ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிகொண்டுள்ள ஆண்டாள் தான் வணங்கிய
ஸ்ரீ ரங்க அரங்கபெருமான் மீது தீராத காதல் கொண்டு மார்கழி மாதம் பாவை நோம்பு இருந்து மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாள்,
வையத்து வாழ் வீர்காள்,
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
ஆழி மழைகண்ணா, ஒன்றும் நீ
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என 30 பாசுரங்களை பாடி குற்றமொன்றுமில்லாத பகவானை அடைந்தாள்.
மனதுக்கு உகந்த மார்கழி மாத பிறப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அவர் இயற்றிய திருப்பாவை பாடல்கள் 30 இடம்பெற்று நெய்யப்பட்ட 16 ஜெக பட்டுப்புடவை அணிவிக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடத்தப்படுகிறது..
அஞ்சு குடிக்கு "ஒரு" சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்
மாணிக்கம், வைரத்தினாலான ஊஞ்சலில் அமரவத்து,
பட்டர்பிரான் கட்டி வைத்த திருநந்தவனத்தில் இருந்து தொடுத்து வந்த மலர் மாலை கொண்டு வந்து சார்த்தி,
அரங்கன் மார்பில் சாற்றிய சந்தனம் கொடுத்து,
கண்ணனின் தோள் அங்கவஸ்த்திரம் கொண்டு பொன்னாடை போர்த்தி,
உடுத்துக் களைந்த அரங்கனின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு!
திருமாலிருஞ்சோலை அழகனுக்கு நிவேதனம் செய்த அக்கார அடிசில் தந்து,
அவளின் உற்ற தோழியாம், பச்சைக்கிளி வந்து அவள் கையில் அமர,
ஆண்டிற்கு ஒரு முறை ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாசுரங்களை கொண்டு நெய்யப்பட்ட பட்டுப்புடவை ஆண்டாளுக்கு அணிவித்து சிறப்பு பூஜைகள் நிகழ்த்தப்படுகிறது..
பகவத் அனுபவம் தனிமையாக அனுபவிக்கக்கூடிய ஒரு அனுபவம் அல்ல. நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ப்ரபந்த சேவை, நாம சங்கீர்த்தன சேவை அனைத்தையும் கோஷ்டியாக அனுபவிப்பதே மரபு.
ஏனென்றால், மற்ற பொருட்களை அன்றி, பகவத் அனுபவம் பகிர்தலால் இரட்டிப்பு அடைகிறது என்று ஐதீகம்.
அதனால் தான் மதுரகவி ஆழ்வார் சொன்னது போன்று, ஆண்டாளும், தன்னை பாகவத் சேஷியாக பாவித்துக் கொண்டு பகவத் அடியார்களை (கோபிகைகளை) பகவத் அனுபவத்தில் நீராட அழைக்கிறாள்.
ஆண்டாள் வந்தாள்!
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்!
பட்டர்பிரான் திருமகள் வந்தாள்!
பாட வல்ல நாச்சியார் வந்தாள்!
திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!
திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!
ஞான செழிப்புமிக்க கோதை வந்தாள்!
அன்பை அருளச் செய்த ஆண்டாள் வந்தாள்!
திருமாலைப் பிரியாத நிலமகள் வந்தாள்!
உடையவள் வந்தாள்!
தோகை மயிலாள் வந்தாள்!
ஞானத் தலைவி வந்தாள்…’’
அப்படி இருக்க மார்கழி மாதத்துக்கு மட்டும் ஏன் இந்த ஏற்றம்?
இதற்கு இரண்டு விதமான விளக்கங்களை கொடுக்கலாம்.
ஒன்று, மார்கழி மாதம் அதிக வெயிலும் இல்லாத அதிக குளிரும் இல்லாத ஒரு மாதமாகிறது.
மிருகசீரிட நக்ஷத்திரத்துடன் பௌர்ணமி கூடி வரும் இந்த மாதமானது சீர்ஷ (உயர்ந்த) மார்கத்தை (வழியை, உபாயத்தை) பின்பற்ற அருமையான தருணமாக அமைகிறது.
இரண்டு, பௌர்ணமியில் ஜ்வலிக்கும் பரிபூர்ண மதி சம்பூரணமான அறிவு பெற ஏற்ற தருணம் என்பதை குறிக்கிறது. அதாவது, பகவத் அனுபவம் மூலம் நாம் பெரும் அர்த்த பஞ்சக ஞானமானது நிலவை போல் தேயாமல் நிரந்தரமாக நம்முடனே இருக்கும் என்று பொருள்.
