Thursday, December 29, 2011

பாந்தமாய் அருளும் பத்மாசனித் தாயார்


[photo+of+Laxmiji.jpg]
File:Tirupullani1.jpg
கண்ணன் கீதையில் "அச்வத்தம் ஸர்வ வ்ருக்ஷாணாம்' "நான் மரங்களுக்குள் அரச மரமாய் இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. 
 பதினைந் தாம் அத்தியாயத்தில், இந்த மாபெரும் உலகத்தை- வேர்ப் பகுதியை மேலே கொண்ட, கீழ்ப்பகுதியில் கிளைகளைக் கொண்ட தலை கீழாயுள்ள ஒரு அரச மரமாகக் கூறியிருக்கிறார். 
ஸ்ரீபகவாநுவாச
ஊர்த்வமூலமத:ஸாகமஸ்வத்தம் ப்ராஹுரவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித் 

இதுவே பாகவத புராணத்திலும் பேசப்படுகிறது. 

பாண்டிநாட்டு 18 திருப்பதிகளில் நான்காவது திவ்ய தேசமாக
விளங்குகிறது -புல்லாரண்யம் என்ற திருப்புல்லாணி.

ஸ்ரீராம பிரானே திருப்புல்லாணித்தலத்து பெரியபெருமாளை ஆராதித்ததை, திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் இருபது பாசுரங்களிலும் பெரிய திருமடலில் பாசுரத்திலும் (மன்னு மறை நான்கு) அருளிச் செய்திருக்கிறார்.

திருஞானசம்பந்தரும், அப்பரும் தத்தமது தேவாரப் பதிகங்களில் இத்தலத்தைப் பாராட்டி உள்ளனர். 
 வேறெங்கும் காணவியலாத அசுவத்தமும் (அரச மரமும்),
நாகத்தின்மீது நர்த்தனிக்கும் ஸ்ரீசந்தான கிருஷ்ணனும்,
கட்கம், கேடகம், கிரீடத்துடன் சேவை சாதிக்கும் தர்ப்பசயன 
இராமனும், மூலிகைசக்தி ததும்பிய சக்கரத் தீர்த்தமும்
திருப்புல்லாணிதலத்தின் சிறப்பம்சங்களாக விளங்கி,
நமது முற்பிறவி வினைகளை அறுத்தெறிகின்றன.

கல்யாண ஜெகந்நாதன், தெய்வச்சிலையார், கல்யாணவல்லித் தாயார், கல்யாண விமானம், ஹேம தீர்த்தம், சக்கரத் தீர்த்தம், அசுவத்த விருட் சம், கிழக்கே திருமுக மண்டலம், வீற்றிருந்த திருக்கோலம்,

புல்லாரண்ய க்ஷேத்திரம், தர்ப்பசயனம், புல்லாரண்ய மகரிஷிக்கு அசுவத்த நாராயணனாக காட்சி கொடுத்த தலம், சமுத்திர ராஜனுக்கு ஸ்ரீராமன் பிரத்தியட்சமாய் வரம் அருளிய இடம், 

திருமங்கையாழ்வார், பெரிய நம்பிகள், மணவாள மாமுனிகள் போன்ற பல மகான்கள் உகந்து அருளிய பெருமை மிக்க வைணவத் தலமாக பொலிவுடன் திகழ்கிறது. 

தினமும் காலை, உச்சிக்காலம், மாலை, அர்த்த ஜாமம் என நான்கு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன.

தேரோடும் வீதி, மாட வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களாக அமைந்துள்ள

 நாச்சியார், உபய நாச்சியாருடன் எம் பெருமான் குடிகொண்டுள்ளார்.

