நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
சரணாகத தீணார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே
செல்வத்தின் தெய்வம். ஸ்ரீவிஷ்ணு பிரியை. கிரியா சக்தி. லக்ஷ்மி திருபாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள்.
அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.
செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன.
யானைகளின் பிளிறலை லக்ஷ்மி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.
கோலக்ஷ்மி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், லக்ஷ்மி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது.
பசுக்கூட்டங்களுக்கு நடுவில் திருமகள் வீற்றிருக்கிறாள்
விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலக்ஷ்மி ஆகும்.
ஸ்ரீ(செல்வம்), பூ(பூமி), சரஸ்வதி(கல்வி), ப்ரீதி(அன்பு), கீர்த்தி(புகழ்), சாந்தி(அமைதி), துஷ்டி(மகிழ்ச்சி), புஷ்டி(பலம்) ஆகிய எட்டு சக்திகளும்
அஷ்ட லக்ஷ்மிகள் என்று அழைக் கப்படுகிறார்கள்.
அஷ்ட லக்ஷ்மிகளும் திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால்
அவர் லட்சுமிபதி என கொண்டாடப்படுக்கிறார்..
அவர் லட்சுமிபதி என கொண்டாடப்படுக்கிறார்..
எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.
லக்ஷ்மிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது.
அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.
இந்த சக்திகளையே லக்ஷ்மியாக உருவகித்து வழிபடுகிறோம்...
இந்த சக்திகளின் மூலமாகத்தான் கல்வி, செல்வம், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து வரங்களும் அருளப்படுகின்றன என்பது ஐதீகம்..
வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மியின் திரு முன்பு தீபத்தினை ஏற்றிவைத்து திருவிளக்கின் முன் நின்று மகாலக்ஷ்மியைப் போற்றும் ஷோடச லக்ஷ்மி துதியை மனம் ஒன்றித் துதிக்க விளக்கின் சுடரில் திருமகள் மகிழ்ந்து இடம்பிடித்து பரிபூரணமான லக்ஷ்மி கடாட்சம் அருளிடுவாள் என்பதி ஐதீகம்..
ஆதிலக்ஷ்மி நமஸ்தேஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணீ
யசோதேஹி தனம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே
பரபிரம்ம சொரூபிணியான ஆதிலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். புகழைக் கொடு. தனத்தைக் கொடு. அனைத்து அத்தியாவசிய விருப்பங்களையும் அளிப்பாயாக.
சந்தானலக்ஷ்மி நமஸ்தேஸ்து புத்ரபௌத்ர ப்ரதாயினீ
புத்ரான்தேஹி தனம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே
சந்ததி சிறந்திட சந்தான பாக்யம் அளித்திடும் சந்தான லக்ஷ்மியே வணக்கம். எனக்கும் அந்தப் பேறினைக் கொடு. செல்வத்தைக் கொடு. நியாயமான எல்லா தேவைகளையும் நிறைவேற்று.
வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபிணீ
வித்யாம்தேஹி கலாம்தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே
பிரம்ம வித்யா தேவியின் வடிவினளான வித்யா லக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். வித்யையைக்கொடு. கலைகளைக் கொடு.
எல்லா நல் இஷ்டங்களையும் நிறைவேற்று.
தனலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வதாரித்ரிய நாசினி
தனம்தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே
அனைத்து வறுமைகளையும் நசிக்கச் செய்யும் தனலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். நீங்காத செல்வத்தைக் கொடு.
அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்.
தான்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வாபரண பூஷிதே
ப்ரஞாம் தேஹிச்ரியம் தேஹி சர்வ காமாம்ஸ்ச தேஹிமே
எல்லா விதமான உயர்ந்த ஆபரணங்ளையும் அணிந்து பிரகாசத்தோடு விளங்கும் தான்யலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். புத்திக் கூர்மையைக் கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. எனது எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்று.
மேதாலக்ஷ்மி நமஸ்தேஸ்து கலி கல்மஷ நாசினீ
ப்ரஞாம்தேஹி ச்ரியம்தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே
கலியின் கொடுமைகளை அழிக்கும் மேதாலட்சுமியே உனக்கு நமஸ்காரம். அறிவாற்றலான மேதைத்தனத்தை அளி. நிறைவான செல்வத்தைக் கொடு. சகல கலைஞானங்களையும் என் தேவையறிந்து கொடு.
கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வதேவ ஸ்வரூபிணீ
அஸ்வாம்ஸ்ச கோகுலம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே
அனைத்து தேவர்களின் அம்சங்களையும் கொண்ட கஜலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.குதிரைகளும்,பசுக்களும் நிரம்பிய கோகுலத்தைக்கொடு.
எனது எல்லா நல்ல எண்ணங்களையும் நிறைவேற்று.
வீரலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வகார்ய ஜயப்ரதே
வீர்யம்தேஹி பலம்தேஹி சர்வ காமாம்ஸ்ச தேஹிமே
எல்லாச் செயல்களிலும் வெற்றியைத் தரும் வீரலட்சுமியே உனக்கு வணக்கம்.தைரியத்தையும் பலத்தையும் கொடு.எல்லா நல்விருப்பங்களும் ஈடேற அருள்புரி.
ஜயலக்ஷ்மி நமஸ்தேஸ்து பராசக்தி ஸ்வரூபிணீ
ஜயம்தேஹி சுபம்தேஹி சர்வ காமாம்ஸ்ச தேஹிமே
பராசக்தி வடிவினளான ஜயலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். அனைத்திலும் எனக்கு வெற்றியைக் கொடு. சர்வமங்களங்களையும் அளித்திடு. சகல வேண்டுதல்களையும் ஈடேற்றிடு.
பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சௌமாங்கல்ய விவர்தினி
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே
உனது கருணை மனதால் சௌமாங்கல்யத்தை அளித்திடும் பாக்யலட்சுமியே உனக்கு நமஸ்காரம். நல்பாக்கியத்தைக் கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. சகல நலமும் வளமும் அளித்திடு.
கீர்த்திலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு வக்ஷஸ்தல ஸ்திதே
கீர்த்தம்தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே
மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் கீர்த்தி லட்சுமியே உனக்கு நமஸ்காரம். மங்காத புகழினைக் கொடு. நிறைவான செல்வத்தைக் கொடு. உன் விருப்பப்படி எனக்கு எல்லா நன்மைகளையும் அளித்திடு.
ஆரோக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வரோக நிவாரிணி
ஆயுர்தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே
எல்லாப் பிணிகளையும் தீர்க்கும் ஆரோக்ய லட்சுமியே உனக்கு நமஸ்காரம். நீண்ட ஆயுளைக் கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. நான் விரும்பும் வரமாக,அனைத்தையும் அனுபவிக்கும்படியான ஆயுளும் ஆரோக்யமும் எனக்குக் கொடு.
சித்தலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வசித்தி ப்ரதாயினீ
சித்திம்தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ் ச தேஹிமே
சர்வ சித்திகளையும் அளிக்கவல்ல சித்தி லட்சுமியே உனக்கு நமஸ்காரம். என் எல்லாச் செயல்களிலும் சித்தியினை அளித்திடு. குன்றாத வளமையைக் கொடு.எனக்கு விருப்பமானதும் நன்மை பயப்பதுமான பலன்களையும் கொடு.
சௌந்தர்ய லக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வாலங்கார சோபிதே
ரூபம் தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ் ச தேஹிமே
அழகு மிளிரும் சௌந்தர்யலட்சுமியே எழிலான ஆபரணங்களை அணிந்து மேலும் ஜொலிக்கும் உனக்கு வணக்கம். அழகான உருவத்தைக் கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு.என்மனம் போல் யாவற்றையும் குறைவின்றிக் கொடு.
ஷோடச லட்சுமி
சாம்ராஜ்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து புக்திமுக்தி ப்ரதாயினீ
மோக்ஷதேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ் ச தேஹிமே
புத்தியும் முக்தியும் அளிக்கக்கூடிய சாம்ராஜ்ய லட்சுமியே உனக்கு நமஸ்காரம். முக்தியைக் கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. எனக்குத் தேவையான புத்தியையும், சகல விருப்பங்களையும் அளித்திடு.
