Wednesday, January 25, 2012

ஹாங்காங் - நோவாவின் கப்பல்


Blue- Noah's Ark ((alwaysanangel69))©®

ஸத்ய வ்ரதஸ்ய த்ரமிலாதிபர்த்து: நதீஜலே தர்ப்பயதஸ் ததாநீம்: 
 கராஞ்சளெள் ஸஞ்ஜ்வலிதா க்ருதி:  த்வமதுர்ஸ்யதா” கஸ்சந பால மீந:” (நாராயணீயம்)

பிரளயம் முடிவில் தென் பகுதி அரசன் சத்யவ்ரதன்/ கைகளில் மீனாக மஹாவிஷ்ணு அகப்பட்டு ஓரிரவில் கமண்டலம் முழுதும் வளர்ந்தது! வேறு ஒரு பாத்திரத்தில் மீனை விட, அதிலும் இடமில்லை!

இப்படியே குளம், ஆறு, ஏரி, கடல், பெருங்கடல் என வளர்ந்தது மீன்! முனிவருக்கு மீன் யார் என்று தெரிந்தது.
அந்த மீன் தான் அனைத்து ஜீவ வித்துக்களையும் காப்பாற்றி சப்தரிஷிகளோடு சத்யவிரதனையும் படகில் ஏற்றித் தன்னிடம் வந்து சேரப் பணிக்கும்.  

இதேமாதிரி பைபிளிலும் நேவா என்னும் கப்பலில் ஜீவராசிகளை 
ஏற்றி பிரளயத்திலிருந்து காப்பாற்றியதாக அறிகிறோம்.. 
ஹாங்காங் சென்றிருந்தபோது நேவா கப்பலை
பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருந்த்து வியப்பளித்தது...
மா வான் தீவின் முழு நிலப்பரப்பின் தோற்றம் (விமானத்தில் இருந்து எடுக்கப்பட்டபடம்)
படிமம்:Hong Kong Bay.jpg
ஹாங்காங் நோவாகப்பல், இரண்டு தட்டுகளை கொண்ட நோவா பூங்காவும், பூங்காவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள தத்ரூப சிற்ப விலங்குகளும். அருமையாக வடிவமைக்கப்ப்ட்ட காட்சி
படிமம்:Noah's Ark and Tshing Ma Bridge.JPG
ஹாங்காங் விமான நிலையத்திற்கு செல்லும் சிங் மா பாலத்தின் கீழ் அமைந்திருக்கும் ஒரு சதுர கிலோ மீட்டருக்கும் குறைவான நிலப்பரப்பையே கொண்ட மா வான் தீவு (Ma Wan Island)...பாக் தீவு என்று அழைக்கப்படுகிறது..

வீட்டு குடியிருப்பு தொகுதிகளையும். ,  தொன்மையாக வாழும் கடல் தொழிலாளர்களும்  கொண்டது..

பண்டையச் சீனாவின் பழங்காலத் தொல்பொருள் சின்னங்கள் ஆய்வாளர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்ட 10 இடங்களில், இந்த மா வான் தீவும் ஒன்று ..

படிமம்:Noahspark.JPG
பாக் தீவில் மா வான் பூங்கா எனும் ஒரு பூங்கா உள்ளது. சுற்றிவர கடல் சூழ அமைந்த, சின்னஞ்சிறு தீவு, அழகான இயற்கை சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது.  
சிங் மா பாலத்தின் காட்சியை இத்தீவில் அருகிலிருந்து பார்க்கலாம். 
பாக்தீவுக்கு செல்லும் வழியும் இயற்கை சூழ்ந்த அழகான இடமாக இருப்பது இந்தத் தீவின் தனிச் சிறப்பாகத்திகழ்வதால் 
நோவாவின் கப்பல் இந்த தீவில் கட்டப்பட்டது...
படிமம்:நோவாவின் பூங்கா 1.JPG
நோவாவின் கப்பல் (Noah's Ark in Hong Kong) என்பது புனித நூல்களில் உள்ள நோவாவின் பிரளயம் தொடர்பான குறிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுத்து ஹாங்காங்கில், மா வான்எனும் குட்டித் தீவில், சிங் மா பாலத்திற்கு அடியில், வரும் உல்லாசப் பயணிகளை கவரும் விதமாகக் கட்டப்பட்ட ஒரு பிரமாண்டமானக் கப்பல்..... 
நோவாவின் கப்பலின் வெளிப்புறத்தில் உலாவும் உல்லாசப் பயணிகள்
படிமம்:நோவாவின் பேழை 4.JPG
சிறப்புடன் நோவாவின் பேழை குறித்து பைபிளில் கூறப்பட்டுள்ள அதே அளவுகளுடன் உருவாக்கப்பட்ட உலகின் ஒரே நோவாவின் பேழை இதுவாகும். 
 விளையாட்டு அரங்கம்
படிமம்:நோவாவின் பேழை 2.JPG
 கடல்மேல் கட்டப்பட்டிருக்கும் சிங் மா பாலத்தின்ஒரு தோற்றம்
படிமம்:நோவாவின் பேழை 5.JPG
படிமம்:長頸鹿.JPGபடிமம்:Noah's Ark Garden 13.JPGபடிமம்:Noah's Ark Garden 3.JPG
மா வான் தீவு கடற்கரையும், குடியிருப்புத் தொகுதிகளும்
படிமம்:மா வான் தீவு.JPG
Park Island (Ma Wan Island)
[P1090082[3].jpg]
christmasniagara2011

