“நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயேமலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே!”
தாயேமலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே!”
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி அம்பிகை.
அணியும் அணிக்கு அழகு தருபவள் அம்பிகை.
மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத திருஉடையவள் அம்பிகை.
முதலும் முடிவும் இல்லாதவள்...
அணியும் அணிக்கு அழகு தருபவள் அம்பிகை.
மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத திருஉடையவள் அம்பிகை.
முதலும் முடிவும் இல்லாதவள்...
வைரத்தை பட்டை தீட்டினால்தான் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.
இந்த வைரத்தின் அடிப்பாகம் கூராக காணப்படும. உயரம் அதிகமிருந்தால் பூரிப்பும் அதிகம். ஸ்ரீசக்ர தத்துவத்தை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கமாக அமைத்திருக்கிறார்கள்..
இந்த வைரத்தின் அடிப்பாகம் கூராக காணப்படும. உயரம் அதிகமிருந்தால் பூரிப்பும் அதிகம். ஸ்ரீசக்ர தத்துவத்தை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கமாக அமைத்திருக்கிறார்கள்..
அகிலாண்டேஸ்வரி, நித்ய கன்னியென்பதால்,
திருவானைக்கா திருத்தலத்தில், சுவாமி-அம்பாள் திருமணம் கிடையாது.
அம்பிகையே அதிசயமானவள் குருவாக விளங்குகிற பராசக்தி, அகிலாண்டேஸ்வரி என்னும் வடிவில், உபதேசம் பெறும் சிஷ்யை ஆகிறாள். சிற்சில சமயங்களில் ஆண் வேடமும் பூணுகிறாள்.
. ஞானவாணியாக நிற்கிறாள்; வணங்குபவரை ஞானவான்கள் ஆக்குகிறாள்.
திருவானைக்காவில் நடைபெறும் பஞ்சப் பிராகார விழாவில்
(ஐந்து திருச்சுற்றுத் திருவிழா), ஆண் வேடம் அணியும் திருவிழாவை பிரம்மா செய்வதாக ஐதீகம்.
திருவானைக்காவில் நடைபெறும் பஞ்சப் பிராகார விழாவில்
(ஐந்து திருச்சுற்றுத் திருவிழா), ஆண் வேடம் அணியும் திருவிழாவை பிரம்மா செய்வதாக ஐதீகம்.
அம்பிகையை ஸ்ரீசக்ர நாயகி என்பார்கள். தாமரை இதழ்கள் முக்கோணங்கள், வட்டங்கள், பிந்து என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் குறிப்பிட்ட அமைப்பிலான சக்கரங்கள் அல்லது யந்திரம் உண்டு.
சக்கர அமைப்புள்ள கோயில்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்பது ஐதிகம்.
சிதம்பரத்தில் ரகசியம் என்று சொல்லப்படும் இடத்தில் "திருவம்பலச் சக்கரம்' என்னும் சிதாகாச சக்கரம் அமைந்துள்ளது.
மதுரை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வாயிலின் மேற்புறத்தில் தமிழ்வருடங்கள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் வரையப்பட்டுள்ளது.
திருக்கடையூரில் கால சம்ஹார மூர்த்தி சந்நதியில் செப்புத் தகட்டால் ஆன மிருத்யுஞ்ஜய யந்திரம் வழிபடப்படுகிறது.
கங்கை கொண்ட சோழபுரத்தில் சூரிய சக்கரம், கமல யந்திரம் என்று அழைக்கப்படும் விதத்தில் ஒரே பீடத்தில் சக்கர வடிவில் நடுவில் பெரிய தாமரையும், அதைச் சுற்றி சூரியன் நீங்கலாக எட்டுக் கோள்களும், 12 ராசிகளும் செதுக்கப்பட்ட அமைப்பு உள்ளது.
மாங்காட்டில் காமாட்சி ஸ்ரீ சக்கர வடிவாகவே விளங்குகின்றாள். பெரிய பீடத்தின்மீது அமையப்பெற்றுள்ள சக்கரமே அங்கு மூல காமாட்சியாக வழிபடப்படுகிறது. மூலிகைகளாலான அர்த்தமேரு சக்கரம் இது.
திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் சக்கரத்திற்கு என்றே தனியாக ஒரு சந்நதி உள்ளது. இந்தச் சக்கரம் உயரிய பீடம் இட்டு அதன்மீது நாகம் குடை விரித்தாற்போல் அமைக்கப்பெற்று பெரிய திருவாட்சியுடன் விளங்குகிறது.
காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மனின் முன்புறத்தில் ஸ்ரீ சக்கரம் ஒரு தொட்டி போன்ற அமைப்பிற்குள் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் பாதத்தின் கீழ் சடாட்சரச் சக்கரம் அமைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளியினாலான மிகப்பெரிய சக்கரம் காணப்படுகிறது.
திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியின் திருச்செவிகளில் விளங்கும் தாடங்கங்களில் ஸ்ரீசக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் முருகன் மார்பில் அணியும் பதக்கங்கள் அறுகோணமாக அமைக்கப்பட்டுள்ளன. இவை ஷாடாட்சரத்தைக் குறிப்பால் உணர்த்துகின்றன.
திருவாரூர் தியாகராஜர் திருமார்பிலும் சக்கரம் அமைந்துள்ளது.