மூலவருக்கு தெய்வச்சிலையார், திவ்ய சாபர், ஸ்ரீஆதி ஜகந்நாதன் ஆகிய திருப்பெயர்கள் விளங்கியதாகக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. தெய்வச்சிலை பெருமான் நாயனார், திருப்புல்லாணி ஆழ்வார் என்பதாக சுவடிகளில் அழைக்கப்படுகிறது. 
பத்மாசனித் தாயார் 
Photobucket - Video and Image Hosting
தாயாரின் மூல விக்ரகத்துக்கும் உற்சவத் திருமேனிக்கும்
பத்மாசனித் தாயார் என்னும் ஒரே பெயர்தான் வழங்கப்படுகிறது. 

கோவிலின் வடக்குப் பிராகாரத்தில் மூலவர் தர்ப்பசயனப் பெருமாள் சயனக் கோலத்தில் பள்ளிகொண்டும்; உற்சவமூர்த்தி வீரவாளுடன் ஸ்ரீகோதண்ட ராமனாக சீதை, இலக்குமணன், விநய ஆஞ்ச னேயருடன் எழுந்தருளிக் காட்சி தருகிறார். மற்றொரு மூலவராக சீதை, இலக்குமணனோடு சேர்ந்து ஸ்ரீபட்டாபிராமர் காட்சி கொடுக்கிறார்.
ஸ்வஸ்திக விமானம், கல்யாண விமானம் (ஸ்ரீஆதிஜெகந்நாதர் சந்நிதி), புஷ்பக விமானம் (தர்ப்பசயன இராமன், பட்டாபிராமன் சந்நிதிகள்) என விமானங்கள் சிறப்பாக அமைந் துள்ளன.

சக்கரத் தீர்த்தம், ஹம்ச தீர்த்தம், வருண தீர்த்தம், தரும தீர்த்தம், இராம தீர்த்தம், அகத்திய தீர்த்தம் ஆகிய குளங்களும்; இரண்ய நதி, கண்வ நதி, க்ஷீ ர நதி என்னும் நதிகளும்; ஆதிசேது எனப்படும் கடலும் நம் கர்ம வினைகளைப் போக்கி, மோட்சம் தந்திட நம்மை வரவேற்கின்றன.

எனவே ஆற்றுநீர், குளத்துநீர், கடல் நீர் என மூன்று நீர்ப் பெருமை வாய்ந்த தலமாக இது உயர்ந்து நிற்கிறது.

தல விருட்சம்: கோவில் பிராகாரத்தில் வடமேற்கு மூலையில் தொன்மையான அரசமரம் தல மரமாய் நிற்கிறது.

அரச மரத்திற்கு வடக்கே சற்று தூரத்தில் பல நாகர் சிலைகளுடன் கூடிய பெரிய மேடை ஒன்றுள்ளது.

400 வருடங்களுக்குமுன் இங்குதான் இம்மரம் காணப்பட்டது. பின் தானாகவே கிளைகளைத் தரையில் தாழ்த்திக் கொண்டு மண்ணில் புதைந்து, பழைய இடத்தை விட்டு ஆலமரம்போல் நகர்ந்து வந்திருக்கிறது. 

இந்த மரத்தின் இலை மற்ற அரச மரங்களைப்போல் அல்லாது, 
இலை சிறுத்து, காம்பும், நுனிப்பகுதியும் நீண்டு இருக்கிறது. 

இம்மரத்தடியில்தான் புல்லவர், கன்வர், காளர் என்ற மும்முனிவர் ஸ்ரீமந்நாராயணனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தனர்.

இவர்களின் தவப்பயனால் இம்மரம் பொன்மயமாகி அஸ்வத்த நாராயணனாய் காட்சியளித்ததால், இம்மூன்று முனிவர்களும் மகிழ்வுற்று சாளக்கிராமம் பிரதிஷ்டை செய்து, பின்வரும் சந்ததியினருக்கும் கருமவினை தீர அருள்பாலிக்க எம் பெருமானிடம் வேண்டிக் கொண்டனர். 

