விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல .... புண்டலீக வரதே........ ஹரி விட்டலே...விட்டல விட்டல
பாற்கடல் நாயகனான ஸ்ரீவிஷ்ணு உத்தவரிடம் பூமியில் அவதரிக்குமாறு நத்தைக் கூடு போல உள்ள சிறு வஸ்துவினுள்ளே சிறு குழந்தையாக்கி அடைத்து மழை பெய்யும் காலத்தில் பூமியில் பீமாரதி நதியில் விழும்படி செய்தார்
பீமா நதியில் விழுந்த சிப்பி விட்டல் விட்டல் என ஜபித்துக் கொண்டு நீரின் போக்கில் மிதந்து சென்றது. , பாண்டுரங்க நாமத்தை உச்சரித்தவர் உத்தவர் .
குழந்தை வரம் கேட்ட தாமாஜி என்ற விஷ்ணு பக்தர்கனவில் இறைவன் தோன்றி,மறுநாள் பீமா நதிக் கரையில் உனக்கு ஓர் ஆண் குழந்தை கிடைக்கும் என சொல்லி மறைதார்..
கடவுளின் பேரருளால் கிடைத்த அக்குழந்தைக்கு நாமா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.அவரே நாமதேவர்...
ஸ்ரீ நாமதேவரின் மறுபிறப்பெனப் போற்றப்படும் ஸ்ரீ துக்காராம் சுவாமி அவர்கள். சைவ - வைணவ ஒற்றுமையையும் இறையில் வேற்றுமையில்லை என்பதையும் உணர்த்துகிறார்...
ஸ்ரீ நாமதேவர் பாட விரும்பிய கோடிக்கணக்கான பாடல்களை
ஸ்ரீ பாண்டுரங்கனே உவந்து எழுதியதாகவும், ஒரு குறிப்பிட்ட அளவே நாமதேவரால் தம் வாழ்நாளில் பாட முடிந்ததாகவும் மீதியைப் பாட இறைவனே அவரை ஸ்ரீ துக்காராம் சுவாமியாகத் தோன்றச் செய்தார் எனவும் நம்பிக்கை ....
தேவநகரத்தில் தானிய வியாபாரியாக வாழ்ந்து வந்த மிகச் சிறந்த தெய்வ பக்தரும், புண்யசீலருமான ஸ்ரீமாதவராவ் என்பவருக்கு மகவாகப் பிறந்தஸ்ரீ துக்காராம்.
பூர்வ ஜன்ம வாசைனையினால் இயல்பிலேயே பேரறிவு படைத்தவராகவும், சங்கீத ஞானம் கொண்டவராகவும், கவிதைகள் புனையும் ஆற்றலுடையவராகவும் விளங்கினார்
ஸ்ரீ துக்காராம் இறைபக்தியின் பொருட்டு குடும்பத்தை சரியாகக் கவினிக்காமல் தம் செல்வங்களனைத்தையும் தானம் செய்து வறுமையில் வீழ்ந்தார்..
ஸ்ரீ மஹாலட்சுமியே ஒரு ஹரிஜனப் பெண்னாக வந்து கமலாபாய்க்கு
ஸ்ரீ துக்காராம் கொண்டிருந்த பக்தியின் அருமையையும் அதன் வலிமையையியும் உணரவைத்ததன் பின் கமலாபாயும் ஸ்ரீ துக்காராமுடன் சேர்ந்து பாண்டுரங்க சேவையில் தம் மனதைச் செலுத்தினார்.
