நீலம் புயல் நடனம் நிலவிய நேரத்தில் சென்னைக்குச் சென்றிருந்தேன் ..
ரயில் கார்டு பச்சை விளக்கு காட்டி ரயில் புறப்பட்டபிறகு ஓடி ஏற சிறுவனுடன் ஒருவர் முயன்றார்.. சற்று நிறுத்தி சிறுவன் ஏறிய பிறகே ரயில் வேகம் எடுத்தது....
ஈரோடு கல்வி மாவட்டத்திலிருந்து இருபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹரித்துவாரில் நடைபெற இருக்கும் அகில இந்திய விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ள வந்து சூழ்நிலையை கலகலப்பாக்கினார்கள்...
ரயில் சற்று மெதுவாக பயணிக்கும் போதெல்லாம் இந்த ரயிலைவிட வேகமாக ஓடுவேன் தெரியுமா என்றார் ஒருவர் ...
அடுத்தவரோ நான் வேகமாக ஓடிச்சென்று ரயிலுக்கு முன்னால் நின்று ஸ்டாப் என்று சொல்லுவேனே என்றார் ! விளையாட்டு வீரர்கள் அல்லவா !!
இந்தியா பெயர் இந்தியாவுக்கு ஏன் வந்தது என்று ஆராய்ச்சி செய்து சிந்து ஒரு நதி ஓடுகிறது அந்த நதியின் பெயரால் இந்தியா என்று வழங்கப்பட்டது என்று முடிவு செய்தார்கள் !
அவர்கள் ஓடும் ரயிலில் செல்போனால் போட்டோ எடுத்துக்கொண்டு , வீடியோ எடுத்துக்கொண்டு , ஃபேஸ் புக்கில் சாட் செய்து கொண்டு வருவதை
ரசித்துக்கொண்டிருந்தேன் ...
மாணவர்களுடன் வந்திருந்தவர் " எங்கள் காலத்தில் இந்த வசதியெல்லாம் இல்லை ... என்க்கு 67 வயது ஆகிறது .. என் தாயார் இறந்து மார்கழியோடு ஒருவருடம் ஆகப்போகிறது . மாதம் தவறாமல் திதி படைத்து வருகிறேன் ..தாயார் படுத்தபடுக்கையாக இருந்தபோது மருமகளுடன் இருக்கமாட்டேன் என்று கூறிவிட்டு தனியாக இருதார்.. நர்ஸ் ஒருவர் வந்து தினமும் குளிக்கவைத்துச்செல்வார் .. மற்றபடி தாயாரின் ஒன்பது கஜம் புடவையை நான்தான் டெட்டால் போட்டு துவைத்து மடியாக உலர்த்தி உடுத்திவிடுவேன் .. சர்க்கரை நோயாளியாதலால் எறும்புகள் வராமல் அறையை தினமும் துடைத்து பார்த்துக்கொள்ளுவேன் .. 12 மணிக்கு அம்மா சாப்பிடுவார் என்றால் பதினோரு மணிக்குத்தான் சாதம் வைத்து சூடாகப் பறிமாறுவேன் ...
எங்கள் இல்லத்தில் மாதம் இரு மூட்டை அரிசி செல்வாகும் அளவு சித்தப்பா பெரியப்பா குடும்பங்கள் இணைந்து இருந்தோம் ... எங்களுடன் பேசிக்கொண்டே அருமையாக விரைவாக சமைத்து விடுவார் அம்மா .. எப்போதும் ஒரு அறையில் குழந்தைபேறு நடந்தவண்ணம் இருக்கும் .. பத்தியச்சாப்பாடு நடக்கும் ...
மாடு கன்றுகள் , வயல்காடுகள் என்று திறம்பட நிர்வாகம் நடத்தியவர் என் தாயார் .. சிறுவயதிலேயே தந்தையை இழந்த குடும்பத்தை மூத்தமகனாக சிரமப்பட்டு அனைவருக்கும் திருமணம் நடத்தி வைத்தேன் ...
என் மனைவி தலைமை ஆசிரியையாக இருக்கிறார் ..
வடநாட்டிலிருந்து என்க்கு வரும் வேலைக்கான தபால் களை எனக்குதெரியாமல் ஒளித்துவைத்துவிடுவார் அம்மா... ஆபீஸ்ர் கேடரில் வந்த அந்த வேலையில் சேர்ந்திருந்தால் மூன்று லட்சம் ரூபாய் இப்போது ஓய்வு ஊதியமாக வந்துகொண்டிருந்திருக்கும் ... உத்தியோக நேரம் போக மற்ற நேரத்தில் தாயார் கண் எதிரிலேயே இருக்கச்சொல்லுவார் .. தம்பி , தங்கைகள் பெங்களூரில் நல்ல வேலையில் இருக்கிறார்கள் !
