- ஓம் சக்தி ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் -
பராசக்தி ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம்
வெற்றி வடிவேலன் - அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ! - பகையே!
துள்ளி வருகுது வேல்
- ஓம் சக்தி
தெய்வப் பாடல்களில் ஆறு துணைகளில் மகாகவி பாரதியார் முருகனின் வெற்றி வடிவேலின் துணையைப் போற்றி மனதில் வீரம் செறிய வைப்பார்...
தருக்கு லாவிய ... கொடியிடை மணவாளா ...
சமர்த்த னேமணி மரகத மயில்வீரா ...
திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே. ...
அருணகிரிநாதரால் சம்ர்த்தனாகிய முருகன் எழிலுற பாடப்பட்ட அழகிய திருத்தலம் திருவிடைக்கழி..
அரன் அரிப் பிரமர்கள் முதல் வழிபடப் பிரியமும் வர
அவர் அவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே ...
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக
மன் அருள் திருவினைப் புணர் அரி திரு மருகோனே .
திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள்
வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே. ...
தவத்திற்குபின் தோன்றிய ஈசன் முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் தலம்.
இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது.
இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது.
தமிழ்நாட்டில் முருகப் பெருமானுக்கென்று உள்ளத் திருத்தலங்களில் குரா மரத்தினைக் தன்னகத்தே தலவிருட்சமாகக் கொண்ட திருவிடைகழி மிக பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.
இக்குரா மரத்தினடியில் முருகப் பெருமான் விரும்பி காலாற நடந்து ,உலா வந்து மற்றும் சிவப் பெருமானை பூஜித்து வரம் பெற்றார்.
அருணகிரி நாதரும் கந்தனைப் பாடி போற்றி அஷ்டமாசித்திகள் அடைந்த அற்புதமானத் திருத்தலம்..
அதிசயம் பல நிறைந்த குரா மரத்தின் பூக்களை அனைத்து மதத்தினரும்,மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அணிவித்து மகிழ்வர்.
தைப்பூசத்திற்கு, சுவாமிமலையிலிருந்து நடைப்பயணமாக பக்தர்கள் திருவிடைக்கழி வருவது பெரிய விழாவாக நடைபெறுகிறது!
திருக்கோவில் தல விருட்சங்களில் மிகவும் அபூர்வமான ஒன்று குரா மரமாகும்.
முருகனை, ராகுபகவான் வழிபட்ட தலமாகும். "குரா'' என்பதைத் திரும்பி படித்தால் ராகு என்பது விளங்கும். ராகு தோஷத்தால் பீடிக்கப்பட்டு களத்ர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, தோஷம் நீங்கப் பெறலாம்.
குன்றிருக்கும் இடம் மட்டும் குமரன் இருக்கும் இடமல்ல, குரா மரம் இருக்கும் இடமும் குமரன் இருக்கும் இடமே.
ஸ்தல் விருட்சமாக, வாசம் தரும் குரா மலர்களை கொண்ட குரா மரம் அமைந்துள்ளது. குரா மரத்தின் இலைகளுக்கு விஷமுறிவு சக்தி இருப்பதாக கருதப்படுகிறது.
குரா மரத்தின் மலரைப் போற்றாத சமய இலக்கியமே இல்லை எனலாம்.
குராமரத்தை தல விருட்சமாகக் கொண்ட ஒரேத் திருத் தலம் திருவிடைக்கழி ஆகும்.இம்மலரில் முருகனது திருப்பாதம் ஒளிந்து உள்ளது என்று திருப்புகழில் அருணகிரி நாதர் போற்றி உள்ளார்.
“சிறக்கு மாதவர் முனிவரர் மகபதி
இருக்கு வேந்தனும் இமையவர் பரவிய
திருக்குராவடி நிழல்தனில் உலவியப் பெருமானே”
வெளிப் பிராகாரத்தை வலம் வரும்போது வடக்கே குரா மரம் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது..மலைப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படும் குராமரம் வயல் சூழ்ந்த மருத நிலத்தில் காணப்படுவது அரிதான ஒன்று..
இங்கே யோக சுப்பிரமணியர் என்றத் திருநாமத்துடன் முருகர் சிவ பெருமானை பூஜித்தார்.
இங்கே இதனருகேயே மகிழ மரம் ஒன்று இருக்கிறது.இது இத்தலத்தில் உள்ள பாபநாச பெருமானுக்குறிய தலவிருட்சமாகும்.
