ரம்யத்தை அள்ளி வள்ளலாய் வழங்கி கண்களையும் கருத்தையும் கவரும் துலிப் மலர்கள் வானவில்லை பூமிக்கு அழைத்து வந்து விருந்தளிக்கின்றன ..
கொள்ளை அழகுக்கு பெயர் பெற்ற காஷ்மீருக்குப் புதுப் பெருமை சேர்க்கிறது பிரமாண்ட துலிப் தோட்டம்..
சமஸ்கிருத மொழியில் தாமரையும், உருதுக் கவிதைகளில் ரோஜாவும், சங்க இலக்கியத்தில் முல்லையும் இடம் பெறுவது போன்று பெர்ஷியக் கவிதைகளில், துலிப் மலர் முதன்மை பெறுகிறது.
நெதர்லாந்து, இங்கிலாந்து, வட அமெரிக்காவில் துலிப் மலர், வசந்தத்தை வரவேற்கும் மலராக கொண்டாடப்படுகிறது.
துலிபா என்னும் ஆங்கிலச் சொல் பிரெஞ்சு மொழியில் துலிப் என
அழைக்கப்பட்டது.
தால் ஏரியின் எதிரே கண்ணைக் கவரும் வகையில் ஜொலி ஜொலிப்புடன் துலிப் மலர்கள் மலர்ந்து மனம் கொள்ளை கொள்கின்றன்....
காஷ்மீர் மாநிலத்தில், ஸ்ரீநகரில் தால் ஏரியின் அருகில் உள்ள துலிப் தோட்டத்தில் துலிப் மலருக்கென திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வண்ண மலருக்கும் ஒரு தனித்தன்மையும்,
முக்கியத்துவமும் உள்ளது.
செந்நிற துலிப் , உறுதியான, உண்மையான காதலின் அடையாளமாம்.
ஊதா வண்ணம், ராஜ வம்சத்து உயர் காதலையும்,
மஞ்சள் வண்ணம், ஒரு காலத்தில் நம்பிக்கையற்றதாக கருதப்பட்டது, இன்று மகிழ்ச்சி எண்ணங்களையும், சூரிய ஒளியையும் வெளிப்படுத்தும் ஒன்றாகவும்,
வெண்ணிற துலிப்கள் ஊடலின் சமரச முயற்சியின் அடையாளமாகவும் ,
இப்படி பலவித குணநலன்களையும் கொண்ட துலிப் மலர்கள்
அழகிய கண்களுக்கு உவமானப்படுத்தப்படுவதும் உண்டு.
துலிப் என்பதன் பொதுவான விளக்கம் ‘ சரியான காதல்’ என்பதாம்..
வண்ணவண்ண மலர்களால் பூத்துக் குலுங்கும் பூக்கள் வீணாக்கப்படாமல், முடியுமானவரைக்கும் முறையாகப் பறிக்கப்பட்டு அவற்றிலிருந்து உரிய பயன் பெறப்படுகின்றது.
வானில் வண்ணம் கொண்ட வானவில் மண்ணிறங்கி வந்து காட்சி அளித்து மனதை அள்ளுகிறதோ!
நெதர்லாந்து நாட்டில் தான் முதன் முதலில் துலிப் மலர் வர்த்தக ரீதியாகப் பயிரிடப்பட்டது.
ஒரு காலத்தில் துலிப் மலர்கள், கரன்சி நோட்டு களாகப் பயன்படுத்தப்பட்டன. உலகமயமாக்கலினால் இன்று மெட்ரோ பாலிடன் நகரங்களில், பூங்கொத்துகளில் தற்போது துலிப் மலர்கள் இடம் பெறுகின்றன.
தோட்டத்தில் நேர்ந்தியான வரிசைகள்! வண்ணங்கள் மனதை அள்ளுகின்றன. அறியாத தகவல்கள். நன்றி.
ReplyDeleteவண்ண வண்ண எண்ண முடியாத மலர்க் கூட்டம் நிரம்பிய தோட்டங்கள். இந்த தோட்டங்களில் பாரதிராஜா தனது பாணியில் வெள்ளுடை தரித்த தேவதைகளை ஆடவிட்டு படம் எடுத்தால் அருமையாக இருக்கும். துலிப் மலர்கள் பற்றிய தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி!
ReplyDeleteஇயற்கையின் அழகென்ன அழகோ !!!!!!.............வியக்க வைக்கும்
ReplyDeleteஅழகிய மலர்த் தோட்டங்கள் அருமை சகோதரி !..மிக்க நன்றி
பகிர்வுக்கு .
Yeah they come in eye catching colours. you brought the whole colourful world in front of me ma.
ReplyDeleteMira’s Talent Gallery
Oh!
ReplyDeleteWhat a pretty beautiful flowers.
So So nice.
I had seen these flowers at
USA.
viji
மலர்கள் என்றும் பார்க்க ரசிக்கத்தூண்டுபவை.
ReplyDeleteதங்கள் கைவண்ணத்தில் மேலும் அழகுடன் மிளிர்கின்றது.
தங்களின் தளத்திற்கு 2 தினங்களாக வந்தும் பார்க்க இயலவில்லை. புதிய தோற்றத்துடன் பதிவை வெளியிட்டமைக்கு நன்றி.
ReplyDeleteவண்ண வண்ண அழகுப் படங்களுடன் அருமையான தகவல்களுடன், மனதிற்கு ரிஃப்ரெஷ் செய்யும் பதிவு!
ReplyDeleteவண்ணங்கள் மனதை அள்ளுகின்றன. அறியாத தகவல்கள். நன்றி அக்கா.
ReplyDeleteAha......azhagu.....Aramaic.......aanandham !
ReplyDeleteதுலிப் மலர்களின் வண்ணம் , வரிசையாக பயிர் செய்து இருப்பதின் நேர்த்தி ! எல்லாம் மனதை கொள்ளை கொள்கிறது. என் மகன் துலிப் மலர்களின் மேல் காதல் கொண்டு மலர்களை ஆயில் பெயிண்ட் செய்து இருக்கிறான்.
ReplyDeleteதுலிப் மலர்களின் படம், செய்திகள் என்று உங்களின் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபதிவைப் பார்க்க முடிவதற்கு நன்றி. படங்களுடன் பதிவு அட்டகாசம். வாழ்த்துக்கள்.
வியக்க வைக்கிறது... நன்றி அம்மா...
ReplyDeleteதுலிப் மலர்கள் மனதைத்துள்ள வைப்பதாகவே உள்ளன.
ReplyDeleteகீழிருந்து 4 முதல் 10 வரை காட்டியுள்ள படங்கள் மிகவும் கவர்ச்சியாக உள்ளன.
அழகான பதிவுக்கும், படங்களுக்கும், விளக்கங்களுக்கும் மனமார்ந்த இனிய நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
வணக்கம் ஐயா..
Deleteஅழகான இனிய கருத்துரைகளுக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..