Thursday, November 22, 2012

கார்த்திகை விளக்கீடு






எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்

பாடும் பறவை கூடங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே

இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் ரெண்டும் ஒன்றுதான்

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணா ரமுதக் கடலே போற்றி 

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற  நன்னாள்  கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது 

அர்த்தநாரீஸ்வரர்



எனக்கு நீங்கள் ஒளியுருவாகக் காட்சி தந்து ஆட்கொண்டது போல், வருடா வருடம் இது போல் ஒளியுருவாகத் தோன்றி உலகினரை உய்விக்க வேண்டும்” என உமை வேண்டிக் கொள்ள, ஈசனும் சம்மதித்த நாளே தீபத் திருநாளாக  கொண்டாடப்பட்டு வருகிறது.


குன்றத்து உச்சிச் சுடர்’ என்று சீவக சிந்தாமணி விரித்துரைக்கும் சிறப்புப் பெற்ற திருநாள்..


கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ‌ண்டாகு‌ம். 
பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது.
அந்தி நேரம். கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். “எனக்குப் பிறகு யார் இந்த உலகிற்கு ஒளிதரப் போகிறீர்கள்?” என்று கவலையுடன் கேட்டான். நிலவு இருந்தது, நட்சத்திரங்கள் இருந்தன, எல்லாம் அமைதியாக இருந்தன. ஒரு சிறு மண் அகல், அதன் சுடர் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. 
தன் தலையை நிமிர்த்திச் சொன்னது “நான் இருக்கிறேன், சூரிய தேவா!  
- ரவீந்திர நாத் தாகூரின் கவிதை.  
அகல் விளக்குகள் ஏற்றி அதன் ஒளியில் அகிலம் முழுதும் நிறைந்திருக்கும் பேரொளியை உணரும், வழிபடும் நம் தொன்மைத் திருநாள் கார்த்திகை தீபம். 

18 comments:

  1. கார்த்திகை தீபத்தை பார்த்தாலே சிறப்புதான்.. அருமை.

    ReplyDelete
  2. தாகூரின் கவிதையோடு ஓர் அழகிய பதிவு இது..மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அற்புதமான படங்கள், அழகான கவிதை! மொத்தத்தில் நல்லதொரு பதிவு,பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. பொருத்தமான பாடல் பதிவு..அர்த்தநாரீஸ்வரரின் அழகான படம், கார்த்திகை தீப வரிசை, அழகு..

    ReplyDelete
  5. அற்புதமான படங்கள....

    ReplyDelete

  6. உங்கள் பதிவுகளின் தனித்தன்மை இதிலும் தெரிகிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. அழகான படங்கள் அம்மா... வாழ்த்துக்கள்...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  8. அற்புதமான படங்கள்அழகான கவிதை பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. கார்த்திகை பெண்ணே வாழ்க!

    ReplyDelete
  10. பிரகாசமான பதிவு.

    ReplyDelete
  11. திருக் கார்த்திகை தீபங்களை உங்கள் பதிவில் பார்த்தது சந்தோஷமாக இருக்கிறது.

    கார்த்திகை தீப பண்டிகைக்கு உங்கள் முன்னோட்டம் அற்புதம்.

    தாகூரின் கவிதை அருமை!


    ReplyDelete
  12. அருமை. படங்கள் பேசுகின்றன.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - திருவண்ணாமலைத் தீப்ம பற்றிய பதிவு - படங்கள் கண்ணைக் கவர்கின்றன - கருத்துகள் ஒளிர்கின்றன - தகூரின் கவிதை அருமை - அகல் விளக்கு சூரிய பகவானிடமிருந்து பணியினை ஏற்கிறது - நான் இருக்கிறேன் சூரிய தேவா - என்ன ஒரு அழகான கம்பீரமான பொறுப்பான சொற்றொடர்.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. எளியோனாகிலும் தன்னம்பிக்கையுடன் கூடிய அகலின் பேச்சு ...

    அதுவும் சூர்ய தேவனை நோக்கி ...

    தாகூரின் கவிதையில் அழகுதான்.

    அதைக் குறிப்பிட்டு இங்கு கொண்டுவந்து,

    நேரம் பார்த்துக் கொளுத்திவிட்டு,

    பிரகாஸமாக எரியச்செய்துள்ளது தங்களின் புத்திசாலித்தனத்துடன் கூடிய சாமர்த்தியம்.

    அது எல்லாவற்றையும் விட எப்போதுமே அழகோ அழகு.

    >>>>>>>

    ReplyDelete
  15. //எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே ;)//

    ஆஹா !

    //இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்று தான் ;)

    உருவத்திலே தனித்தனிதான்
    உள்ளம் ரெண்டும் ஒன்று தான் ;)//

    சபாஷ் !

    ஈஸனின் இடப்பாகம் பெற்ற அம்பாளே சொல்வது போன்ற வரிகள். ;)))))

    சந்தோஷம் தரும் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  16. வை.கோபாலகிருஷ்ணன் said...
    எளியோனாகிலும் தன்னம்பிக்கையுடன் கூடிய அகலின் பேச்சு ...

    அதுவும் சூர்ய தேவனை நோக்கி ...

    தாகூரின் கவிதையில் அழகுதான்.

    அதைக் குறிப்பிட்டு இங்கு கொண்டுவந்து,

    நேரம் பார்த்துக் கொளுத்திவிட்டு,

    பிரகாஸமாக எரியச்செய்துள்ளது தங்களின் புத்திசாலித்தனத்துடன் கூடிய சாமர்த்தியம்.

    அது எல்லாவற்றையும் விட எப்போதுமே அழகோ அழகு. //

    வணக்கம் ஐயா..

    எளியோருக்கு எளிய வாசகங்கங்கள் நினைவைவிட்டு நீங்குவது இல்லை அல்லவா..!!?

    இந்த வாசங்கள் பசுமரத்தாணியாய் பதிந்து நிலைத்திருப்பதால் பகிர்ந்தேன் குறிப்பிட்டுப்பாராட்டியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..


    ReplyDelete
  17. //எளியோருக்கு எளிய வாசகங்கங்கள் நினைவைவிட்டு நீங்குவது இல்லை அல்லவா..!!?//

    நீ ங் க ள்

    எ ளி யோ ரா ?

    இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஜோக், இது.


    நீங்களே எளியோர் என்றால் நாங்களெல்லாம் ?????????

    ’எ லி’ ஸபத் டவர்ஸ்

    எ லி யா ர் க ளே

    தான்.


    குடைந்து விடுவோமாக்கும். ;))))))
    எலிபோலவே.

    ooooo

    ReplyDelete