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்கலப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா
மாங்கல்யத்தின் மூலம் மங்களத்தை வழங்கும் மங்களையே, மங்களாம்பிகையே எக்காலமும் மங்களத்தை அளிக்கும் மாங்கல்ய வளத்தை எனக்குக் கொடு.
சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
அனைத்து மங்களங்களையும் மாங்கல்யத்தையும், ஆரோக்யம், ஆயுள் உள்ளிட்ட எல்லா நலன்களையும்,எல்லா செல்வங்களையும் அளிக்கக்கூடியவளே. த்ரயம்பகியே, நாராயணியே உன்னைச் சரணடைகிறேன்.
சுபம்பவது கல்யாணி ஆயுராரோக்யம் சம்பதாம்
மமசத்ரு வியாதி விநாசாய தீபஜ்யோதி நமோஸ்துதே
கல்யாணியே சுபம் கிடைக்க அருள்க. ஆயுள், ஆரோக்யம், செல்வமும் அருள்வாயாக. என் எதிரிகளையும் பிணிகளையும் நசிக்கச் செய்திடுக. தீபஜோதியான திருவிளக்கே, தீபலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||
- என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்கிறோம்..
1 ஆவாஹனம் : இறைவனை தியானம் செய்து அழைத்து
புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்கிறோம்
ஆசனம் : அமர ஆசனம் கொடுத்து பாதங்கள்ல நீர் வார்த்து கைகளில்நீர் வார்த்தல்
2 ஆசமனம்- ஆசமனம் சம்ர்ப்பயாமி, அதாவது தண்ணீர் கொடுத்தல் நீராட்டல்;
3 உபவீதம் என்கிற பூணூல் அணிவித்தல்;
உடை அணிவித்தல் நகைகள் பூட்டுதல்
பூக்களால அர்ச்சனை;
4 தூபம் என்கிற வத்தியால் புகை காட்டுதல்; நெய் விளக்கு காட்டுதல்;
5செய்து இருக்கிற உணவை நிவேதனம் செய்தல்;
வெற்றிலை பாக்கு சமர்ப்பணம்;
6சூடம் காட்டுதல்;
மந்திரங்களாலும் துதித்தல்;
7ஸ்வர்ண புஷ்பம் என்று தங்க புஷ்பத்தை சமர்ப்பித்தல்;
சுற்றி வந்து பிரதட்சிண நமஸ்காரம் ;
8கண்ணாடி காட்டி, யானை/ ரதம் ஏதாவது ஒண்ணுல ஏத்திவிட்டு பிறகு
செய்த பூஜை பலன் எல்லாத்தையும் இறைவனுக்கே சமர்ப்பிக்கிறோம் இப்படி செய்கிறதை ஷோடோபசார பூஜை என்பது ஐதீகம்..
பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து,அங்க பூஜை செய்யது ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கிறோம்..
http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_15.html
பொன்மழை பொழிக ! பொழிக!! என்கிற பதிவில் ஆதிசங்கரர் அருளிய
கனகதாரா ஸ்துதி தமிழில் இருக்கிறது....
கனகதாரா ஸ்துதி தமிழில் இருக்கிறது....
காத்திருந்தது வீண் போகவில்லை. ஸ்ரீ ஷோடச லக்ஷ்மிபூஜையைக் கண்டு களித்து விட்டு பிறகு வருகிறேன். vgk
ReplyDeleteமஹாலஷ்மியின் அத்தனை அழகும் படங்களில் ஜொலிக்கிறது.தகவல்கள் நன்று.
ReplyDeleteலக்ஷ்மிதேவி பொறுமை மிக்கவள்.அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள். அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது என்ற வரிகளுக்குக்கீழே காட்டப்பட்டுள்ள படம் படு ஜோர்.
ReplyDeleteசெந்தாமரையில் வீற்றிருக்கும் அந்த கஜலக்ஷ்மி, தன் மருதாணியிட்ட கரங்களில் பொற்காசுகளை வீசுவது, புடவைக்கட்டு, கீழே பணக்கட்டு, ரவிக்கை, ஆபரணங்கள் எல்லாமே ஜோர் ஜோர் - பிரைட்டோ பிரைட்.
