திருக்கல்யாணக்கோல எழில் முருகண் தேவியர் இருவருடன்...
திருச்செந்தூரில் முருகன் “ஞானகுரு’வாக அருளுகிறார்.
சிவபெருமானின் அம்சமாக அவதரித்த முருகப்பெருமான் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர் ..
பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர்.
சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர்.
மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்ட முருகன், மும்மூர்த்திகளாகவும் திகழ்வதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், ஆவணி, மாசி மாத திருவிழாவின் போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
விழாவின் 7ம் நாளன்று மாலையில் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார்.
மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் முருகன் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுகிறார்.
மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.
வள்ளி குகையில் மும்மூர்த்தி சிலை மூன்று முகங்களுடன் இருக்கிறது.
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார்.
சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கும் தெய்வயானையை குமரவிடங்கர், சண்முகப்பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள்பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார்.
நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார்.
அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார்.
விழாவின் நிறைவாக மஞ்சள் நீராட்டின் போது சுவாமி, அம்பாள் வீதியுலா செல்லும்போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சிப்படுத்துகின்றனர்.
காலையில் முருகன் திருமணம் கண்டு மகிழ்ந்தேன்.
ReplyDeleteஇன்றைக்கு ஊரில் இருந்தால்
ReplyDeleteதிருசெந்தூர் போயிருப்பேன்
காண்பதற்கு
கண்கொள்ளாக் காட்சி....
உங்கள் படங்கள் அதன
தாகத்தை போக்கிவிட்டன சகோதரி...
அழகு... அழகு... அழகான படங்கள்...
ReplyDeleteநன்றி அம்மா...
முருகனின் திருக்கல்யாணம் கண்டு களிக்க செய்தமைக்கு நன்றி
ReplyDeleteதிருச்செந்தூருக்கு சென்று தரிசித்தது போல் அருமையான படங்களும், விபரங்களும் தந்திருக்கிறீர்கள். நன்றி!
ReplyDeleteஅழகென்ற சொல்லுக்கு முருகானு பாடின TMS உங்க ப்ளாக் பாத்தா அசந்து போய் இருப்பார் போங்க
ReplyDeleteமுருகனுக்கு அரோகரா,கந்தனுக்கு அரோகரா.....திருச்செந்தூர் முருகனை இதுவரை தரிசனம் செய்ததில்லை..உங்களின் படங்கள் என்னை நேரில் பார்த்தது போல பரவசமூட்டியது..பகிர்வுக்கு மிக்க நன்றி மேடம்..
ReplyDeleteகண்குளிரக் கண்டு களித்தேன்! நன்றி! என்னுடைய வலைப்பூவில் "நலம் தருவாய் நரசிம்மா! மற்றும் வாழ வை கவிதைகள்- வருகை தாருங்கள்!
ReplyDeleteவருடத்துக்கு ஒருமுறையாவது திருசெந்தூர் செல்வது வழக்கம். ஆனாலும் ஒருமுறை கூட சூரசம்ஹாரம் செல்ல வாய்த்ததில்லை..
ReplyDeleteசெந்தூரை கண்ணில் கொண்டுவந்து வைத்து விட்டீர்கள்.
கண் நிறைந்த காட்சி.
ReplyDeleteமிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
செந்தில் ஆண்டவன் திருக்கல்யாணம் அழகிய படங்களுடன் கண்டு இன்புற்றோம்.
ReplyDeleteவெளியூரில் எங்களைப்போன்றோருக்கு மிக அற்புதமான வரப்ரசாதமாக முருகனின் திருக்கல்யாணக்கோலம் காணவைத்தீர்பா...
ReplyDeleteகல்யாண பட்டு வேஷ்டியில் எம்பெருமானும், பட்டாடையில் வள்ளிதெய்வானை சகிதம் ஆஹா ஆஹா மனம் கொள்ளைக்கொள்கிறதுப்பா...
மூன்று விதமாக வஸ்திரம் மாற்ற காரணமாக சிவன் விஷ்ணு பிரம்மாவாக காட்சி அளிப்பதாக முருகனை காட்டி இருக்கீங்கப்பா..
அழகென்றாலே முருகன்...முருகு என்றாலே அழகு....
சிரிக்கும் குழந்தை முருகன்...
மாப்பிள்ளைக்கோலத்தில் முருகன்..
தகப்பன்ஸ்வாமியாக சிவனுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை ஓதும் முருகன்...
காணக்காண கண்களும் மனமும் நிறைந்துவிட்டதுப்பா இராஜேஸ்வரி...
மனம் நிறைந்த அன்புநன்றிகள் பகிர்வுக்கு.
திருமுருகன் திருக்கல்யாணம் காணச்செய்து மகிழ்வித்துள்ளீர்கள்.
ReplyDeleteசந்தோஷம். வழக்கம் போல எல்லாமே அருமையாக உள்ளன.
ooooo
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதிருமுருகன் திருக்கல்யாணம் காணச்செய்து மகிழ்வித்துள்ளீர்கள்.
சந்தோஷம். வழக்கம் போல எல்லாமே அருமையாக உள்ளன.//
வணக்கம் ஐயா..
சந்தோஷமான கருத்துரைகளுக்கு
இனிய நன்றிகள் ஐயா..