பெருமாளும் முனிவர்கள் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, 
அஸ்வத்த நாராயணனாய் அமர்ந்து இன்றும் அடியார்க்குக் காட்சி தருகிறார்; வினை தீர்க்கிறார்.
இந்த அரசமரம் நாச்சியார் சந்நிதிக்குப் பின்புறம் கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது.

  "மருமலர் பிறந்த கோதை மருவி மகிழும் புல்லாணி வளர் அரசு' என்ற பாடலின் மூலம் நம் தாயார் இதை மருவி மகிழ்ந்து வருகிறாள் என்பதை உணரலாம்.

இது யுகங்களைக் கடந்த மரமாகும்.

பத்ம புராணத்தில், "க்ரியா யோக சாரம்' என்ற பகுதியில், அசுவத்த ஸேனம் (அரசுக்கு நீர் வார்த்தல்) வர்ணனைப் பகுதியில், பெருமாள் லட்சுமியைப் பார்த்து, "ஆயுர் விருத்தி, பவேத்தஸ்ய வர்த்தந்தே ஸர்வஸம்பத:' என்றார். 

 அரச மரத்தை எவனொருவன் பார்த்து வணங்கித் தொழுகிறானோ அவன் ஆயுள் வளரும்; செல்வம் பெருகும் என்று பொருள்.

திருமகளைப் பார்த்து, "அஸ்வத்த வ்ருக்ஷம் ஆஸாத்ய ஸதாலட்சுமி ஸ்திராபவ' என்று கூறுகிறார்.
 "லக்ஷ்மியே! நீ அரச மரத்தில் எப்பொழுதும் நிலையாக இருந்திடுவாய்' என திருமால் கூறுகிறார்.
புராணங்கள் அரச மரத்தை மும்மூர்த்தி சொரூபமாகப் போற்றுகின்றன . அடிப்பகுதி பிரம்ம வடிவம் , நடுப்பகுதி விஷ்ணு சொரூபம் , மேல்பகுதி சிவ வடிவம் என்கிறது ஒரு சுலோகம் . 

மரங்களின் அரசனான அரச மரத்தை வலம் சுற்றி வணங்கும் போது :

மூலதோ பிரம்ம ரூபாய மத்யதே விஷ்ணு ரூபிணே
அக்ரதச் சிவரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நம :

என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்குதல் வேண்டும் .
ஸ்ரீராமன் இத்தலத்தில் லங்கைக்கு அணை கட்டும்பொழுது, பெருமானுக்கு கைங்கரியம் செய்த அணில் களின் முதுகில் ஸ்ரீராமன் தன் திருக்கைகளால் தடவிப் பாராட்டினார் என்று வரலாறு எடுத்தியம்புகிறது. 

ராமபிரான் தர்ப்பைப் புல்லின் மேல் பள்ளி கொண்டார்
என்பதையும் அறிகிறோம்.

தர்ப்பையின் பெருமையை பத்ம புராணம் தெளிவாக விவரிக்கிறது. இது மூன்று வகை தோஷங்களைச் சமப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

உஷ்ண வீரியமுடையது;

நீரை சுத்தப்படுத்த வல்லது;
உலோகங்களின் அழுக்கைப் போக்கக் கூடியது;

தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் உகந்ததாயும் அமைகிறது.

புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது.

திருமணச் சடங்குகளில் மணப்பெண்ணின் இடுப்பில்
அரைஞாண் கயிறு போல் தர்ப்பையைத் திரித்துக் கட்டுவார்கள்.

தர்ப்பைக்கு அதிக வீரியம் உள்ளதால், அதன் வீரியம்
உயிர் அணுக்களைக் கூட்டி, சிசு தங்கி வளர வழி செய்து கொடுக்கும். 

கருவைத் தாக்கும் விஷக்கன்னி தோஷத்தை அறவே நீக்கிவிடும் பெருமையை உடைய தர்ப்பையை "அமிர்த வீர்யம்' என்று போற்று வார்கள். உலர்ந்து போனாலும் இதன் வீரியம் குன்றுவதில்லை.