இரண்டு தல விருட்சம் ,கருவறையில் இரண்டு பெருமான்,இரண்டு கோபுரம்,இரண்டு சண்டிகேஸ்வரர் என்று இரண்டிரண்டாக காணப்படுவது மிக்கச் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருவிடைகழிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு, இங்குதான் தெய்வானைக்கும் முருகப்பெருமானுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாம். இதற்கு சான்றுபோல் தெய்வானை சந்நிதியில் உள்ள அவரின் சிலையில் முகம் முருகப்பெருமானை நோக்கி சற்றே நாணத்துடன் தலை சாய்த்து இருப்பதுபோல் காணப்படுகிறது.
திருவிடைக்கழி முருகன், தெய்வானை.
திருமணத்தடை நீக்கி திருமணம் கைகூட நிகழ்த்தபடும் வழிபாடுகள் மூலம் விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்பது சத்தியம்....
இத்திருத்தலம் மயிலாடுதுறை அருகே திருக்கடவூர் கோவில் மற்றும் தில்லையாடித் திருத்தலத்தின் அருகே உள்ளது..
சூரபத்மன் வதம் செய்தபின் சுறா வடிவமெடுத்து மறைந்த சூரபத்மனின் புதல்வன் இரண்யனை வதம் செய்து தன் மீதான சாபம் தீர ஈசனை நோக்கி தவம் செய்த இடம்
முருகப் பெருமானையும்,குரா மரத்தினையும் நினைத்து பிரார்த்தணை செய்தால் முருகன் அருள் கிட்டுவது திண்ணம்,,,,
'
முருகன், அழகன், அலங்கார முருகன் .MURUGANUKKU AROHARA!!!
DEVI KOLAPURAMMA, MYSORE, CURRENCY DECORATION, INDIA.
கோலாபுரி அம்மன் பணமுடிப்பு அலங்காரம், மைசூர்.
சமர்த்தனே மணி மரகத மயில் வீரர் என்ற தலைப்பே சமத்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தரிஸித்த பிறகு கருத்துக்களுடன் திரும்ப வருவேன்.
ReplyDeleteஅழகிய படங்களுக்காவே உங்கள் தளத்தை தவற விடாமல் வருகிறேன்.
ReplyDeleteமாறிமாறி வரும் முதல் படம்.
ReplyDeleteதனியாக சிவன் மட்டுமே, பிறகு
சிவனும் பார்வதியும் தனியே, பிறகு முதல் குழந்தையாகிய நம் தொந்திப்பிள்ளையாருடன், அதன் பிறகு ஸ்ரீசக்ரம் என வெகு அழகாக.
இரண்டாவது படத்தில் ரிஷபத்தின் மேல் பார்வதியும் பரமசிவனும் இரண்டாம் கைக்குழந்தையாகிய அழகன் முருகனுடன். அருமை அருமை!
மினுமினுக்கும் ஒன்பது வேல்களும், அதனடியில் காட்டியிருக்கும், புஷ்ப அலங்காரங்களுடன் கூடிய முருகப்பெருமானும் ஜோர் ஜோர்!
ReplyDeleteஆறுமுகத்துடன் பன்னிரு கைகளுடன் ஒய்யாரமான மயில் வாகனத்தில் முருகன். ஆஹா! மயிலின் காலடியில் மட்டுமின்றி, வாயிலும் அல்லவா அல்வா போன்ற ஒரு பா....ம்....பு.
ReplyDeleteசூப்பர் படம்.
சிவதனுசுவை கையிலெடுத்து நாண் ஏற்றி, ஒடித்த ஸ்ரீராமரும், அதனால் மயக்கமுற்றுச் சாயும் மற்ற அரசர்களும், ஆசையுடன் மாலையுடன் காத்திருக்கும் ஸீதாதேவியும் ..... ! )))))
ReplyDeleteஇதைக்காணும் நமக்கு அற்புதமாக அடுத்து நடைபெற உள்ள சுபமான ஸீதாக்கல்யாண விவாஹமல்லவா நினைவுக்கு வருகிறது.; )))))
இதைக்காணும் போது ஸ்ரீராமன் போன்ற உத்தமன்களான மாப்பிள்ளைகள், விவாஹம் செய்ய வேண்டிய நிலையில் பெண் குழந்தைகள் காத்திருக்கும் வீடுகளில், மாப்பிள்ளையாக வரப்போவது நிச்சயம் என்றல்லவா எனக்குத் தோன்றுகிறது! )))))
ஸ்ரீ ராம் ஜயராம் ஜயஜய ராம்!