அந்த ஓவியர் அதை வெகு அழகாக வரைந்துள்ளார். பார்க்கவே எனக்குப் பரவஸமாக உள்ளது.
அந்தப்படம் சிரித்த முகத்துடன் மிகச்சிறப்பாக உள்ளது. நல்ல லக்ஷணமாக உள்ளது. லக்ஷ்மீகரமாக உள்ளது. ஓவியர் கொண்டையா ராஜூ என்பவரால் வரையப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு இது போன்ற சர்வ லக்ஷணங்களுடன் பார்க்கப் பரவஸம் ஏற்படுத்தும் படங்களைத்தான் வாங்கவோ பூஜை அறையில் வைத்துக்கொள்ளவோ மிகவும் பிடிக்கும். அதுபோன்ற படங்களைப் பார்க்கும் போது மனதுக்கு ஒரு சந்தோஷமும், அந்த அம்பாள் நம்முடன் பேசுவது போலவும் இருக்கும். திருச்சி வாணப்பட்டரை மரியம்மன் கோயில், குருக்கள், அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, சிரித்த முகமும், செவ்விதழ்கள் கொண்ட வாயும் கொண்டு வருவார் பாருங்கள்! அது ரொம்ப ரொம்ப ஜோராக இருக்கும்.
ReplyDeleteஎவ்வளவோ தடவை அருகிலேயே இருந்து வெகு நேரம் ரஸித்துள்ளேன். அதுபோல அந்த மகமாயீக்கு அபிஷேகம் செய்து, நாம் வாங்கித்தரும் புடவையை அழகாக விசிறி மடிப்புடன் ஜம்முன்னு கட்டி விடுவார் பாருங்கள். அடடா! எல்லாமே ஒரு அபூர்வக்கலை தான்.
வெள்ளிக்கிழமைக்கான பதிவில் பல்வேறு லக்ஷ்மிகளைக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteகடைசியில் காட்டியுள்ள கோபுரம் நல்ல அழகாக உள்ளது. பார்த்ததில் இன்றும் எங்களுக்குக் கோடி புண்ணியம்.
தேர் ஊர்வலம் சூப்பரோ சூப்பர்.
யானைகள் ஊர்வலமும், தெப்பத்தை விளக்குடன் காட்டியுள்ளது நல்ல அழகு. அதற்கொரு ஸ்பெஷல்
சபாஷ்!
My Lord Ganesh always Bless you! என்ற எழுத்துக்களும், தீபாராதனையும் மாறி மாறி நம் தொந்திப் பிள்ளையாருக்கு வருவது, பிரமாதமாக உள்ளது. அடுத்துள்ள பிள்ளையார் எரியும் தீபச்சுடருடன் காட்டியுள்ளதும் OK
புலிமேல் அமர்ந்துள்ள வீர லக்ஷ்மியைச் சுற்றி மின்னும் விளக்குகள் பிரமாதம்.
ReplyDeleteஒருசில படங்களுக்கு ஏற்கனவே நான் வர்ணித்துக் கருத்துக்கள் கூறியிருப்பதால் [உதாரணமாக மேலிருந்து 3 வது படம்] இப்போது அவற்றை சாய்ஸ் இல் விட்டு விட்டேன். எல்லாமே உங்களிடம் கற்றுக்கொண்டது தான். ;((((
கிரஹப்பிரவேச வீட்டில் பசு மாடு+கன்றுக்குட்டியை அழைத்து வருவதன் தாத்பர்யம்,
ReplyDeleteலக்ஷ்மிபதி என்ற பெயர் பெற்ற பெருமாள்,
ஸ்ரீசூக்தம் சொல்லும் லக்ஷ்மிக்குப் பிடித்த யானையின் பிளிறல் சப்தம்,
பல்வேறு ஸ்லோகங்கள்,
அஷ்ட லக்ஷ்மி பற்றிய செய்திகள்,
பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம்,அன்பு, புத்தி அடடா அவளே லக்ஷ்மி, நித்ய சுமங்கலி, மஞ்சள் பட்டு உடுத்தி, திருமாலின் மார்பில் குடியிருப்பவள் - மிகவும் அருமையான ஜோரான விளக்கங்கள்.
