ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே.
- சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
மேலைச்சிதம்பரம் என்று சிறப்புப் பெற்ற பேரால் பெரியோனாய் இலங்கி ஆருயிர்க்கெலாம் அருள் பொழியும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சன நாற்று நடவு திருவிழா சிறப்பாக நடைபெறும்...
தேவேந்திரர் குல வேளாளர் பெண்கள் அவர்களது மண்டபத்தில் முளைப்பாரி வைத்து இருப்பார்கள்..
தினந்தோறும் பட்டீஸ்வரர் மற்றும் பச்சைநாயகி அம்மன் உடன் சென்று முளைபாரிகளுக்கு தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி, தொடர்ந்து மகா தீபராதனை நடைபெறும்...
மாலை பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ரிஷப வாகனத்தில் நாற்றுகள் வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குப் புறப்படும் போது நந்தியிடம் “நாற்று நடும் நிகழ்ச்சிக்கு செல்கிறோம். சுந்தரமூர்த்தி கேட்டால் தகவல் கூற கூடாது“ என கூறும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சுவாமிகள் ரதத்தில் மண்டபத்திற்கு சென்றனர்.
தம்பிரான் தோழர் சுந்தரர்
கோயில் வாயிலில் காளை மாடுகள் அலங்கரிக்கப்பட்டு,
ஏர் கலப்பைக்கு பொன்னேர் பூஜை நடைபெறும்..
ஏர் கலப்பைக்கு பொன்னேர் பூஜை நடைபெறும்..
சுந்தரமூர்த்தி நந்தியிடம் சென்று சிவபெருமான் எங்கு சென்று உள்ளார். என கேட்டதற்கு நந்தி பதில் கூறாமல், தலையை தெற்கு புறமாக சாய்த்து, நாற்று நடவு மண்டபத்தில் சுவாமிகள் உள்ளதை மறைமுகமாக தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும்..
தொடர்ந்து பட்டத்து யானை முன்னே செல்ல தாரை தப்பட்டை மற்றும் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக பட்டீஸ்வரர் மண் வெட்டியுடன், பச்சை நாயகி அம்மன் நாற்றுகள் எடுத்து கொண்டு நாற்று நடவு மண்டபத்தில் எழுந்தரும் முன்னதாக வயலில் தண்ணீர் நிரப்பப்பட்டு, கலப்பையால் உழவு செய்யப்படும்..
தேவேந்திர குல தம்பதியினர் வேடத்தில் சுவாமிகள் வயலில் இறங்கி, சுவாமி மண் வெட்டியால் வெட்ட, அம்மன் நாற்றுகளை நடும்போது பெண்கள் குலவை சத்தம் எழுப்பி, போட்டி, போட்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாற்றுகள் நடுவார்கள்...
அப்போது அங்கு வந்த சுந்தரமூர்த்தி பட்டீஸ்வரரை சந்தித்து, “திருப்பணிக்கு பொன், பொருள்கள் கேட்டு பாடல்கள் பாட அதற்கு சுவாமிகள் “இங்கு முக்தி கிடைக்கும் என கூறி பொன் பொருளுக்கு சேரமானை சந்திக்க ஓலை கொடுக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து சுவாதி திருவீதி உலா ..
சுந்தரமூர்த்தியிடம் தகவல் கூறிய நந்தியின் தாடையை மண்வெட்டியால் சுவாமி வெட்டும் நிகழ்ச்சியும் மகாதீபாரதனையும் சிறப்பாக நடைபெறும்..
ஆனி திருமஞ்சனம் . நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 11 வகையான அபிஷேகம் கண்கொள்ளாக்காட்சியாகத் திகழும்..
சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும்; ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை பேரூர் கோயிலில் காணலாம்
நடராசர் அம்பலம் - நடராச சபை, வேறெங்கும் காண முடியாத
Sastha in Perur Temple Ratham
பிறவாப்புளி - விதைகளை எங்கு போட்டாலும் முளைப்பதில்லை,
16 வளைவுகளைக் கொண்ட திருக்குளம்
சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும்; ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை பேரூர் கோயிலில் காணலாம்
நடராசர் அம்பலம் - நடராச சபை, வேறெங்கும் காண முடியாத
சிற்பக்கலை நுட்பங்கள் வாய்ந்தது. மண்டபம் முழுவதுமே -
ஒவ்வொரு பகுதியும் சிற்பக் கலையழகுடன் மிளிர்கின்றது.
ஒவ்வொரு பகுதியும் சிற்பக் கலையழகுடன் மிளிர்கின்றது.
Sastha in Perur Temple Ratham
பிறவாப்புளி - விதைகளை எங்கு போட்டாலும் முளைப்பதில்லை,
16 வளைவுகளைக் கொண்ட திருக்குளம்
நாற்று நடவுத் திருவிழா
ReplyDeleteஆஹா! மீண்டும் நடராஜரோ?
பார்த்து விட்டு வருவோம் மீண்டும்.
யானைப்படங்கள் மூன்றும் அருமை.
ReplyDeleteஒன்று மட்டும் நன்கு தெள்ளத்தெளிவாக
வாயில் புல்லைக் கவ்வியபடி ....
பவனி வருவது ஜோராக உள்ளது.
இதிலுள்ள பெரும்பாலான படங்கள் சமீபத்தில் வெவ்வேறு பதிவுகளில் கண்டு மகிழ்ந்து, அவ்வப்போது என்னால் கருத்தளிக்கப்பட்டுள்ளன.
ReplyDeleteஇருப்பினும் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சியே ஏற்படுகிறது. ;)
nice pictures nice post
ReplyDeleteதில்லையம்பதியே நடராஜா
ReplyDeleteதினமொரு பதிவென்ற போதிலும்
திகட்டவில்லையே சிவராஜா!!