குரா மரம் நான் கேள்விப்பட்டதே இல்லை. இனி அதை மறக்க முடியாது என்னால். ஏனெனில் ராகுவின் படுத்தல்களை, ராகுவையே தலைகீழாகப்புரட்டி போட்டது போன்ற தங்களின் அருமையான விளக்கம்.
ReplyDeleteராகு திருப்பிப்படித்தால் குரா !
ஆஹா! இனி எப்படி மறக்க முடியும்? ;))))
திருவிடைக்கழியில், முருகனுக்கும் தெய்வானைக்கும் நிச்சயதார்த்தம்.
ReplyDeleteஆஹா! நம் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுவது போலல்லவா இது மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது!
நாணிக்கோணி நிற்கும் தெய்வானையின் கால் விரல்களைப் பிடித்து, அந்த முருகப்பெருமானே, ஆசையுடன் அம்மி மிதிக்கச் செய்வது போன்ற மிக அருமையான படம்.
இதைப்பார்க்கும் எனக்கு, நம் வீட்டிலேயே வெகு விரைவில் கல்யாணமொன்று, நம் குழந்தைக்கு நடைபெற உள்ளது என்ற செய்தியினை, சுட்டிக்காட்டுவது போல மிகத்திருப்தியாக உள்ளது.
மங்களானி பவந்து!
அதி சீக்கிரமேவ விவாஹப் பிராப்தி ரஸ்து! என்று வேத வித்துக்கள் ஆசீர்வதிப்பார்கள்! அந்த ஞாபகம் ஏனோ எனக்கு வருகிறது!!
ஸர்வே ஜனா சுகினோ பவந்து!!!
அட, அதற்கு அடுத்த படத்தில், மாலையும் கழுத்துமாக முருகனும் தெய்வானையும் காட்சியே கொடுத்து விட்டார்களே! பார்க்க எவ்வளவு ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது!!
ReplyDeleteதிருமணத்தடைகள் யாவும் நீங்கும்.
விரைவில் திருமணம் கைகூடும்.
ஆஹா! எவ்வளவு ஒரு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது!
திருக்கடவூர் திருக்கோயில்
வாழ்க வாழ்கவே !
கடைசி இரண்டு முழு கோபுரங்கள், 2 கோடி புண்ணியத்தை அள்ளித்தரும் நல்ல தரிஸனம்.
ReplyDeleteஅடுத்ததில் கோபுரத்தின் நடுவே தன் மயிலுடனும், வேலுடனும், தேவியுடனும் சிவலிங்கத்தை பூஜிக்கும் முருகன் ... அடடா, சபாஷ்!
அடுத்து சேவலுக்கும் மயிலுக்கும் இடையே அசுரனை நிறுத்தி, வில்லால் அம்பெய்து, அவனை அப்படியே இரண்டாகப்பிளப்பது காட்டப்பட்டுள்ளதே! அதர்மங்களை, அசுரர்களை, தர்மம் நிச்சயம் ஒரு நாள் அழித்தே விடும் என்ற நீதியல்லவோ!
அழகிய அந்தக் கிளியுடன் ஒரு மஹா முனிவர். அவரின் நல்ல உயரத்தைப்பார்த்தாலே அகஸ்தியர் என்பது விளங்குகிறது! அப்படித்தானே!
அடுத்த படத்தில் பாருங்கள்! ஒரு அழகிய திருமண மண்டபம். கல்யாணம் குதிர்ந்து வந்ததும், முதல் வேலையாகச் செய்ய வேண்டியது, இந்த மண்டபம் புக்கிங் தானே!
அதுவும் சுப சகுனமாகவே தோன்றுகிறதே!!;)))))
அலங்கார முருகன் அவன் அழகோ அழகு.
ReplyDeleteகாய்கறிகளுடன் அதைவிட அழகு!!
பழங்களுடன் அதைவிட பரவஸம் தருவதாகவே ! [கை மேல் பலன் என்பார்களே அது போல ]
ஆஹா அந்தப்பழங்களுடன் கூடிய மிகப்பெரிய நந்தியார் சந்தனக்காப்பினில் எவ்ளோ அழகு!
எனக்கு மிகவும் பிடித்த முறுக்கு மாலை வேறு, போனஸ் போலக் காட்டியுள்ளீர்கள். திருப்தியாக உள்ளது.
எங்கள் ஊர் நந்திகோயில் தெருவில் உள்ள நந்தியும் இதே பிரும்மாண்டம். பிரதோஷத்தன்று, அபிஷேகங்களும், முழுவதுமாக சந்தனக்காப்பும், ரொம்ப நன்னா இருக்கும்.
