Wednesday, November 28, 2012

தீபஜோதி வழிபாடு







இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது,
சொல் அக விளக்கு அது, சோதி உள்ளது,
பல் அக விளக்கு அது, பலரும் காண்பது,
நல் அக விளக்கு அது, நமச்சிவாயவே!


என்று திருநாவுக்கரசு சுவாமிகள்  அருள் பொழியும் தீபத்தை பாடியுள்ளார்..


கார்த்திகை விளக்கு திரு கார்த்திகை விளக்கு 
கம்பன் நீலன் கடம்பனுக்கு கார்த்திகை விளக்கு 
நெஞ்சில் கருணைக்கொண்டு ஏற்றிவைக்கும் கார்த்திகைவிளக்கு 

பார்க்கும் இடமெல்லாம் சுடரும் தீபஜோதிகள்  ஆணவம், அகங்காரம், பொறாமை போன்ற தீய குணங்களை பொசுக்கி, ஞானம் எனும் அறிவொளியை ஏற்படுத்துவதாக ஐதீகம்.

தீபஜோதி வழிபாடு இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமசனி போன்வற்றால் ஏற்படக்கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. 

இமயமலையைவிட திருவண்ணாமலை மிகவும் பழமையானது என்பதை ஆதாரத்துடன் புவியியல் அறிஞர் நிரூபித்துள்ளார்.

அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று அருளிய வள்ளலார் சுவாமிகள் இறைவனை ஜோதி வடிவமாக வணங்குவதே சிறப்பானது என்ற தத்துவத்தை உணர்த்தி அந்த ஜோதியிலேயே ஐக்கியமானவர்.

ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாக அருளும் திருக்காட்சியை கிரிவலம் வரும்போது தரிசிக்கலாம்

திருமால், பிரம்மா ஆகியோரின் அகந்தையை நீக்கி சிவபெருமான் லிங்கோத்பவராக- ஜோதிப் பிழம்பாகக் காட்சி தந்த ஜோதி திருவுருவத்தின் வெம்மை தாங்காமல் தேவர்கள் வருந்தித் துன்பப்படவே, சிவபெருமான் மலையாகி நின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.



திருவண்ணாமலையில் தவமிருந்த பார்வதிக்கு சிவபெருமான் தன் உடலில் பாதி இடத்தை அளித்து, அர்த்தநாரீஸ்வரர் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றார்.

திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்று புராணம் கூறுகிறது.
கிரிவலப் பாதையில் ஏராளமான கோவில்கள் உள்ளன.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் லிங்கத்தைப் பார்த்த வண்ணம் காட்சி தராமல் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையே சிவபெருமான் என்பதால் அனைத்து நந்திகளும் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளன. 









thiruvannamalai girivalam tabel - annamalaiyar

16 comments:

  1. எனக்கு மிகவும் பிடித்த கோவில்....

    அண்ணாமலையானுக்கு அரோகரா...

    ReplyDelete
  2. படங்களும் பகிர்வும் இங்கியே கட்டிப்போடுது.வச்சகண்ண எடுக்கவே முடியல்லே. நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. Thiruvannamalai is one place on my list to visit and your post is very informative, the photos are excellent!

    ReplyDelete
  4. படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு..பதிவும் அருமை..நன்றி.

    ReplyDelete
  5. Wow...this is amazing...I could not visit this time for Deepam :(

    ReplyDelete
  6. படங்களும், பகிர்வும் வழக்கம் போல் அருமை.

    பருப்பு தேங்காய் பிரமாதம்....

    ReplyDelete
  7. விளக்கங்கள் அருமை...

    படங்கள் மிகவும் அருமை... அதிலும் அந்த கோன் வடிவ பொரிகள் சூப்பர்...

    வாழ்த்துக்கள்... நன்றி அம்மா....

    ReplyDelete
  8. திருவண்ணாமலை ஜோதியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. தொலைக்காட்சியிலேயே பார்த்தேன். படங்கள் மிக அருமை.

    ReplyDelete
  9. அப்பர் சுவாமிகளின் தேவாரத்தில் தொடங்கி ஒரு அருமையான பதிவு. குன்றில் இட்ட விளக்கு என்பார்கள். அதனை நினைவுறுத்தும் அண்ணாமலை ஜோதிப் படம்.

    ReplyDelete
  10. கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துகள்... படங்களுடன், பதிவும் அருமை...

    ReplyDelete
  11. புகைப்படங்கள் அருமை. உட்கார்ந்த இடத்திலேயே அண்ணாமலை தீபம் தரிசிக்க வைத்த உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.

    பல முறை பார்த்து பார்த்து ரசித்தேன்.

    திருக் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அருமையான பதிவு! படங்கள் அருமை! நன்றி!

    ReplyDelete
  13. கல்யாணம் ஆனபுதிதல் ஒருதடவை மட்டுமே இங்கு வந்து தரிசனம் செய்தேன்...உங்க படங்களை பார்த்த பிறகு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு....

    ReplyDelete
  14. Aha!!!!!!!!!!!!
    Nice very nice.
    viji

    ReplyDelete
  15. தீப ஜோதி வழிபாடு.

    மிகச்சிறந்த பகிர்வு.

    அழகழகான படங்கள்.

    கீழிருந்து 1, 2 + 7 மேலிருந்து 2 சூப்பர்.

    அதுவும் கீழிருந்து ஏழில், ஏழு பொரு உருண்டைகளும், 2 பொரி உருண்டையிலேயே செய்த பருப்புத் தேங்காய்களும் பார்க்கவே பரவசமாக.

    ஒவ்வொரு ஆண்டும் படத்தில் காட்டுவதோடு சரி.

    எப்போது தான் ருசிப்பது?

    ReplyDelete
  16. வை.கோபாலகிருஷ்ணன் said...
    தீப ஜோதி வழிபாடு.

    மிகச்சிறந்த பகிர்வு.

    அழகழகான படங்கள்.

    கீழிருந்து 1, 2 + 7 மேலிருந்து 2 சூப்பர்.

    அதுவும் கீழிருந்து ஏழில், ஏழு பொரு உருண்டைகளும், 2 பொரி உருண்டையிலேயே செய்த பருப்புத் தேங்காய்களும் பார்க்கவே பரவசமாக.

    வணக்கம் ஐயா..

    பரவசமான கருத்துரைகளுக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete