Sunday, July 15, 2012

நினைவார்தம் இடர் களையும் நிமலன்



மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.  1

வெஞ்சொல் தம்சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணரும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களைவாய் நெடுங்களம் மேவியவனே!”

திருஞானசம்பந்தப் பெருமான் திருநெடுங்களத்திற்கு பரிந்துரை செய்து பாடி அருளிய பத்துப் பாடல்களிலும் அடியார்களின் வாழ்வியல் சிக்கல்களை நீக்குமாறு வேண்டியிருக்கிறார். 


 இடர் களையும் திருப்பதிகம் என்று இன்றும் போற்றப்படும் பாடல்கள் நம் துன்பங்களை அறவே விரட்டிவிடும். நம் இடர்களையும் களையும் பதிகம் மன அமைதியை தரும் பதிகம்..
திருச்சிற்றம்பலம்

திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர்மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். ,  
இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது சிறப்பு 
ஒப்பிலா நாயகி உடனுறை திருநெடுங்கள நாதர் திருக்கோயில் சுயம்புலிங்கம் அம்பாளுக்குச் சிறிது இடம் விட்டுக் கொஞ்சம் ஒதுங்கிய நிலையில் இருப்பதாகவும் நேராகப் பார்க்கும்போது அருவமாகவும் தெரிகிறது என்பது நடைமுறை வழிபாட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது. 
அம்பாள் உருவம் உடன் இல்லை என்பதே கருத்து. 
அதாவது போக சக்தி அம்பாள் இங்கு இல்லை. 
மூலவர் - நிறைவான மூர்த்தி - ‘நினைவார்தம் இடர்களையும்’ நிமலனின் தரிசனம்.

காசியில் உள்ளதுபோல் மூலஸ்தானத்திற்கு மேல் இரண்டு விமானங்கள் இருப்பதால், காசி விஸ்வநாதரைப் போலவே நமது குற்றங்களுக்கும், துன்பங்களுக்கும் திருநெடுங்களநாதர் தீர்வு செய்கிறார் என்ற நம்பிக்கை உண்டு..


பெருமாளுக்கென்று ஒரு தனிச் சன்னதி இருப்பது சைவ – வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும்.


அருணகிரிநாதப் பெருமான் இத்திருக்கோயிலுக்கு வந்து இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானுக்குப் பாமாலை சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

காலபைரவர், பஞ்சமூர்த்தி நவகிரகங்கள், சப்தகன்னியர் ஆகியோர்க்கான சன்னதிகள் முக்கியமானவை. நாகதோஷம் நிவர்த்தியாவதற்காக இந்தத் திருக்கோயில் காலபைரவரைத் தேடி வழிபாடு செய்ய மக்கள் வருகிறார்கள்... 


நவகிரகங்களில் சூரியன் தனது மனைவியுடன் இருப்பது தனிப்பெருமை உடையது. சூரிய தம்பதியினரின் திருமேனியை நோக்கி மற்ற எட்டுத் திருமேனிகளும் எழுந்தருளி இருப்பது தனிச் சிறப்பாகும்.


கருவறையில் உள்ளே  சுயம்புலிங்கமாக எழுந்தருளி இருக்கும். இறைவன் சிவபெருமானுக்கு மாதுளம்பழ அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடுகிறது என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை..
அபிஷேகத்திற்கு 50 மாதுளம் பழங்கள் தேவை. வெள்ளைநிற மாதுளம் பழங்கள் மட்டுமே அபிஷேகம் செய்வதற்கு அத்தியாவசியப் பொருளாகும். 


திருச்சி மாநகரை அடுத்த துவாக்குடியில் இருந்து 6 கி.மீ தூரத்தில் இருக்கிறது. காலை 6.30 முதல் மதியம் 12.30 வரையும் மாலை 4.30 முதல் இரவு 8.00 வரையும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும். 


