ஹே மஹா வீரரே பாராக்கிரமரே வஜ்ரம் போன்ற உடல் பெற்றவரே துர்புத்துயை அகற்றி நற்புத்தியை பகதர்களுக்கு அளிக்கிறீர்கள்
பொன் போன்ற உடல் காதுகளில் சுருண்ட கேசம் இவைகளுடன் தங்கள்
அழகு மிளிர்கிறது
கைகளில் வஜ்ராயுதமும் கொடியும் விளங்க
தோளில் தர்பத்தால் ஆன பூணல் அணிந்து இருக்கிறீர்கள்
சிவபெருமானின் அவதாரமே கேசரியின் மைந்தரே
உங்கள் தேஜஸும் பராக்கிரமும் சொல்லி முடியது
உலகமே உங்களை வணங்குகிறது..
ஆழம காண முடியாத கலவிக் கடல் நற்குணங்கள் நிறைந்தவர்
திறமை மிக்கவர்
ஸ்ரீ ராமனுக்கு சேவையே முக்கியமாக கருதி அதில் நாட்டம் கொண்டவர்
ஸ்ரீ ராமனின் நற்குண்ங்களை கேட்டு மகிழ்ச்சி அடைகிறீர்கள்
ஸ்ரீராம் சீதா லஷ்மண் உங்கள் இதயத்தில் எப்போதும் குடி கொண்டுள்ளார்கள், அவரகள்து இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்..
உலகத்தில் எவ்வள்வு கடினமான காரியமும் சுகமாக தங்கள்: கருணையினால் எளிதாக முடிகிறது
பதினாறு பேறுகளையும் அள்ளித்தரும் வள்ளல் ராமலிங்கேஸ்வரர் ஸ்ரீராமரால் பூஜிக்கப்பட்ட சுயம்பு மூர்த்தம் கீசரா குட்டா, ஆந்திரா தலை நகர் ஹைதராபாதிலிருந்து 35 கி.மீ தொலைவில்அருள்பாலிக்கிறார்...
இலங்கையில் இருந்து சீதையை காப்பாற்றி, அயோத்தி திரும்பும் வழியில், பிராமணனாகிய ராவணனை கொன்ற பாவத்தை தீர்க்க எண்ணிய ராமர் வழியில் பசுமை சூழ்ந்த ஒரு பெரிய மலை குன்றில் அமர்ந்து சிவபூஜை செய்ய விரும்பி லிங்கம் கொண்டு வர அனுமனைப் பணித்தது எதிர்பார்த்து தவித்துக்கொண்டிருந்த ஸ்ரீ ராமரின் தவிப்பை உணர்ந்த சிவபெருமான் தானே நேரடியாக தோன்றி ஒரு சிவலிங்கத்தை கொடுத்து பூஜை செய்யுமாறு சொல்லி மறைந்தார். மகிழ்வுடன் அதை பெற்றுக்கொண்ட ஸ்ரீராமரும் சிறப்பாக பூஜையை முடித்தார்.
தாமதமாக வந்த அனுமன் பூஜை முடிந்திருப்பதை கண்டு கோபம் தணியாதவராக தான் கொண்டு வந்திருந்த 101 லிங்கங்களையும் வீசியெறிய அவை பல இடங்களில் விழுந்தன. அதில் ஒன்றுதான் மலைப்பகுதியான கேசரி குட்டா.
அனுமனை ஸ்ரீராமர் சாந்தப்படுத்தி, கேசரி புத்திரனான அனுமனே, இந்த மலை இனி வருங்காலத்தில் உனது பெயரால் அழைக்கப்படும் என்று கூறி அமைந்த மலைக்குன்றுதான் கேசரி குட்டா மருவி கீசர குட்டா என்று அழைக்கப்படுகிற மலையில்தான் ராமன் பூஜித்த ஈஸ்வரன் ராமலிங்கேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி திருக்கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
கம்பீரமாக குன்றின் மேல் காட்சியளிக்கிறது ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயம்.
முதலில் நம்மை வரவேற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயரின் கம்பீரத்தையும், விஸ்வரூபத்தையும் அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள்.
முதலில் நம்மை வரவேற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயரின் கம்பீரத்தையும், விஸ்வரூபத்தையும் அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள்.
ஆஞ்சநேயரை சுற்றிலும் அவர் வீசி எறிந்த லிங்கங்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன
எங்கு நோக்கினும் குரங்குகள் ஓடி விளையாடுகின்றன.
விஸ்வரூப ஆஞ்சநேயர் திருப்பதி
காலையில் திவ்ய தரிசனம்.
ReplyDeleteஅஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்ய தவ கிம் வத
ReplyDeleteராம தூத க்ருபா ஸிந்தோ மத் கார்யம் சாதக ப்ரபோ...
ராமலிங்கேஸ்வரனை இன்று
வழிபட
வழி காட்டிய தங்களுக்கு
வாழ் நாள் முழுவதுமே
வந்தனம். நன்றி.
சுப்பு ரத்தினம்.
வீரமிகு படங்கள்...
