைப் பின்பற்ற முயற்சி செய்யவேண்டும்.. பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  11. Lakshmi said...
    சங்கு அபிஷெக்க மகிமை பத்தி ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க. நன்றி

    மகிமை மிக்க கருத்துரைக்கு நிறைவான நன்றிகள் அம்மா..

    ReplyDelete
  12. shanmugavel said...
    சிவன் அத்தனை அழகு.சங்கபிஷேகம் பற்றி விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்.அருமை.


    அருமையான கருத்துரைக்கு நிறைவான நன்றிகள் .

    ReplyDelete
  13. Anonymous said...
    அருமையா படங்கள். அழகான கட்டுரை. சங்கினுள் தோன்றும் நம் தொந்திப்பிள்ளையார் நல்ல அழகு.

    வை. கோபாலகிருஷ்ணன்/

    எத்கிஞ்சிது பின்னூட்டம் !!!

    நிறைவான நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  14. DrPKandaswamyPhD said...
    ரசித்தேன்./

    மகிழ்ச்சி !நிறைவான நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  15. கவி அழகன் said...
    Anpe sivam panpe patham/

    அன்பே சிவம்! பண்பே பதம்!!

    பதந்தந்தருளும் பண்மொழியான் சிவனின் அருமை உணர்த்தும் கருத்துரைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  16. raji said...
    கார்த்திகை சோம வாரப் பெருமைகள் பற்றியும் சங்காபிஷேகத்தின் விளக்கங்களும் அருமை.பல தகவல்கள் அறிந்தேன்.

    தாங்கள் ஷோடச தீபாராதனைக்கு தந்திருக்கும் விளக்கம் எனக்குப் புரியவில்லை.முடிந்தால் பின்னூட்டத்தில் எனக்குப் புரியுமாறு சற்று விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்./

    கருத்துரைக்கு நன்றி..

    ஷோடச தீபாராதனை பதிவாகவே தந்து விடுகிறேனே!

    தயாரித்துவைத்துவிட்டேன்!

    ReplyDelete
  17. Rathnavel said...
    அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துகள் அம்மா./

    பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா,

    ReplyDelete
  18. Kailashi said...
    படங்கள் அனைத்தும் மிக அருமை. பல அற்புதமான தகவல்களையும் கலந்து தந்திருக்கிறிர்கள். வளர்க தங்கள் தொண்டு./

    வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கொடுத்தமாதிரி
    அருமையான பதிவுகள் தரும் தங்களின் கருத்துரைகள் நிறைவளிக்கின்றன ஐயா.. நன்றிகள்..

    ReplyDelete
  19. ஆன்மீக உலகம் said...
    சோம வார விரதம் இருப்பவர்கள் என்னிடம் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறியிருப்பதாக சொல்லியுள்ளீர்கள்.. இனி அதைப் பின்பற்ற முயற்சி செய்யவேண்டும்.. பகிர்வுக்கு நன்றி சகோ/

    அருமையான கருத்துரைகள் அனைத்திற்கும் நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  20. கார்த்திகை சோமவார விரதம் நானும் சிறுவயது முதலே இருந்து வருகிறேன்.

    திருவெண்காட்டில் 1008 சங்கால் செய்யும் சங்காபிஷேகத்திற்கு அங்கிருந்த போது விடாமல் போய் விடுவோம். இப்போதும் சமயம் கிடைக்கும் போது போய் வருவோம்.

    படங்கள் சோமவாரவிரத செய்திகள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. சங்கினுள்ளே விநாயகர் படம் மிக அருமை. சங்குக்கென காயத்ரி இருப்பது எனக்கு இதுவரை தெரியாது. இப்போது தெரிந்து கொண்டேன். அழகான பகிர்விற்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  22. நன்றி மேடம் :-)

    ReplyDelete
  23. கார்த்திகை சோமவாரத்தில் சங்கு அபிஷேகம் மற்றும் ஸ்படிகலிங்க அபிஷேகம் மன நிறைவினை அளித்தது. பெரிய வெண்சங்கு பூஜை கடம்பூர் கோவிலில் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  24. சிறப்பான படங்கள் தீப விழாவை நீங்கள் எனக்கு அளித்துவிட்டீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  25. மிகப் பெரிய பச்சை மரகதலிங்கம் காணக்கிடைக்காத ஒன்று. அந்தப்படம் எந்த கோவிலில் எடுத்தது?

    ReplyDelete
  26. இன்று கோவிலில் பார்த்தேன்;உங்கள் பதிவிலும் பார்த்தேன்-சங்காபிஷேகம்!

    ReplyDelete
  27. excellent pictures

    www.astrologicalscience.blogspot.com

    ReplyDelete
  28. ;) ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்!

    ReplyDelete