ஆய்ப்பாடி சிறுமிகளை நீராட அழைப்பது போல், ஆண்டாள் இந்த உலகில் உள்ளோரை பகவத் அனுபவத்தில் ஆழ்ந்து இருக்க அழைக்கிறாள்.
(பகவானே என்னுடைய ஸ்வாமி என்ற படியால், நான் யார் என் ஆத்மாவை சமர்ப்பிக்க?
ஆண்டாளும் மார்கழி நீராட்டம் என்ற பெயரில், பகவத் அனுபவம் என்ற கடாக்ஷத்தை கோரி நாராயணனிடம் தனக்கு மட்டுமல்லாமல் இந்த கடல் சூழ்ந்த மண்ணுலகில் வாழ்வோருக்கும் சேர்த்து பறை கேட்கிறாள்.
ஒருநூற்று நாற்பத்து
மூன்றுரைத்தாள் வாழி.. உயர் அரங்கற்கே கண்ணி
உகந்தளித்தாள் வாழி..
ஞானம் பெற வேண்டி தங்கத் தலைவியின் பதிவாகிய ஞானத்தலைவி கோதையைக் கண்டுவிட்டு ஓடி வருவேன்.
ReplyDeleteஞானம் பெற வேண்டி தங்கத் தலைவியின் பதிவாகிய ஞானத்தலைவி கோதையைக் கண்டுவிட்டு ஓடி வருவேன்.
ReplyDeleteமுதல் படம் சரியாக திறக்க மறுக்கிறதே! ஒரு வேளை 16 கெஜப்புடவை அணிந்து கொள்வதால், திரை போட்டு மறைத்துள்ளிர்களோ!
ReplyDelete//அக்கார அடிசில் தந்து ஆண்டாளின் உற்ற தோழியாம், பச்சைக்கிளி வந்து அவள் கையில் அமர//
ReplyDeleteஆஹா, நாக்கில் நீரை வரவழைத்து விட்டீர்களே.
நீங்களே அந்தக்கிளி [உற்ற தோழி]
நாங்களே ஆண்டாள்[வாசக ரஸிகர்கள்]
தங்களின் பதிவுகளே [அந்த மிகச்சுவையான நிவேதனம் செய்த
அக்கார அடிசல்]
எனக்குத்தனியா அக்கார அடிசல் இப்போ உடனே வேண்டும். கிளி போலப் பறந்து வந்து தரமுடியுமா?
படங்கள் அனைத்துமே ரொம்ப ஜோராகக் கண்ணைப்பறிப்பதாக உள்ளன.
ReplyDeleteகடைசி மூன்று படங்களில் மூழ்கிப் போய் உள்ளேன். குதிரை வாகனம் ஜோர்.
அடுத்ததில் ஆண்டாள் அட்டகாசமாக
தனியே வர்ணிக்கப்பட வேண்டியது. ரோஜாப்பூ மாலை அடடா வெகு ஜோர்.
கடைசி படத்தில் ஆண்டாளுடன் ரெங்கமன்னார் கல்யாண கோலத்தில், பார்க்கவே மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
தொடர்வேன்.....
27 நக்ஷத்திரங்களிலேயே மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது மிருகசீர்ஷம், திருவோணம் முதலிய 3 அல்லது நான்கு நக்ஷத்திரங்களே.
ReplyDeleteசீர்ஷ = உயர்ந்த
மார்கத்தை (வழியை, உபாயத்தை)
மிருகசீர்ஷம்+பெளர்ணமி சேரும் மாதமாகிய மார்கழி விளக்கம் அருமையாகக் கொடுத்துள்ளீர்கள்.
அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.
முதல் படம்: தரிஸனம் ஆகவில்லை.
ReplyDelete2 ஆவது படத்தில் வைர, வைடூர்ய, பொன் நகைகளுடன் விசேஷ அலங்காரத்தில் பெருமாள் காட்சியைக் காணச்செய்துள்ளது எங்களுக்கு இன்று கிடைத்த பெரும்பாக்யம்.
3 ஆவது படத்தில் பெருமாளும் தாயாரும். சூப்பரோ சூப்பர். தாயார் கையில் தாம்பூலத்துடன், முழுத்தேங்காய், அதுவும் முரட்டுத் தேங்காய். மங்களமான மஞ்சள் தடவியது. பூர்ண பலம் கிடைத்தது போன்று திருப்தியாக உள்ளது. சபாஷ்!