பலருக்கும் தெரியாத நமது சமயவிடயங்கள் பலவற்றையும் சுவாரசியமாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்.
ReplyDeleteமைசூர் கோலபுரியம்மனின் பண முடிப்பு அலங்காரமும், அடுத்துக் காட்டியுள்ள அனைத்து முருகன்களும் “யாம் இருக்க பயமேன்” என்றல்லவா சொல்கிறது! ;)))))
ReplyDeleteமாறி மாறிவரும் சூப்பரான முதல் படத்தை கடைசியிலும் காட்டியிருப்பது அருமை.
C H U R C H என்ற ஆங்கிலச்சொல்லே நினைவுக்கு வருகிறது. அதில் உள்ள தாத்பர்யம் என்னவென்றால்
END IS THE BEGINNING &
BEGINNING IS THE END.
YOU ARE IN THE MIDDLE
என்பதாகும்.
அதாவது CH என்பது ஆரம்பத்திலும் முடிவிலும் உள்ளதல்லவா. அதுதான் ஆரம்பமே முடிவு, முடிவே ஆரம்பம் என்று பொருள் தருகிறது.
நடுவில் U R உள்ளதல்லவா!
அது YOU ARE என்று பொருள் தருகிறது.
எனவே முடிவே ஆரம்பம்.
ஆரம்பமே முடிவு.
நீ இதற்கிடையில் இருக்கிறாய்
என்று சொல்கிறது இந்த CHURCH
[தேவாலயம்] என்ற வார்த்தை.
இன்றைக்கும் தங்களின் கடும் உழைப்பினால், மிக நல்லதொரு, பதிவும், விளக்கங்களும் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.
பதிவுக்கும், பகிர்வுக்கும், தங்களின் ஆர்வத்துடன் கூடிய அசராத உழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இன்று கார்த்திகை புனர்பூச நக்ஷத்திரம், கார்த்திகேயனை கண் குளிரக் காணச்செய்து புண்ணியம் சேர்த்து விட்டீர்கள். அதற்கு என் கூடுதல் நன்றிகள்.
இப்படிக்கு,
தங்களின் எழுத்துக்களின்,
அழகிய பதிவுகளின்
தாஸாதி தாஸன்
vgk
அப்பனே முருகா!!!
ReplyDeleteஅருமையான தெய்வீக புகைப்படங்கள், அறிய செய்திகள்.
பதிவிக்கு நன்றிகள்
முருகு எனும் அழகன்
ReplyDeleteசேவற்க் கொடி வீரன்
மயில் வாகனன்
முருகப் பெருமானின் திருத்தல வரலாறும்
கண்ணைக்கவரும் படங்களும்.
இதுவரை அறிந்திராத பகிர்வுகளும்
மிக அருமை சகோதரி.
நான் இதுவரை அறியாத முருகனைன் திருத்தலம்
ReplyDeleteஅழகிய படங்களுடன் மிக அழகாக விள்க்கி ஒரு
அருமையான பதிவினைத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி.குரா மரம் குறித்த விளக்கமும்
அரிய தகவல்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ
ReplyDeleteவழக்கமான - கடும் உழைப்புடன் - ஆன்மீகத்திற்கென வாழ்வினை அர்ப்பணித்து - கடமையாற்றும் தங்களின் செயல் மெய் சிலிர்க்க வைக்கிறது.
எத்தனை எத்த்னை படங்கள் - எத்தனை எத்தனை குறிப்புகள் - அத்தனைக்கும் பதவுரையாக விள்க்கம் அளிக்கும் வை.கோவின் ஈடுபாடு - பொறுமையாகப் பார்த்து - படித்து - மகிழ்ந்து - விளக்கமாக கருத்துக் கூறி = பதிவு எழுதிய நேரத்தினை விட வை.கோ செலவழிக்கும் நேரம் அதிகமாக இருக்கும்.
இருவருமாகச் செய்யும் ஆன்மீகத் தொண்டு - அதற்குண்டான பலன்களை அளிக்க இருவருக்கும் நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா
அன்பின் வை.கோ
ReplyDeleteஇரணு மணி நேரத்திற்கும் அதிகமாக இப்பதிவினில் மூழ்கி விட்டீர்கள். ஒவ்வொரு படத்தினையும் மிக மிக இரசித்து - தங்கலின் எழுத்துத் திறமையால பாராட்டும் - மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் - மறுமொழிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. மூலத்தின் பொருள் மாறாமல் கருத்துச் சொல்லும் திறமை பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன். நட்புடன் சீனா
முருகனின் விதவிதமான அலங்காரங்கள். படங்கள் அத்தனையும் அழகு.
