ஸ்ரீ எம்பார் முக்தக ஸ்லோகங்கள்.
ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வா s நபாயிநீ |
ததா யத்தத்ஸ்வருபா ஸா ஜீயாந்மத்விச்ரமஸ் த வீ ||
ஹ்ருதி நாராயணம் பச்யந் நாப்யகச் சத்ர ஹஸ்ஸதா |
யஸ்ஸ்வதாரரதெள சாபி கோவிந்தம் தமுபாஸ்மஹே ||
புஷ்யே புனர்வசுதினே ஜாதம் கோவிந்த தேசிகம் |
ராமானுஜ பதாம்போஜ ராஜஹம்சம் சமாஸ்ரயே ||
மங்களம் தேசிகேந்த்ராய மங்களம் குணசிந்தவே |
மங்களம் கோவிந்தார்யாய நித்யஸ்ரீர் நித்ய மங்களம் ||
இந்த எம்பார் சுவாமிகளின் ஸ்லோகம் தினமும் சொல்லி வருவதால் கண் குறைபாடுகள் நீங்கும் என்பது ஐதீகம்..
அன்று தன் ஆச்சரியரைக் காப்பாற்ற தன் கண்ணை இழந்தார், இன்று பலருக்கு கண்ணொளி வழங்குகின்றார்.
நெய் விளக்கு ஏற்றி வேண்டிக்கொண்டும், மதுர மங்கலத்திலும், கூரத்திலும் கர்ப்பகிரகத்தில் விளக்கேற்ற நெய் கொடுத்து வருவதும் பிரார்த்தனைகளாகும்..
தன்னுடைய கண்ணை இராமானுஜ தரிசனத்திற்காகக் கொடுத்தவர்
தன்னை வேண்டியவர்களுக்குக் கண் பார்வையைக் கொடுப்பவர்
'கண் கொடுத்த கூரேசர்'..
இராமாவதாரத்தில் ஆதி சேஷன் தம்பியாக இலக்குவணாக அவதரித்து சேவை செய்ததற்காக, கிருஷ்ணாவதாரத்தில் பெருமாள் கிருஷ்ணராகவும் ஆதிசேஷன் பலராமராகவும் அவதாரம் எடுத்தனர்.
பின்னர் கலியுகத்தில் பெருமாள் கூரத்தாழ்வராகவும், ஆதி சேஷன் இளையாழ்வாராகவும் அவதரித்து நம்மை உய்வித்தனர் என்பது ஐதீகம்.
ஒரு பிறவியில் செய்த சேவைக்காக பல் பிறவிகள் எடுத்து பதில் சேவையாற்றும் எம்பிரானின் எளிமை.
பெருமாளின் அம்சமாக பிறந்த கூரேசர் பெருமாளின் மார்பில் உள்ளது போலவே மறு பெற்றிருந்ததால் ஸ்ரீவத்சாங்கமிச்ரர் என்று வடமொழியிலும், திருமறுமார்பினர் என்று தமிழிலும் திருநாமம் பெற்றார்.
ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்களுள் ஒருவரான எம்பார் திரு நக்ஷத்திரம், தை புனர்வசு. சதா சர்வ காலமும் தமது ஆசார்யரது (உடையவர்) நிழலாக வாழ்ந்தவர் எம்பார் ஸ்வாமிகள் என்று துறவற நாமம் பெற்ற கோவிந்தப் பெருமாள்.
இவர் அவதரித்த ஊர் ஸ்ரீ பெரும் புதூருக்கு அருகில் இருக்கும் மதுர மங்கலம் என்னும் ஊர்.
முதலில் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டிருந்த எம்பாரை
ஸ்ரீவைஷ்ணவத்தை, குலாசாரத்தினை பின்பற்ற வைத்த பெருமை பெரிய திருமலை நம்பிகளைச் சாரும்
Sri Embar
பெரிய திருமலை நம்பிகளுடன் வாழ்ந்து எல்லா சாஸ்திரங்களையும், திவ்யப்ரபந்தங்களையும் கற்றார் எம்பார்..
சிறு வயதில் யாதவப் பிரகாசரது குருகுலத்தில் உடையவருடன் கல்வி கற்றவர் கோவிந்தப் பெருமாள்.