அதே படத்தில் பெருமாளுக்கு மார்பில் பூணலும், அவர் கையில், தாயாருக்குக் கட்டிவிடப்போகும், மங்கள நாண் ஆகிய சரடும் காட்டியுள்ளது, வெகு விரைவில் நம் குடும்பங்களில் சுப கார்யங்கள் நடக்க இருப்பதைக்காட்டுவதாக உள்ளது.
ReplyDeleteஅதுபோல கடைசிக்கு முந்திய படத்திலும், அம்பாள் மேல் நிறைய திருமாங்கல்யச் சரடுகள், காட்டியுள்ளது, பார்க்கவே பரவஸமாக உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பற்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் அருமையான பதிவு. அத்தனை படங்களும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல் இருக்கின்றன. எங்களது மனப்பூர்வ நன்ற்களும், வாழ்த்துகளும்.
ReplyDeleteஅருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மிக மிக நன்றி அம்மா.
கோபிகைகளை பகவத் அனுபவத்தில் நீராட அழைக்கிறாள் என்ற வரிகள் அருமையான கருத்து. அதன் கீழேயுள்ள படம் அற்புதமானதொன்று:
ReplyDeleteதங்கத்தில் கொண்டையும், கிளியும், முகமும், பொற்பாதங்களும், நீண்ட காசு மாலையும், முத்து முத்தான ஆபரணங்களும், கழத்தினில் பளிச்சிடும் மிகப்பெரிய திருமாங்கல்யத்தின் சிறப்பழகும், என சொல்லிக்கொண்டே போகலாம் தான்.
ஒவ்வொரு பக்கமும் 3 கிளிகள் வீதம் வைத்து மொத்தம் ஆறு கிளிகள் காட்டியுள்ள ஆண்டாள் விக்ரஹம் பல்வேறு சிறப்புக்களுடன் ஜொலிக்கிறது. எவ்ளோ நகைகள் அணிந்து எவ்ளோ அழகாகக் காட்சி தருகிறாள்.
ReplyDeleteமார்பினில் மோதமொழங்க லாக்கோடி போல ஓர் ஆபரணம் நன்கு தூக்கலாகக் காட்டப்பட்டுள்ளதே, அது வெகு அருமை.
அதுபோல கையில் காட்டியுள்ள வைர, வைடூர்ய மாணிக்க மரகத கற்களுடன் கூடிய நகைகள் எவ்ளோ ஜோர்.
தண்டை போன்ற நகை அணிந்த பாதங்களும், பூக்களால் அலங்காரமும் சொல்லி மாளாத சிறப்பழகு தான்.
நேரிலேயே போய்ப்பார்த்த முழுத்திருப்தியை அளித்து விட்டீர்கள்.
ரொம்பவும் மனதுக்கு நிம்மதியைத் தருவதாக உள்ளது. அதை விட்டு வெளிவரவே தோன்றவில்லை.
அக்கார அடிசிலாய் சுவையுடன் அருமையாய் பதிவினைச் சிறப்பித்த அத்தனை கருத்துரைகளுக்கும் இதயம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
ReplyDeleteபதிவும் , படங்களும் அருமை ... என்னுடைய வலைத்தளத்தில் உங்களை இந்த வருடத்தில் நான் - தொடர் பதிவு ... எழுத அழைத்துள்ளேன் ... !
ReplyDeleteRathnavel said.../
ReplyDeleteஇனிமையாய் கருத்துரை வழங்கி வாழ்த்தியமைக்கு இனிய நன்றிகள் ஐயா..
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வாருக்கு சக்ஷாத் மஹாலக்ஷ்மியே ஆண்டாளாகக் கிடைத்தாள்.
ReplyDeleteஅதுபோல தாங்கள் எங்களுக்கு இந்தப்பதிவுலகில் கிடைத்த புதையலாக நான் உளமார நினைத்து மகிழ்கிறேன்.
பக்தியுடன், பகவானுக்கான மாலையை தானே முதலில் சூடிக்கொண்டு, தன்னை நிலைக்கண்ணாடியில் அழகு பார்த்து விட்டு, பிறகே கோயிலுக்குக் கொடுத்தனுப்பி பெருமாளுக்கு அதே மாலையை அணிவிக்க தன் வளர்ப்புத்தந்தை பெரியாழ்வார் மூலம் கொடுத்தனுப்புவாளாம் இந்த “சூடிக்கொடுத்த சுடர் கொடியாள்” ஆகிய ஆண்டாள்.
