Tuesday, December 11, 2012

சங்கடம் தீர்க்கும் சங்கரனுக்கு சங்காபிஷேகம்!



om namah shivay





கழுகுதொழு வேதகிரி சிகரி கரிவீறு கதிருலவு வாசல்                   நிறைவானோர்
கடலொலியதான தமிழ் மறைகள்யோது கதலிவன மேவு               பெருமாளே!
அருணகிரிநாதர் – திருப்புகழ் -திருக்கழுக்குன்றம்


கலங்கி வந்தவர்களுக்கு கலங்காமலே  கழுக்குன்றிலே அருள் காட்டி கலக்கம் தீர்க்க திருக்கழுக்குன்றம் அமர்ந்து  அருள்பாலிக்கும் சிவபெருமானை வணங்கித் தொழுதால் நம் வினைகள் தவிடுபொடியாகும்..

 சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டிற்கு அருகாமையில் உள்ள திருக்கழுக்குன்றம்வேதகிரீஸ்வரர் அருள்பாலிக்கும் மலை மேலுள்ள மலைக்கோயிலில் மூலவரின் பின்புறம் ஈசனின் திருமணக் கோலச் சிற்பம் அதி அற்புதமானது ...


 சொக்கநாயகி என்ற திருப்பெயரில் பார்வதி தேவி சொக்கவைத்து அருள்பாலிக்கிறாள்.

மலைக்கோயில் ஈசனை இந்திரன் "இடி வழிபாடு' செய்து வழிபடுகிறான்.  ""இடி வழிபாடு' மறுநாள் ஆலயக் கருவறையில் கடுமையான அனல் இருந்து  நிரூபிக்கிறதாம் ...

வேதகிரீஸ்வரரை வழிபட  மார்கண்டேயர் வந்தபோது அபிஷேகம் செய்ய விரும்பினார். அபிஷேகம் செய்ய தீர்த்தக் குளத்திலிருந்து நீர் எடுத்து வர மார்கண்டேயர் ஈசனை வேண்ட அந்த தீர்த்தக் குளத்தில் வலம்புரி சங்கு தோன்றிய வலம்புரி சங்கால் வேதகிரீஸ்வரரை அபிஷேகித்து வழிபட்டார்.

அன்று முதல் குளமும் சங்கு தீர்த்தக்குளம் என்று அழைக்கப்படும் .குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரி சங்கு தோன்றும் சங்குகள்  "தாழக்கோயில்' என்று அழைக்கப்படும் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீபக்த வசலேஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கடலில் சங்கு கிடைப்பது வழக்கம். ஆனால், குளத்தில் சங்கு கிடைப்பது அரிதிலும் அரிதானது...

திருக்கழுக்குன்றத்தில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை 
சங்கு பிறப்பது சிறப்பு.


ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில், கார்த்திகை மாத கடைசி திங்களன்று வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது சங்கு தீர்த்தக் குளத்தில் கிடைத்த சங்குகளே முதன்மை பெறும்.
சங்கரனுக்கு நிகழும் சங்காபிஷேகத்தை தரிசித்தால் சங்கடங்கள் தீரும் ..!



கடலில் இருந்து கிடைக்கும் சங்கு, பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகின்றது.

சங்கினில் நிரப்படும் தீர்த்தம் மேலும் குளிர்ந்து, அதைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல, பக்தர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமை சந்திர பகவானுக்கு மிக உரியது.

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார்.

கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய ஸோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில், சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து,  சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது, சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல, நம் வாழ்க்கையையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும்.

சந்திரன்  ஸோமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்.இன்பங்களுக்கு அதிபதியாக விளங்குபவர். ஔஷதம் எனும் மருந்துப் பொருட்களுக்கும், மூலிகைகளுக்கும் அதிபதியாக விளங்குபவர்.

சந்திர அம்சமான சங்கு கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் அதைக் காண்பதும், எல்லையற்ற இன்பங்களையும், நோயற்ற நல்வாழ்க்கையையும் அருளும்.

சந்திரனுக்கு சுய ஒளி இல்லை என்றும் சூரியனின் ஆயிரக்கணக்கான கிரணங்களுள் ஒன்றான சுஷ்முனா அல்லது சுஷ்மா எனும் ஒளிக்கீற்றினால் சந்திரன் ஒளிபெறுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆகையினால், சந்திர அம்சம் கொண்ட சங்கிற்கு, பூஜைகளின் போது, சூர்யனின் காயத்ரி மந்திரத்தையேச் சொல்லி பூஜிக்க வேண்டும் என்ற நியதியையும் சாஸ்திரங்கள் வகுக்கின்றன.

சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்து ஸோமவாரம் எனும் கார்த்திகை மாதத் திங்கட் கிழமைகளிலும், சங்கு அபிஷேகம் காணப் பெறுவது பெரும் பேற்றினை அருளக் கூடியது.

சங்கு அபிஷேகம் காண்டு சங்கடங்கள் நீங்கப் பெற சங்கல்பிப்போம் ....




17 comments:

  1. அழகிய படங்கள்... அரிய தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  2. பக்தர்களுக்கு பயனுள்ள தகவல் படிப்பவர்க்கேல்லாம் நல்ல தகவல் ,நல்ல சேகரிப்பு

    ReplyDelete
  3. வழக்கம்போல சிறப்பான ப‌டங்கள்! திருக்கழுக்குன்றம் பற்றிய சிறப்பான தகவலக்ள்!

    ReplyDelete
  4. கிடைத்தற்கரிய பொக்கிஷம் உங்கள் வலைப்பூ...
    எத்தனை எத்தனை விஷயங்கள்..
    அத்தனையும் பிரமிக்க வைக்கிறது சோதரி...

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  5. அனைத்து படங்களும் மிக மிக அருமை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

  6. குளத்தில் சங்கு தோன்றுகிறதா.? குறிப்பிட்ட நேரம் நாள் என்று ஏதாவது இருக்கிறதா.? நான் திருக்கழுகுன்றம் போனதில்லை. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  7. பல வியப்பூட்டும் தகவல்கள். படங்களும் வழமை போலவே அருமை.....

    ReplyDelete
  8. G.M Balasubramaniam said...

    குளத்தில் சங்கு தோன்றுகிறதா.? குறிப்பிட்ட நேரம் நாள் என்று ஏதாவது இருக்கிறதா.? நான் திருக்கழுகுன்றம் போனதில்லை. தகவல்களுக்கு நன்றி.

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தோன்றுகிறதாம் ...

    எமது பதிவுகளை அருமையாக சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா...

    //சிலர் ஆன்மீக விஷயங்களை மட்டுமே பதிவாக இடுகிறார்கள். திருமதி இராஜராஜேஸ்வரி அருமையான படங்களுடன் இறைவன் சம்பந்தப்பட்ட பதிவுகளே அதிகம் இடுகிறார். என்னைப் போன்றவர்கள் படங்களை ரசிப்பதும் அவருடைய வேகத்தைக் கண்டு ஆச்சரியப் படுவது மட்டுமே செய்ய முடியும்..சில கேட்டிராத கதைகளும் கிடைக்கலாம்.//

    ReplyDelete
  9. Really very nice post dear.
    I enjoyed it.
    thanks for the post.
    viji

    ReplyDelete
  10. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  11. திருக்கழுக்குன்றம் மலைக்கோவில் பற்றிய தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றிகள். அழகான படங்கள்.கண்கள் நகர‌ மறுக்கின்றன‌. திருமண‌கோலச் சிற்பம் அழகோஅழகு.

    ReplyDelete
  12. கழுகுகள் வரும் என்ற ஒரு செய்தி மட்டும் தான் இதுவரை தெரியும்.
    உங்கள் பதிவின் மூலம் வேறு பல அறிய செய்திகளையும் தெரிந்து கொண்டேன்.
    நன்றி!

    ReplyDelete
  13. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - படங்களூம் - சங்கு தீர்த்தமும் - திருக்கழுக் குன்ற கழுகும் - அத்தனையும் அருமை- பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. ”சங்கடம் தீர்க்கும் ச்ங்கரனுக்கு சங்காபிஷேகம்”

    தலைப்பே ஜோராக உள்ளது.

    படங்களும் விளக்கங்களும் வெகு அருமை.

    இதுபோல நான் தவறவிட்ட தங்கங்கள் ஏராளமாக உள்ளதே!

    அனைத்தையும் முடிக்க ஒரு மாதம் ஆகிவிடும் போல உள்ளதே!

    சங்கரா ! நீ தான் எனக்கு சக்தி கொடுத்து, சங்கடங்களை விரைவில் நிவர்த்திக்க வேணுமய்யா!!

    ReplyDelete
    Replies
    1. ஜோரான் கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!

      Delete
    2. ;))))) மிக்க மகிழ்ச்சி.

      சங்கரன் அருளால், அவ்வப்போது ஏற்படும் மனச்சங்கடங்கள் முதலில் நீங்கட்டும். பிறகு கட்டாயமாக வருகிறேன்.

      Delete
  15. about Thirukalukundram Temple History click

    http://www.thirukalukundram.in

    ReplyDelete