ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளினை சிவராத்திரி என்கிறோம். வருடத்தின் பன்னிரண்டு சிவராத்திரி நாட்களில், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியையே மகா சிவராத்திரி என்கிறோம்.
இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும்.
விஞ்ஞான ரீதியாகவே மகா சிவராத்திரி நாள், ஒரு மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருக்கிறது.
மகா சிவராத்திரி நாளன்று, கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது. அந்த நாளன்று விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ இயற்கையாகவே ஒரு சூழ்நிலை உருவாகிறது.
மிக நீண்ட வருடங்களாகவே இந்தியாவின் பல்வேறு புனிதத் தலங்களிலும் ஆலயங்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
புராணங்கள், இதிகாசங்கள், சான்றோர்கள் கூற்றுப்படி, இந்நாளின் இரவன்று உறங்காமல் விழித்திருப்பதற் கான பலன்கள் எடுத்துரைக்கப்பட்டு, மக்களை விழித்திருக்கச் செய்வதற்காகப் பல உபாயங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
யோக மரபில் சிவபெருமான் ஒரு கடவுளாக வழிபடப்படாமல், ஆதி குரு - முதலாவது குருவாகக் கருதப்படுகிறார். ஆன்மிகப் பாதையில் இருக்கும் ஒரு மனிதர் அந்த நாளில்தான் கயிலாய மலையுடன் ஒன்றிணைகிறார். அவர் ஒரு மலையைப்போல முழுமையான நிச்சலனமாகிறார்.
பல்லாண்டு ஆத்ம சாதனைகளுக்குப் பின்னர், ஒரு நாள் அவர் முழு நிச்சலனத்தில் ஆழ்கிறார். அந்த நாள்தான் மகா சிவராத்திரி நாள்.
அந்த நாளில் அவருள் இருக்கும் அனைத்து அசைவுகளும் நின்று போகின்றன. எனவே அந்த நாளினை அவர்கள் நிச்சலனத்திற்குரிய நாளாகக் கருதுகிறார்கள்.
மதங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையைச் சாராமல், அறிவியல் ரீதியாகவே அனைவருக்கும் ஆன்மிக வளர்ச்சிக்குத் துணைபுரிவதால், மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் ஈஷா யோக மையத்தில் இரவு முழுவதும் ஒரு இறைவிழாவாக நிகழ்கிறது. மாலை 6.00 மணிக்குத் துவங்கி மறுநாள் காலை 6.00 மணி வரை நடைபெறுகிறது...
உலகெங்குமிருந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க ஈஷாவில் கூடுகிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகள், லெபனான், சைப்ரஸ், இஸ்ரேல், ஜோர்டான், ரஷ்யா, ஜெர்மனி என பல தேசத்தைச் சார்ந்த மக்களும், தமிழக குக்கிராம மக்களும் இந்த இறைவிழாவில் இணைகிறார்கள்.
மையத்திலிருக்கும் தனித்துவம் மிக்க தியான லிங்கம், வழிபாடுகள், சடங்குகள் ஆகியவற்றைக் கடந்து, தியானம் என்ற சொல்லைக் கேளாதவர்கூட தன்னுள் ஆழ்ந்த தியான நிலையை உணரும் வகையில், சத்குரு அவர்களால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி விழா எப்போதும், தியானலிங்க வளாகத்தில் நிகழும் குருபூஜையுடன் துவங்குகிறது. "கு' என்றால் இருள்; "ரு' என்றால் அகற்றுபவர். "குரு' என்பவர் நம்முள் இருக்கும் இருளினைப் போக்குபவர். எனவே குரு என்பதற்கு அடையாளமாக ஒளிரும் தீபச் சுடரின் முன்னர் குருபூஜை நிகழ்த்தப்படுகிறது.
தொடர்ந்து நாத, நடன ஆராதனைகள் தியானலிங்கத்திற்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இங்கு இசைக்கப்படும் நாதங்களும் நடனங்க ளும் சங்கீதப் பாரம்பரிய வழிகாட்டல் இன்றி, உள்ளுணர்வின் வெளிப்பாடாகவும் இறை யுணர்வு மிக்கதாயும் விளங்குகின்றன.
ஆசிரமத்தின் பிரம்மச்சாரிகளால் இசைக்கப்படும் இவை தியானலிங்கத்தின் அளப்பரிய ஆற்றலையும் அதிர்வினையும் உணரத்தக்க வாய்ப்பினை வழங்குகின்றன.
நள்ளிரவு வேளையில், கூடியிருக்கும் லட்சோப லட்சம் மக்கள் பங்கேற்க, மகா மந்திர உச்சாடனை நிகழ்வது அற்புதம்...
"பிரபஞ்சமே ஒரு பிரம்மாண்ட மான வெற்றிடம். அந்த வெற்றிடமே சிவம் எனும் தன்மை' என ஒரு மகா சிவராத்திரி நாளின் அருளுரையில் சத்குரு அவர்கள் குறிப்பிட்டார்.
அந்த வெற்றிடத்திற்கு- அடையாளங்களற்ற அந்த தன்மைக்கு இட்டுச் செல்வதாக 'ஓம் நமஷிவாய' என்ற மகா மந்திரம் அமைகிறது.
பல லட்சம் மக்களால் ஒன்றாக உச்சரிக்கப்படும் அம்மந்திரமும் மைய அன்பர்களால் இசைக் கப்படும் மத்தள, கொட்டு முரசோசை முழக்கங்களும் இறையதிர்வினை எங்கெங் கும் ஏற்படுத்தக் கூடியவை.
நிறைய பேர் தனைமறந்து ஆனந்த நடனம் புரிவதைக்கண்டு ஒவ்வொரு சிவராத்திரியிலும் வியந்திருக்கிறோம்..
இசை எப்போதுமே ஆன்மநிலையின் ஆழமான பரிமாணங்களை உணர்வதற்கான கருவியாக பழங்காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது. அதன் துணையோடு உள்நிலை யில் பயணிப்பது எல்லாச் சூழலிலும் எளிதாகிறது.
வருடம் தோறும் இவ்விழாவிற்கு வருகின்ற அனைவருக்கும் நள்ளிரவு வரை அன்னதானம் நடைபெறுகிறது.
சக்தி வாய்ந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்படுவதால், அது உயிர்த்தன்மையில் அளப்பரிய மாற்றத்தை நிகழ்த்துகிறது. அதன் பொருட்டே ஈஷாவில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளன்று அன்னதானம் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெறுகிறது..
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் நிகழும் இந்த விழாவிற்கென கோவையிலிருந்து இரவு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இறையுணர்வில் திளைக்க மகாசிவராத்திரி விழா மக்களை ஒன்றிணைக்கிறது...
இந்த தியான லிங்கத்தைச்சுற்றியுள்ள குகைகளில் அமர்ந்து தியானித்தால் ஆன்மாவின் அதிர்வலைகளை உணரலாம்.....
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள் அம்மா.
I am a follower of Esha Yoga.
ReplyDeleteI attented the course and observed movnam at Kovai Easha centre,
I am willing to participate the sivarathrinight programme, but somewhat not able.
Your post and pictures made meso so so happy dear.
Thanks a lot.
viji
20 தேதி மருந்தீஸ்வரர் கோயிலில் ருத்ர பாராயணமும் பின் சிறப்பு தரிசனமும் எதிர் நோக்கிக் காத்திருக்கும் வேளையில் இன்றே சிவராத்திரியைக் கொண்டுவந்து கொடுத்து விட்டீர்கள்.நன்றி.
ReplyDeleteஓம் நமசிவாய
ReplyDeleteசிவ சிவா!
ReplyDeleteஏராளமான படங்களுடன்,
தாராளமான செய்திகளுடன் பிரும்மாண்டமானப் பதிவு!
ஓம் நம சிவாய... மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்..
ReplyDeletehttp://anubhudhi.blogspot.in/
நிறைய தெரியாத தகவல்கள்,நன்றி
ReplyDeleteகார்ப்பரேட் சாமியார்களை வெறுப்பதால்,உள்ளூரில் இருந்து கொண்டே வெகுகாலம் ஈஷாமையம் செல்லவில்லை! என்னதான் இருக்கு பார்த்துவிட்டு வரலாம் என்று 6மாதமுன் சென்று வந்தேன்! புதுமையான லிங்கபைரவியும், தியானலிங்கமும் பரவச அனுபவம்!
ReplyDeleteசிவராத்திரி வருகிறதா.எப்பவும்போல பக்தி மயம்.என்னையறியாமல் சிவசிவா சொல்லிவிட்டேன் !
ReplyDelete"நமச்சிவாய" குறித்த விளக்கம், தியான நிலை குறித்த விளக்கம் அழகு.
ReplyDelete"ஈஷா" யோக மைய்யம் குறித்த விளக்கம் அற்புதம்.
ReplyDelete"சிவலிங்க அபிஷேகப் படம் மற்றும் ஈஷா கோவில் பற்றிய படங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
ReplyDeleteஎனது மஹாசிவராத்திரி குறித்த பதிவு ஒரு முன்னோட்டம் {சிவாலய ஓட்டம்]--தாமரை மதுரையில்- எனில் தங்களின் மஹாசிவராத்திரி உண்மையில் மஹாஆ பதிவு தான். வாழ்க.
ReplyDeleteமகா சிவராத்திரி அன்று கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதும் அந்த நாளில்
ReplyDeleteவிழிப்புடன் முதுகுத் தண்டை நேர் நிலையில் வைப்பதன் மூலம் ஆன்ம எழுச்சி நிகழ இயறகையாகவே சூழல் உருவாவதும் நான் இதுவரை அறிந்தது இல்லை.பகிர்விற்கு நன்றி
இந்த இடத்தை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நேரில் சென்றது கிடையாது. கடைசி படம் மிக அருமை.
ReplyDeleteசில விஞ்ஞான விளக்கங்கள் கேள்விப்படாதவை. நன்றி. ஆதிசேஷன் வடிவில் தியானத்தில் இருக்ப்பவரின் சிலையை பற்றி சொல்லுங்களேன்.
ReplyDelete"ஈஷாவின் சிவராத்திரி விழா" விற்கு முன்னால் வந்த படம். அதைப் பற்றி விளக்குவீர்களா?
2008ல் தியானலிங்கத்தை தரிசித்து வந்தோம்... தியானம் செய்ய அமைதியான இடம்... சுற்றியுள்ள பகுதிகளும் மனதில் ஒரு அமைதியை ஏற்படுத்தியது...
ReplyDeleteநல்ல பகிர்வு.
படங்கள் மிக அருமை...நிறைய தெரியாத தகவல்கள்...வாழ்த்துகள்...
ReplyDeleteஒரு முறை ஈசா கோவிலுக்கு சென்றுள்ளோம்.அழகான படங்கள்.
ReplyDeletewonderfull picture..how u took these pictures????where all collection available??? interesting information..
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDelete19. வஜ்ரமகுடா கோவிந்தா
ReplyDeleteஅருட்பெருஞ்ஜோதி மகா மந்திரமும் ஆச்சரியமான அதன் பயன்களும் வருமாறு
ReplyDeletehttp://saramadikal.blogspot.in/2013/06/3.html
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
இவண் ,
சாரம் அடிகள்
94430 87944
2296+2+1=2299
ReplyDelete