அதுபோலவே தான் தாங்களும். பூக்கள் போன்ற பலவிதமான அழகழகான பகவத் விஷயங்களையும், படங்களையும், எங்களுக்காகவே எங்கெங்கோ ஓடி ஓடி தேடித்தேடி சேகரித்து, அவற்றை (மாலை போல) பதிவாகத் தொகுத்து, தாங்களே பலமுறை அதைப்படித்து பரவஸமடைந்து, அதன் பின் [ஆண்டாள் பகவானுக்கு சமர்பிக்க அனுப்பி வைக்கும் மாலை போலவே] எங்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறீர்கள்.
ஆண்டாள் அனுப்பிய மாலைகளை மட்டுமே பகவான் பிரியத்துடன் ஏற்றுக்கொண்டார். அது போலவே உங்களின் பதிவுகளை மட்டுமே அதிக பிரியத்துடன் படித்துப் பரவஸமடைந்து, ஆண்டாளின் பாசுரங்கள் போல இனிமையாக இல்லாவிட்டாலும், ஏதோ எனக்குத் தோன்றியவற்றை கருத்துக்களாகத் தொகுத்து வழங்கிக்கொண்டு வருகிறேன்.
இதனால் என் மனம் தினமும் கொஞ்ச நேரமாவது பகவத் ஸத்விஷய்ங்களில் ஈடுபடுவதால், மற்ற கவலைகளை சற்றே மறக்க முடிகிறது, என்பதில் ஒரு சின்ன அல்ப சந்தோஷம் ஏற்படுகிறது.
அதனால் முடிந்தவரை இந்தப்பகுதியை அதாவது என் கருத்துரைகளை, விளக்கவுரைகளை தொடர விரும்புகிறேன். [அதுவும் உங்களுக்கும் மற்ற யாருக்கும் ஆட்சேபனை இல்லாத பக்ஷத்தில்] தொடரலாம் தானே!
தங்களிடம் அருள் வாக்கு வேண்டுகிறேன்.
கச்சிதமாக பத்தே பத்து (ஆனாலும் அனைத்துமே அருமையான முத்து, சொத்து) படங்களுடன், கவர்ச்சிகரமான விளக்கங்களுடன், மிகப்பெரிய பதிவாகவும் இல்லாமல் மிகச்சிறிய பதிவாகவும் இல்லாமல், நடுத்தரமான நல்ல தரமான மற்றும் சிறந்த பதிவாக அமைந்துள்ளீர்கள்.
ReplyDeleteமகிழ்ச்சியாக உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நன்றிகள். பிரியமுள்ள vgk
சுவர்க்க வாசல் எப்போது திறக்கும் என்று வைகுண்ட ஏகாதஸிக்கு முதல் நாள் இரவே ஸ்ரீரங்கம் கோயிலில் போய், படுத்துக்கொள்வார்கள்.
ReplyDeleteஅதுபோல நான் இப்போது தூங்காமல் விழித்திருந்து வேறு வேலைகள் பார்த்துக்கொண்டிருந்ததில், தங்கள் பதிவின் முதல் படம் இரவு 12.35க்கு எனக்கு காட்சி கொடுத்தது.
அது நல்ல அழகோ அழகு.
தங்கத்திலோ தங்கக்கலரிலோ திருவாசி, நடுவிலே நாமம். இரண்டு பக்கம் தூண்கள் அதுவும் தங்கக்கலரிலே. ஸ்வாமியும் ஆண்டாளும் அழகாக சேவை சாதிக்கிறார்கள். நல்ல அலங்காரம். புஷ்ப மாலைகள், மிகப்பெரிய காசு மாலை. பொருத்தமான ஆபரணங்கள். அழகான புடவை + வேஷ்டி கட்டுகள். மேலே பூப்பந்தல்.
ஜகத்ஜோதியாக உள்ளதே!
இதைத்தங்களால் கண்டு களிக்க முடிந்தது என் மிகப்பெரியதொரு பாக்யமாகக் கருதி மகிழ்கிறேன்.
