வடநாட்டில் உயிர்கள் வாழக் காரணமாக விளங்கும் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் வழிபாடாக ஐப்பசி சஷ்டியன்று சட் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு விழா நீர் நிலைகளில் நடைபெறுகிறது..
தமிழகத்தில் ஐப்பசி அமாவாசையான் தீபாவளிக்குப் பின் வரும் சஷ்டி திதி அன்று முருகப் பெருமானைப் போற்றி விரதம் கடைப்பிடித்து சஷ்டி விழா கொண்டாடுகிறோம் ....
சுமங்கலிப் பெண்கள் தங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் நலமுடன் இருக்க மூன்று நாட்கள் விரதம் கடைப்பிடித்து ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலும் சூரிய பூஜையை நடத்துவது வழக்கம்.
பூஜைப் பொருட்களான வெற்றிலைப் பாக்கு, பூ, பழங்கள், தேங்காய், சந்தனம், கரும்பு, இனிப்புகள், பலகாரங்களை பெரிய கூடையில் வைத்து ஆண்கள் நீர் நிலைக்கு எடுத்து வருவார்கள்.
நதிக்கரையோரத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, கரும்புகளால் கூடாரம்போல் அமைத்து, அதில் பூஜைக்குரிய பொருட்களை வைப்பார்கள்.
சஷ்டி அன்று மாலை சூரியன் அஸ்தமனமாகும் வேளையிலும், மறுநாள் விடியற்காலையிலும் நீராடி, சூரியன் உதயமானதும் நீர் நிலைக்குள் நின்று சூரியனுக்கு அர்க்கியம் விட்டு, மந்திரம் சொல்லி பூஜை செய்வார்கள்.
மாலையிலும் காலையிலும் சூரியனை வழிபடுவதன் நோக்கம்- இரவும் பகலும் எப்படி சமமாக உள்ளதோ (ஐப்பசியில் இரவும் பகலும் சமமாக இருக்கும்) அதுபோல இன்பமும் துன்பமும் வாழ்வில் சமமாக இருப்பதாகச் சொன்னாலும், தாங்களும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவினர்களும் நலமுடனும் சுகமுடனும் வாழவேண்டும் என்று சூரியனைப் பிரார்த்திப்பதே சூரிய சஷ்டி வழிபாட்டின் குறிக்கோளாகும்.
இந்தப் பூஜையை சட் பூஜை, ரவிசஷ்டி என்று வடமாநிலத்தவர்கள் போற்றுகிறார்கள்.
ta.wikipedia.org/wiki/
அறியாதன பல அறிந்து கொண்டேன்
ReplyDeleteநதி தீரத்தில் பெண்கள் வழிபாடு செய்யும்
புகைப்படம் மிக மிக அருமை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
புதிய பூஜையைத் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteநேரடியாகத் தரிசிப்பது போன்ற
ReplyDeleteஅருமையான புகைப்படங்கள்
மனதில் பதியும் வண்ணம்
அருமையான விளக்கங்கள்
மனம் கொள்ளை கொண்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சூரிய சஷ்டி நல்ல விஷயம் தெரிந்து கொண்டேன் நன்றி.
ReplyDeleteஅருமையான தகவல்... மிக்க நன்றி...
ReplyDeleteபடங்களும் பகிர்வும் மிகவும் அருமை...
இந்த
ReplyDelete2012 ஆம்
ஆண்டின்
வெற்றிகரமான
3 5 0 ஆவது
பதிவுக்குப்
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
-oOo-
படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.
ReplyDeleteசூரிய சஷ்டி புதிய தகவல் தெரிந்துகொண்டேன்.
ReplyDeleteகந்தசஷ்டி விழா வாழ்த்துகள்.
கந்த சஷ்டி அன்று சூரிய சஷ்டி வழிபாடு பற்றி தெரிந்துகொண்டேன். பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete
ReplyDeleteசூரிய வழிபாடு இந்தியாவின் அநேக இடங்களில் நடைபெறுவது. உயிர்கள் வாழ சூரியனின் ஆசி தேவை என்று அறிந்தவர்கள் நம் முன்னோர். இந்த ரவி சஷ்டி பற்றிய தகவல்கள் தெரியாதது. பதிவுக்கு நன்றி.
இந்தப் பதிவில் படங்களை விட்டு கண்கள் அகலவே இல்லை! என்னமாய் இப்படியெல்லாம் காட்சிப்படுத்த முடிகிறது என்று ஆச்சரியமாய் இருக்கிறது. மிக்க நன்றி, மேடம்.
ReplyDeleteமிக அழகான படங்களுடன் மனதை விட்டு நீங்காத பதிவு.
ReplyDeleteவட நாட்டில் நடக்கும் பூஜையைப் பற்றிய விவரங்கள் தெளிவாகக் கூறி உள்ளீர்கள்.
அருமை, அருமை, அருமை!
இங்கு கந்தன்,அங்கு சூரியனா!புதிய தகவலுக்கு நன்றி
ReplyDeleteஅட சூரிய சஷ்டியா? இப்ப தாம்பா கேள்விப்படுகிறேன்....
ReplyDeleteசூரிய வழிபாடு நாம் பொங்கலுக்கு கொண்டாடுவோம்....
அதே போல கந்தனுக்காக சஷ்டி விரதமும் வீட்டில் இருப்போம்...
முதல் முறை சூரிய சஷ்டி வழிபாடு இப்ப தாம்பா கேள்விப்படுகிறேன்...
சுமங்கலிகள் இந்த பூஜை விமரிசையாக செய்வதையும் எதற்காக என்பதையும் மிக அழகாக படங்களுடன் விவரித்திருப்பது அழகு இராஜேஸ்வரி.....
மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா பகிர்வுக்கு....
நதிக்கரையோரம்! நல்ல வழிபாடு!
ReplyDeleteஆன்மீகமென்கிற பெயரில் எத்தனை விஷயங்களை அள்ளித் தருகிறீர்கள்.அதிசயமாகவும் உணர்கிறேன்.நன்றி ஆன்மீகத் தோழி !
ReplyDeleteஎல்லாமே புதுமையாக இருக்கெனக்கு. அழகிய பதிவு.
ReplyDeleteகண்டறியாதன காணவும் நம் பண்பாடு, சடங்குகள் இவற்றின் ஒத்தனவும் அறியவும் நற்சேவையாய் தங்கள் பதிவுகள் எங்களுக்கு.
ReplyDeleteஅன்பின் இராஜ் ராஜேஸ்வரி - சூரிய ச்ஷ்டி - வட இந்தியாவில நடக்கும் வழிபாடு - புதிய தகவல் - அரிய படங்கள் - அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete
ReplyDeleteசூர்ய சஷ்டி வழிபாடு:
ஏதேதோ புதுசுபுதுசாச்சொல்லி அசத்துறீங்கோ.
கடைசி படத்தில் குதிரைகள் சூரிய பகவானை வேறொரு பக்கம் தேரினில் இழுத்துக்கொண்டிருக்கும் போது, நீங்கள் அவரின் கழுத்தினை இந்தப்பக்கமாகத் திருப்பி, கண்களுக்குக்கீழேயும், வாய்க்குக் கீழேயும் ஓங்கிக்குத்தியதுபோல வீங்க வைத்துள்ளது என்னவோ போல உள்ளதுங்க! பாவம்ங்க அவர். ;)
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteசூர்ய சஷ்டி வழிபாடு:
ஏதேதோ புதுசுபுதுசாச்சொல்லி அசத்துறீங்கோ.
கடைசி படத்தில் குதிரைகள் சூரிய பகவானை வேறொரு பக்கம் தேரினில் இழுத்துக்கொண்டிருக்கும் போது, நீங்கள் அவரின் கழுத்தினை இந்தப்பக்கமாகத் திருப்பி, கண்களுக்குக்கீழேயும், வாய்க்குக் கீழேயும் ஓங்கிக்குத்தியதுபோல வீங்க வைத்துள்ளது என்னவோ போல உள்ளதுங்க! பாவம்ங்க அவர். ;)///
வணக்கம் ஐயா..
இந்த சூரியனைப்பிடித்து வாயில் போட்டுத்தானே அஞ்சனை புதல்வன் வாய் இந்திரனின் வாய் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டு
ஹனு மன் ஆனார் ..
கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..