காஸ்டஸ் பிக்டஸ் என்னும் பெயர் கொண்ட தாவரம் இன்சுலின் செடி. என்றே அழைக்கப்படுகிறது...
இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். அமரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாயகமாகக்கொண்டு மெக்சிகோ , கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது
ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர்.
கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரியிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன.
கேரளாசென்றிருந்தபோது வாங்கிவந்தோம்....
இப்போது கோவை வேளாண்பல்கலைக்கழக்த்திலும் நாற்று கிடைக்கிறது..
வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் வளர்க்கலாம்.
மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது.
இலைகள் மா இலை போன்று இருக்கும்.
இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி அழகாக வளர்ந்து தோட்டத்தின் எழிலை அதிகரிக்கிறது...
பூக்களும் மஞ்சள் நிறத்தில் கருத்தைக்கவர்கிறது...
இலையின் சுவை சிறிது புளிப்பு கலந்த வெற்றிலை மாதிரி இருக்கிறது...
இளம் இலைகள் சக்கை ஏதும் இல்லாமல் வாயில் கரைவதை உணரமுடிகிறது...
சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது
இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.
சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.
சர்க்கரை நோய முற்றியவர்களுக்கு பயன் தருவது குறைவு..
ஆரம்ப நிலையில் எளிய முறையாக பின்பற்றலாம்..
வருமுன் காக்கவும் பயன்படுத்தலாம்...
ஆஹா தங்களிடமிருந்து வித்தியாசமான பதிவு.இன்சுலின் செடி பற்றி புதிய தகவல் நன்றி.
ReplyDeleteநல்ல பதிவு...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
இன்சுலின் செடி பற்றி புதிய தகவல் நன்றி.
ReplyDeletePuthiya payanulla thagavalukku Nandri !
ReplyDeleteகாஸ்டஸ் பிக்டஸ் தாவரம் பற்றிய அழகான பயனுள்ள தகவல்கள் கொடுத்துள்ளது சிறப்பாக உள்ளது.
ReplyDeleteமுதல் படத்தில் எரிய விட்டுள்ளது சர்க்கரை நோயையா?
நடுவே ஒரு படத்தில் செடியையே ’இஞ்ஜெக்ஷன் நீடில்’ போல காட்டியுள்ளது நல்ல படத்தேர்வு.
கடைசிக்கு முந்திய படத்தில் உள்ள பறவை சர்க்கரை நோயாளியாக இருப்பாரோ? ;)
அழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள்.
பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.
வணக்கம் ஐயா..
Deleteகருத்துரைகளுக்கும் பாராட்டுகளுக்கும்
மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
please sent phone number
Delete