“சிவனின் தரிசனம் வேண்டி 16 ஆண்டு காலம் கடும் தவம் மேற்கொண்ட காகபுஜண்ட சித்தர் முன் இறைவன் 16 முகங்களை கொண்டவராக லிங்கமாக காட்சி தந்தார்.
காகபுஜண்ட சித்தர் இறையடி சேர்ந்தபின், வானகோவராயன் என்ற மன்னன் இந்த இடத்தில் கோவில் எழுப்பினான்.
இறைவன் அருளால் மக்கள் பொன், பொருளுடன் செல்வச் செழிப்பாக வாழ்ந்ததால் "பொன்பரப்பி' என்றும், இறைவன் "சுவர்ணபுரீஸ்வரர்' என்றும், அம்மன் "சுவர்ணாம்பிகை' என்றும், பைரவர் "சுவர்ண பைரவர்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
சூரியகாந்தக்கல்லால் மூலவரான சுவர்ணபுரீஸ்வரர் அமைக்கப்பட்டுள்ளதால் மூலஸ்தானமும்,அர்த்த மண்டபமும் எப்போதும் உஷ்ணத்துடன் இருக்கும். சிவபெருமான் அக்னி சொரூபமாக உள்ளார்.
நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் .. 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.ஆவணி பவுர்ணமி நாளிலும் .பங்குனி உத்திரத் திருநாளிலும் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி 70 அடி தூரம் கடந்து கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காண ஆச்சரியமாக இருக்கிறது....
மூலவர் சொர்ணபுரீஸ்வரர்
வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் மிகவும் உக்கிரமான கருவறையில் ஏற்றப்படும் தீபம் துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை உணர்த்தி சிலிர்க்கவைக்கிறது..
ராகு கால வேளையில்,தேன்,
பால்,
தயிர்,
பன்னீர்,
இளநீர்,
மஞ்சள்,
விபூதி,
சந்தனம்,
திருமஞ்சனம்,
கரும்புச்சாறு,
எலுமிச்சம்பழ சாறு,
பஞ்சாமிர்தம்,
நெய்,
அரிசிமாவு,
நல்லெண்ணெய்,
புண்ணிய நீர் தீர்த்தம்
போன்ற 16 வகை அபிஷேகம் சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் கண்டு உணரலாம்..
லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பருகினால்
நோய்கள் விரைவில் குணமடைகின்றன.
குழந்தை செல்வம் வேண்டுவோர், ஐப்பசி பௌர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்தின் போது தரப்படும் பாகற்காய் குழம்பை பிரசாதமாக சாப்பிடுகிறார்கள்.இறைவன் பதினாறு பட்டைகளுடன் இருப்பதால் பதினாறு முக லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறார்.
பொதுவாக பதினாறு முக லிங்கத்தில்,
அதன் பாணம் மட்டுமே 16 பட்டைகளுடன் இருக்கும்.
இங்கு ஆவுடையாரும் (பீடம்) 16 பட்டைகளுடன் அமைந்துள்ளது
மிகவும் தனி சிறப்பு ..
பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ, 16 பட்டை லிங்கமான சுவர்ணபுரீஸ்வரரை கார்த்திகை சோமவாரத்தில் வழிபடுவது சிறப்பு.
அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
கோவிலில் காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி அம்பாளின் பார்வையில் படும்படி உள்ளது சிறப்பு வாய்ந்தது ஆகும்.
காகபுஜண்ட சித்தர்
காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள
சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர்.
நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர்.
"பால நந்தி' என்ற திருநாமம் .கொண்ட சிறிய நந்திக்கு ராகு தோஷ நிவர்த்திக்காக பால் அபிஷேகம் செய்யும் போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது !!!. .
முருகன் ஆறுமுகத்துடனும், 12 திருக்கரங்களுடனும் 8 அடி உயரத்தில் மயிலில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.
முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள்.
முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள்.
மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இங்குள்ள பாணலிங்கத்திற்கு, பாலில் மிளகை அரைத்து கலந்து தடவி வழிபாடு செய்கின்றனர்.
அவிட்டம் நட்சத்திரத்திற்குரியவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று, சிவனுக்கு தேனபிஷேகம் வழிபடுவது சிறப்பு.
சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.