ஒரு சில படங்களும், விளக்கங்களும் ஏற்கனவே சில பதிவுகளில் கொடுத்திருந்தாலும், பார்க்கப்பார்க்கப் படிக்கப்படிக்க, மிகவும் ருசியாகவே உள்ளன.
ReplyDelete364 ஆவது பதிவும் கொடுத்து மிகப்பெரிய சாதனை நிகழ்த்தி விட்டீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
இந்தப்பதிவினை பார்க்கும் படிக்கும் அனைவருக்குமே
“பொன்மழை பொழிக! பொழிக!”
ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்துதியின் தமிழாக்கமா!,
அருமைதான், அதற்கும் பாராட்டுக்கள்.
vgk
ஒரு சில படங்களும், விளக்கங்களும் ஏற்கனவே சில பதிவுகளில் கொடுத்திருந்தாலும், பார்க்கப்பார்க்கப் படிக்கப்படிக்க, மிகவும் ருசியாகவே உள்ளன.
ReplyDelete364 ஆவது பதிவும் கொடுத்து மிகப்பெரிய சாதனை நிகழ்த்தி விட்டீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
இந்தப்பதிவினை பார்க்கும் படிக்கும் அனைவருக்குமே
“பொன்மழை பொழிக! பொழிக!”
ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்துதியின் தமிழாக்கமா!,
அருமைதான், அதற்கும் பாராட்டுக்கள்.
vgk
லஷ்மிதேவிக்கு இத்தனை பெயர்களா.தொகுப்பு அற்புதம் தோழி !
ReplyDeleteகீழிருந்து இரண்டாவது படத்தில் மொய்மொய் என்ற மக்களின் கூட்டத்தை முழுவதுமாக போட்டோ கவரேஜ் செய்துள்ளது சூப்பராக உள்ளது.
ReplyDeleteஅதுபோல கீழிருந்து ஐந்தாவது படத்தில் பஞ்சக்கச்சம் கட்டிய கருடாழ்வார், தன் வளைந்த மூக்குடன், சிறகுகள் விரித்துப்பறக்க அதன் மேல் மஹாலக்ஷ்மியை, மஹாவிஷ்ணு அணைத்தபடி அமர்ந்து, பறப்பது போலக்காட்டியுள்ள படம் விசித்திரமாக வரையப்பட்டுள்ளது. சற்று நழுவினாலும் கீழே பாற்கடலில் விழுந்துவிடுவார்களோ என்ற பயம் நமக்கு ஏற்படுகிறது.
கருடனுடன் செல்லும் திருமாலுக்கும் தேவிக்கும் பயமாவது! உலகையே காக்கும் கடவுளர் அல்லவா! ;))))
ஆவாஹனம் செய்வதிலிருந்து, ஆசமனம், உபவீத தாரணம், தூப தீபம், நிவேதனம், தாம்பூலம், கற்பூர தீபம், மந்த்ர புஷ்பம் ஸ்வர்ண புஷ்பம், பிரதக்ஷணம் நமஸ்காரம், வாத்யம் முதலிய சமர்பித்து ஷோடோபசார பூஜை செய்வதையும், எல்லாப்பலன்களும் இறைவனுக்கே செல்வதாகச் சொல்லும்
ReplyDelete“காயேநவாசா ... ஸ்ரீமந் நாராயணாயேது ஸமர்ப்பயாமி” என்று சொல்லி தீர்த்தம் தெளிப்பது; பிறகு ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி அக்ஷதை ஸமர்ப்பிப்பது வரை வெகு அழகாக சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள். பாராட்டுக்கள்.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
ReplyDeleteசரண்யே த்ரயம்பகே தேவ் இ நாராயணி நமோஸ்துதே
என்பது எவ்வளவு ஒரு அழகான ஸ்லோகம்.
அதன் அர்த்தத்தை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்களே! மிக்க மகிழ்ச்சி.
ஒவ்வொரு லக்ஷ்மியிடமும் ஒவ்வொரு ஸ்லோகம் சொல்லி, தனம் கொடு, தான்யம் கொடு, மாங்கல்ய பாக்யம் கொடு, ஐஸ்வர்யம் கொடு, வீரம் கொடு, ஸத் சந்தான பாக்யம் கொடு எனத்தாங்கள் எழுதியுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது. படிக்கும் அனைவருக்குமே பலன் தரக்கூடியதாகும்.