அப்போது உடையவருக்கு தீங்கு விளைவிக்க முயன்றபோது, அதிலிருந்து காப்பாற்றியவர்.
பிற்காலத்தில் உடையவரை விட்டகலாது, நிழல் போல் தொடர்ந்ததால் இவருக்கு 'ராமானுஜ பதச்சாயா' அதாவது ராமனுஜரின் நிழல் என்று போற்றப்படுகிறார்.
எப்போதும் ஆசார்யரது திருவடியில் வைராக்கியத்தை அறிந்த உடையவர், கோவிந்தப் பெருமாளுக்கு துறவறம் அளித்து தனது பெயரைச் சுருக்கி 'எம்பார்' என்று துறவற நாமம் கொடுத்தாராம்.
இவர் எப்போதும் ஆசாரியானே சர்வம் என்றும், பெருமாளது லீலாவிபூதிகளே வாழ்க்கை என்று காட்டியிருக்கிறார்.
எம்பெருமானாரின் பவித்ரம் கூரத்தாழ்வார் என்பது ஐதீகம்..
செல்வம் அல்ல உய்யும் வழி, உடையவர் திருவடிகளே உய்யும் வழி “என்று தனது சொத்து பத்துக்களையெல்லாம் கூரத்திலே விட்டு விட்டு அன்பு மனையாள் ஆண்டாளம்மாளுடன் திருவரங்கம் வந்து இராமனுஜருக்கு ஒரு பிரதான சீடராய் கூரேசர் தொண்டு செய்து வந்தார்..
கூரத்தாழ்வார்
கங்கை கொண்ட சோழபுரத்தை ஆண்டு வந்த உறையூர் சோழர் வம்சத்தில் வந்த கிருமி சோழன் (இரண்டாம் குலோத்துங்கன் )ஒரு தீவிர சைவர் .. நாலூரான் என்னும் துர்மதி கொண்ட அமைச்சர் துர்போதனைகளை அளித்து வைஷ்ணவ துவேஷியாக்கி விட்டார்.
இராமானுஜரிடம் சிவனே பெரிய தெய்வம் என்று எழுதி வாங்கி விட்டால் சைவ பெருமையை நிலை நாட்டி விடலாம் என்று தன் படை வீரர்களை திருவரங்கம் அனுப்பி வைத்த கொடிய நோக்கத்தை எம்பெருமானாரின் சகோதரி மகன் நடாதூராழ்வார் அறிந்து கொண்டு கூரேசருக்கு குறிப்பால் உணர்த்தினார்....
தமது ஆச்சாரியரை காப்பாற்ற வெள்ளை ஆடை அணிந்து மைசூர் தேசத்திற்க்கு தப்பி செல்ல கூறிவிட்டு தமது ஆச்சாரியனின் காவி ஆடையும் திரிதண்டத்தையும் எடுத்துக் கொண்டு அரச வீரர்களை தான் தான் இராமானுசர் என்று நம்ப வைத்து கங்கை கொண்ட சோழபுரம் சென்றார்..
ஆதிகேசவபெருமாள் - கூரத்தாழ்வான்
அரசவையில் சோழன் “சிவாத் பரதரம் நாஸ்தி” அதாவது சிவனைத்தவிர மேலான தெய்வம் இல்லை என்று எழுதி கையெழுத்திட கட்டளையிட்டான்.
எங்கும் சிவபெருமானைத் தாழ்த்தாமல் பல பிரமாணங்களுடன்
விஷ்ணுவே பரத்வம் என்று வாதிட்டார், கூரேசர்..
வந்திருப்பது இராமானுஜர் அல்ல என்ற உண்மையையும் நாலூரான் மன்னனுக்கு உணர்த்த கோபம் கொண்ட கிருமி சோழன் கூரத்தாழ்வாரின் கண்ணை பறிக்குமாறு ஆணையிட உன்னைப் போன்ற துரோகியைப் பார்ப்பதைவிட கண் இல்லாமல் இருப்பதே மேல் என்று கூரேசர் தன் கண்களை தானே எழுத்தாணியால் எடுத்து வெளியே எறிந்தார்.