இறப்பதற்கு ஒரு வாரம் முன்பே யார் வரவுக்காகவும் ரொம்ப நேரம் வைத்திருக்கவேண்டாம் .. சீக்கிரம் காரியம் முடி என்று சொல்லிவிட்டார் ..
இப்போது என் தாயாரின் இழப்பை மிகவும் உணர்கிறேன் ""
என்று சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே வந்தார் ...பிளஸ் ஒன் படிக்கும் தன் மகனையும் அறிமுகப்படுத்தினார் ...
ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவர்களின் தேர்வுத்தாள்களைத்திருத்தி மதிப்பெண் வழங்கிக்கொண்டிருந்தார் !
மாதக்கணக்காக படித்து மணிக்கணக்காக மாணவர்கள் எழுதிய விடைகளை நிமிடக்கணக்கில் படித்து தவறுகளை வட்டமிட்டு மதிப்பெண் வழங்கியதைப் பார்த்து பதிவர்கள் மணிக்கணக்காக யோசித்து எழுதி படங்களை பலவாறாக தேடி இணைத்து பதிவிடுவதை நிமிடத்தில் படித்து கருத்துரை வழங்குவது மனதில் மின்னியது !
கண்பார்வை குறைந்த தம்பதிகள் சிறுவர்கள் விளையாடும் பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார்கள்... இரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும் தங்கள் பெற்றோர் குழந்தையைப்பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தார் ..கொஞ்சம் பணம் குழதையின் படிப்புச்செல்வுக்குக் செலவுக்குக்கொடுக்க முன் வந்தபோது நீங்கள் பொருட்கள் வாங்கியதே மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது .. என்றார் ..
வயல்களில் கரும்பும் , மஞ்சளும் , நெல்லும் , வாழையும் பொங்கல் பண்டிகையின் போது இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க வைப்பதற்காக பச்சைப்பசேலென்று விளைந்துகொண்டிருந்தன
அரக்கோணத்தில் இறங்கி நிலையக்கடையில் டீயும் பஜ்ஜியும் வாங்கிக்கொண்டிருந்தேன் ..
ரயில்வே கார்ட் வந்து கடைக்காரரிடம் யாராவது ரயிலில் இருந்து இறங்கி வந்தார்களா என்று விசாரித்தார் .. நான் இறங்கியிருக்கிறேன் என்றேன் ...
ஏம்மா ரன்னிங் ட்ரெயினில் ஏறுவீங்களா என்றார் ....
(நிற்கிற வண்டியில் ஏறுவதே சாதனையாயிற்றே!!)
நீங்கள் போய் அமருங்கள் இரண்டு நிமிடம் தான் இங்கு நிறகும் இறங்கக்கூடாது என்றார் ....
நானே உங்களுக்கு டீ வாங்கி வருகிறேன் என்று வாங்கிக்கொடுத்தார் ...
முதல் நாள் ஐந்து ரூபாயாக இருந்த டீ அடுத்த நாள் பத்து ரூபாயாக மாறியிருந்தது .. மற்ற பொருட்களின் விலையும் கூடியிருந்தது .. விற்பனையாளர் நாங்களா ஏற்றினோம் ...ரயில்வே துறைதான் ஏற்றியது .. என்றார்..காபி ஐந்து ரூபாய் .. டீ பத்து ரூபாய் என்பது வேடிக்கையாக இருப்பதாக பயணிகள் பேசிக்கொண்டார்கள்...
ரயிலில் மழைத்தண்ணீர் சாரலடித்து ஈரத்திலேயே பணிக்க வேண்டியிருந்தது ...
கண் எதிரிலேயே ஒரு காரின் மீது மரம் ஒன்று சாய்ந்தது ..
கடையின் பெயர்ப்பலகைகள் பெயர்ந்து விழுந்தன ...
காரின் மீது விழுந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்திக்கொண்டிருப்பதை குடை பிடித்துக்கொண்டு நின்று கைதட்டி ஒரு கூட்டம் உற்சாகப்படுதிக்கொண்டிருந்தது ...
கொஞ்சநேரமே இருந்த மின்சாரத்தில் தொலைக்காட்சியில் அறிவிப்பாளரும் காமிராவும் மைக்கும் காற்றின் வேகத்தை உணர்த்தியது ..
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் ஊழிக்காற்று அத்தியாயம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருந்தது....
ரெயில் பயணம் என்றாலே தனி சுகம்தான். நீலம் புயலை முன்னிட்டு நீண்ட அனுபவக் கட்டுரை!