ReplyDeleteஅஷ்டலக்ஷ்மிகளும் மட்டுமல்ல, தாங்கள் வேறொரு பதிவில் சொல்லிய பதினாறு லக்ஷ்மிகளும் உங்கள் இந்த அழகான எழுத்துக்கள் மூலம் எங்களுக்கும் இன்று இந்தப்பதிவின் வாயிலாக அருள் புரிகிறார்கள் என்பது ஸர்வ நிச்சயம்.
உங்களின் அன்றாட ஆன்மீக சேவை மிகவும் மகத்தானது. உங்கள் பதிவுக்கு தினம் வருபவர்கள் கோயிலுக்குச் சென்று வரும் புண்ணியத்தை மிகச் சுலபமாகப் பெற்றுவிடலாம். ;)))))
மேலிருந்து ஏழாவது படத்தில் காட்டப்பட்டுள்ள லக்ஷ்மிக்கு பலவித சிறப்புகள் உள்ளன. வலது அபயஹஸ்தத்தில் ஓம் என்ற எழுத்து. திரிசூலம், சக்கரம் (மின்னுது), வில், மின்னும் பூர்ணகும்பம், சங்கு, Ghaதை, போன்ற 8 கைகளுக்கு 8 பொருட்களும், சர்வ அலங்கார பூஷிதயாய், வளையல்கள் யாவும் மின்ன, காது ஜிமிக்கிகள் மின்னிப்பிரகாசிக்க, கிரீடத்தின் உச்சியிலும் மின்ன, எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல அந்த மெல்லிடையாளின் ஒட்டியாணம் ஜொலிக்கிறதே! ;)))))
ReplyDeleteபின்னால் ஒளிவட்டக் கதிர்களுடன்,
பிரைட் பளபளா நீலப்புடவையும், சிவப்புத் தலைப்பும், கரும்பச்சையில் ரவிக்கையுமாக ஜகத்ஜோதியாக மின்னுகிறாள் அந்த தேவியும். அது பாதம் வரை முழுப்படமாக காட்டப்படாததில் எனக்கு ஒரு சின்னக்குறை.
யானை நீராட்டியது, எட்டு செல்வங்கள், என்று பல அரும் தகவல்கள், பிரமாதமான படங்கள், அருமை சகோதரி உங்கள் முயற்சி அருமை. வாழ்க..வாழ்க...
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
வெள்ளியன்று பதிவின் மூலம் அனைவருக்கும்
ReplyDeleteலஷ்மி கடாட்ஷத்தை அறியவும்
அள்ளி வழங்கவும் செய்த தங்களுக்கு
மனமார்ந்த நன்றி
படங்களும் விளக்க்கக் குறிப்புகளும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
கருட வாகனத்தில் தம்பதி சமேதராய்
ReplyDeleteலக்ஷ்மி நாராயணன் ..
மனத்தைக் கவர்ந்த படம்..
லக்ஷ்மி கடாட்சம்.
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - இலக்குமியின பல படங்கள் - அரிய படங்கள் - ஒவ்வொன்றும் க்ண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது. விளக்கங்கள் அருமை. கடவுளின் கடாட்சம் எல்லோரிஅயும் சென்றடையும் வண்ணம் பதிவுகள் இடும் பாங்கு நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றாக இருக்கிறது.
ReplyDeleteவெள்ளியன்று அஷ்டலஷ்மியின் தரிசனம் கிடைத்து அருளைப் பெற்றோம்.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவெள்ளிக்கிழமைக்கான பதிவில் பல்வேறு லக்ஷ்மிகளைக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.
கடைசியில் காட்டியுள்ள கோபுரம் நல்ல அழகாக உள்ளது. பார்த்ததில் இன்றும் எங்களுக்குக் கோடி புண்ணியம்.
தேர் ஊர்வலம் சூப்பரோ சூப்பர்.
