Tuesday, July 31, 2012

வசந்தம் வீசும் - ஆடி பதினெட்டு’



பூமியில் வாழும் ஜீவராசிகள் , மழையால்   வாழ்கின்றன.. 

ஆடி மாதத் தொடக்கத்தில் காவிரியில் வெள்ளம் வரத் துவங்கும். 

ஆடி பதினெட்டு அன்று காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்.

பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். 

மகாபாரதத்தில் பதினெட்டு பர்வங்கள், 
பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், 
சித்தர்கள் 18 பேர்கள், 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகள், 
குடிமக்கள் 18 வகை, 
நெல் முதலான தானியங்கள் 18 
எனப் பலவும் அந்த அடிப்படையிலேயே அமைந்ததை அனுசரித்துத்தான், நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக் கரைகளில் 18 படிகளை அமைத்தார்கள். 

உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும் காவிரி அன்னைக்கு ‘
ஆடி பதினெட்டு’ என்று விழாவும் எடுத்தார்கள். 

   நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, அத்துடன் சிறிதளவு மண்ணோ - எருவோ கலந்து, தண்ணீரும் தெளித்து வைப்பார்கள். விழாவுக்குள் ஆடி பதினெட்டு  விழாவில் முளைத்து, வளர்ந்து இருக்கும். முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி...

ஆடி பதினெட்டு அன்று முளைப் பாலிகையைக் கையில் ஏந்தியபடி, பெண்கள் ஆற்றங்கரையில்  வட்டமாக கும்மி அடிப்பார்கள். 

 சர்க்கரை, பச்சரிசி ஆகியவற்றுடன் தண்ணீரை  கலந்து, பிள்ளையார் முன்னால் வைப்பார்கள்.

மஞ்சள் தடவிய நூல் சரடை  முதிய சுமங்கலியிடம் பெற்று அணிந்துகொள்வார்கள்..

 ஒன்றாகக் கூடிக் கும்மி, கோலாட்டம் என ஆடுவார்கள். ஆடி முடித்ததும் ஆற்றில் இறங்கி, அவரவர் தாம் கொண்டு வந்த முளைப் பாலிகைகளை சிறிது சிறிதாக எடுத்து ஆற்றில் விடுவார்கள்.

துரையில் ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஆடி மாத முளைக்கொட்டுத் திருவிழாவுக்குக் கொடியேற்றும் உற்சவத்திற்கு அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப் பட்டு. முளைக்கொட்டு உற்சவம் நடக்கும். 

எல்லா நதிகளிலும் வெள்ளம் புத்தம்புதியதாக வந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளரவேண்டி நடத்தப்படும் உற்சவம் !!. 
மதுரை சுற்றியுள்ள  மக்கள் அனைவருமே மீனாக்ஷியைத் தங்கள் குலதெய்வமாய்க் கொண்டு  முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டுப் பிரார்த்திப்பார்கள்.
 படிமம்:TN 110805111100000000meenakshi.jpg 
அம்மனுக்கு 21 என்ற கணக்கிலேயே எல்லாச் சீரும், சிறப்பும், உபசாரங்களும் செய்வதால் இதையும் 21 விதமான விதைகளைக் கொண்டு செய்வதும் உண்டு. 
ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஏற்றப்படும் கொடி பத்து நாட்கள் உற்சவத்திற்குப் பின்னர் இறக்கப்படும். 
பத்துநாட்களும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் சந்நிதியிலேயே இருக்கும் மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் காட்சி தரும் அன்னையின் முன்  பச்சை நிறம் கண்கொள்ளாக் காட்சியாக முளைப்பாரிகளை  வைத்திருப்பார்கள்.
கும்மியோடு முளைக்கொட்டைப் பொற்றாமரையில் கரைக்கப்படும்.