ReplyDeleteஇந்த தல புராணம் உண்மையிலேயே கேள்விப்படாதது. அதே போல ராஜபாளையம் அருகே உள்ள ஒரு மலை அனுமான் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு பறக்கும்போது விழுந்த துண்டு என்கிறார்களே அதைப்பற்றி தெரிந்தால் சொல்லுங்களேன்..
ReplyDeleteஇவ்வகைப்பதிவில் உங்களை மிஞ்ச யாரும் இல்லை!
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteகண்ணுக்கு காட்சி விருந்துகள்..
ReplyDeleteஜெய் ஹனுமான்.
நேரில் தரிசனம் கண்டது போல் இருந்தது.உங்கள் பதிவுக்கு நன்றி...
ReplyDelete
ReplyDeleteபெங்களூரில் பானஸ்வாடி என்ற இடத்திலும், மஹாலக்ஷ்மிபுரம் என்னும் இடத்திலும் உள்ள ஆஞசனேயர்கோயில்கள் பிரசித்தி பெற்றவை.இன்று காலை அங்கு சென்று வந்தபிறகு பார்த்தால் உங்கள் வலையில் ஆஞ்சனேய தரிசனம். நன்றி.
அற்புதமான பல ஆனமந்து தரிசனம்.
ReplyDeleteநன்றி நன்றி.
அருமை.
வேதா. இலங்காதிலகம்.
சனிக்கிழமை அன்று உங்கள் மூலம் பல ஆஞ்சநேய சுவாமியை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்.
ReplyDeleteநன்றி!
ஜெய் பஜ்ரங் பலி!
கிடைக்க இயலாத அற்புதமான படங்கள்.
ReplyDeleteபார்க்கும் போதே பக்தியைத் தருகிறது.மனதில் ஒரு அமைதியைக் கொடுக்கிறது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
நல்லதோர் பகிர்வு.
ReplyDeleteGreat compilation of Anjaneyar.. was expecting Namakkal Anjaneyar too, one of the best we can get to have darshanam of..
ReplyDeleteNice post/
ReplyDeleteviji
monkey worshipping god - great picture
ReplyDeleteதாமதமாக வந்த அனுமன் பூஜை முடிந்திருப்பதை கண்டு கோபம் தணியாதவராக தான் கொண்டு வந்திருந்த 101 லிங்கங்களையும் வீசியெறிய அவை பல இடங்களில் விழுந்தன.
ReplyDeleteஅதில் ஒன்றுதான் மலைப்பகுதியான கேசரி குட்டா.
அனுமனை ஸ்ரீராமர் சாந்தப்படுத்தி, கேசரி புத்திரனான அனுமனே, இந்த மலை இனி வருங்காலத்தில் உனது பெயரால் அழைக்கப்படும் என்று கூறி அமைந்த மலைக்குன்றுதான் கேசரி குட்டா மருவி கீசர குட்டா என்று அழைக்கப்படுகிற மலையில்தான் ராமன் பூஜித்த ஈஸ்வரன் ராமலிங்கேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி திருக்கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
தகவல்கள் சூடான சுவையான இனிப்பான கேஸரி சாப்பிட்ட திருப்தியைத்தருகிறது.
>>>>>>>
//கம்பீரமாக குன்றின் மேல் காட்சியளிக்கிறது ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயம்.
ReplyDeleteமுதலில் நம்மை வரவேற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயரின் கம்பீரத்தையும், விஸ்வரூபத்தையும் அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள்.
ஆஞ்சநேயரை சுற்றிலும் அவர் வீசி எறிந்த லிங்கங்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன//
அந்தச்சிலையே மிகவும் கம்பீரமாகத்தான் உள்ளது.
>>>>>>>>
படங்கள் அத்தனையும் விஸ்வரூப தரிஸனமாகவும் மிகச்சிறப்பாகவும் உள்ளன.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ஆஞ்சநேயா மஹாப்பிரபோ!
ஒரு வழியா ஜனவரியையும் டிஸம்பரையும் முடித்து விட்டேனப்பா.
இன்னும் நவம்பர் 31 + அக்டோபர் 31 + செப்டெம்பர் 25 ஆகமொத்தம் 87 இருக்குதே!
நான் என்ன செய்வேன்?
சீக்கரம் முடிக்க காரிய ஸித்தியாக சக்தியைக்கொடுப்பா !
வாராயோ !
ஒரு பதில் கூறாயோ !!
ஒரு வடை தாராயோ !!!
பாராமுகமா இருக்காதீங்கோப்பா !
ooooo.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//கம்பீரமாக குன்றின் மேல் காட்சியளிக்கிறது ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயம்.
முதலில் நம்மை வரவேற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயரின் கம்பீரத்தையும், விஸ்வரூபத்தையும் அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள்.
ஆஞ்சநேயரை சுற்றிலும் அவர் வீசி எறிந்த லிங்கங்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன//
அந்தச்சிலையே மிகவும் கம்பீரமாகத்தான் உள்ளது./
கம்பீரமான கருத்துரைகள் அளித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
தங்கள் வடை ... பிரஸாத வடை ... டேஸ்டோ டேஸ்டூஊஊஊஊஊஊ.
ReplyDeleteமிக்க நன்றி.
;)))))