19 comments:

  1. ஹாங்காங் பயணம் செய்த அனுபவம் கிடைத்தது, நன்றி

    ReplyDelete
  2. நேற்றுப் (இலவங்கப்)பட்டையைப்பற்றி பட்டையைக்கிளப்பிய நீங்கள் இன்று எங்களை நோவாவின் கப்பலில் ஏற்றி எழுச்சியுடன் ’ஹாங்காங்’ குக்கே கூட்டிச் சென்று விட்டீர்களே!

    படங்களைப் பார்த்துப்பார்த்து வியந்து கொண்டே இருந்ததில், பின்னூட்டமிடமே மறந்து போய் (மெய் மறந்துபோய்) இருந்து விட்டேன்.

    பிறகு சரி லக்ஷ்மிகரமாக யாராவது முதன் முதலாகப்போய் பின்னூட்டமிட்டிருப்பார்கள் என்று நான் நினைத்தபடியே, நடந்து விட்டது.
    ; ))))

    மீண்டும் மீண்டும் ஒவ்வொன்றாக ருசித்து ரஸித்து மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப வருவேனாக்கும்! ;))))

    ReplyDelete
  3. ஒரு ஊரில் ஒரு பெரிய யானை இருந்ததாம், அதுக்கு ஒரு கொசு friend ஆக (நண்பனாக) இருந்ததாம் .... என்று மிகவும் நகைச்சுவையாக குழந்தைகளுக்கென்றே ஒரு கதை நான் சொல்வது வழக்கம். மெய் மறந்து அதைக் கேட்டு அவ்வப்போது சிரித்து மகிழ்வார்கள், என் பேரனும் பேத்தியும்.

    அந்த ஞாபகம் தான் வந்தது, தாங்கள் காட்டியுள்ள நோவாவின் கப்பலின் வெளிப்புறத்தோற்றத்தின் ஒரு பகுதியும், அதன் கீழே (கொசுக்கள் போல)காட்டப்பட்டுள்ள உல்லாசப் பயணிகளும். ;)))))

    ReplyDelete
  4. எந்த ஒரு பதிவினிலும் எந்த ஒரு சம்பவத்தையும், எப்படியாவது ஆன்மிகத்துடன் இணைத்து விடுவதில் உள்ள, தங்களின் புத்திசாலித்தனம், மிகவும் பாராட்டப்பட வேண்டியதே.

    சும்மாவா பின்னே! ஒரு துப்பறியும் படக்கதைக்கான போட்டியில் பீமனை இழுத்து வந்து இணைத்து, ”பீமனின் பராக்கிரமங்கள்” என்று முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஒரு சிறுகதையைப்படைத்து, அதற்கு பரிசும் பெற்றவர்கள் அல்லவா, நீங்கள்!

    கப்பல் என்றால் உடனே நினைவுக்கு வருவது மிகப்பெரிய கடல்.

    உங்கள் சிந்தனையில் அதுவே பாற்கடல்!

    பிறகு வருவது கடல்வாழ் உயிரினங்களும் மீன்களும்.

    உங்களுக்கோ ப்ரளயம், சத்யவிரதன், முனிவர், கமண்டலம், மஹாவிஷ்ணுவின் “மச்சாவதாரம்”

    பேஷ் பேஷ் .. ரொம்ப நல்லாயிருக்கு!