யானைகள் ஊர்வலமும், தெப்பத்தை விளக்குடன் காட்டியுள்ளது நல்ல அழகு. அதற்கொரு ஸ்பெஷல்
சபாஷ்!/
அருமையான ரசிப்புடன் சிறப்புடன் கருத்துரைகள் அளித்து பதிவினைப்பெருமைப்படுத்திய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
தங்கள் விளக்க உரைகள் என்னும் வெளிச்சத்தில் பதிவு அர்த்தம் நிரம்புகிறது.
shanmugavel said...
ReplyDeleteமஹாலஷ்மியின் அத்தனை அழகும் படங்களில் ஜொலிக்கிறது.தகவல்கள் நன்று./
ஜொலிக்கும் கருத்துரைக்கு
மனம் நிறைந்த நன்றிகள்..
ஹேமா said...
ReplyDeleteலஷ்மிதேவிக்கு இத்தனை பெயர்களா.தொகுப்பு அற்புதம் தோழி !/
அற்புத கருத்துரைக்கு
மனம் நிறைந்த நன்றிகள்..
kavithai (kovaikkavi) said...
ReplyDeleteயானை நீராட்டியது, எட்டு செல்வங்கள், என்று பல அரும் தகவல்கள், பிரமாதமான படங்கள், அருமை சகோதரி உங்கள் முயற்சி அருமை. வாழ்க..வாழ்க...
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அருமையான கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும்
மனம் நிறைந்த நன்றிகள்..
Ramani said...
ReplyDeleteவெள்ளியன்று பதிவின் மூலம் அனைவருக்கும்
லஷ்மி கடாட்ஷத்தை அறியவும்
அள்ளி வழங்கவும் செய்த தங்களுக்கு
மனமார்ந்த நன்றி
படங்களும் விளக்க்கக் குறிப்புகளும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்//
மிக அருமையான கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும்
மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
மகேந்திரன் said...
ReplyDeleteகருட வாகனத்தில் தம்பதி சமேதராய்
லக்ஷ்மி நாராயணன் ..
மனத்தைக் கவர்ந்த படம்..
லக்ஷ்மி கடாட்சம்.//
மனத்தைக் கவர்ந்த கருத்துரைக்கு
மனம் நிறைந்த நன்றிகள்..
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - இலக்குமியின பல படங்கள் - அரிய படங்கள் - ஒவ்வொன்றும் க்ண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது. விளக்கங்கள் அருமை. கடவுளின் கடாட்சம் எல்லோரிஅயும் சென்றடையும் வண்ணம் பதிவுகள் இடும் பாங்கு நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //
நல்வாழ்த்துகள் - நட்புடன்
நல்கிய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
Palaniappan Kandaswamy said...
ReplyDeleteநன்றாக இருக்கிறது.//
கருத்துரைக்கு
மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
கோவை2தில்லி said...
ReplyDeleteவெள்ளியன்று அஷ்டலஷ்மியின் தரிசனம் கிடைத்து அருளைப் பெற்றோம்.//
கருத்துரைக்கு
மனம் நிறைந்த நன்றிகள்
வெள்ளிக்கிழமை பலவித லஷ்மியின் தரிசனங்கள் செய்தோம். நன்றி
ReplyDeleteJust now i opened the p.c. after completed my pooja. I am very happy thinking that due to my sratha, i am able to view this much Lakshmis at one place. I am very very happy dear.
ReplyDeleteThanks a lot for this post.
viji
அருமை
ReplyDeleteதாங்கள் படைத்த இப்பதிவு பிரசாதம் மிக அருமை!
ReplyDeleteஅருமையான படங்கள். முதல் பெருமாள் படம் வெகு அருமை. தரவிறக்கிக் கொண்டேன்.
ReplyDeleteஇருகரம் குவித்து வணங்குமாறு! இறைபணி வளர்க!
ReplyDeleteமஹாலஷ்மியின் அத்தனை அழகும் படங்களில் ஜொலிக்கிறது.தகவல்கள் நன்று.
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
அருமையான படங்கள். பாராட்டுக்கள்..
ReplyDelete;) மஹா கணேசா! மங்கள மூர்த்தி!!
ReplyDelete1615+14+1=1630 ;)
ReplyDeleteஏதோ ஒரு பதிலாவது கிடைத்ததில் சந்தோஷம். நன்றி.
nalla massage
ReplyDelete