ஐரோப்பாவிலுள்ள மிக உயரமான கட்டம் தி ஷார்டு The Shard,
சங்கீதமாய் சலசலத்து இசைபாடி லண்டன் நகருக்கு பெருமை சேர்க்கும் தேம்ஸ் நதிக்கரையில்
சங்கீதமாய் சலசலத்து இசைபாடி லண்டன் நகருக்கு பெருமை சேர்க்கும் தேம்ஸ் நதிக்கரையில்
கட்டிடக் கலைஞர் ரென்சோ பியானோ திட்டமிட்டு வடிவமைத்துள்ள கட்டிடம்...
245 மீட்டர் உயரத்திலுள்ள 72வது தளத்தில் பார்வையாளர் அரங்கம் காற்றுடன் கவிதை பாடி களிக்க வைக்கிறது...
68 வது தளத்திலிருந்து 72 வது தளம் வரை பார்வையாளர் மாடத்திற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது...
லண்டன் நகரின் அழகை அள்ளிப்பருக அருமையான தளத்திற்கு பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது...
லேசர் ஒளி வெள்ளத்தில் சொர்க்கலேகமா மாயாஜால இந்திர லோகமா , மயன் சிருஷ்டித்த மாளிகையா என மயங்கவைக்கும் எழிலுடன் இரவு நேரத்தில் திறப்புவிழா நிகழ்ச்சிகள் சிறப்புற நிகழ்ந்தன...
அழகு அதிசயமாய் திகழும் ஷார்டு கோபுரத்தின் உச்சியிலிருந்து மேகமூட்டமில்லாத தெள்ளத்தெளிவான வானிலை அமைந்த காலநிலைப் பொழுதுகளில் அருகில் உள்ள பிரான்ஸ் நாட்டின் சில பகுதிகள் காட்சிப்படுகிறதாம்....
புகழ் பெற்ற கதீட்ரல் தேவாலயம் , இயற்கை எழில் கொஞ்ச ஓடும் தேம்ஸ் நதி ஆகியவற்றில் மத்தியில் பிம்மாண்டமாய் விஞ்ஞான அற்புதமாய் ஒளிர்ந்து மனம் கவர்கிறது ...
பிரமிடு வடிவத்தில் முழுமையும் கண்ணாடியால் போர்த்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளதாலேயே ஷார்டு எனப் பெயரிடப்பட்டது.
பப்ளிக் ஏரியா எனப்படும் தரைத்தளம் பிரத்யோக வசதிகளுடன் பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இங்கிருந்து 44 லிப்ட்டுகள் இயங்குகின்றன்..
இரண்டாது தளத்தில் ஷாப்பிங் மால்கள் இயங்குகின்றன...
மற்ற மற்ற தளங்கள் அலுவலகங்கள், சர்வதேச அளவில் பிரபலமான உணவக நிறுவனங்கள் , அழகு நிலையங்கள் , ஸ்பாக்கள் , குடியிருப்புகள் ஆகியவையாக செயல்படுகின்றன்.
LondonShardSeptember2010
படங்கள் அருமை.
ReplyDeleteஅவசியம் இந்தக் கட்டிடத்தைப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகின்றது படங்கள் அருமை !......மிக்க நன்றி பகிர்வுக்கு .
ReplyDeleteஉங்கள் பதிவுகளின் சிறப்பு புகைப்படங்கள் தான். தெய்வப் படங்களாக இருந்தாலும் சரி.வேறு படங்களாக இருந்தாலும் சர அற்புதமாக உள்ளது. லண்டன் படங்கள் கண்ணுக்குவிருந்து
ReplyDeleteலணடன் நகரின் அழகை அள்ளி பருகி விட்டேன். உங்கள் அழகான பதிவு மூலம்.
ReplyDeleteஅழகான படங்கள் பகிர்வுக்கு நன்றி.
அனைத்து படங்களும் மிக அருமை...பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
தங்கள் கைபட்டாலே அனைத்தும் பிரமாண்டாமக மாறிவிடும்!
ReplyDeleteஇந்த பிரமாண்டத்தை சொல்லவாவேண்டும்
அனைத்து படங்களும் அருமை....பகிர்வுக்கு நன்றி.....
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
பிரமாண்டம் வியக்க வைக்கிறது... நன்றி அம்மா...
ReplyDeleteதளத்தின் Template மாற்றி விட்டீர்களா...? இதுவும் நல்லா இருக்குங்க...
நான் வேறு ஏதாவது வலைப்பதிவிற்கு வந்துவிட்டேனா? வலைப்பதிவின் பொலிவான தோற்றமே மாறிவிட்டதே? :( :(
ReplyDeleteபிரம்மாண்ட அழகு அதிசயம் !
ReplyDeleteவெகு அழகான பதிவாகவும், மிகவும் பிரும்மாண்டமான பதிவாகவுமே உள்ளது.
ஒவ்வொரு படமும் மனதை மயக்குவதாகவே உள்ளது.
>>>>>
மேலிருந்து நாலாவது படம் மட்டும் திறக்க மறுக்கிறது.
ReplyDeleteஐந்தாவது படம் மிக மிக அழகு.
முதல் இரண்டுபடமும், கடைசி இரண்டு படமும் சூப்பராக உள்ளது.
>>>>
LONDON SHARD க்கு நேராக சென்று வந்தது போல மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteமேலிருந்து கீழ் ஆறாவது படமும் அற்புதமாகக் காட்சியளிக்கிறது.
தங்களின் விரிவான விளக்கங்கள் மூலம் பலவிஷயங்கள் அறிய முடிகிறது.
சொர்க்கலோகமா? மாயாஜால இந்திர லோகமா? மயன் சிருஷ்டித்த மாளிகையா? என வியக்க வைக்கும் எழிலுடன் தான் உள்ளன.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் மனமார்ந்த இனிய நன்றிகள்.
லண்டன் ஷார்ட் மாளிகை.அதிசயத்தை அள்ளிக் கொடுக்கிறது. நீங்கள் அளித்திருக்கும் விவரங்கள் அருமை.எதை எடுத்தாலும் அதன் முழுவ்விவரத்தையும் கொடுப்பது ராஜேஸ்வரியின் தனித்திறமை. மிக நன்றி மா. பார்க்க வேண்டிய இடம்.
ReplyDelete