ReplyDeleteபயணத்தில் பார்த்த ஒவ்வொரு விஷயத்தினையும் சுவாரசியமாகப் பகிர்ந்து இருக்கீங்க...
ReplyDeleteரசித்தேன்.
உங்களின் மாறுபட்ட பகிர்வுக்கு முதலில் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் அனுபவத்தை படங்களுடன் சொன்னது அருமையோ அருமை...
எப்படி இப்படி சரியான படங்கள் எல்லாம் கிடைக்கிறது என்பதும் வியப்பு தான்...
நன்றி...
ரயில் பயணம் முடிவுறா பல சிந்தனைகளை தூண்டி விட்டு தன் போக்கில் போய்விட்டது. கண் முன் கடந்தகாலமும், நிகழ்காலமும், எதிர்காலமும் சூறாவளியால் சுழற்றி அடிக்கப்பட்டு... அம்மா தன் அதீத பிரியத்தால் தன் பணிமாற்றங்களை ஒளித்து வைத்து விட்டதை ஆதங்கத்துடன் அவர் பகிர்ந்து கொண்டாலும் இறுதி நாட்களில் தன் கடமையை சிறப்பாகவே பெற்றவளுக்கு செய்திருப்பது நெகிழ்வும் மகிழ்வும்.
ReplyDeleteபயண அனுபவத்தை சிறப்பாக கூறியுள்ளீர்கள். எல்லாவற்றையும் கவனித்து, ரசித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டும் விட்டீர்கள்.
ReplyDeleteபயணங்கள் தரும் செய்திகள் தாம் எத்தனை, எத்தனை?..
ReplyDeleteகாதையும் (!) கண்ணையும் திறந்து வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் பார்ப்பதோடு உள்வாங்கிக் கொண்டு உணரவும் ரசிக்கவும் ஒரு பக்குவம் வேண்டும் தான்!..
'இதெல்லாம் போர்'என்று போர்வையை இழுத்து முகம் மூடித் தூங்குவோர் ஒருவிதத்தில் பார்த்தால் கொடுத்து வைத்த ஆத்மாக்கள் தான் போலும்!..
தேர்வுத்தாள் திருத்தல் இடத்திலும், அரக்கோணம் ரயில் நிலையத்தில் 'நிற்கிற ரயிலில் ஏறுவதே சாதனையாயிற்றே' என்று எழுந்த நினைப்பும் மெல்லிய புன்னகையை வரவழைத்தன. அரக்கோணத்தில் ரயில்வே கார்டு இறங்கிய பயணிகள் குறித்து அக்கறையுடன் விசாரித்து அறிந்ததும் அதிசயம்! இப்படிக் கூட நல்ல ஆத்மாக்கள் இருப்பதால் தான் நாட்டில் இன்றும் மழை பொழிகிறது!
இடையிடையே நிகழ்ந்திருக்கும் உங்கள் படப்பிடிப்பும் நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
மொத்தத்தில் ரயில் பயண அனுபவத்தை ஒரு வித்தியாசமான பதிவாக்கிய திறமை வியக்க வைக்கிறது.
பயணம் செய்தீர்களா இராஜராஜேஸ்வரி இந்தப் புயலில்?
ReplyDeleteக்டைசியில் தொலைகாட்சியில் என்று ஒரு வரி வருகிறதே அதற்காகக் கேட்டேன்.
சேமித்துப் பதிவு செய்த படங்கள் அனைத்தும் அற்புதம். உங்களுக்கு நான் 200/200 போடுகிறேன்.
அருமையான விவரிப்பு! எனக்கும் காற்றடித்த போது பொன்னியின் செல்வன் தான் ஞாபகம் வந்தது! படங்கள் மிகச்சிறப்பு!
ReplyDeleteபயண அனுபவங்கள் எப்போதும் இப்படித்தான் சுவாரஸ்யமாக அமைந்து விடும்! புதுமையான படங்களுடன் அருமையான பதிவு!
ReplyDeleteவித்தியாசமான பயணம்.. உங்கள் பதிவின் படங்களை ஒரு சிறுவனின் ஆர்வத்துடன் ரசிக்க வைத்து விட்டீர்கள்
ReplyDeleteபடங்களிலேயே ஒரு அருமையான கதை இருக்கிறது.
ReplyDeleteபுயலின் தாக்கத்தையும், விஞ்ஞான வளர்ச்சி இல்லாமற்போன காலத்தின் ஏக்கத்தையும் எடுத்துரைத்த விதம் அருமை!
ReplyDelete"நீலம்" புயல் குறித்து ஆதலின் மழையே எனும் பதிவும் வாரீரோ குருவிகளே எனும் பதிவும் படித்திட வாரீரோ என் வலைப்பக்கம்!