http://sairkinfotech.com/wp-content/uploads/2011/07/adi1.jpg
  கருகமணி,  காதோலை ஆகியவற்றையும் ஆற்றில் விடுவார்கள். ‘
http://anudinam.org/wp-content/themes/News/includes/timthumb.php?src=http://anudinam.org/wp-content/uploads/2012/07/DSC00217.jpg&w=298&h=287&zc=1
ஆடி 18 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கநாதர் காவேரித் தாயாருக்கு மரியாதை செய்ய ஸ்ரீரங்கம்  அம்மா மண்டபம் காவேரிப் படித்துறைக்கு எழுந்தருள்வார். 
http://farm2.static.flickr.com/1087/1446949943_e0aa7bf18a.jpg
 கோவிலிலிருந்து யானையின்மேல் மங்கலப் பொருட்களான புடவை, ரவிக்கைத் துணி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பழம், தாம்பூலம், கருகமணி ஆகியவற்றைக் கொண்டு வரும் மங்கலப் பொருட்களை பெருமாள்முன் சமர்ப்பித்து பூஜைசெய்து, பின் காவேரித் தாயாருக்கு பூஜை செய்து காவேரி நதியில் சமர்ப்பிப் பார்கள். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLsiNXb-r2aBAZn8LhO-13sWrPnICUNuClgD-pdq7EdrXmZiEUCVBWAtz0Stf8PH2WKU68oT3kRtjPBE5jJsPaS5o-BsnMvl5vdPdlEvZSI4LuO4Mb4MXZ2uiFnK9mnmgm1H4GX6rMng6I/s400/aadi+18+a.jpg
http://reflow.scribd.com/6k9xa4ozuo14r56k/images/image-22.jpg
 http://reflow.scribd.com/1mt7oz3dmorc8aa/images/image-70.jpghttp://www.kmmatrimony.com/Images/Temple/arulmigu-andal1.jpgபெருமாள், வெளி ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, அங்கு ஸ்ரீஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்லும் விழாவில் கலந்துகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசும்

 http://www.thehindu.com/multimedia/dynamic/01155/27frGaruda4__JPG_1_1155797g.jpg
http://www.srichowdeshwaricharitabletrust.in/images/hall/photo18.gif


http://farm7.static.flickr.com/6123/6027755599_c18fe375d1.jpg
photo 
Sri Padmavathi Ammavari Temple, Tiruchanur

 




19 comments:

  1. ஆடி பதினெட்டு-சிறப்பான பகிர்வு...
    முளைப்பாரி படங்கள் அருமை...
    மதுரைக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் சென்று வந்தேன்.
    நன்றி சகோதரி.

    ReplyDelete
  2. ஆஹா ! வசந்தம் வீசட்டும்!!

    ஆடிப்பதினெட்டைக் கண்டு களித்து விட்டு மீண்டும் மீண்டு வருவேன். !!

    ReplyDelete
  3. படங்கள் அத்தனையும் அழகோ அழகு. எவ்வளவு முறை திரும்பத் திரும்ப தரிஸித்தாலும், கண்களுக்கு விருந்தாகவும், எண்ணங்களுக்கு மருந்தாகவும் அமைந்து விடுவது தான் இவற்றில் உள்ள தனிச்சிறப்பே.

    ReplyDelete
  4. நன்கு அழகாக பசுமையாக ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ள முளைப்பாரிகளை அவர்கள் சுமந்து செல்வதை வெகு அழகாகக் காட்டியுள்ளீர்கள். ;)))))

    ReplyDelete
  5. 18 என்ற எண்ணிற்குள்ள சிறப்புகளை அறியத்தந்தமை அருமை!

    முளைப்பாரிகள் எத்தனை உயரமாக வளர்கிறதோ அத்தனை தூரம் அதனை வளர்ப்பவர்களின் விரதம் சிறப்பானது என்று கூறுவார்கள் எங்கள் கிராமத்தில்!

    படங்கள் அனைத்தும் வழமை போல் வெகு அழகு!

    ReplyDelete
  6. தொடர்ந்து பின்னூட்டம் தரமுடியாமல் பல்வேறு எதிர்பாராத இடையூறுகள் ஏற்பட்டு விட்டன. மன்னிக்கவும். இதோ இப்போது தொடரவேன்.

    ReplyDelete
  7. // பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும்.

    மகாபாரதத்தில் பதினெட்டு பர்வங்கள்,

    பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள்,

    சித்தர்கள் 18 பேர்கள்,

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகள்,

    குடிமக்கள் 18 வகை,

    நெல் முதலான தானியங்கள் 18

    என்று பலவும் அந்த அடிப்படையிலேயே அமைந்ததை அனுசரித்துத்தான், நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக் கரைகளில் 18 படிகளை அமைத்தார்கள். //


    அடேங்கப்பா! எவ்வளவு தகவல்கள்? விட்டால் 18 காரணங்களை எடுத்துரைப்பீர்கள் போலிருக்கே!