கமலாபாயும் பக்தியில் ஈடுபடவே இறைவனே பொறுப்புடன் அந்தக் குடும்பத்திற்கு வேண்டியதைக் கொடுத்து வந்ததுடன் தினமும் ஒரு அதிதி வேடத்தில் ஸ்ரீ துக்காராமுடன் வந்தமர்ந்தும் சில சமயங்களில் உருவமற்றவராகவும் வந்து உணவருந்தும் செய்தி ஊரெங்கும் பரவியது
கிஞ்சன்வாடி கிராமத்தில் வசித்து வந்த தீவிர கணேச பக்தரான வேதியர்
" ஸ்ரீ துக்காராம் சுவாமியுடன் பாண்டுரங்கன் வந்து உணவருந்தவது போல் நம்முடன் கணேசர் ஏன் வந்து உணவருந்தவில்லை ? எனச் சந்தேகத்தில் ஆழ்ந்ததை ஞான திருஷ்டியால் அறிந்த ஸ்ரீ துக்காராம் சுவாமிகள் அவரைத் தேடி தாமே கிஞ்சன்வாடிக்குச் சென்று தங்களுடன் ஸ்ரீ பண்டரிநாதன் தினமும் வந்து உணவு உண்பது போல, என் உபாசனாமூர்த்தியான ஸ்ரீ கணேசரும் என்னுடன் உணவருந்தும்படி செய்யவேண்டும் " என்ற விருப்பத்தை நிறைவேற்றினார்.....
" பக்தவத்சலனான இறைவன் எப்போதும் தூய பக்திக்குச் செவிசாய்ப்பவன் . உள்ளன்புடன் அழைத்தால் அவரும் வந்து உம்மோடு உணவுண்பது உறுதி " என சுவாமிகள் கூறினார்.
ஸ்ரீ துக்காராம் அருகே ஸ்ரீ பாண்டுரங்கருக்கும் அந்த அந்தணர் அருகே
ஸ்ரீ கணேசருக்கும் இலைகள் போடப்பட்டன.
வெகு நேரம் அந்தணர் அழைத்தும் ஸ்ரீ கணேசர் வராத நிலையில்
ஸ்ரீ துக்காராம் சுவாமிகள், " கவலை வேண்டாம், கடலில் விழுந்த ஒரு பக்தரின் கப்பலை மூழ்காமல் காப்பாற்றவே கணேசர் சென்றிருந்தார்.
இப்போதுதான் திரும்புகிறார். அதுதான் தாமதத்திற்குக் காரணம் " என ஆறுதல் கூறினார்.
அவர்கள் உள்ளே சென்று பார்க்க கடலின் உப்பு நீர் சொட்டச் சொட்ட
ஸ்ரீ கணேசர் உள்ளே இருந்தார்.
ஸ்ரீ துக்காராம் அவரை வேண்ட ஸ்ரீ பாண்டுரங்கருடன் தானும் வந்தமர்ந்து
ஸ்ரீ கணேசர் உணவு உண்டார்.
ஸ்ரீ துக்காராமை மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
இறைவனில் பேதமில்லை, இறைவனில் பெரிதில்லை சிறிதுமில்லை "
எம் இஷ்டதேய்வம் உம் இஷ்டதெய்வம் என நாம் பேசுவதேல்லாம் அன்பின் வெளிப்பாடே. இறை என்பது ஒன்றே ! அது தாய், நாமேல்லாம் அதன் சேய்.
ஸ்ரீ துக்காராம் இறைவனை பாண்டுரங்கனாக பாவித்து
பக்தி செலுத்தினார் அவருக்கு இறைவன் பாண்டுரங்கனாகவே
அருள் செய்தான்.
கிஞ்சன்வாடி அந்தணருக்கு அவர் விரும்பிய கணேச ரூபத்தில்
அருள் புரிந்தார்.
இவை அனைத்தும் பரம்பொருளின் அம்சங்களே அன்பதை உணர்வதே நன்மை தரும் - உணரவேண்டிய உண்மை "
இறைவன் உடலுக்கோ, மனதிற்கோ, புத்திக்கோ எட்டாதவனாயினும் தீவிர அன்பினாலும் பக்தியினாலும் அவனை அடைய முடியும்.
முதலில் மனிதன் தான் யார் என்பதை அறியவேண்டும். தமக்குள் பேதமில்லை என்பதை அறியவேண்டும். அதை அறிந்தவன் இறைவனுள் பேதமில்லை என்பதை மிகத்தெளிவாக உணர்வான்....