தன் ஆச்சாரியரையும், ஸ்ரீ வைஷ்ணவத்தையும் காப்பாற்ற தன் கண்களை கொடுத்தார் கூரத்தாழ்வார்.
அரங்கநாதனை வனங்கி விட்டு தனது அத்யந்த சீடனை காண வந்த எம்பெருமானார் கண்ணிழந்த கூரத்தாழ்வாரை நோக்கி, “ த்ருஷ்டி பூதரான உமக்கு இப்படி கண் போனதே!”என்று திக்குகிறார்.
அதற்கு கூரேசர் “ யாராவது ஒரு வைணவரின் நெற்றியிலுள்ள திருமண் காப்பிணைப் பார்த்து கோணலாக உள்ளதே என்று நினைத்திருப்பேனோ! என்று பதிலுரைத்தாராம்...
தியாக சிகரமாகிய கூரத்தாழ்வார். இராமானுஜர் கூறியும் நாலுரானை தண்டிக்க பெருமாளீடம் வேண்டாத பெரும் கருணை வள்ளல் கூரத்தாழ்வார்...
சீடரே ஆனாலும் கூரேசர் எம்பெருமானாருக்கு வயதில் மூத்தவர், அவர் அரங்க நாதரிடம் இராமனுஜருக்கு முன்னாலேயே திருநாடு அலங்கரிக்கவேண்டும், தமது ஆச்சாரியர் அவ்விடம் வரும்போது அவரை தாம் வரவேற்க வேண்டும் என்று விண்ணப்பித்தார், அரங்கனும் அவ்வாறே அருளினார். Sri Vaikunda Perumal with Ubhaya Nachimars, Komalavalli Thayaar, and Andaal
அதை அறிந்த இராமானுசர் கூரேசரை சந்தித்து அவரின் அந்த முடிவை பற்றி விவாதித்து நிறைவாக அரங்கனின் திருவுள்ளம் அதுவானால் தமக்கும் அது சம்மதமே என்று கண்ணிழந்த கூரேசருக்கு அசீர்வாதமும் அளித்தார்
தனது ஆச்சாரியர் திருப்பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி இயற்றிய தனியன் இது ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் தினமும் அநுசந்திக்கும் தனியன்
யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ்ததிதராணித்ருணாயமேநே |
அஸ்மத்குரோர்பகவதோஸ்யதயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்யசரணௌ சரணம் ப்ரபத்யே. ||
வ்யாமோஹதஸ்ததிதராணித்ருணாயமேநே |
அஸ்மத்குரோர்பகவதோஸ்யதயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்யசரணௌ சரணம் ப்ரபத்யே. ||
என்னுடைய ஆச்சாரியரான இராமானுஜரின் திருப்பாதங்களே என்னுடைய ஒரே புகலிடம் ஏனென்றால் அவர் கருணைக்கடல். அவருக்கு பெருமாளுடைய திருவடிகள்தான் விபூதி மற்றவையெல்லாம் ஒன்றுமில்லை.
ஆச்சார்ய பக்தி,ஜீவகாருண்யம், நற்பண்பு, நல்லொழுக்கம், வைராக்கியம், பாண்டித்யம் அனைத்திற்க்கும் ஒரு விளக்கம். ஸ்ரீ வைஷ்ணவத்திற்க்கக தன் கண்களை இழந்து இன்று பல் வேறு அன்பர்களுக்கு கண்ணொளி வழங்கி வரும் கூரத்தாழ்வார் தாள் பணிவோம்.
கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்
நிறைவான நன்றிகள்...
சுவாமி எம்பார் திரு நட்சத்திர புறப்பாடு வைபவம் -- ஐப்பசி புனர்வசு..
Vaikunda Perumal’s temple at Maduramangalam
அபூர்வமான சாளக்கிரமங்கள்....
புறக்கண்ணின் நோய் தீர்க்கும் பெருமாளே ! நீ என்
ReplyDeleteஅகக்கண்ணைத் திறக்கும் நாள் எந்நாளோ ?
சுப்பு ரத்தினம்.
உங்களின் ஆன்மீகப் பதிவுகள் மன நிம்மதியை கொடுக்கின்றன , நன்றி !