அதற்கு ஒரு அடிஷனல் நன்றியை இப்போ தயவுசெய்து வாங்கிக்கோங்கோ! vgk
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - மற்றும் அருமை நண்பர் வை.கோ
ReplyDeleteபதிவினைப் படிப்பதா - படங்களைப் பார்த்து இரசிப்பதா - பெருமாளையும் ஆண்டாளையும் துதிப்பதா - வை.கோவின் விளக்க உரையினைப் படித்து மகிழ்வதா ? அத்தனையும் செய்ய ஆண்டவன் அருள் கிட்டும். அத்தனையும் செய்து மகிழ்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மூன்றாம் படம் மிக மிகப் ப்டித்திருக்கிறாது - திருமணக் கோலம் - பெருமாளும் தாயாரும் - தாயார் கையில் தாம்பூலம் - முழுத்தேங்காய் - பசு மஞ்சள் தடவிய முழுத் தேங்காய் - பெருமாளோ இது மாதிரி மணக் கோலத்தில் அமர்த்நிருக்கும் கோலம் பார்த்த்தில்லை. பட்டு வேட்டி - கெண்டைச் சரிகை. கையில் தயாராக தாலி தாயாருக்குக் கட்டுவதற்கு. கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அழகு - வைர வைடூரிய நகைகள் - மணம் பரப்பும் புஷ்ப அலங்காரம் - புன்சிரிப்புடன் மண மக்கள் - பட்டுப் பீதாம்பர அலங்காரப் ப்ரியன் பெருமாள் - தாயார் திருமணம் அப்படியே மனதில் ஓடுகிறது. மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteகோதையின் புகழ்பாடும்
ReplyDeleteஅழகிய பதிவு.
cheena (சீனா) said...
ReplyDeleteமூன்றாம் படம் மிக மிகப் ப்டித்திருக்கிறாது - திருமணக் கோலம் - பெருமாளும் தாயாரும் - தாயார் கையில் தாம்பூலம் - முழுத்தேங்காய் - பசு மஞ்சள் தடவிய முழுத் தேங்காய் - பெருமாளோ இது மாதிரி மணக் கோலத்தில் அமர்த்நிருக்கும் கோலம் பார்த்த்தில்லை. பட்டு வேட்டி - கெண்டைச் சரிகை. கையில் தயாராக தாலி தாயாருக்குக் கட்டுவதற்கு. கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அழகு - வைர வைடூரிய நகைகள் - மணம் பரப்பும் புஷ்ப அலங்காரம் - புன்சிரிப்புடன் மண மக்கள் - பட்டுப் பீதாம்பர அலங்காரப் ப்ரியன் பெருமாள் - தாயார் திருமணம் அப்படியே மனதில் ஓடுகிறது. மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
மகிழ்ச்சியான கருத்துரைகளும் வாழ்த்துரைகளும்
வழங்கிச் சிறப்பித்தமைக்கு
இதயம் நிறைந்த
இனிய நன்றிகள் ஐயா..
மகேந்திரன் said...
ReplyDeleteகோதையின் புகழ்பாடும்
அழகிய பதிவு./
அழகிய கருத்துரைக்கு
இதயம் நிறைந்த
இனிய நன்றிகள்
This comment has been removed by the author.
ReplyDeleteநேற்று ராஜ் டிவியில் ஆண்டாள் திருமணம் காட்டினார்கள்.
ReplyDeleteஇன்று உங்கள் பதிவில் பார்த்து பரவசம் ஆனேன்.
படங்கள் எல்லாம் தெய்வீகம்.
ஒரு பெண்ணை சிறப்பாக பாடும் போது
ReplyDelete"மாதங்களில் அவள் மார்கழி'
என்கிறார் கவிஞர்.
காரணம் நீங்கள் குறிப்பிடுவது போல் 'இதம்'
அதாவது அதிக குளிரும் இல்லை, அதிக வெயிலும் இல்லை.
அப்படிப்பட்ட இதமான வாழ்வை அருளும் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாளின்
அருள் கடாட்சங்களை, அருமை பெருமைகளை அறிய வைத்தமைக்கு
மிக்க நன்றி.
படங்கள் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்கின்றன .
ReplyDeleteAha
ReplyDeleteAha
Ahaha
Adi arpudam Rajeswari.
Valiya nee pallandu.
Valarka un eluthulga pani neendu.
Romba romba santhosham amma.
viji
நல்ல பதிவு. ரசித்தேன்.
ReplyDeleteசிறப்பான பதிவு களுக்கு பாராட்டுகள்
ReplyDelete;) மஹா கணேசா! மங்கள மூர்த்தி!!
ReplyDelete1694+14+1=1709 ;)
ReplyDeleteஒருவிரல் நுனியிலாவது தாங்கள் கொடுத்துள்ள கொஞ்சூண்டு அக்கார அடிசலுக்கு என் நன்றிகள்.
அன்பின் திரு சீனா ஐயாவின் உருக்கமான, நெருக்கமான ஜோரான பின்னூட்டம் மகிழ்வளித்தது. மிக்க நன்றி, ஐயா.
அன்புடையீர்,
ReplyDeleteவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/13.html