Tuesday, September 4, 2012

ஆசிரியர் தின வாழ்த்துகள் !

Teacher's Day Scraps

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்..
கல்வி போதிக்கும் ஆசிரியர் மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் வைத்து ஆராதிக்கப்படுபவர்...
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனமும் திரியும் 

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே..


வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள் இங்கிருக்க 
உலகெல்லாம் பொருள் தேடி அலைவதேனோ" 

இத்தனை சிறப்பு வாய்ந்த கல்விச்செல்வத்தை நம் குழந்தைச் செல்லங்களுக்கு வழங்கி சான்றோனாக்கி உலகுக்கு வழங்கி கௌரவப்படுத்துபவர் ஆசிரியர்...

அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர்.

  ஆசிரியர் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறார்..

ஆசிரியப்பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று அர்ப்பணிப்புடன் ஆசிரியப்பணியில் ஆரம்பித்த தத்துவ மேதை
பலமுறை டாக்டர் பட்டம் பெற்று நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு.இராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
மனிதனை மனிதனாக, உருவாக்கும்  உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள்

மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்

ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது.

பயிற்றிப் பல கல்வி தந்து பாரில் உயரவைப்பவர் ஆசிரியர்...

Teacher's Day Scraps
 வருங்கால தலைமுறையினரான மாணவர்கள்,  வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம்.

சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், பாடப்புத்தக அறிவும்,  பல்துறை பரந்த அறிவையும் மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியர் பணி போற்றத்தக்கது...

மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்துவத்தை
வெளிப்படுத்துவதே கல்வி.
உடல் உள்ள ஆன்மாவின் ஒருமைப்பட்ட வளர்ச்சியே உண்மையான கலவி..
stacking booksReading A Book  PowerPoint animationStick Figure Walking Reading Book PowerPoint animation

கற்றல்-கற்பித்தல் என்பதை தாரக மந்திரமாய் கொண்ட, சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழும் ஆசிரியர்களை போற்றவும், புகழவும், கவுரவிக்கவுமே ஆசிரியர் தினம்.
Teacher's Day ScrapsTeacher's Day ScrapsAnimatedParrotWelcomeKims.gif image by jojo49_01


24 comments:

  1. இன்றையை சூழலில் நிறைய நண்பர்களுக்கு இவர் பெயர் ஞாபகம் இருக்குமா என்பது சந்தேகமே! இத்தகைய சூழலில் இப்பதிவின் மூலமாக திரு.இராதகிருஷ்ணண் அவர்களை நினைவுவூட்டியமைக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  2. ஆசிரியர் தின அன்பு வாழ்த்துகள் !

    ReplyDelete
  3. ஆசிரியப் பணியே அறப்பணி
    அதற்கே உன்னை அர்ப்பணி!

    என்று அர்ப்பணிப்புடன் ஆசிரியப்பணியில் ஆரம்பித்த
    தத்துவ மேதையும் பலமுறை
    டாக்டர் பட்டம் பெற்று
    நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த

    ச ர் வ ப ள் ளி
    திரு. இ ரா தா கி ரு ஷ் ண ன்
    அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

    ஆமாம்.
    அவரின் புகழ் என்றும் வாழ்க!

    ReplyDelete
  4. மனிதனை மனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள்

    மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள்

    ஞானத்தின் சுடரை ஏற்றும் பணி செய்வோர்கள்

    பயிற்றிப் பல கல்வி தந்து பாரில் உயரவைப்பவர்கள்

    ஆசிரியர்கள் ...

    மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. //
    வெள்ளத்தால் போகாது,

    வெந்தணலால் வேகாது

    கொள்ளத்தான் இயலாது,

    கொடுத்தாலும்
    நிறைவொழிய
    குறைபடாது,

    கள்வர்க்கோ மிக அரிது,

    காவலோ மிக எளிது

    கல்வி என்னும் பொருள்
    இங்கிருக்க,

    உலகெல்லாம்
    பொருள் தேடி

    அலைவதேனோ" //


    மிகவும் அருமையான
    பொருள் பொதிந்த பாடல்
    அல்லவா .. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. //அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர்.

