ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்வண்ணங்களில் களங்கமற்ற வெண்மை நிறத்தில் கோடி சந்திரன் சேர்ந்த குளுமையான பிரகாசத்தில் ஞானம்அருளும் அவதாரமாகத் திகழ்கிறது அஞ்ஞான இருளில் மூழ்கிய உலகை ஞான ஜோதியால் விளங்கச்செய்த பெருமை ஒளிரும் அவதாரம் ஹயக்ரீவ அவதாரம் .
மஹாவிஷ்ணுவின் குரு வடிவம் ஹயக்ரீவ மூர்த்தி!
அயவதனப் பெருமாள்! பரிமுகச் செல்வன்!சரஸ்வதி தேவியின் ஆதி குருவாகவும் அகத்தியருக்கு ஆசானாகவும் திகழ்ந்தவர்..
சகல வித்தைகளுக்கும் ஆதாரம் ..
பரி வடிவில் வந்து பரிபாலிக்கும் அவதாரம்..
"முன்னிவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண
முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து
பன்னுகலை நூல் வேதப் பொருளை யெல்லாம்
பரிமுக மாயருளிய வெம்பரமன் காண்மின்''
-திருமொழி
மத்வாச்சாரியார் ஏற்படுத்திய எட்டு மடங்களில் ஒன்றான ஸ்ரீசோட் மடத்தின் அதிபதியாக இருந்த வாதிராஜர் தினமும் தொழும் தெய்வம் ஸ்ரீஹயக்ரீவர்...
சிற்பி ஒருவர் விநாயகர் விக்ரகம் பஞ்சலோகத்தில் செய்ய முற்பட்டு
அச்சில் வார்த்து எடுத்து பார்த்த பொழுது அந்த சிலை குதிரை முகமும்,நான்கு கைகளில் ஒரு கையில் புத்தகம்,ஒரு கையில் ஜபமாலை, ஒரு கையில் சங்கு இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன் அமைந்தது.
அதை எத்தனை முறை அழித்து செய்தாலும் விநாயகருக்கு பதில் ஹயக்ரீவ விக்ரகம் தான் வந்தது.
அவர் இந்த விக்ரகத்தை என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கையில் அன்றிரவு இந்த விக்ரகத்தை ஸ்ரீவாதிராஜரிடம் ஒப்படைக்கச் சொல்லி கனவு வந்தது.
வாதிராஜர் ஹயக்கீரவருக்கு கடலைப்பருப்பில் வெல்லம், தேங்காய் சேர்த்து செய்யப்படும் ஹயக்ரீவ மட்டி எனும் பிரசாதம் செய்து நிவேதனம்செய்வார்.
பூஜை முடிந்ததும் கதவுகளை மூடிக்கொண்டு பிரசாத பாத்திரத்தை தன் தலையில் வைத்துக்கொள்வார்.
ஸ்ரீ ஹயக்ரீவர் வெள்ளைக் குதிரை உரு கொண்டு வந்து தனது முன்னங்கல்களை வாதிராஜர் தோளில் வைத்து கொஞ்சம் பிரசாதமாக வைத்துவிட்டு மிச்சத்தை சாப்பிட்டு போகும் அதிசயம் நடந்தது.
கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் அஞ்ஞானத்தில் ஏற்பட்ட பொறாமையால் நைவேத்தியத்தில் நஞ்சைக்கலந்துவிட வாதிராஜரின் தோள்களில் தன் கால் பதித்து நைவேத்தியத்தை உண்ட் ஹயக்ரீவரின் குளம்புகளிலும் கால்களும் நீல நிறம் பரவி இறைவனின் திருமேனி முழுவதும் நீல நிறமானது....
பாத்திரத்தைத் தாழ்த்திய போது அதில் வழக்கம்போல் மீதம் நைவேத்தியம் இல்லாமல் வாதிராஜர் பெருந்துயரத்தில் ஆழ்ந்தார்.
