கோவையில் ஈச்சனாரி கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும்
பஜனைக்கோல அனுமன் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம்..
திரு எம் . ஆர். சேட் அவர்கள் ஸ்ரீராம் சேவா ஆஸ்ரமம் என்கிற ட்ரஸ்ட் ஏற்படுத்தி தம் பெற்றோர்கள் ஒரு அனுமன் கோவில் கட்டவேண்டும் என்று கண்ட கனவை நிறைவேற்ற சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள பூமியில் சோலைவனமாக மரங்களும் , நந்தவனமும் , துளசி வனமும் சூழ அனுமனுக்கு அழகிய ஆலயம் அமைத்துள்ளார்..
மிக மிகத்தூய்மையாக பரமரிக்கப்படும் ஆலயம் ..
ஞாயிற்றுக்கிழமைகளில் ஹனுமனின் புகழ் பாட அருமையான சத்சங்கம் அமைதிருக்கிறார்கள்..
இராம . அரங்கநாதன் அவர்கள் பெர்க்ஸ் பள்ளி வளாகத்தில் அமைத்திருக்கும் பிரமிடு போலவே இங்கும் தியானம் செய்வதற்கு பிரமிட் அமைத்திருக்கிறார் பிரபஞ்ச காந்த அலைகள் பிரமிட் முனையில் குவிந்து மனம் ஒருமுகப்படுவதற்கு சிறப்பாக துணைபுரியும் அதிசயத்தை உணரமுடிகிறது...
பிரமிட்டின் உள்பகுதி
தானே வடிவமைத்து கட்டிய கோவிலில் ஜன்னல்களில் தாமரைப்பூ வடிவமும் ,கதவுகளில் சங்கு ,சக்கரம் , கதை , வில் , ஓம் வடிவங்களும் வருமாறு அமைத்ததை விளக்குகிறார்..
சன்னதியில் ஸ்ரீ ராமர் , சிவன் , அனுமன் ஆகியோருக்கு பிரார்த்தனை செய்துகொண்டு காணிக்கை செலுத்த உண்டியல் உண்டு..
முன்பொரு முறை சென்றிருந்தபோது அபூர்வமான நரசிமரின் சாளக்கிரம வடிவம் ஒன்று சிவபார்வதி விகரகங்களுக்கு அருகில் பார்த்திருந்தோம்..
ஸ்ரீ ராமர் அங்கே அருகில் இருக்கும் போது அவரது அவதாரமான நரசிம்மர் சிலை அவர் அருகில் இருப்பதுதான் முறை என்று சொல்லி ஆராதித்து வந்தோம்..
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அனுமன் விக்ரகம் உயிர்த்துடிப்புடன் நம்மை ஈர்க்கிறது...