-காரஞ்சன்(சேஷ்)
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteபயணம் செய்தீர்களா இராஜராஜேஸ்வரி இந்தப் புயலில்?
க்டைசியில் தொலைகாட்சியில் என்று ஒரு வரி வருகிறதே அதற்காகக் கேட்டேன்.
சேமித்துப் பதிவு செய்த படங்கள் அனைத்தும் அற்புதம். உங்களுக்கு நான் 200/200 போடுகிறேன்//
மதிப்பெண் வழங்கியதற்கு மிக்க நன்றிங்க.....
//பயணம் செய்தீர்களா இராஜராஜேஸ்வரி இந்தப் புயலில்?
க்டைசியில் தொலைகாட்சியில் என்று ஒரு வரி வருகிறதே அதற்காகக் கேட்டேன்.//
ஆமாங்க பயணம் செய்தேன் ..
சென்னையை அடைந்து அன்று நிறைய மின்சாரத்தடை இருந்ததால் சில நிமிடங்களே பார்த்த டிவி செய்தியும் , தரை தட்டிய கப்பல் செய்தியும் துணுக்குறவைத்தது....
அருமை
ReplyDeleteபுயலில் பிரயாணம் செய்து, ஒரு வித்தியாசமான பதிவும் போட்டு, புகைப்படங்களைத் தேடி பிரசுரித்து.....
ReplyDeleteஆசிரியர் மதிப்பெண்கள் போடுவதையும், பதிவாளர்களுக்கு வாசகர்கள் பின்னூட்டம் போடுவதையும் ஒப்பிட்டது இதழில் புன்னகையை வரவழைத்தது.
உங்களது இந்தப் பயணப் பதிவு இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகி இருப்பது ஆச்சரியம் இல்லை தான்!
வாழ்த்துக்கள்!
பதிவுக்கேற்ற படங்கள் அருமை
ReplyDeleteரயில் பயணத்தில் உங்களுடனேயே கூட பயணித்தது போன்று ஓர் பிரமை ஏற்படும் படியாக பல குட்டிக்குட்டிக் கதைகளை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDelete>>>>>
//எப்போதும் ஓர் அறையில் குழந்தைப்பேறு நடந்த வண்ணம் இருக்கும்.//
ReplyDeleteஇதைப்பற்றி அதிசயப்படவே முடியாத நம்மிடம் வந்து சொல்லியிருக்கிறாரே!
உங்களின் அத்தைக்கு உங்களைவிட ஆறு மாதம் சின்ன வயது அல்லவா! ;)
உங்களுக்கு முன்னால் மூக்கை நீட்டியவர் - ஆசாரியிடம் மூக்குத்தி குத்திக்கொள்ள. ;)))))
>>>>>>>
//மாதக்கணக்காக் ............................................. மின்னியது!//
ReplyDeleteஅருமையான ஒப்பீடு தான். ;)))))
>>>>>>>
உங்களுக்கு டீ வாங்கிக்கொடுத்த ரயில்வே கார்ட் ...... கொடுத்து வைத்தவர்.
ReplyDeleteஅம்பாளுக்குப் பால் அபிஷேகம் போல தங்களுக்கு டீ நைவேத்யம் செய்துள்ளார்.
பஜ்ஜி வேறா? ஆஹா!
>>>>>>
அடாது மழை காற்று ஈரம் புயல் விடாது பயணம் செய்துள்ள வீராங்கனை தான்.
ReplyDeleteஅதே நேரம் தவறாக குறிப்பிட்ட நேரத்திற்கு பதிவுகளும் வெளியாகும்.
என்னே ஆச்சர்யம்.
மிகவும் நல்லதொரு மாறுபட்டப்பதிவு,
சந்தோஷம்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
நன்றிகள்.
oooooo
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteரயில் பயணத்தில் உங்களுடனேயே கூட பயணித்தது போன்று ஓர் பிரமை ஏற்படும் படியாக பல குட்டிக்குட்டிக் கதைகளை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.//
வணக்கம் ஐயா..
மீண்டும் அந்த திகில் பயணத்தை நினைவில் மலரச் செய்த அருமையான கருத்துரைகள் அனைத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
//அதே நேரம் தவறாக குறிப்பிட்ட நேரத்திற்கு பதிவுகளும் வெளியாகும்.//
ReplyDeleteSpelling mistake ஆகியுள்ளது.
”அதேநேரம், நேரம் தவறாமல், குறிப்பிட்ட நேரத்திற்கு, பதிவுகளும் வெளியாகும்”
என்று இருக்க வேண்டும்.
அதாவது இடி, மழை, புயல், காற்று, வெளியூர் பயணங்கள் என்று இருப்பினும் பதிவுகள் தவறாமல் தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து கொண்டே இருக்குமாக்கும்.