ReplyDeleteஅசத்தலான அறியபடங்கள்+தகவல்கள்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ..
அப்பனே முருகா ஒப்பிலா மணியே
ReplyDeleteகலக்கலான காய்கறிகள் அலங்காரத்தில் முருகன் படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை மேடம்
ReplyDeleteமுருகன் அழகிய கடவுள்
குரா மரம் பற்றி நான் அறிந்ததில்லை இதுவரை.
ReplyDeleteகுராவும் குமரனும் பற்றிய தகவல்கள் அருமை.ராகுவையே திருப்பும் குரா குமரன் அருள் பதிவிலேயே கிடைத்தது போல் உள்ளது.
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
குரா மரம் பற்றி தங்கள் பதிவின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது... குரா மரம் இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற புதிய செய்தியும் அறிந்துகொள்ள முடிந்தது... திருவிடைக்கழி ஸ்தலம் செல்வதற்கான வழிகளையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி சகோ! வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடங்கள்.. செய்திகள்.. அனைத்தும் அழகு. முருகன் என்றாலே அழகு தானே?
ReplyDeleteதங்களது அருமையான இறைபணி தொடர பிரார்த்தனைகள்.
வாழி நலம் சூழ..
அஷ்வின்ஜி (www.vedantavaibhavam.blogspot.in)
(www.frutarians.blogspot.in)
nandru
ReplyDeletecheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் வை.கோ
//இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக இப்பதிவினில் மூழ்கி விட்டீர்கள்.//
அம்பின் ஐயா, வணக்கம்.
ஒரு புண்ணிய நதியில் இரண்டு மணி நேரங்கள் மூழ்கிக் குளிப்பது இல்லையா! அதே போன்று தான் இந்தப்பதிவினையும் நான் ஓர் புண்ணிய ஜீவ நதியாகவே உணர்ந்து மூழ்கி விடுகிறேன்.
//ஒவ்வொரு படத்தினையும் மிக மிக இரசித்து - தங்களின் எழுத்துத் திறமையால பாராட்டும் - மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் - மறுமொழிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. மூலத்தின் பொருள் மாறாமல் கருத்துச் சொல்லும் திறமை பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன். நட்புடன் சீனா//
தங்களின் ஆழ்ந்த அனுபவத்தாலும், தங்கள் வாயினாலும், இத்தகைய பாராட்டுக்களை வழங்குவது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், மேலும் உற்சாகம் அளிப்பதாகவும் உள்ளது, ஐயா. மிக மிக நன்றி, ஐயா.
என்றும் அன்புடன் தங்கள்,
vgk
;) ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்!
ReplyDelete//cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ
வழக்கமான - கடும் உழைப்புடன் - ஆன்மீகத்திற்கென வாழ்வினை அர்ப்பணித்து - கடமையாற்றும் தங்களின் செயல் மெய் சிலிர்க்க வைக்கிறது.
எத்தனை எத்த்னை படங்கள் - எத்தனை எத்தனை குறிப்புகள் - அத்தனைக்கும் பதவுரையாக விள்க்கம் அளிக்கும் வை.கோவின் ஈடுபாடு - பொறுமையாகப் பார்த்து - படித்து - மகிழ்ந்து - விளக்கமாக கருத்துக் கூறி - பதிவு எழுதிய நேரத்தினை விட வை.கோ செலவழிக்கும் நேரம் அதிகமாக இருக்கும்.
இருவருமாகச் செய்யும் ஆன்மீகத் தொண்டு - அதற்குண்டான பலன்களை அளிக்க இருவருக்கும் நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா//
அன்பின் ஐயா, வணக்கம்.
தாங்கள் நன்கு மதிப்பீடு செய்து அவ்வப்போது தந்துவரும் இது போன்ற பாராட்டுக்களே, எங்களின் ஆன்மீகத் தொண்டினை நாங்கள் தொடர்வதற்கு மிகுந்த உற்சாகம் தருவதாக உள்ளது.
மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், ஐயா.
அன்புடன் VGK
1593+14+1=1608
ReplyDeleteஎன் பொன்னான நேரச்செலவையும், ஈடுபாட்டினையும் உணர்ந்து உற்சாகம் அளித்துப் பாராட்டியுள்ள அன்பின் திரு சீனா ஐயாவுக்கு மட்டும் மீண்டும் மீண்டும் என் நன்றிகள்.