” நான் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தேன்.
என் கையாலேயே பகவானுக்கு விஷம் கலந்த நைவேத்தியத்தைப் படைத்தேன், ஆனால் பகவான் தன் எல்லையற்ற கருணையினால் ஒரு துளிகூட மிச்சமில்லாமல் உட்கொண்டாரே !!! ” என வருந்தினார்.
இவரை அறியாமல் இக்குற்றம் நடந்தாலும் விஷத்தின் அறிகுறி பகவானின் திருவுருவில் தோன்றியது.
தாமே விஷத்தை உட்கொண்டிருந்தாலும் இவ்வளவு துன்பப் பட்டிருக்கமாட்டார் வாதிராஜர்.
பொழுது புலரும் வேளை, அர்ச்சகர்கள் கண்ணயர்ந்திருக்குக் சமயம், வாதிராஜரின் கனவில் கடவுள் தோன்றி, விதைகள் உள்ள ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, ” மட்டி ” என்ற ஊரில் இவ்விதைகளை விதையிடு. இவை காய்க்கும். காய்ந்த காய்களிலிருந்து 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படை. விஷத்திற்கு இது முறிவாக இருக்கும் ” என்று அருளிச்செய்தார்.
விழித்தவுடன் வாதிராஜர் ‘ மட்டி ‘ என்ற ஊருக்குச் சென்று அந்த விதைகளை விதைத்தார்.
அந்தச் செடியினில் காய்ந்த காய்களைக் கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படைத்தார்.
இவ்வாறு நைவேத்தியம் செய்யச் செய்ய, திருவுருவினின்று நீல நிறம் சிறிது சிறிதாக இறங்கிற்று.
48 நாட்களுக்குப் பிறகு சிறு நீல நிறக் கீறல் ஒன்றே நெஞ்சில் இருந்தது.
Shree Adbhut Hayagreeva Bhimeswaradeva Shaligram
Lakshmi Hayagreeva
கத்தரிக்காய்க்கு தெய்வ அம்சமும், நச்சுத்தன்மையை ( விஷம் ) முறிக்கும் சக்தியும் உண்டு.. அம்மை நோயை குணப்படுத்தவும் சிறந்த ஔஷதம் .
சமீப ஆராய்ச்சிகளில் இது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபணமாகியும் உள்ளது. இத்தகைய கத்தரிக்காயில் பல வகைகள் உள்ளது, அதில் சிறந்த வகைகளில் ஒன்றே ” மட்டிக்குள்ளா கத்தரிக்காய் ”
கடலைப் பருப்பை சிறிது வறுத்து விட்டு குக்கரில் குழைவாக வேகவைத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் பாலை வைத்து சுண்டக் காய்ச்சி, வெல்லம், தேங்காய்ப் பால், மசித்த கடலைப் பருப்பு, பாதி நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும்.
கலவை இறுகி அல்வா பதம் வந்ததும் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மீதி நெய்யில் ஒடித்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.ஹயக்ரீவபிரசாதம் தயார்.
ஒரு கப் கடலைப் பருப்பிற்கு ஒன்றிலிருந்து ஒன்னேகால் கப் சர்க்கரை என்ற அளவில் சர்க்கரையிலும் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் வரும ச்ரவண(திருவோண) நட்சத்திரத்தன்றும் ஸ்ரீஹயக்கீரீவருக்கு ஹயக்ரீவ ப்ராசதம் செய்து, மஞ்சள் நிறப்பூக்களால் அர்ச்சித்து, பூஜை செய்யலாம்.
ஹயக்ரீவ ஜெயந்தி ஆவணிமாத திருவோண நட்சத்தித்தன்று
கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியில் மஹாநவமி (சரஸ்வதி ஆவாஹனம்)
அன்றும் ஹயக்ரீவருக்கு ஆராதனைகள் நடைபெறுகிறது.