குறிப்பாக சூரிய- சந்திர கிரகணங்களின்போது இதன் வீரியம் பல மடங்கு பெருகும் என்பதால், மோதிரமாய் இதனை அணிந்து, நீர் நிலைகளில் அதிகாலையில் தவறாது ஸ்நானம் செய்கிறார்கள்.

தர்ப்பைப் புல்பட்ட நீரைத் தெளித்தவிடத்தில் தொற்றுநோய் பரவாது. தர்ப்பைப் புல்லில்பட்ட காற்றினால் உடலின் ஆரோக்கியம் வளரும்.

[DSC02286[4].jpg]
[DSC02281[4].jpg]

[P1010415[2].jpg]
நிறைந்த நன்றிகள் http://thiruppul.blogspot.com/2010/03/4.html
[Thiruppulani+Gopuram.jpg]

[DSC02350[4].jpg]
திருப்புல்லாணி புஷ்ப யாகம்

[DSC02307[5].jpg]
DSC02298
தெப்போற்சவம்

26 comments:

  1. பத்மம்=தாமரை
    ஆசனி=ஆசனமாகப்பெற்றவள்

    பதமாசனி=தாமரையை தான் அமரும் இருப்பிடமாகக் கொண்டவள்

    ReplyDelete
  2. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அருமை அருமை - படங்களூம் அவைகள் பற்றிய விளக்கங்களும் - திருப்புல்லானித் திருத்தலத்தின் தல புராணம் - மகிமை நன்கு விளக்கப் பட்டுள்ளது. நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. திருப்புல்லானி திருத்தலத்தின்
    தல வரலாறு அறியத்தந்தமைக்கு
    நன்றிகள் பல சகோதரி.
    படங்கள் மிக அருமை.

    ReplyDelete
  4. முதல் படத்தில் மாறிமாறித் தோன்றி மறையும் மஹாலக்ஷ்மிகள் அருமை.
    இரண்டாவது படத்தில் ஜொலிக்கும் ஜெய் மா லக்ஷ்மியும் ஜோர்; மூன்றாவது படம் அடடா.... என் favourite படமல்லவா! அழகோ அழகு கொள்ளையழகு!;))))

    ReplyDelete
  5. ”நான் மரங்களுக்குள் அரச மரமாய் இருக்கிறேன் என்று கண்ணன் கீதையில் சொல்லியுள்ளதாலேயே பலருக்கும் உபநயனம் செய்து பெயர் வைக்கும் போது “அச்வத்த நாராயண ஸர்மா” என்று வைக்கப்படுகிறது. என் பெரிய அக்காவின் 6 பிள்ளைகளில், 2 ஆவது பிள்ளைக்கு இந்தப்பெயர் தான் ஸர்மாவாக வைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. திருப்புல்லாணி தலத்தின் சிறப்பு அம்சங்களை தங்களின் இந்தப்பதிவினால் நன்கு அறிய முடிந்தது.

    மூலிகைசக்தி ததும்பிய சக்கரத் தீர்த்தம்;))))

    முற்பிறவி வினைகள் அறுத்தெறியப்படும்;))))

    ReplyDelete
  7. மும்மூர்த்திகளும் குடிகொண்டுள்ள அரச பிரதக்ஷண ஸ்லோகம்+விளக்கம் அருமை.

    ”அமிர்த வீர்யம்” எனப்படும் தர்ப்பைகளைப் பற்றிய விசேஷங்களை அருமையாகவே விளக்கியுள்ளீர்கள்.

    திருமணமாகும் பெண்களின் இடுப்பில் சுற்றுவதன் நோக்கம், ஆசனமாகப்போட்டு அமர்வது, கைவிரல்களில் இடுக்கிக்கொண்டு சங்கல்ப்பம் பூஜை பித்ரு கார்யங்கள் செய்வது, கிரஹணகாலங்களில் கிருமிகள் அண்டாமல் இருக்க, உப்பிட்ட உணவுப்பண்டங்கள் அனைத்திலும் அவற்றைப்போட்டு வைப்பது என்று என்னெவெல்லாம் எச்சரிக்கையாக நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர் என்பதை நினைத்தாலே ஆச்சர்யமாக உள்ளது.