தினமும் நாதமாய் ஒலிக்குதே ’மணிராஜா’
தில்லையின் சாதா மணியல்ல நடராஜா
திக்கெட்டும் ஒலிக்கும் ’ஜகமணி’ அன்றோ சிவராஜா!!
ஆர்வத்தில் ஆங்காங்கே அனைத்துத் தளங்களிலும் நீ
ஆடிய ஆட்டங்களும் ஆனந்தக் கூத்துக்களும்
ஆடியவரைப் போதுமே .... நடராஜா!
நின் பொற்பாதம் வலிக்காதோ பொன்னம்பலமே!!
ருத்ர தாண்டவம் வேண்டாம் .... நடராஜா
பூமியும் என் மனம் போல நடுங்குதே ... மஹராஜா
அடங்கியே ஸாந்தமாய் என்றும் அருளுங்கள் ... சிவராஜா!!
ச க் தி யாய் நம்பினேனே ... நடராஜா
ச க தி யில் தள்ளியதேனோ ... சிவராஜா
மீ ளா த் துயரில் இன்றிருக்கும் என்னை
மீ ட் டு த் தருவாயோ மஹராஜா?
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
ஆனித்திருமஞ்சனத்திலிருந்து வரிசையாக 8 நாட்கள் தில்லை நடராஜரைப் பற்றிய பதிவுகளாகக் கொடுத்து வந்தீர்கள்.
ஒன்பதாம் நாள் திடீரென தில்லையிலிருந்து புறப்பட்டு மதுரைக்குச் சென்று விட்டீர்கள்.
இந்தப்பாடல் ஒன்பது அல்லது பத்தாம் நாள் திருவிழாவுக்காக என்னால் ஏற்கனவே எழுதி வைக்கப் பட்டிருந்தது.
அதனால் இதை இன்றைய தங்கள் நடராஜருக்கு சமர்பித்து விட்டேன்.
-oOo-
வை.கோபாலகிருஷ்ணன் said..
ReplyDeleteசிரத்தையான கருத்துரைக்கும்
சிறப்பான பொருளமைந்த பாடல் பகிர்வுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா....
முதல் படத்தில் ”ஓம் ”என்ற எழுத்து அழகான ஓங்கார மணிகள் நான்கு மூலையிலிருந்தும் ஒலிப்பது போலவும் ”ஓம்” ஐச்சுற்றி நெருப்பு வளையம் ஒன்று சுழலுவதுபோலவும் காட்டியுள்ளது பார்க்க வெகு அழகாக உள்ளது.
ReplyDeleteபட்டிப்பெருமான் + பச்சைநாயகி எவ்வ்ளவு அழகானதோர் பெயர் பொருத்தம்!
ReplyDeleteசூப்பரோ சூப்பர் ! ;)
சுந்தரமூர்த்தியிடம் தகவல் கூறிய நந்தியின் தாடையை மண்வெட்டியால் சுவாமி வெட்டிவிட்டாரா?
ReplyDeleteஇருப்பின் இந்தத் தங்களின் வரிகளுக்குக் கீழே காட்டப்பட்டுள்ள
நந்தியார் பளிச்சுனு வெள்ளை வெளேரென்ற மேனியுட்ன், சிவந்த தன் நாக்கைத் துருத்துக்கொண்டு எவ்ளோ அழகாக உச்சியில் அமர்ந்து உல்லாசமாக இருக்கிறார்! பருங்கோளேன். ;)))))
அழகான ஆனந்தம் அளிக்கும் பகிர்வு.
ReplyDelete596 க்குப் பாராட்டுக்கள்.
தொடரட்டும் தங்களின் இத்தகைய நற்பணிகள்.
அனைவர் மனமும் மகிழட்டும்! ம்லரட்டும்!! ஒளிரட்டும்!!!
சிவ சிவ
சிவ சிவ
சிவ சிவ
சிவ சிவ
சிவ சிவ
நாற்று நடவு திருவிழாவின் பெருமையைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன் அக்கா....
ReplyDeleteபட்டீஸ்வரம் கோயில் பெருமை! படங்களுடன் அருமை! தொடரட்டும் தங்கள் இறைமைப் பணி!
ReplyDeleteபடங்களும் பதிவும் நல்லா இருக்கு. தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிரது நன்றி
ReplyDeleteசிவாயநம.!
ReplyDeleteஅறியாத பல தகவல்கள் ! தொடர வாழ்த்துக்கள் ... நன்றி சகோதரி !
ReplyDeleteநாற்று நடவுக்கு ஒரு திருவிழா....
ReplyDeleteஅறிந்துகொண்டேன் சகோதரி....
தெயவீகமணம் கமலுகிறது
ReplyDeleteஅழகான ஆனந்தம் அளிக்கும் பகிர்வு.
ReplyDeleteபாராட்டுக்கள்.
3599+8+1=3608 ;)))))
ReplyDeleteகவிதை என்ற பெயரில் பதிவினில் எதையாவது உளறிக்கொட்டி கிளறி மூடுபவர்களைக் கண்டாலே கடுப்பினில் காததூரம் விலகிட நினைக்கும் அடியேன் கிறுக்கியதையும், ரஸித்து ’சிறப்பான பொருள் அமைந்த பாடல் பகிர்வு’ என பாரட்டி நன்றி தெரிவித்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.
நீரை நீக்கிவிட்டுப் பாலை மட்டுமே பருகிடும் அன்னபக்ஷி போல நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ளும் தங்கள் குணம் தங்கம் ! ;)