ReplyDeleteஅதிர்ச்சியூட்டிய கதை. சாளக்கிரமம் என்றால் சங்கா? (சாக்லெட் படமும் அருமை)
ReplyDeleteஎம்பாரை , கூரேசர் என்பதெல்லாம் எனக்குப் புதுப் பெயராக உள்ளது. புதிய கதைகள். நன்றி . வாழ்த்துகள். (அதாவது சாமி கும்பிடாவிட்டாலும் கும்பிட்டவர் கூறக் கேட்பது புண்ணியம் என்பார்களே ! அது போல உங்கள் புண்ணியத்தில் நாமும் கொஞ்சம் புண்ணியம் சேர்ப்போம்).
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மிக்க மகிழ்ச்சி. கடவுள் கிருபை.
ReplyDeleteஎனது மூத்த தமக்கை தனது சினேகிதி மகள் கண் நோயால் அவதிப் படுவதாக நேரில் கூறிச் சென்றாள். நான் அவளுக்கு இந்த பதிவின் இணைப்பை அனுப்பி விட்டேன். உங்கள் மாபெரும் உதவிக்கு மனப்பூர்வ நன்றிகள். மனப்பூர்வ வாழ்த்துகள்.
வழக்கம்போல் அழகான படங்களுடன் கூடிய அருமையான தகவல்கள்.
ReplyDeleteஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஸ்வரூபமாக நினைத்து பஞ்சாயதன பூஜையில் நாம் வழிபடும் சாளிக்கிராமங்களில், சிலவற்றின் அபூர்வ வகைகளைக் அழகாகக் காட்டியுள்ளதற்கு நன்றிகள்.
உங்களுக்கு ஆன்மீகத் தோழி என்றே பெயர் வைத்துவிட்டேன்.எவ்வளவு கதைகள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் !
ReplyDeleteவழமைபோல் திரு உருவப் படங்களும்
ReplyDeleteவிளக்கமான அருமையான பதிவும் மிக மிக அருமை
குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்தோம்
பகிர்வுக்கு நன்றி
மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteஎப்போதும் போல் அரிய தகவல்கள் அடங்கிய ஆன்மீக பதிவு. இவ்வளவு தகவல்கலையும் சேகரித்து, பகிரும் உங்கள் உழைப்பை எண்ணி வியக்கின்றேன்.
ReplyDeleteRecently when my eyes affected, I have been advised to visit the temple.
ReplyDeleteI went there.
Really a remarkable change i found. The pattacharya there recit all these stories and very patiently performed poojas.
Here i am seeing the decarations of deits from your photos.
Wherein during my visit i am not able to see these decaraion.
That day was commonday and found very simple.
Thankyou Rajeswari for the valuable photos and the great post.
viji
I enjoyed all the salacramas. It is so divine.
ReplyDeleteviji
வழக்கம் போல படங்களும் பதிவும் அருமை நன்றி வாழ்த்துகள்.
ReplyDeleteகூரத்தாழ்வார் பற்றிய சிறப்பான தகவல் தொகுப்பு.படங்கள் அற்புதம்.பகிவுக்கு நன்றி மேடம்.
ReplyDeleteஅதிக வரலாற்றுத் தகவலை இந்தப் பதிவில் தெரிந்து கொண்டேன் . நன்றி எம்பாரை பற்றித் தெளிவு பெற்றேன்.
ReplyDeleteநிறைய தகவல். நன்றி. "கண் இப்படிப் போனதே" என்பதற்கு அவர் உரைத்த பதில்... என்னவென்று சொல்ல!!! நன்றி.
ReplyDeleteஉங்களின் ஆன்மீகப் பதிவுகள்நன்றி
ReplyDeleteவழக்கம் போல் அருமை....
ReplyDeleteவழக்கம்போல படங்களுடன் பதிவு அருமை
ReplyDeleteஉங்க எழுத்துக்கு ஒரு சின்ன அங்கீகரம் என் வலைப்பூவில்.., னேஎர்மகிடைக்கும்போது வருகை தரவும் அம்மா
ReplyDeletehttp://rajiyinkanavugal.blogspot.com/2012/02/blog-post_13.html
கண்ணு படப் போகுது.அருமை.
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDelete14. துரிதநிவாரண கோவிந்தா
ReplyDelete2281+2+1=2284
ReplyDelete