மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே!
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே!
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே!
ஜெய ஜெய சங்கரி! கௌரி கிருபாகரி! துக்க நிவாராணி காமாக்ஷி!
பாரத தேசமெங்கும் அன்னை நல்லாட்சிபுரியும் 51 சக்தி பீடங்களுள்ஒன்றாய் உலகத்தின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறது பட்டு நகரமாம்.காஞ்சிபுரம்
காஞ்சி காமாட்சி அம்மன்ஆலயம் சென்றால் அனைத்து அம்பாள் சன்னதிக்கும் சென்று வணங்கும் பலன் கிடைக்கும். சிறப்பு வாய்ந்தது..
குடும்ப அமைதிக்கு காஞ்சி காமாட்சி அம்மன் சாத்வீகத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய அன்னையாகத் திகழ்கிறாள்.. ..
ஆதிசங்கரர் பிரதிஷ்ட்டை செய்த ஸ்ரீசக்கரம் தன தான்ய சம்பத்து தருவயதில் நிகரற்று விளங்குகிறது..
ஸ்ரீ என்பது லட்சுமியின் அம்சம். அதனால் மிகவும் விசேஷமானது.
பிந்து, முக்கோணம், எட்டுக் கோணம், இரண்டு பத்துக் கோணங்கள், பதினாலு கோணம், எட்டுத்தளம், பதினாறு தளம், மூன்று வட்டம், மூன்று கோட்டுப் பூபுரம் என்றவைகளாகிய இது பரதேவதையின் ஸ்ரீ சக்கரம்ஆகும்.
காஞ்சியிலே காமாக்ஷியாக அருள் பாலிக்கின்றாள்.
அன்னையின் பார்வை பட்டாலே நம் அனைத்து துன்பங்களூம் ஒழிந்து நல்லருள்பெற்று இன்பம் காண்போம் என்பது அனுபவப்பூர்வமான உண்மை.
"நகரேக்ஷ காஞ்சி" என சிறப்புப் பெற்ற காஞ்சி நகரம் ஸ்ரீ சக்ர வடிவமாக காமாக்ஷி அம்மனின் கோவிலை மத்திய பிந்து ஸ்தானமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
அன்னை காமாட்சி காஞ்சி தலத்தில் ஐந்து வடிவங்களில் அருட்காட்சிதருகின்றாள்
முதலதாவது பிலத்துவார ஆதி காமாட்சி,
இரண்டாவதுமூலஸ்தானத்து காமாட்சி
மூன்றாவது சங்கரர் அமைத்த சக்ர காமாட்சி,
நான்காவது தபசு காமாட்சி,
ஐந்தாவது பங்காரு காமாட்சி.
பங்காரு(தங்கம்) காமாட்சியின் "காம கோடி விமானத்தின் "அழகைக் காண் ஆயிரம் கண் போதாது தங்கக் கிளியே !
வருத்தங்கள் களையும் காமாட்சி அம்மன் விருத்தம்
சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி சோதியா நின்ற வுமையே.
சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்துன்பத்தை நீக்கி விடுவாய்.
சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்
ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திராது
சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்சிறிய கடனுன்னதம்மா.
சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரிசிரோன்மணி மனோன்மணியு நீ.
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அன்னை காமாட்சி உமையே.
Kanchipuram Temple Elephants.
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறை கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
அருட்கோல அன்னை காமாக்ஷி தரிஸனம் நாளை வெள்ளிக்கிழமைக்கு முன்பாகவே அருமையாக....
ReplyDeleteஜொலிக்கும் இரு அகல்களுடன் ஆரம்பித்து மல்லிகை மணம் வீசும் பதிவாக .... ஜோர் ஜோர்
ReplyDeleteகாட்டியுள்ள மிகப்பழமை வாய்ந்த வலம்புரிச்சங்கு .... ஆஹா!
ReplyDeleteஸ்ரீசக்ரத்தினுள் காமாக்ஷி கொள்ளை அழகான படமல்லவா! ;)
ReplyDeleteகம்பீரமாக இரண்டு யானைகள், துதிக்கைகளால் தரையைத் துழாவிக்கொண்டு.......
ReplyDeleteமிகச்சிறப்பாகப் படம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
மங்கள ரூபிணி மதி அணி சூலினி... போன்ற ஸ்லோகங்களும்,
ReplyDeleteவருத்தங்கள் களையும் காமாக்ஷி அம்மன் விருத்தமும்
பகிர்ந்திருப்பது மிகச்சிறப்பு.
கோடி புண்ணியம் தரும் கோபுர தரிஸனமும்.....
ReplyDeleteபூத்தவளே
புவனம் பதினான்கையும்
பூத்த வண்ணம் காத்தவளே
என்ற கடைசி ஸ்லோக்கமும் ....
அதன் கீழ் காட்டப்பட்டுள்ள பச்சைப் புடவை அணிந்த அம்பாளும் வித்யாசமான அழகுடன் உள்ளன.
இன்றைய பதிவினில் உள்ள அனைத்துப் படங்களும், விளக்கங்களும் அருமை.
ReplyDeleteஇன்று தங்கள் பதிவுகள் சிலவற்றை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளதற்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
வலம்புரி சங்கு படம் அருமை!
ReplyDeletesuperb post
ReplyDelete'காமாக்ஷி’ விளக்கம் அருமை
ReplyDeleteகாமாட்சி அம்மன் தரிசனத்தை எங்கள் வீட்டிற்கே வந்துவழங்கியது உங்களின் பதிவு! நன்றி!
ReplyDeleteRespected Madam,
ReplyDeletePlease have a visit to the following link:
http://gopu1949.blogspot.in/2012/07/blog-post_06.html
There is an AWARD waiting for you!
YOU ARE THE BEST..... ;)))))
பிரியமுள்ள,
vgk
விளக்கம் அருமை சகோதரி !
ReplyDeleteஅருட்கோல அழகிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDelete3564+9+1=3574
ReplyDelete