நெஞ்சக் கனகல்லூ நெகிழ்ந்துருக
தஞ்சத் தருள் சண்முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்
அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி
இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் திருத்தலத்தில், சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி அருளாசி வழங்கி "ஆதி இரட்டை விநாயகர்' என்று போற்றப்படுகிறார் .....
திருச்சி பாலக்கரைப் பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார்அருள்புரிகிறார்.
பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும் திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாகக் கருதப்படுகிறது.
கார் அரிசியில் மோதகம் (கொழுக்கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.
திருவோண நட்சத்திரத்தில் இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், உறவு பலப்படும்; குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும்; ஆரோக்கியமாக வாழலாம்.
விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
பொதுவாக, செவ்வாய்க் கிழமை களில் வழிபட நாக தோஷம் விலகும்.
சனிக் கிழமைகளில் கனி வர்க்கத்தில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
தஞ்சை திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் உள்ள இரட்டைப் பிள்ளையார். சந்நிதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
திருணமாகாத பெண்கள் சந்தனா பிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும்.
ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அறுகம்புல் மாலை அணிவித்து, மோதகங் கள் படைத்து வழிபட்டால், குடும்பத்தில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும்.
, ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள உத்தமர்கோவில்,
திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் தலை வாசலை அடுத்த ஆறகலூரில் இருக் கும் கோவில்,
ஊட்டி பேருந்து நிலையத் திற்கு அருகிலுள்ள விநாயகர் கோவில் போன்ற இடங்க ளிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது.
இரட்டை விநாய கரை ஒரே சந்நிதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிட்டும் ..
பிறவியில் பார்வை இல்லாத ஒருவர் கொங்கு நாட்டில் இருந்து இத்தலம் வந்து யாத்ரீகர்கள் உதவியுடன் காவிரிக் கரையில் நீராடி மலை வலம் வந்து நேத்திர தீர்த்தத்தில் குளித்து கணபதியை வணங்கியபோது பார்வை பெற்றார்.
பக்தருக்கு பார்வை கொடுத்ததால் அவர் 'கண்கொடுத்த கணபதி' எனப் பெயர் பெற்றார். இவரை பூரணமாக வழிபட்டால் கண் நோய் குணமாகும்
ஓம் கம் கணபதயே நம:
ஓம் கம் கணபதியே நம:
திருவண்ணாமலை, கார்த்திகை தீபம் அலங்காரம்.
ஸ்ரீ கணபதி, வெண்பட்டு அலங்காரம்,
படங்களை ரசித்தேன்.
ReplyDeletevigna vinayaka
ReplyDeletepaadha namasthe.
subbu rathinam.
www.subbuthatha.blogspot.in
விநாயகர் படங்களும் ஆன்மீகக் குறிப்புகளும் மனதை கவர்கின்றன.
ReplyDeleteமுதல் படம் மிக அருமை.
ReplyDeleteசமயபுரம் மாரியம்மன் கோயிலில் மூன்று பிள்ளையார்கள் சந்நதி பார்த்த நினைவு ( நினைவு சரியா.?) ராஜ கம்பீர பிள்ளையார் படங்களைப் பார்க்கும்போது அவற்றை தஞ்சாவூர் சித்திரமாகவோ , கண்ணாடி பெயிண்டிங் ஆகவோ வரையத் தோன்றுகிறது.இன்னும் சில நாட்கள் பிறகு கண்ணாடி அணிந்தபின் பார்ப்போம். அருமையான படங்கள். பாராட்டுக்கள்.
முழு முதற் கடவுளின் தரிசனம் சிறப்பு.
ReplyDeleteஅனைத்து படங்களும் மிக பிரமாதம்.....பகிர்வுக்கு மிக்க நன்றி......
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
இரட்டை விநாய கரை ஒரே சந்நிதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிட்டும் ..
ReplyDeleteமதுரை தல்லாக்குளத்தில் இரட்டை வினாயகர் ஸ்ன்னதி உண்டு.
//தேய்பிறை சதுர்த்தியில் அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும்.
ReplyDelete//
இதுதானே சங்கடகர சதுர்த்தி? நினைத்த காரியமும் சிக்கலின்றி நீங்கும் எனச் சொல்லுவார்கள்.
//திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும்; ஆரோக்கியமாக வாழலாம்.
ReplyDelete//
எனக்கு நீண்ட நாளாக இருக்கும் ஒரு சந்தேகம்.. என்னவென்றால், திருவாதிரை சிவனுக்குரியதா? விநாயகருக்குரியதா?
விநாயகர் படங்கள் அனைத்தும் அருமையா இருக்கு
ReplyDeleteஅனைத்தும் அருமையான அட்டகாசமான படங்கள்...
ReplyDeleteரசித்தேன்... நன்றி அம்மா...
”காக்கும் கணபதி”
ReplyDeleteபதிவினில் உள்ள அனைத்துப்படங்களும் அருமை. விளக்கங்களும் ஜோராக உள்ளன.
திருச்சி பாலக்கரை இரட்டைப்பிள்ளையார் பற்றியும் எழுதியுள்ளது மகிழ்ச்சியளித்தது.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
>>>>>>>
அடியிலிருந்து ஆறாவது படம் வெகு அழகாக கண்ணைக்கவரும் வகையில் ஜொலிக்கிறது.
ReplyDelete12 வெள்ளைக்கற்களுக்கு நடுவில் ஒளிரும் மிகப்பெரிய ஒரு சிகப்புக்கல்.
;)))))
அதுபோல அதன் கீழ் உள்ள 5 ஆவது படமும் நல்லாவே இருக்குது. ;)
mber 9, 2012 at 12:30 AM
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
வை.கோபாலகிருஷ்ணன் said...
அடியிலிருந்து ஆறாவது படம் வெகு அழகாக கண்ணைக்கவரும் வகையில் ஜொலிக்கிறது.
12 வெள்ளைக்கற்களுக்கு நடுவில் ஒளிரும் மிகப்பெரிய ஒரு சிகப்புக்கல்.
;)))))
அதுபோல அதன் கீழ் உள்ள 5 ஆவது படமும் நல்லாவே இருக்குது. ;)
February 18, 2013 at 10:11 PM //
வணக்கம் ஐயா..
ரசனையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..