    ஆசிரியர் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறார்..//

    ஆஹா!

    மிகவும் சூப்பரான வரிகள். ;)

    ReplyDelete
  7. கல்வி
    ஆசிரியர்கள்
    ஆசிரியர் தினம்

    இவை ஒவ்வொன்றின்
    முக்கியத்துவம் பற்றி
    வெகு அழகான பதிவாகக்
    கொடுத்துள்ளது,
    மிகச் சிறப்பாக உள்ளது.

    படங்கள் யாவும்
    வழக்கம்போல் அருமை.

    நாளைய தினம் தாங்கள் தர இருக்கும் தங்களின் இந்த 2012 ஆம் ஆண்டின் 275 பதிவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    அனைத்துக்கும்
    பாராட்டுக்கள்,
    நன்றிகள்.

    ReplyDelete
  8. ஆசிரியர் என்ற பெயருக்கு புனிதத்தைச் சேர்த்தவரில் முதன்மையானவர்
    திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள்.

    பலர் தாம் உட்கார்ந்த நாற்காலிகளால் பெருமை அடைந்தவர்கள். திரு. ராதாகிருஷ்ணன் அவர்களோ
    சிலர் தாம் உட்கார்ந்த நாற்காலிக்கு பெருமை ச்சேர்த்தவர்.

    எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ய்பொருள் காண்பது அறிவு

    எனும் வள்ளுவன் வாய்மொழிக்கு ஏற்ப‌

    தமது நுண்ணிய அறிவினால் உலகுக்கே வழிகாட்டிய உத்தமர்.

    இவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்போ அல்லது சரிதமோ நமது குழந்தைகள்
    பள்ளிப்புத்தகங்களில் காணப்படுகின்றதா என எனக்குத்தெரியவில்லை.

    வருடத்திற்கொருமுறையாவது இவரை நினைவுக்க்கொண்டு வருகிறோமே !1

    சுப்பு ரத்தினம்.
    http;//vazhvuneri.blogspot.com

    ReplyDelete

  9. கல்வி குறித்த என் சிந்தனைகள் இன்று பதிவிட்டேன். ஆசிரியர் தின விழாஒட்டி இக்கட்டுரை பதிவிட்டது என்று நான் கூறவில்லை. எதேச்சையாக அமைந்து விட்டது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. தெய்வங்களைப் பற்றிய பதிவுகள் மட்டுமல்லாது மனித தெய்வங்களான நல் ஆசிரியர்களைப் பற்றியும் மறக்காது கட்டுரை தந்தமைக்கு நன்றி! உங்கள் பதிவைக் கண்டதும் எனக்கு ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுத்த, அந்த வயதான முதலாம் வகுப்பு ஆசிரியைதான் நினைவுக்கு வந்தார். ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வை.கோபாலகிருஷ்ணன் said...

    கல்வி
    ஆசிரியர்கள்
    ஆசிரியர் தினம்

    இவை ஒவ்வொன்றின்
    முக்கியத்துவம் பற்றி
    வெகு அழகான பதிவாகக்
    கொடுத்துள்ளது,
    மிகச் சிறப்பாக உள்ளது.

    படங்கள் யாவும்
    வழக்கம்போல் அருமை.

    நாளைய தினம் தாங்கள் தர இருக்கும் தங்களின் இந்த 2012 ஆம் ஆண்டின் 275 பதிவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    அனைத்துக்கும்
    பாராட்டுக்கள்,
    நன்றிகள்.

    பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  12. Blogger வரலாற்று சுவடுகள் said...

    இன்றையை சூழலில் நிறைய நண்பர்களுக்கு இவர் பெயர் ஞாபகம் இருக்குமா என்பது சந்தேகமே! இத்தகைய சூழலில் இப்பதிவின் மூலமாக திரு.இராதகிருஷ்ணண் அவர்களை நினைவுவூட்டியமைக்கு நன்றி சகோ!

    நிறைவான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  13. Blogger sury Siva said...

