இருமலு ரோக முயலகன் வாதம் எரிகுண நாசி விடமேநீ
இழிவு விடாத தலைவலி சோகை எழுகள மாலை இவையோடே
பெருவயிறீளை எரிகுலை சூலை பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத படியுன தாள்கள் அருள்வாயே''
வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே.
-என்று நோய்கள் நீங்க தணிகைத் தீரனை அருணகிரி நாதர் பாடியுள்ள பாடல் நாமும் தினமும் ஆறுமுறை பாடிப் பிரார்த்தித்தால் நலம் பல பெறலாம்..
இந்தப் பாடல் நோய் தீர்க்கும் திருமந்திரத் திருப்புகழ். பாராயணம் செய்வதற்கு உரியது.
தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் திருத்தணி முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடு என்ற பெருமை கொண்டு ,சக்தி வாய்ந்த திருத்தலமாகத் திகழ்கிறது...
ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் மாசிக் கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் திருத்தணியில் பக்தகோடிகள் பூ காவடி, பால் காவடி ஆகிய பிரார்த்தனையை செலுத்துகின்றனர்.
நூற்றுக்கணக்கான திருப்புகழ் சபையினர் பக்தி பாடல்களை பாடிக்கொண்டும், முருகன் திருநாமங்களை சொல்லிக்கொண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறும்போது, பக்தியில்லாதவனுக்குக் கூட திருத்தணி முருகன் மீது பக்தியை உண்டாக்கி பரவசப்படுத்தும்.
சிவபெருமான், திருமால், ஸ்ரீராமர், பிரம்மதேவர், கலைமகள் ஆகியோரும் திருத்தணி முருகனை வணங்கி வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
பின்னர் தெற்கில் உள்ள இந்திர நீலச் சுனையை தரிசித்துவிட்டு கோயிலுக்குள் சென்று ஆபத்சகாய விநாயகர், அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்கள், குமாரலிங்கேஸ்வரரை வணங்கி அருள் பெறுகிறோம்..
தங்க விமானம், கோயிலின் சிறப்பை மேலும் மெருகேற்றியுள்ளது.
மூலஸ்தானத்தில் உள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும், வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபட்டு முருகன் சன்னதியில் திருநீறு, குங்குமப் பிரசாதங்களுடன் திருமேனிப் பூச்சு என்னும் சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படும் சந்தனத்தை உட்கொண்டால் சகலவிதமான நோய்களும் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.
முருகப் பெருமானுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் சகலமும் தரும் முருகன் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடம் ..
தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம்.
தணிகைமலைத் தீரன் தீமைகள் தீர்ப்பான்...
அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது.
ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை
மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தல் சிறப்பு.
ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹண பவ
ஆடிக்கிருத்திகை. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1008 காவடி ஏந்தி மாட வீதியில் பக்தர்கள்.
திருத்தணி முருகன் சரவண பொய்கை குளத்தில் ஆடிக்கிருத்திகை மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் தெப்பக்குள உற்சவம்
கைலாயத்தில் நவரத்தினங்களாலிழைத்த சிம்மாசனத்தின் மீது பரமேஸ்வரரும் பார்வதி தேவியும் கொலுவீற்றிருக்கும் அற்புதக்காட்சி !
”சக்தித் திருமகன்”
ReplyDeleteசக்தியளிக்கும் திருமகன்.! ;)
பின்னூட்டமிட எனக்கு
சக்தி அளிப்பாரா? பார்க்கிறேன்.
சக்தியளித்தால் மீண்டும் வருவேன்.
பெரிய ஸ்தலங்களில் இதுவரை பார்க்காத இடங்களில் இதுவும் ஒன்று! அடுத்த முறை இந்தியாவிற்கு வரும் போது நிச்சயம் பார்க்க வேண்டும்!
ReplyDeleteதிருப்புகழுடன் திருத்தணி முருகர் தரிசனம் சிறப்பாக அமைந்தது நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் வாலி நாணி கூனியிருக்க வேண்டாமா? தினமணிக் கட்டுரை! அறிஞகளின் பொன்மொழிகள்!
http://thalirssb.blogspot.com.
ஆடிக்கிருத்திகை. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1008 காவடி ஏந்தி மாட வீதியில் பக்தர்கள் ..... என்ற வரிகளுக்குக்கீழே காட்டப்பட்டுள்ள படம் மிகச்சிறப்பாக உள்ளது.
ReplyDeleteஅதுபோலவே அடுத்த படமான
ReplyDeleteதிருத்தணி முருகன் சரவண பொய்கை குளத்தில் ஆடிக்கிருத்திகை மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் தெப்பக்குள உற்சவம்
ப்ற்றிய படமும் சும்மா ஜொலிக்குது. ;)))))
கடைசி அசையும் படத்தில் டான்ஸ் ஆடிடும் இரு முருகன்கள் வேடிக்கையாக உள்ளன.
ReplyDeleteஇதுபோல ஏதாவது ஒன்றிரண்டு வேடிக்கைகள் தாங்கள் வாடிக்கையாகக் காட்டுவது தான். ;)
பூக்கள் சிரியல் பல்பு எரிவது போல அழகு.
ReplyDeleteஇதுவரை பாத்திராத சில படங்கள்...
ReplyDeleteநோய் தீர்க்கும் அருணகிரி பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி...
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
நான் இதுவரை வெளியிட்டுள்ள 306 பதிவுகளிலும், தங்களின் அன்பான கருத்துரைகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள், விமர்சனங்கள் போன்றவை தங்கத் தாமரைகளாக ஜொலிப்பது போலவே .......
ReplyDeleteதாங்கள் நேற்று 29.07.2012 வரை வெளியிட்டுள்ள 615 பதிவுகளிலும்,
என் கருத்துக்களும், பாராட்டுக்களும், வாழ்த்துகளும், பதிவாகியுள்ளன என்னும் மகிழ்ச்சியான செய்தியினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
For me "YOU ARE THE BEST"
Thanks a Lot, Madam.
பிரியமுள்ள
vgk
Respected Madam.
ReplyDeleteThere is an another award waiting for you in the following Link:
http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html
Kindly accept.
For me "YOU ARE THE BEST" ;)))))
சக்திமிக்க சக்தித்திருமகன் !!
ReplyDelete3748+6+1=3755
ReplyDelete