    தகவல் களஞ்சியம்ன்னா சும்மாவா?

    ReplyDelete
  8. இந்த 1 8 என்ற பதினெட்டின் இரு ஸ்தானங்களுக்கும் நடுவே என்னைப் போன்ற ஒரு பூஜ்யத்தைச் சேர்த்தால் என்ன ஆகும் தெரியுமா?

    அது 1 0 8 ஆகி விடும்.

    அதை அஷ்டோத்ரம் என்றும் சொல்லுவார்கள்.

    இந்த 108 என்பதே சிலர் இல்லத்தின் கதவு எண்ணாக அமைந்து விடும்.

    அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பாக்யசாலிகள். புண்ணியவான்கள் + புண்ணியவதிகள்.

    கல்வி, செல்வம், வீரம் என அனைத்திலும், எழுத்தாற்றலிலும், பதிவுகள் வெளியிடுவதிலும் மிகவும் சிறந்து விளங்குவார்கள்.

    புகழ் என்னும் உச்சாணியில் ஏறி கொடி கட்டிப்பறப்பார்கள். விமானத்திலும் அடிக்கடி பறப்பார்கள். வெளிநாட்டுத் தொடர்புக்ள் இவர்களுக்கு நிறைய ஏற்படும்.

    தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும், பிறரை எளிதில் தன் வசம் கவர்ந்து அடிமையாக்கி விடும் சக்தி படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

    எல்லாம் அந்தக் க்தவு எண் 108 இன் விசேஷங்கள். இதெல்லாம் நான் இதுவ்ரை ஆராய்ச்சிகள் செய்து கண்டு பிடித்துள்ளவைகள்.

    உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ!

    உங்களுக்குத் தெரியாத ஓர் விஷயம் உலகில் உண்டோ? ;))))))

    ReplyDelete
  9. //ஆடி 18 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கநாதர் காவேரித் தாயாருக்கு மரியாதை செய்ய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறைக்கு எழுந்தருள்வார்.//

    இந்த ஆண்டு இதுவரை மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடாமல் உள்ளனர்.

    ஜூன் 12 நியாயமாகத் திறந்து விடப்பட வேண்டும். ஜூலை 12 போய் ஆகஸ்டு 12 வந்துவிடும் போல உள்ளது.

    காவிரித்தாய் வற்றிப்போய் இருக்கிறாள்.

    எப்போதும் காலம் காலமாகப் பொங்கிவந்த காவிரியை இப்போது பார்க்கவே மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. ;(

    ReplyDelete
  10. திண்டுக்கல் தனபாலன் noreply-comment@blogger.com

    4:34 PM (2 hours ago)

    to me
    திண்டுக்கல் தனபாலன் has left a new comment on your post "வசந்தம் வீசும் - ஆடி பதினெட்டு’":

    ஆடி பதினெட்டு-சிறப்பான பகிர்வு...
    முளைப்பாரி படங்கள் அருமை...
    மதுரைக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் சென்று வந்தேன்.
    நன்றி சகோதரி.

    நிறைந்த நன்றிகள்...

    ReplyDelete
  11. //பெருமாள், வெளி ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, அங்கு ஸ்ரீஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்லும் விழாவில் கலந்துகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசும்//

    தங்களின் இதுபோன்ற அன்றாடப் பதிவுகளைப்படித்து, படங்களைப் பார்த்து ரஸித்து மகிழ்ந்து, அவற்றிற்கு உடனுக்குடன் பின்னூட்டம் இடுவதிலேயே என் வாழ்க்கையில் வசந்தம் வீசுவதாக உணர முடிகிறது.

    இருந்தாலும் எனக்கு ஒரு சிறு குறையுமுண்டு. அதாவது முன்பு போல தாங்கள் ஏதும் பின்னூட்டங்களுக்கு பதில்கள் அளிப்பதில்லை.

    முன்பு கூட ஏதோ அஞ்சுக்கு ரெண்டு [2/5] பழுதில்லாமல் பதில் அளிப்பீர்கள். இப்போது சுத்தமாக பதில் ஏதும் தருவதில்லை. அதனால் பரவாயில்லை. உங்களுக்கும் பாவம் எதற்குமே நேரம் இருக்காது தான்.