    ஆசிரியர் என்ற பெயருக்கு புனிதத்தைச் சேர்த்தவரில் முதன்மையானவர்
    திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள்.

    பலர் தாம் உட்கார்ந்த நாற்காலிகளால் பெருமை அடைந்தவர்கள். திரு. ராதாகிருஷ்ணன் அவர்களோ
    சிலர் தாம் உட்கார்ந்த நாற்காலிக்கு பெருமை ச்சேர்த்தவர்.

    எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ய்பொருள் காண்பது அறிவு

    எனும் வள்ளுவன் வாய்மொழிக்கு ஏற்ப‌

    தமது நுண்ணிய அறிவினால் உலகுக்கே வழிகாட்டிய உத்தமர்.

    இவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்போ அல்லது சரிதமோ நமது குழந்தைகள்
    பள்ளிப்புத்தகங்களில் காணப்படுகின்றதா என எனக்குத்தெரியவில்லை.

    வருடத்திற்கொருமுறையாவது இவரை நினைவுக்க்கொண்டு வருகிறோமே !1

    சுப்பு ரத்தினம்.
    http;//vazhvuneri.blogspot.com

    சிறப்பான கருத்துரைகள் அளித்தும் தங்கள் பதிவில் இந்த பதிவின் லிங்க் அளித்தும் பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  14. நினைவில் வைத்து நினைவுப் பதிவு எழுதியிருக்கிறீர்கள். நன்றி. உங்கள் தயவால் என் ஆசிரியர்கள் சிலரை இன்று நினைத்துக் கொண்டேன். :)
    புத்தக maze படம் பிரமாதம்.

    ReplyDelete
  15. ஆசிரியர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...

    ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

    நாளை 275 பதிவு - மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  16. G.M Balasubramaniam said...


    கல்வி குறித்த என் சிந்தனைகள் இன்று பதிவிட்டேன். ஆசிரியர் தின விழாஒட்டி இக்கட்டுரை பதிவிட்டது என்று நான் கூறவில்லை. எதேச்சையாக அமைந்து விட்டது. வாழ்த்துக்கள்.

    கல்வி குறித்து சிறப்பான சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும் ,
    அருமையான கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  17. Blogger தி.தமிழ் இளங்கோ said...

    தெய்வங்களைப் பற்றிய பதிவுகள் மட்டுமல்லாது மனித தெய்வங்களான நல் ஆசிரியர்களைப் பற்றியும் மறக்காது கட்டுரை தந்தமைக்கு நன்றி! உங்கள் பதிவைக் கண்டதும் எனக்கு ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுத்த, அந்த வயதான முதலாம் வகுப்பு ஆசிரியைதான் நினைவுக்கு வந்தார். ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

    இனிய நிறைவான ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா !!

    ReplyDelete
  18. அப்பாதுரை said...

    நினைவில் வைத்து நினைவுப் பதிவு எழுதியிருக்கிறீர்கள். நன்றி. உங்கள் தயவால் என் ஆசிரியர்கள் சிலரை இன்று நினைத்துக் கொண்டேன். :)
    புத்தக maze படம் பிரமாதம்.


    மனம் நிறைந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  19. ஆசிரியர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  20. Ninaiu vaithu Nandri koora oru nalla nal.
    Pathivirkku nandri Rajeswari.
    viji

    ReplyDelete
  21. ஆசிரியர் தின வாழ்த்துகள்

    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  22. ஆசிரியர்தின வாழ்த்து சொல்லி பெருமைப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  23. எழுத்தற்வித்தவன் இறைவன் ஆகும் என்பதனை உணர்ந்து மரியாதைக்குரியவரினால் பெருமை பெற்ற தினத்திற்காக அமர்க்களமாக எழுதப் பட்ட இனிய பகிர்வு அருமை! நன்றி சகோதரி!

    ReplyDelete
  24. நன்றி ஆசிரியா்கள் உருவாக்கப்படுவதில்லை பிறக்கிறாா்கள் அவா்களை கண்ணியப்படுத்துவோம்

    ReplyDelete