    தாங்களும் அவற்றை இங்கு கிருமி நாசினி, காற்றுப்பட்டாலே உடல் ஆரோக்யம் வளரும் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  8. அனைத்துப்புறப்பாட்டு அம்மன்களும் கருட வாகனங்களும் மிகச்சிறப்பாகவே காட்டியுள்ளீர்கள்.

    அம்பாளின் புடவைக்கட்டுகள் சற்றே விசித்திரமாக உள்ளன. விரைப்பாக டைட் பேண்ட் போட்டது போல இருக்கிறது அல்லவா

    ReplyDelete
  9. புஷ்பயாகப்படம் அழகான பூக்கோலம் போலவும் யாக குண்டம்
    போலவும் செய்யப்பட்டுள்ளதோ! ;))))

    அழகழகான புஷ்ப்பாஞ்சலிக் காட்சிகளும், மஞ்சள் சிவப்பு பச்சைக் கலர்களுடன் கலர்கலரான முரட்டு மாலையுடன் அந்த ஸ்வாமி புறப்பாடு வெகு அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

    பெருமாள் விக்ரஹம் அழகான மஞ்சள் தடவிய கல்யாண வஸ்த்ரத்துடன், கையகல மயில்க்கண் பார்டருடன் ஜோராக, நின்ற கோலத்தில், நர்த்தன முத்திரையில், பசுமஞ்சளில் இட்ட மிகப்பெரிய நாமத்துடன் நடுவில் சிவப்புக் குங்குமக்கோட்டுடன், கலர் மாலையுடன் திவ்ய தரிஸனமாக உள்ளது.

    மிக்க மகிழ்ச்சி. ;))))

    ReplyDelete
  10. பல்லாக்கில் ஸ்வாமி புறப்பாடு வெகு அழகாக ஜோராக உள்ளது. குட்டிக்குட்டி அசஞ்சாடிகளும், பட்டு மஞ்சள் கலரில் குஞ்சலங்களும் சூப்பராகத் தொங்கவிடப்பட்டுள்ளன, ;))))

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. ஆதி ஜகந்நாதர் கோயில் கோபுரம் நல்ல புதுப்பொலிவுடன் அழகாகக் காட்டியுள்ளீர்கள். 4 வெவ்வேறு கோணங்களில் கோபுரங்கள் தரிஸிக்க முடிந்தது.

    பசுமையான அரச இலைகளுடன் கூடிய மரக்கிளை படத்தில் ஜோராகக் காட்டப்படுள்ளது.

    இன்று 378 ஆவது வெற்றிகரமான பதிவை வெளியிட்டுள்ளதற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

    -oOo- vgk -oOo-

    ReplyDelete
  13. தெப்போற்சவம் போட்டோ கவரேஜ் மிகவும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.

    மொய்மொய்மொய்யென்று அந்த ஜனங்கள் கூட்டமும், சிகப்புக்கலர் நுழைவாயில்களும், நீரும், நீரினில் நிற்கும் ஜனங்களும் மரங்களுமாக எப்படித்தான் ஃபுல் கவேரேஜ் செய்யப்பட்டதோ. மிகவும் பவர்ஃபுல் கேமராவோ! யாரால் எடுக்கப்பட்டதோ?

    ReplyDelete
  14. வழக்கம் போல் டாப் கிளாஸ்.
    படங்கள் சேகரிப்பு பணி, பதிவை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்று நினைகின்றேன்..
    புத்தாண்டு வருகிறது ! என்ன பதிவு போடப் போகிறீர்கள்...?
    காத்திருக்கின்றோம்..
    மதனப் பெண் 36 - புத்தாண்டு வருகிறது !

    ReplyDelete
  15. அரச மரத்தையும், தர்ப்பைபுல்லையும் பற்றிய தகவல் அருமை!

    ReplyDelete
  16. படங்களும் பதிவும் வழக்கம்போல அமர்க்களம்.

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆதி ஜகந்நாதர் கோயில் கோபுரம் நல்ல புதுப்பொலிவுடன் அழகாகக் காட்டியுள்ளீர்கள். 4 வெவ்வேறு கோணங்களில் கோபுரங்கள் தரிஸிக்க முடிந்தது.

    பசுமையான அரச இலைகளுடன் கூடிய மரக்கிளை படத்தில் ஜோராகக் காட்டப்படுள்ளது.

    இன்று 378 ஆவது வெற்றிகரமான பதிவை வெளியிட்டுள்ளதற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.//

    தங்களின் அருமையான கருத்துரைகள் பதிவிற்கு விளக்க உரையாக அமைந்து பதிவினைப் பொலிவாக்குகின்றன ஐயா.

    சிறப்பான சிரத்தையான அத்தனைக் கருத்துரைகளுக்கும்
    மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  18. FOOD NELLAI said...
    திருப்புல்லாணித் திருத்தல தரிசனம் மனநிறைவு தந்தது. நன்றி./

    மனநிறைவு தந்த இனிமையான கருத்துரைக்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..

    ReplyDelete
  19. Advocate P.R.Jayarajan said...
    வழக்கம் போல் டாப் கிளாஸ்.
    படங்கள் சேகரிப்பு பணி, பதிவை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்று நினைகின்றேன்..
    புத்தாண்டு வருகிறது ! என்ன பதிவு போடப் போகிறீர்கள்...?
    காத்திருக்கின்றோம்..
    மதனப் பெண் 36 - புத்தாண்டு வருகிறது !/


    அருமையான கருத்துரைகளால் பதிவினைப் பெருமைப்படுத்தியமைக்கு இனிய நன்றிகள்..

    தங்கள் தளத்தில் எமது தளத்திற்கு வாழ்த்துரைகளுடன் வரவேற்பு அளித்தமைக்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  20. ரமேஷ் வெங்கடபதி said...
    அரச மரத்தையும், தர்ப்பைபுல்லையும் பற்றிய தகவல் அருமை!/

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  21. Lakshmi said...
    படங்களும் பதிவும் வழக்கம்போல அமர்க்களம்.///

    அமர்க்களமான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் அம்மா..

    ReplyDelete
  22. மகேந்திரன் said...
    திருப்புல்லானி திருத்தலத்தின்
    தல வரலாறு அறியத்தந்தமைக்கு
    நன்றிகள் பல சகோதரி.
    படங்கள் மிக அருமை./

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  23. Aha Aha
    What a post dear!!!!!!!!
    What pictures!!!!!!!!!
    I enjoyed every bit.
    Really you are doing a great great work Rajeswari.
    Here I had spent more than an hour to enjoy every bit of writings and pictures.
    Let the almighty give you all the health to continue further.
    viji

    ReplyDelete
  24. எல்லாப் படங்களும் விவரங்களும் அருமை. கடைசிப் புகைப்படத்தில் மக்கள் வெள்ளம் பிரமிக்க வைத்தது.
    திருப்புல்லாணி ஊர் பற்றியும் சில வரிகள் சேர்த்திருக்கலாமே?

    ReplyDelete
  25. ;) மஹா கணேசா! மங்கள மூர்த்தி!!

    ReplyDelete
  26. 1835+11+1=1847 ;)

    என் பின்னூட்டங்கள் பதிவினைப் பொலிவாக்கி விளக்க உரையாக அமைந்துள்ளதாகச் சொல்லியுள்ள ஓர் பதிலுக்கு நன்றிகள்.

    ReplyDelete