    ஆனால் உங்களுக்கு பதிலாக உங்களின் நெருங்கிய நண்பர்கள் + தோழிகள் எனக்கு மெயில் மூலம் அவ்வப்போது உற்சாகம் தந்து வருகிறார்கள். அவர்களுக்காகவே நானும் உற்சாகத்துடன் ஏதோ எழுத வேண்டியதாக உள்ளது.

    பதிவு வெளியாகும் செய்திகள் கூட இப்போதெல்லாம் எனக்குக் கிடைப்பதில்லையே! நானாகவே சாயங்காலம் 4 ஆச்சா, 5 ஆச்சா, 6 ஆச்சா என எதிர்பார்த்துக் காத்திருக்கும்படியாக அல்லவா ஆகி விட்டது.

    அதனால் என்ன, தங்கள் பதிவினைக் காணாமல், படிக்காமல் எனக்குத் தூக்கமே வருவதில்லை தான்.

    படித்த பிறகும் அதே நினைவலைகளில் இருப்பதால், பிறகும் எனக்கு தூக்கம் வருவதில்லை தான்.

    ஓடும் வரை இது போலவே ஓடட்டும். காவிரி நீர் போல இதற்கும் வரட்சி + வறட்சி ஏற்படாமல் இருந்தால் சரியே.

    பாராட்டுக்கள்,
    வாழ்த்துகள்,
    நன்றிகள்.

    ReplyDelete
  12. ஆடி 18 எங்க ஊரு நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  13. முதல் படத்தில் தாழம்பூவுடன் காட்டியுள்ள அம்மனும், கடைசி படத்தில் அந்தத் தேரும் ஜோர். ;)))))

    ஆமாம், ஆடிப்பதினெட்டுக்கு மிகவும் முக்கியமானதும், எனக்கு மிகவும் பிடித்ததுமான சித்ரான்னங்கள் [புளியஞ்சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வறுத்த மோர் மிளகாய்] + சேவை வடாம், கட்டை வடாம், பொரித்த அரிசி அப்பளம் முதலியன எங்கே?

    படத்திலாவது காட்டி மகிழ்விக்கக் கூடாதா? ;(((((

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன் said...//


    மன்னிக்கவும் ..
    எமக்கு பலப்பல பயணங்கள் ..... தொடர்கின்றன..

    send mail -- அனுப்ப மறுக்கிறது இந்த கணிணி !

    ReplyDelete
  15. ஒரே [தாழம்பூ] அம்மனை ஒரே பதிவினில் மூன்று முறை காட்டியுள்ளதைத் தவிர்த்திருக்கலாமோ என நான் முதலில் நினைத்தேன்.

    கீழிருந்து இரண்டாம் படமும், நான்காம் படமும் முதன்முதலாகக் காட்டியுள்ள படத்தையே ஒத்து இருந்தாலும், கீழேயுள்ள படக்களில் விரிந்த செந்தாமரை உபரியாக உள்ளது.

    பிறகு தான் நினைத்துக்கொண்டேன். ஒருமுறைக்கு மும்முறையாக தரிஸித்தால் தான் பக்தர்கள் மனதில் அம்மன் நன்றாகப் பதியக்கூடும் என்று.

    ஆனால் அந்தப்படம் மிகவும் அழகாகத்தான் உள்ளது. பார்க்கப் பார்க்கத் திகட்டாத அருமையான படம். மீண்டும் மீண்டும் பார்த்ததில் மனதுக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது.

    ReplyDelete
  16. ஆடியில் பெருக்கெடுத்து ஆடிவரும் காவேரி இன்று வரண்டு கிடக்கிறது. நீங்களாவது பழைய படங்களைப் போட்டு கரை புரண்டோடும் காவிரியை காண்பித்து இருக்கலாம்.

    ReplyDelete
  17. ஆடி 18 பற்றி தெளிவாக கூறியமைக்கு மிக்க நன்றி அக்கா.... அக்கா படங்கள் அனைத்தும் அருமை... எல்லா அம்மனின் காட்சிகளும் அருமை....

    ReplyDelete
  18. சிறப்புகளை அறியத்தந்த சீர்மிகு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  19. 3765+10+1=3776

    தங்களின் ஓர் பதில் ..... ;(

    இன்றுவரை என்னால் ஒப்புக்கொள்ளக்கூடியதாக இல்லை.

    ReplyDelete