Wednesday, February 22, 2012

உலக தாய்மொழி தின நல் வாழ்த்துகள்..




 நீராரும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் 
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் 
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் 
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! 
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற, 
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே! தமிழணங்கே! 
நின் சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
 வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே



ஆஸ்திரேலியாவில் .......
(பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக UNESCO ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறது.  
தாய் மொழியின் முக்கியத்துவத்தைப் பற்றிய யுனெஸ்கோவின் காணொளி பார்க்க: http://www.youtube.com/watch?v=Q-XozG0RSCo

இன்றைய தினத்தில் நம் குழந்தைகளுக்கு தாய்மொழியை கற்பதற்கு வேண்டிய சூழலை அளிக்கவேண்டிய கடமையை நாம் உறுதிபடுத்திக்கொள்வோம். 

நம் நண்பர்களையும் தம் குழந்தைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு 
அனுப்ப ஊக்கப்படுத்துவோம்.


தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!

நாவினில் வேதமுடையாள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் – தனை
மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்

அறுபது கோடி தடக்கைகளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் 


Bangladesh History Ekushe February wallpapers



18 comments:

  1. நல்ல அருமையான பகிர்வு .நாம் ஒவ்வொருவரும் எந்த நாட்டில் இருந்தாலும் தாய்மொழியை நமது சந்ததிக்கு முக்கிய சொத்தாக விட்டுசெல்ல வேண்டும் .

    ReplyDelete
  2. அருமை.வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. நாம் ஒவ்வொருவரும் நம் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதைப்பேணிக் காத்து, நமது சந்ததிக்கும் முக்கிய சொத்தாக விட்டுச்செல்ல வேண்டும் என்று தாங்கள் கூறியுள்ள தகவல், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகும். ;)))))

    ReplyDelete
  4. உலகத் தாய்மொழி தின நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ”தமிழரிடம் தமிழ் பேசுங்கள்”

    என்ற அந்தத் தங்கநிறமான சுழலும் எழுத்துக்கள் அருமையோ அருமை!

    பதிவு தந்தது யார்?

    கொங்கு நாட்டுக் கோவைத் தங்கமல்லவோ! ;))))

    ReplyDelete
  6. நல்ல பதிவு.உலக தாய்மொழி தின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அனைத்துப்படங்களும், தகவல்களும், பதிவுக்கு மிகப்பொருத்தமானவையே.

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்துள்ள இந்தப்பதிவு தனிச் சிறப்பினைப் பெறுகிறது.

    வாழ்க நம் தாய் மொழியாம் தமிழ் !

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு. வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. தமிழில் பேசுவதா?இந்தியாவில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சந்திக்கும்போது அவர்கள் மொழியில் பேசுவர்.ஆனால் தமிழர்கள்?வேதனை

    ReplyDelete
  10. முதல் வாசகத்திலேயே ..
    இந்தப் பதிவின் முழுமூச்சையும் உள்வாங்கிவிட்டேன்..

    போகும் பாதையில் எதிர்வரும் தமிழர்களிடம்
    தமிழ் பேச முயல்வதன் மூலம் நம் மொழிக்கு
    அதன் வளர்ச்சிக்கு நாம் உதவ முடியும்..

    ReplyDelete
  11. மிகவும் அருமையான பதிவு. உலகத் தாய்மொழி தினத்தன்று பக்கத்திலிருக்கும் நூலகத்தில் அங்கத்தினராக சேர்ந்ததோடு தமிழில் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இவர்களது புத்தகங்களை எடுத்துப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்வான செய்தி.

    ReplyDelete
  12. தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  13. நல்லதொரு சிந்தனை இராஜராஜேஸ்வரி - தமிழர்களிடம் தமிழில் பேச வேண்டும் - அடுத்த் தலைமுறைக்குத் தாய் மொழியினை அறிமுகப் படுத்த வேண்டும். ஆரோக்கியமான சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. அருமையான பகிர்வுங்க. பாராட்டுகள்.

    ReplyDelete
  15. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  17. 24. தசமுகமர்த்தன கோவிந்தா

    ReplyDelete