சிவலிங்கம் சித்தர் பிரதிஷ்டை என்பதால், கிரக தோஷம் உள்ளவர்கள், சிவனுக்கு தேனபிஷேகம் செய்து வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை..
காலை 5.30-லிருந்து இரவு 9.30 மணி வரை. கோவில் தரிசிக்கமுடிகிறது..
சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று பின் அங்கிருந்து 27 கி.மீ. தூரத்தில் உள்ள அம்மையகரகம் சென்று பின் அங்கிருந்து பேருந்தில் சென்றால் ஒரு கி.மீ. தூரத்தில் இந்த கோவில் உள்ளது.
சென்னையில் இருந்து சேலம் சென்று பின் அங்கிருந்து கள்ளக்குறிச்சி வழியாகவும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
சித்தர் சமாதி
படங்கள் அனைத்தும் அருமை... ஆஹா இவ்வளவு பெருமைகள் இருக்கிறதா இக்கோவிலுக்கு.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை... ஆஹா இவ்வளவு பெருமைகள் இருக்கிறதா இக்கோவிலுக்கு.
ReplyDelete16 - அபிஷேகமும் அதன் சிறப்பும் பற்றி தெரிந்து கொண்டேன்....
நந்திக்கு செய்யும் பாலபிஷேகம் நிறம் மாறி நீலவண்ணமாக வரும் என்று படிக்கும் பொழுது இங்கு சென்று வர வேண்டும் .. என்று நினைக்க வைக்குது அக்கா....
இந்த தகவலை பதிவாக வெளியிட்டுள்ளது நிறைய நபகர்களுக்குபயன்படும் ... நன்றி அக்கா....
ஹய்யா நான் தான் முதலில் கருத்து தெரிவித்துள்ளேன் ... ஹய் ஜாலி ஜாலி....
ReplyDeleteதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDelete”செல்வச்செழிப்பு அருளும் சொர்ணாம்பிகை”
ReplyDeleteஎன்ற தலைப்பும் தகவல்களும் அனைத்துப்படங்களும் வழக்கம் போல் மிகவும் அழகாக உள்ளன.
சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteசென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியிலேயே கள்ளக்குறிச்சி இருக்கின்றது. கள்ளக்குறிச்சியில் இருந்து இவ்வாலயம் செல்வதே மிகவும் இலகுவான வழி!
ReplyDeleteமனித வாழ்வில், மனிதனைப் பாடாய்படுத்தும் வறுமை களைய இவ்வாலய இறைவன் துணை நிற்கின்றார் என்பதும் அனுபவ உண்மை! அருமையானதொரு ஆலயப் பகிர்விற்கு பாராட்டுக்கள்.!
படங்கள் அழகோ அழகு! மீண்டும் மீண்டும் காணவைக்கின்றன!
ReplyDeleteபடங்களும் பதிவும் நல்லா இருக்கு. நன்றி
ReplyDeleteமிக அருமையான பதிவும், படங்களும். மகிழ்ச்சி
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வழக்கம் போல அருமையான இடுகை.!
ReplyDeleteமூன்றாவது படம் என்னை மிகவும் கவர்ந்தது.! (மேலிருந்து கீழ்)
தலப்பெருமையுடன் அழகிய மனங்கவரும் படங்களையும் பகிர்வது உங்கள் தனித்திறமை. பாராட்டுகள் மேடம்.
ReplyDeletethodudaya seviyan
ReplyDeleteullam kavar kalvan
thokuthu thantha vithamo
ullam kavar selvam.
subbu rathinam.
என் தங்கை கள்ளக்குறிச்சியில் இருக்கிறாள் அவள் வீட்டுக்கு போகும் போது 16 பேறுகளை தரும் இறைவனை வழி பட்டு விடுகிறேன்.
ReplyDeleteநன்றி.
this temple is said to be very powerful as my friends had told that it is difficult to see lingam directly
ReplyDeleteசுவர்ண புரீஸ்வரர் ,சொர்ணாம்பாள் தர்சனம் மனதை நிறைக்கவைத்தது.
ReplyDeleteசெல்வச்செழிப்பு அருளும் சொர்ணாம்பிகை”
ReplyDeleteமனமகிழ்ச்சி அளித்த நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
3618+1+1=3620
ReplyDelete