வழிபாட்டிற்குத் தேவையான பூசைப்பொருட்கள் இந்த கிராமத்தில் கிடைக்காது என்பதால் துவாக்குடியில் இருந்து  வாங்கிச் செல்கிறோம்..

சப்தகன்னியர்களும். வராகி அம்மனும்  தனிச் சன்னதியில் அருள்மழை பொழிகிறார்கள்.. 
 
வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இராகு காலத்தில் வராகி அம்மன் சன்னதியையொட்டி இருக்கும் சிற்ப உரலில் விரலிமஞ்சள் இடித்து வழிபாடு செய்து வேண்டிக் கொண்டால், வெகு விரைவில் திருமணம் கைகூடுகிறது...
மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது.

திருக்கோயிலின் உள்பகுதியில் உள்ள வெண்கலக்குதிரை ஒருகாலத்தில் பெற்றோர்கள் மணமகனைத் தேர்வு செய்ய பயன்பட்டு நம் கலாச்சாரத்தை பறைசாற்றி பெருமையுடன் காட்சி அளிக்கிறது..
நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது – யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.
ராஜகோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் ஆலயம் வெளிப்புறம்அமைந்துள்ளது.
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம், சதுர்ப்புஜம்.
தவம் செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றிக் கைத்தலம்
பற்ற, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம், ஒளிமதிச்சோலை என்று
வழங்குகிறது.



[IMG_0511.jpg]
[IMG_0512.jpg]
[IMG_0510.jpg]

13 comments:

  1. நல்ல பகிர்வு. சோழர் கால கல்லுரல் பார்க்க பெருமையாக இருக்கிறது...

    ReplyDelete
  2. ஒப்பிலா நாயகி ஸமேத
    ஸ்ரீ திருநெடுங்களநாதரை
    தரிஸித்தோம்.

    மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. வழக்கம்போல படங்களும் தகவல்களும் நல்லா இருக்கு நன்றி

    ReplyDelete
  4. ஆலய தரிசனம் கிட்டியது..

    ReplyDelete
  5. சோழர் கால கல்லுரல் பார்க்க வைத்தமைக்கு மிக்க நன்றி அக்கா. அனைத்தும் அருமை ..... நல்ல பதிவு..

    ReplyDelete
  6. அருமையான பதிவு. நான் பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டது.
    இப்போது மறுபடியும் உங்கள் பதிவில் பார்த்து மகிழ்ந்தேன்.
    சோழர் கால உரல் படம் இந்தக் கால குழந்தைகளுக்கு காட்டி மகிழலாம்.
    அவர்கள் உரல் பார்த்து இருக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  7. நாங்கள் வசிக்கும் திருச்சிக்கு அருகாமையில் உள்ள திருநெடுங்களம் செல்ல வேண்டும் என்ற ஆசை மனதில் ரொம்ப நாளாய் உண்டு. பயணம் தள்ளியே போகிறது. உங்கள் பதிவில் திருநெடுங்கள நாதரின் கோயிலை தரிசனம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. வராகியின் படமும் கல்லுரலும் தகவல்களுமாய் அருமையான இடுகை.

    ReplyDelete
  9. இந்த முறை படங்கள் குறைவு என்றாலும் முதல் படமே திவ்யம்.

    ReplyDelete
  10. கண்ணை கவரும் சிறந்த படங்கள் கருத்தை கவரும் பாடல்கள் சிறந்த படைப்பு பாராட்டுகள்

    ReplyDelete
  11. பகிர்விற்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
    தொடர் சோதனை எமது வலைப்பூக்களுக்கு ஏற்பட்டு அனைத்து வலைப்பூக்களும் நீக்கப்பட்டு, அட்சயா http://vallimalaigurunadha.blogspot.com புதிய வலைப்பூ. தகவலுக்காக!

    ReplyDelete
  12. ஸ்ரீ திருநெடுங்களநாதரை
    தரிஸித்து நிறைவடைய வைத்த சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்....

    ReplyDelete