    அத்துடன் கூட விடுவீர்களா என்ன!
    பைபிள் என்ன சொல்கிறது, குரான் என்ன சொல்கிறது என்ற தங்கள் அறிவாற்றல் அந்த சமுத்திரத்தை விட நீள அகல ஆழம் உள்ளது. என்னை மிகவும் வியக்க வைக்குது. ;)))))

    ReplyDelete
  5. விமானத்திலிருந்து எடுக்கப்பட்டதாகச் சொல்லும், மா வான் தீவின் முழு நிலப்பரப்பின் தோற்றம், ஒரளவுக்கு நன்றாகவே Clarity யுடன், பதிவாகியுள்ளது வெகு அருமை.

    விளையாட்டு அரங்கம்,

    கடல் மேல் கட்டப்பட்டுள்ள சிங் மா பாலம்,

    விண்ணைத்தொடும் உயரத்திற்கு அழகழகாக அருகருகே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள்,

    பச்சைக்கலரில் கோலவடிவில் விரிக்கப்பட்ட வெல்வெட் மெத்தை போன்ற அந்தப் பசுமைப்பூங்கா,

    வானவில்லுடன், அனைத்து ஜீவராசிகளும் கப்பல் பயணம் செய்வது போன்ற அந்தப்படம்

    எல்லாமே அழகோ அழகாக உள்ளதே, எதைச்சொல்லி வர்ணிப்பது எதை விடுவது என்று தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்து விட்டீர்களே! ;)))))

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு.
    அழகான படங்கள்

    ReplyDelete
  7. விலங்குகளிலேயே மிக உயர்ந்ததாகத்திகழும் அந்த ஒரு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகள், இங்கொங்கொன்றும் அங்கொன்றுமாக திசைமாறித் திரும்பி நிற்கின்றனவே!

    காதலில் ஏதாவது ஊடலாக இருக்குமோ?

    இருக்கலாம் இருக்கலாம் அல்லது தனிமையில்லாமல் தவிக்கின்றனவோ?

    மனதை மயக்கும் அழகான் இரு மான் குட்டிகள். [கண்ணே கலைமானே....
    என்று கட்டிப்பிடித்து கொஞ்சணும்போல உள்ளனவே!

    அதனடியில் அந்த ஜோடி யார்?
    நரியாரா, ஓணாயா .... ?

    அதைப்பற்றி நமக்கென்ன ....

    அவைகளைப்பார்க்கும் போது நம் மான் குட்டிகளின் அழகு இன்னும் அழகாகி விட்டதே! ;)))))

    ReplyDelete
  8. காட்டியுள்ள இரண்டு வரிபுலிகளில், அந்தப் பாயவரும் புலி தத்ரூபம். இடது முன்னங்காலைச் சற்றே தூக்கியுள்ளதாகக் காட்டியுள்ளது, படைப்பாளியான சிற்பியின் தனித்திறமையைக் காட்டுவதாக உள்ளது.

    [உங்களின் பதிவிடும் திறமைக்கு முன்னால் அதுவெல்லாம் பெரிதல்ல என்று எனக்கு நன்றாகவே தெரியும்]

    மொத்தத்தில் தங்களின் இன்றைய 406 ஆவது பதிவு

    கலக்கலோ கலக்கல்!
    சூப்பரோ சூப்பர்!!
    திகட்டாத தேன் அமுது!!!

    அழகிய அருமையான ருசியான படங்களுடன் கூடிய அமர்க்களமான பதிவு.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.
    வாழ்க! வாழ்க!! வென வாழ்த்துகள்.
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    vgk

    ReplyDelete
  9. அழகோவியமாய் படங்கள்
    மனதில் நிலைகொண்டு விட்டன சகோதரி.

    ReplyDelete
  10. Kankavar padangal.
    Sirappana pathivu...
    Informative and nice photos in this special post...

    ReplyDelete
  11. “கரும்பாயிரப் பிள்ளையார்“ ...?
    Your blog not showing this post.. Why?

    ReplyDelete
  12. விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட படம் கொள்ளை அழகு !!!!
    ஒட்டக சிவிங்கிகள் உயிருள்ளவை என்றல்லவா நினைத்தேன் .
    காணக்கண் கோடி வேண்டும் .அழகான படங்கள்
    புற்களால் ஆன சூர்யகாந்தி பூவும் bumblebees உம் கண்ணைகவர்கின்றன/
    fabulous !!!!

    ReplyDelete
  13. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  14. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete
  15. அன்புடையீர்,
    வணக்கம்.
    தங்களின் வலைப்பதிவுகளில் சில,
    இன்று (14/06/2015), அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது
    அவரது வலை தளத்தில்: http://gopu1949.blogspot.in/
    என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete